Posted on January 2, 2012 by muthukumar
மேக் அப் செய்து கொள்வதென்பது தவிர்க்க முடியாத விசயமாகி விட்ட
இன்றைய நாட்களில் ஹெல்த்தி மேக் அப் செய்து கொள்ள சில டிப்ஸ்கள் சரும
ஆரோக்கியம் கெடாதிருக்க… மேக் அப் செய்து கொள்வத ற்கு முன்நீங்கள்
பயன்படுத்தப் போகும் காஸ்மெடிக் பொருள் எதுவானாலும் அவற்றின் லே பிளில்
Ingrediants பட்டியலில் கீழ்க்காணும் பொருட்கள் இரு ந்தால் அந்த காஸ்மெடிக்
பொ ருட்களை தவிர்ப்பது நல்லது.
· டை எத்தனாலமைன் (DEA )
· ட்ரை எத்தனாலமைன் (TEA )
· பினைலீன் டை அமைன் (PPD )
உலக
காஸ்மெடிக் ஆராய்ச்சி நிறுவனம் இந்தப் பொருட்கள் கலந்த காஸ்மெடிக் வகைகள்
தீங்கானவை என்று அறிவித்து ள்ளது. நகங்களின் ஆரோக்கிய த்துக்கு… நெயில்
பாலிஷ்போ டும் முன்பு கவனத்தில் வைத் துக் கொள்ள வேண்டிய விஷ யம், விரல்களை
நன்றாக கழு வி விட்டு மாய்ச்சரைசிங் க்ரீம் தடவிக் கொண்டு அதன் பிறகு
நெயில் பாலிஷ் போட்டுக் கொள்ள வேண்டும் கண்களின் ஆரோக் யத்துக்கு… .
எந்த வகை காஸ்மெடிக் ஐட்டம் என்றாலும் கண் இமைகளின் மீது உபயோகிக்கக்
கூடாது, கண்க ளின் பாது காப்புக்கு வெள்ளரி, கேரட் போன்ற காய்கறிகளை
ஸ்லைஸ்களாக நறுக்கி கண் களின் மீது வைத்துக் கொள்ள வே ண்டும்.
இதழ்களின்
ஆரோக்கியத்துக்கு …லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வ தற்கு முன்பு இதழ்களை ரோஸ்
வாட்டரால்(பன்னீரால்) கழுவி விட்டு தரமான லிப்ஸ்டிக்குகள்
உபயோகிக்கலாம்,அதே போல லிப்ஸ்டிக்குகளை நீக்கிய பின்னும் கடைசியில் இதழ்களை
பன் னீரால்
கழுவ வேண்டும் விஜய் டி.வி யில் ஒளி பர ப்பான “நீயா நானா’’ நிகழ்ச்சியில்
பெண்கள் ஒப்பனை செய்து கொள்வதை ப் பற்றி காரசாரமாக விவாதி க்கப்பட்டது,
நிகழ்ச்சியின் முடி வில் நடுவர்களாக வந்த மன நல மருத்துவர் ஷாலினியும்,
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமா ன வானதி அவர்களும்
பெண்களுக்கு மேக்அப் அவசியமா என்ப தைக்குறித்த தங்களது கரு த்துகளைப் பகிர்ந்து கொண்டார் கள். இதுவரை எல்லாம் சரி, ஆனால் டாக்டர் ஷாலினி, பெண்கள்
அடர்த்தியான ஒப்ப னை செய்து கொள்வதைப் பற் றி பரிணாமவி யல் கோட்பாட் டின்
அடிப்படையில் டார்க் மேக் அப் செய்துகொள்ளும் பெண் கள் ஆண்களுக்கு மறைமுக
மாக ‘I Am Available’ என்று குறி ப்பால் உணர்த்துவதாக அர்த்தம் என்று கூறி
னார். பரிணா மவியல் கோட்பாட்டின் அடிப்படையில் இது நிஜமாக வும் இருக் கலாம்.
அதற்காக பெண்கள் ஒப்பனையே செய்து கொள்ளக் கூடாது, பெண் களுக்கு மேக் அப் எதற்கு? என்றெல்லாம் மேக் அப் விஷயத்தை ஒதுக்கி விட முடியாது இல்லை யா?!
இன்று நேற்றா இந்தப் பிர ச்னை !
ஆனானப்பட்ட ஈஸ்வர னே பார்வதியின் கூந்தலுக்கு இயற்கை மணம் இருப்பதாக நிரூ பிக்க முடியாமல் நக்கீரரிடம் அவஸ்தைப் பட்டார்.
அன்னை
பார்வதியின் கூந்தலே ஆயினும் பெண்களின் கூந்தலு க்கு இயற் கை மணம்
கிடையாது, கூந்த லில் பூசிக்கொள்ளும் எண்ணெ ய், முடி உலர்த்தப் போடப்படும்
நறு ம் புகை, சூடிக் கொள் ளும் மலர்கள் போன்றவற்றின் காரணமாக செயற்கை மணமே
அன் னையின் கூந்த லுக்கும் உண்டு என்று வாதிட்டு வென் றவர் நக்கீரர்.
அப்படிப் பார் த்தால் இயற்கை அழகோடு செயற்கை அலங்கார ங்களும் ஏதோ கொஞ்சம்
அவசியம் என்று தானே தோன் றுகிறது. இது புராணம், புராணங்களை நம்பத் தேவை
இல்லை .
ஆனால்
நடைமுறை வாழ்வில் ஒரு பெண்ணுக்கு மேக் அப் அவசி யமா இல்லையா? என்று பெண்
களில் பல தரப்பினரிடையே அவ ர்கள் என்ன நினைக்கிறார்கள் என் று தெரிந்து
கொள்ளும் முனைப் பாக மருத்துவர், ஆய்வு மாணவி, தமிழ்ப் பேராசிரியர்,
கவிஞர், பள் ளி ஆசிரியர், பத்திரிகை யாளர், இல்லத்தரசி என்று பல்வேறு
பொறுப்புகளை திறம்பட நிர்வகித்து தங்களது குடும்பத்தாரால் கொண்டாடப்படும்
பெண்களிடையே இந்தக் கேள்வியைக் கேட் டோம். ,அவர்கள் அளித்த பதில்கள் ஹெல்த்
வாசகர்க ளுக்காக இந்த இதழில் பகி ர்ந்து கொள்ளப்படுகிறது. வாசித்து விட்டு
மேக் அப் செய்து கொள்வது குறித்து நீங் கள் உங்களது கருத்து களையும் எங் களுக்கு எழுது ங்கள்.
டாக்டர்.ரோஹிணி பல் மருத்துவர், பொள்ளாச்சி.
பொதுவாக
பெண்கள் அலங்காரத் தில் விருப்பம் உள்ளவர்கள். ஆனா ல் அது சூழலுக்குத்
தக்கதாக இருக்க வேண்டும், தன்னை உறு தியாய், அழகாய் உணரச்செய்யும். பிறர்
கண்ணை, எண்ணத்தை உறுத்தாத எதுவும் சிறப்பு என் பது என் எண்ணம்.
முத்துலெட்சுமி, இல்லத்தரசி புதுதில்லி.
மேக்கப்
என்றால் என்னைப் பொறுத்தவரையில் முகம் கழுவிப் பொட்டு வச்சிக்கிறது
அவ்ளோதான். குளிர்காலம் என்றால் தில்லி யில் கொஞ்சம் தோல் வறட்சிக்காக
கவனமெடுக்கணும்.. அதற் காக
க்ரீம்களை கண்ணுக்குத் தெரியாத அளவில் எடுத்துக் கொள் வது அவசியமா கிறது.
மேலும் அழகு செய்துக்கணும் என் கிற அவசியங்களிலிருந்து அல்லது ஆ
சையிலிருந்து ஒரு காலத்தில் நான் வெளி யே வந்துவிட்டேன். எளிமையான முகம்,
அல்லது நேர்த்தியான மேக்கப் செய் துகொண்ட முகம் இரண்டுமே உள் அழகால்
மட்டுமே அழகாத்தெரியுதுன்னு தோணும். மத்தபடி அவங்கவங்களுக்கு மேக்கப்
வேணுமா என்பது அவரவர் முடி வே.
தமிழ்நதி, கவிஞர் & எழுத்தாளர் சென் னை.
ஒப்பனை செய்துகொள்வது என்பது ஒருவகையில் வெளி யுலகத் திற்குத் தன்னைக் ‘காண்பித்து’க் கொள்வதே. தோற்ற த்தை வைத் து
மதிப்பிடும் (அது சரியான மதிப்பீடு அல்லாதபோதிலும்) பெரும் பாலான கண்களின்
முன் நாம் அழகாகத் ‘தோன்ற’ விரும்புகிறோம். பல்வேறு ஊடகங்களில்
காட்டப்படும் அழகின் கற்பித அளவு கோல் களுக்கிணங்க உருமாற விரு ம்புவதும்,
முடியாத போது தாழ்வுணர்ச்சி கொள்வதும் அபத் தமே என்றறிந்தும் அதுவே
தொடர்கிறது.
ஒப்பனை செய்வதும் செய்யாமல் விடுவதும் அவரவர் தனிமனித சுதந்திரம் சார்ந்தது. அதில் பிறர் தலையிடுவது அநாகரீகம்.
அறிவும்
ஆரோக்கியமுமே உண்மையா ன அழகு என்று தெரிந்திருக்கிறபோதி லும், நானும்
ஒப்பனைசெய்து கொள்கி றேன். ‘என்னது?’ என்று மற்றவர்களை புருவம் உயர்த்த
வைக்குமளவு அதீத ஒப்பனையல்ல; மிதமாக, பொருத்தம் என்று எனக்குத் தோன் றும்
வகையில்.
எம்.ஏ.சுசீலா, தமிழ்ப்பேராசிரியர், பணி நிறைவு,
பாத்திமா கல்லூரி, மதுரை.
பெண்ணின்
அழகு, கம்பீரம் இவற்றை அவளது முகத்தில் மிளிரும் தன்னம்பிக் கையும் அதன்
அடித்தளமான சுயசார்புமே நிர்ணயிக்கி ன்றன என் பதே என் தீர்மானமான முடிவு
என்றபோதும் புற உலகில் புழங்கும் போது தன் தோற்றத்தை மேம்படுத்திக்
கொள்ளவும் அதன் வழி தன்னை மேலும் தன்னம்பிக்கை கொண்டவளாக ஆக்கிக் கொள்ள வும் ஓரளவு தன் வெளித் தோற்றத்திலும் அவள் அக்கறை காட்ட வேண்டியதாகவே இருக்கிறது. அந்த அடிப்படையில் ஒரு சில குறிப்புகள்…
இயற்கை
நமக்கு அளித்த மகத்தான தோற்றத்தை முறையான உணவுப் பழ க்கம்,உறக்கம்,அளவான
உடல் உழைப்பு ஆகியவற்றின்படி பேணி வந்தாலே செய ற்கைப் பொருள்களின் துணையை
நாட வேண்டியிருப்பதில்லை; கலகலப்பான உற்சாகமான சுறுசு றுப்பான மனநிலை யைத்
தக்க வைத்துக் கொண்டபடி அனை வருடனும் அன்புடனும் நட்புடனும் பழகி
வருவதும்,எதைக் கண்டும் சலித்துக் கொள்ளாத முகத்துடன் ,அதில் ஒரு புன்
சிரிப்பையும் தவழ விட்ட படி வலம் வருவதும் தரும் பொலிவை விடக் கூடுதலான
அழகை எந்தச் செயற்கைப் பொரு ளும் நமக்கு அளித் து விட முடியாது.
இவற்றில் நாம் செய்யும் தவறே துணைக்கு ஒப்ப னைப் பொருட் களைச் சேர் த்துக் கொள்ள வேண்டிய தேவையை நோக்கி நம் மைத் தள்ளிவிடுகிறது.
அன்றாட வாழ்வில் நாம் அடிப்படையாகப் பயன்படுத்தியே ஆக வேண்டிய சில பொருட்களை (சோப்,டால்கம் பவுடர்) போன்றவற் றை
விளம்பர மாயைகளில் சிக்கிக் கொண்டபடி அடிக்கடி மாற்றாமல், எது நமக்கு
ஒத்துப்போகிறதோ அதை மட்டுமே வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி வரும்
பழக்கத்தைக்கை க் கொண்டாலே சரு மநோய்கள் நம் மைப் பொதுவாக அணுகுவதில்லை
என்பது என் அனுபவத்தில் நான் கண்ட முடிவு.
டாக்டர் கே.சந்தனமாரி, நேச்சு ரோபதி பிஸிசியன்
& யோகா மாஸ்டர் ஆயூர்சுகா.சென்னை
இன்றைக்குப் பெண்கள் ஃபேஷன் என்ற பெயரில் உச்சி முதல் உள்ளங்கால் வரை மேட்சிங்காக அழகு சாதனப் பொருட்களை எத்தனை
விலை கொடுத்தா லும் பார்த்துப் பார்த்து வாங்கி அணிந்து கொள்ளத் தயங்குவ
தில்லை, தங்களது ஆடை, ஆபரணங்கள், அழகு சாதனப் பொருட்களால் அவர்கள் புழங்
கும் இடங்களில் பிற ரது கவ னத்தைக் கவரும் விருப்பம் அவர்களுக்கு
இருக்கிறது. பிற ரது கவனத்தைக் கவர விரும்பு வதால் அல்லது centre of
Attraction இருக்க விரும்புவதால் அவர்கள் தவறானவர்கள் என்று அர்த்த மில்லை,
வாழ்வில் அது ஒரு காலகட்டம், அந்த வயதில் அப்படி இருக்கத் தோன்றுவது
இயல்பு தான். ஆனால் பெரும் பாலான
பெண்களின் ஒரே தவறு இந்த வயதில் அவர்களது வெளித் தோற்றத் தைக்கண்டு மயங்கி
காதல் பேசும் ஆண் களிடம் எளிதில் ஏமாறும் குணம், இத னால் அவர்களது
எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது .
தமிழில்
ஒரு பழமொழி உண்டு. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’’ “என்பார்கள், மனம்
ஆரோக்யமாக இருந் தால் அது முகத் தில் வெளிப்படும், அப்படியான ஆரோக்கியமான
அழகே நிலை யானது, எளிமையான ஒப்பனைக ளால் அந்த அழகை மேம்படு த்திக்
காட்டலாமே தவிர ஆடம்பர அழகுசாதனப் பொருட்களை வாங்கிக் குவிப்பதும்
அடர்த்தியான ஒப்ப னைகள் செய்து கொள்வ து என்பதும் பெண்களுக்கு எந்த வித
த்திலும் நன்மையைத் தேடித் தரப் போவதில்லை. வீண் உபத் திரவங்கள்
தான் வந்து சேரும். அளவுக் கதிகமாக மேக் அப்க்கு முக்கியத்துவம்
கொடுத்தால் பெண்கள் தங்களது சுயத்தை இழந்து கடைசியில் மேக் அப் சாதனங்
களுக்கு அடிமையாகி விடும் சூழல் தான் ஏற்படும், இது நிச்சயமாக எந்த விதப்
பெண்களுக்கும் நல்லது அல்ல. ஒரு நேச்சுரோபதி மருத்துவராக இயற்கை யாக நமது
நாட்டு சீதோஷ்ண நிலைக்கே ற்ப மிதமான ஒப்பனைகளோடு எப்போ தும் உள்ளமும்
உடலும் பரிசுத்தமாக இரு ப்பது தான் பெண்களுக்கான சிறந்த மேக் அப் என்பேன்
நான் .
சாந்தி கார்த்திகேயன்,
ரிசர்ச் ஸ்காலர், அண்ணா யுனிவர்சிட்டி.
சென்னை.
பெண்கள் என்றில்லை ஆண்களுக்கும் கூட இந்தக் காலத்தில் மி
தமான மேக் அப் அவசியம் என்பதே என் க ருத்து. விதவிதமான படிப்புகள், ஆண்,
பெண் பேதமின்றி சவாலான வேலைகள் என்று சமூகத்தில் பல மட்டத் தினரோடு புழங்க
வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது யாராக இருந்தாலும் கூட அவரவர்
புழங்கும் இடங்களுக்குத் தக்கவாறு தங் களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்
டும். இல்லையேல் இந்த போட்டி உலகில் நம்மை தோற் றத்தின் அடிப்படையில்
வெளிப்படுத்திக் கொள்ளும் விஷயத்தில் மற்றவர்களை விட பின்தங்கி விடும்
வாய்ப்புகள் அதிகம். நாம் ஒன்றும் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருக்கப் போ
வதில்லையே! சேக்ஸ்பியர் சொன்ன தைப் போல “உலகமே ஒரு நாடக மேடை”. அந்த
மேடையில் வெ ளி உலகத்திற்கு என்று சில ரோல்கள் இருக்கின்றன, அந்தந்த
இடத்திற்குத் தக்கவாறு உடைகள், மேக் அப் சமாசாரங்கள், ஆபர ணங்கள் என்று நம்மை நாம் வெளிப்படு த்திக் கொள்வதில், அழகாகக் காட்டிக் கொள்வதில் தவறேதும் இல்லை.
பரிமளா டீச்சர் & கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் ஸ்கூல் TSR லேஅவுட்
பெங்களூரு.
பெங்களூரில்
இப்போது சில பள்ளி களில் ஆசிரியைகள் வார நாட்களில் ஃபார்மல் பேண்ட் சர்ட்
போட்டுக் கொண் டு பள்ளிக்கு வரலாம் என்று அனுமதிக் கப்பட்டுள்ளது. மேலும்
சனிக்கிழமை ஜீன்ஸ் கூட அணிந்து வர அனுமதிக்கி றார்கள். டீச்சர் என்றால்
புட வை தான் கட்டிக்கொண்டு பாடம் நட த்த வேண்டும் என்ற கட்டாயம் இங்கே
தளர்த்தப் பட்டிருக்கிறது. மாணவர்கள் பாவம் போரடித்துப் போவார்களே !
எல்.கே.ஜி,
ஒன்று, இரண்டாம் வகு ப்புக் குழந்தைகள் கூட டீச்சர்கள் கண்ணுக்கு லட்சணமாக
அழகாக உடுத்திக் கொண்டு வந்தால் “யு ஆர் லுக்கிங் நைஸ் மேம்’’ என்று
பாராட் டத் தவறுவதே இல்லை. அவர்களு க்கு அவர்க ளது கிளாஸ் டீச்சர் தான்
அழகு, புத்திசாலி என்று தங்களது பிற செக்ஷன் நண்பர்களிடம் சொல்லிக்கொள்ள
ரொம்பவே ஆசை. பொறுமையும், புத்திசாலித்தனமும் இனிமை யான அழகான தோற்றமும்
கொண்ட டீச்சர்கள் தங்களது மாணவர் களை வெகு எளிதாக
ஈர்த்து விடுகிறார்கள். அவர்களது பாடத்தை மாணவர் கள் விரும்பிக் கற்று
நிறைய மதிப்பெண்களும் பெறுகிறார்கள். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆக
ஒரு டீச்சர் என்ற முறையில் பெண்களுக்கு மித மான உறுத்தாத மேக் அப் அவசி யம்
என்பதுதான் என் கருத்து .
மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் சொன்னதாக
எங்கோ வாசித்தது …
“வீட்டு
வாசலில் கோலம் போடப் போ னால் கூட நான் மேக் அப் இல்லாமல் போ க மாட்டேன்.
பெண்கள் தோற்றத்தில் கவனம் செலுத்துவதில் என்ன தவறு! இப் படி இருப்பது
எனக்கு நிறைய தன்னம்பி க்கையைத் தருகிறது.
‘அனும்மா’
என்று தனது ரசிகைகளால் கொண்டாடப்பட்ட அனு ராதா ரமணன், இறந்த பின்னும் கூட
அவரது நோயுற்ற தோற்ற மோ துக்கமான புகைப்படமோ எவரும் கண்டதில்லை. அனுராதா
ரமணன் என்றதும் நமக்கெல் லாம் ஞா பகம் வருவது திட்டமான அலங்காரத்துடன்
பளிச்சென்ற சிரித்த முகமும் அவரது அழகான கோபி சாந்துப் பொட்டும்தான்.
தேனம்மை லக்ஷ்மணன் ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட் & வலைப் பதிவர்.
சென்னை.
பொதுவா
கேட்டா தேவையில்லைன்னு தான் சொல்ல வேண்டும். ஏனெனில் நம்மு டைய நிறமிகளை
வெண்க்ரீம்கள் மறைத் து வெண்மையாக்கி காண்பிக்கின்றன. இய ற்கைப்
பொருட்களான தயிர், எலுமிச்சை, தக்காளிச்சாறு, முல்தானி மிட்டி, தேன், பழக்
கூழ், பாலாடை, கசகசா, கடலை மாவு, பயத்த மாவு போ ன்றவை கலந்து குளித்தாலே
கலர் கொடுக்கும்.
நல்ல உழைப்பும், ஓய்வும், உறக்கமும், சரிவிகித உணவும் முகம் பொலிவாய்
வைக்கும். இயற்கையிலேயே நமக்கு என்று ஒரு அழகு உண்டு. இது யோகா, தியானம்
செய்வதாலும், பர்சனாலிட்டி டெவலெப்மெண்ட் மூலமும் கிடைக்கும். மிக அதிகமாக
மேக்கப் போடு பவர்கள் முகத்தை நெருக்கத்தில் பார்த்தால் சுருக்கமாக
இருக்கும். அடிக்கடி ஃபேஷியல் செய்து சிலர் முகம் கருத்துப் போய்
இருக்கும்.
ரிஷப்ஷனிஸ்ட்,
ஏர்ஹோஸ்டஸ் போன்ற உத்யோ கங்களில் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் தேவை
ஏற்படின் (தி ருமண விழா, பார்ட்டிகள்) மிக மெல்லிய மேக்கப் போடலாம். ஆனால்
தினப்படி அல்ல. உங்களை உங்களு க்காக., உங்கள் திறமைக ளுக்காக, உங்கள்
ஆளுமைத் தன்மைக் காக மற்றவர்களுக்குப் பிடிக்க வேண்டும். சில மணி நேரங்களில் கலையக்கூடிய அலங் காரத்துக்காக அல்ல.
ஈஸ்வரி பாஸ்கர்சக்தி. எழுத்தாளர் பாஸ் கர்சக்தியின் மனைவி,
சென்னை.
என்
வரையில் மேக்அப்ன்னா குளிக்க சோப், முகத்துக்கு பவுடர் ,தலைக்கு ஷாம்பூ
இவ்ளோ தான். வேற சின்ன சின்னதா ட்ரெஸுக்கு மேட்ச்சா காதுல தோடு மாத்தி
மாத்தி வெரைட்டியா போட்டுக்க பிடிக்கும். வேற ஆடம்பரங்கள் எதுலயும் பெருசா
விருப்பங்கள் இருந்த தில்லை. அடிக்கடி கண்ணாடி பார்த்துக்கறது அலர்ஜி,
எங்கயாவது கிளம்பணும்னா சிம்பிளா காட்டன் புடவை போதும்னு நினைப் பேன்,
எனக்கு தலைமுடி உடையாம நீள மா பட்டுப் போல சாஃ ப்ட்டா இருக்கறதா
ஃபிரெண்ட்ஸ் சொல்வாங்க. ஆனாலும் வித விதமா ஹேர் ஸ்டைல் பண்ணிக் கறதுல
ஆர்வம் இருந்ததில்லை, பின்ன ல் போட்டுக்கறதை விட ரப்பர் பேன்ட்
போட்டுக்கறது கம்ப ர்ட்டபி ளா தோ ணும் எனக்கு. உறவுக்காரங்க, நண்பர்கள்
வீட்டு கல்யாணத்துக்குப் போறதுன்னா லும் கூட கன மான நகைகள், அகல ஜரி கை
போட்ட பட்டுப்புடவைன்னு பகட்டா போறதை விட நீட்டா காட்டன் புடவை
கட்டிக்கிட்டு சிம்பிளான நகைகளோட போறது தான் எப்பவும் என்னோட சாய்ஸ். பெண்
களுக்கு மேக் அப் அவசியம் இல் லைன்னு சொல்ல முடியாது, ஆனா அது தேவையில்லாம
மத்தவங்க கண்களை உறுத்தாம எளிமையா இருக் கணும் அவ்ளோதான்.
மறைந்த நடிகை பத்மினி சொன்னது
பெண் நிருபர் ஒருவர் பேட்டிக் காக நடிகை பத்மினியை கா ணச் சென்றபோது பேட்டி முடி ந்ததும் அவர் சொன் னதாக:
“லிப்ஸ்டிக்
போட்டுக்க மாட்டி யாம்மா? முகத்துக்கு க்ரீம் எதுவும் போடலைன்னாலும்
சும்மா முகம் கழுவித்து டைச்சு லேசா லிப்ஸ்டிக் மட்டும் போட்டுக்க ணும்.
அழகா இருக்கும், லிப்ஸ்டிக் போடாம நான் இருந்ததே இல்லை’’என்றாராம்.
தவிர பத்மினி க்கு வளையல்கள் என்றால் கொள் ளை இஷ்டமாம். தனது திருமணம்
முடிந்து புகுந்த வீட்டு க்குப் போகை யில் ஒரு பீரோ நிறைய வித வித மான
வளையல் களைகணவர் வீட் டுக்கு எடுத்துச் சென்றதாக பத்மினி தனது பழைய பேட்டி
ஒன்றில் குறி ப்பிட்டிருந்தார்.
மேக்&அப்
விஷயத்தில் பெண்களின் ஒட்டுமொத்த கருத்துகளைப் பார்க் கையில் மேக்&அப்
அனாவசியம் என்று யாரும் சொல்லக் காணோம், மிதமாகவேனும் பெண்கள் தங்களை
அழகுபடுத்திக் கொள்வது ஆரோக்யமானது எ ன்பதே இவர்களது
ஒட்டுமொத்த கருத் தாக இருக்கிறது. மேலும் இன்றை ய போட்டி உலகில் ஆண்
களுக்கு சமமாக பெண்களும் பொருளீட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் போது
தங்களது தோற்றம் சமூ கத்தினர் பார்வையில் கௌரவ மாக மதிக்கப்பட வேண்டும்
என் றே விரும்புகிறார்களே தவிர, பிற ர் அசூயையாக நினைக்கும் அள வுக்கு
அதீதமாக மேக் &அப் செய்து கொள்ளும் ஆர்வம் பெரும்பாலோ னோருக்கு இல்லை
என்ற முடிவுக்கே வரவேண்டியதாக இருக் கிறது.
மேற்காணும்
இடுகையில் காணப்படும் புகைப்படங்களில் நீயா நானா கோபிநாத் மற்றும் பத்மினி
ஆகிய இருவர் மட்டுமே மேற்காணும் கட்டுரையுடன் தொடர்புடையவர்கள். ஆவர். இந்த
இரண்டு புகைப்படங்களை மற்ற புகைப்படங்கள் யாவும், விளம்பரங்களிலும்,
திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகைகளின் புகைப்படங்களே!
No comments:
Post a Comment