Lord Siva

Lord Siva
Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Sunday, 29 March 2015

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும்!



பெண்களுக்கு ஒவ்வொரு காலக்கட்ட‍தில் ஒவ்வொரு விதமான வலிகளை தங்களது பிறப்புறுக்களில் உணர்கிறார்கள். அந்த வகையில்
பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் முழுவதும் வலியுடன் இருக்கும். இத்தகையவலிகள் குறைய குறைந்தது 2 முதல் 3   வாரத்திற்கு மேல் இருக்கும். அதிலும் பிரசவத்திற்கு பின், பிறப்புறுப்பில் ஏற்படும் வலிக்கு அளவே இருக்காது. இந்த வலியானது குழந்தை பிறப்புடன் தொடர்புடையது. இந்த பிறப்புறுப்பு வலி ஏற்படுவதற்கான காரண ங்கள் என்னவென்று பார் க்கலாம்..
சுகப்பிரசவத்தின்போது, குழந்தையை வெளியே தள்ளுவதற்கு அதிகப்படியான அழுத்தத்தை பெண் கள் தரவேண்டியிருக்கும். ஆகவே அதிகப்படியான அழுத்தத்தை பெண்கள் தருவதால், பிறப்புறுப்பில் வீக்கம் மற்றும் வலியானது சில வாரங்களுக்கு இருக்கும்.
சிலநேரங்களில் சுகப்பிரசவத்தின்போது குழந்தை யை வெளியேற்ற பெண்கள் கொடுக்கும் அழுத்தத்தினால், குழந்தையின் தலை வெளியே வரும்போது, பிறப்புறுப்பின் தசையை கிழித்துக்கொண் டு வெளிவரும்.
இதனால் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு, அதிகப்படி யான வலியை ஏற்படுத்தும். அதிலும் சிறுநீரை வெளி யேற்றும்போது தான் அதிகப்படியான வலியை உணர நேரிடும். கர்ப்பிணிகள் சிலரால் போதிய அழுத்தத்தைக் கொடுக்க முடியாததால், குழந்தையின் தலை வெளி வராமல் சிக்கிக் கொ ள்ளும்.
அப்போது மருத்துவர்கள், பெண்ணின் பிறப்புறுப்பை லேசாக வெட்டிவிட்டு குழந்தையைவெளியே எடுப்பார்கள். இதனால் தசை வெட்டுப்படு வதால், காயமானது அதிகமாகி வலியை உண்டாக்கும். அதிலும் இந்நிலைமை முதல் பிரசவத்தின் போதுதான் நிகழும் .
இத்தகைய நிலை உள்ள பெண்களுக்கு, காயமானது காய்வ தற்கு 1 மாதத்திற்கு மேல் ஆகும். இவையே பிறப்புறுப்பில் வலி ஏற்படுவ தற்கான காரணங்கள். சிசேரியன் பிரசவத்தை மேற் கொண்டவர்களுக்கு, பிறப்புறுப்பில் வலி ஏற்படுவத ற்கு பதிலாக, அடி வயிற்றில் வலி ஏற்படும்.

Monday, 16 February 2015

கணவர்களுடன் உடலுறவுகொள்ளும் பெண்களின் மனநலம் எப்படி?



கணவர்களுடன் தாம்பத்திய உறவில் பெண்களின் ஒவ்வொருவருக்கும்
‘ஆப்சென்ஸ் ஆப் மைன்ட்’ இருப்பது சாதாரண விஷயம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனது அந்த வேலையிலிருந்து விலகி வேறொன்றில் மூழ்கி விடும்.
இது தாம்பத்தியம் உறவின்போது கூட நிகழ்கிறது. தாம்பத்தியம் உறவில் ஈடுபட்டிருக்கும்போது ஒவ்வொருவரின் மனதிலும் அதைத்தவிர வேறு சில மன ஓட்டங்களும் இருக்கிறதாம். குறிப்பாக பெண்களுக்கு அது சற்று கூடுதலாகவே இருக்குமாம். இதுகுறித்து ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்தது…
34 வயது பெண் ஒருவர் கூறுகையில், எனது தோழிகள் பலரும், அவர் ள் தாம்பத்தியம் உறவில் ஈடுபட்டி ருக்கும்போது எந்த நினைவில் இருப்பார்கள் என்பதைக் கூறுவது வழக்கம். சிலர் இதை முடித்து விட்டு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பார்களாம். சிலரோ, துணிகளை துவைக்க வேண்டியது குறித்து நினைத்து க் கொண்டிருப்பார்களாம்.
இன்னும் சிலர் மளிகை சாமான்கள் வாங்குவது குறித்து சிந்திப்பார்களாம். சில பெண்களுக்கு மனதில் தாங்கள் வரித்து வைத்துள்ள ஆண்களின் நினைவுகள் வந்து போகுமாம். இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், நான் எனது கணவரை மிகவும் நேசிக்கிறேன். இருப்பினும் உறவின்போது அவரைத் தவிர வேறு சில ஆண்களும் கூட எனது மனதில்வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.
அவர்கள் நான் சிறு வயது முதல் பார்த்து, நேசித்தவர்கள். இதனால் அவர்கள் எனது மனதில் வந்துபோகிறார்கள். இருந்தாலும் அவர்களை நான் நேரில் பார்த்தது கிடையாது என்றார். சில பெண்களுக்கு தங்களுக்குப் பிடித்த சினிமாஸ்டார்களின் நினைவு வருமாம். தாம்பத்தியம் உறவின்போது வேறு சில சிந்தனைகளிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் ஈடுபடுவது சாதாரணம்தான் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.
சில நேரங்களில் கணவர்களுடனான உறவு பெண்களுக்குக் கசந்து போக இத்தகைய மாறுபட்ட சிந்தனைகளும் காரணமாகி விடுவதாகவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். மனதொத் த உறவின் மூலம்தான் ஆணும், பெண்ணும் முழு மையான அன்பையும், இன்பத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
மாறாக இதுபோன்ற வேறு பா தைகளில் சிந்தனைகள் திரும் பும்போது அது கசப்பான விளைவுகளுக்கான ஆரம்ப கட்டமாகவே கருதப்பட வேண்டும்.

Saturday, 7 February 2015

ஆண்-பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம் அதிகம்?


தருமர் பீஷ்மரிடம் ‘ஆண் பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம்’ என வினவினார்.
பீஷ்மர் அதற்கு, ‘இதை விளக்கப் பங்காஸ்வனன் என்னும் மன்னனின் வரலாற்றைக் கூறுகின்றே ன், கேள்’ எனக் கூறத் தொட ங்கினார்.
முன்னொரு காலத்தில்
பங்காஸ்வனன் என்னும் ராஜரிஷி ஒருவன் இருந்தான் .நீண்ட காலம் மகப்பேறு இல்லாததால் அவன், இந்திரனுக்கு விரோதமான ஒரு யாகத்தைச் செய்தான். நூறு பிள்ளைகளைப் பெற்றான்.யாகம் காரணமாக இந்திரனின் பகை ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பின் அம்மன்னன் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். இதுதான் தக்க சமயம் என்று கருதிய இந்திரன் அம் மன்னனை அறிவு மயங்கச் செய்தான். அறிவு மயங்கிய அம்மன்னன் குதிரையில் ஏறி திக்குத் தெரியாது அலைந்தான்.பசி வாட்டியது.
களைப்பால் சோர்ந்து போன மன்னன் நீர் நிறைந்த குளம் ஒன்றைப் பார்த்தான். குதிரையை குளத்து நீரை குடிக்கச் சொல்லிவிட்டு பின் தான் குளிப்பதற்காக குளத்தில் இறங்கினான். அப்போது பெண் உருவம் அடைந்தான்.உடன் நாணத்தால் தலை கவிழ்ந்தவன். இனி குதிரை ஏறி ஊருக்கு எப்படிப் போவது..மனைவிக்கும், மகன்களுக் கும், மக்களுக்கும் என்ன சொல்வது..என் ஆண்மை போய் விட்டதே . பெண் ஆன வெட்கக் கேட்டை யாரிடம் எப்படிச் சொல்வது..எனப் பல வாறு வருந்திய மன்னன் குதிரை மீதேறி நாட்டை அடைந் தான். அவனைக் கண்டு அனைவரும் வியப்புற்றனர்.
அவன் நடந்ததைக் கூறினான். ‘நான் வேட்டையாட காட்டிற் குச் சென்றேன். ஒரு தெய்வம் என்னை மயக்கி விட்டது.தாகத்தில் திரிந்த நான், ஒருஅழகான குளத்தில்நீராடுகையில் பெண் ஆனேன். இது தெய்வச் செயல் என்பதில் சிறிதும் ஐயம் இல் லை. மனைவி மக்கள் மீதும் செல்வத்தின் மீதும் எனக்கு ஆசை குறையவில்லை.’
பின் தன் மக்களை அழைத்து’என் செல்வங்களே. நான் மறுபடியும் காட்டிற்குச் செல்கிறேன்.நீங்கள் அனைவரும் ஆட்சியை அனுபவியுங்கள்’ என்றான்
பெண் ஆன அம்மன்னன் காட்டிற்குச் சென்று ஒரு ஆஸ்ரமத்தைக் கண்டான்.அங்கிருந்த முனிவரின் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர்.பின்னர் அந்த நூறு பேரையும் அழைத்துக் கொண்டு நகரத்திற்கு வந்தான். முன் தான் ஆணாக இருந்த போது பிறந்த நூறு பிள்ளைகளை நோக்கி’இந்த நூறு பேரும் நான் பெண்ணான பிறகு பிறந்த வர்கள்.நீங்கள் அனைவரும் சகோதரப் பாசத்துடன் ஒன்றுபட்டு ஆட்சி இன்பத்தை அடைவீராக” என்றான். அவர்களும் அவ்வாறே நாட்டை ஒற்று மையுடன் ஆண்ட னர்.
அது கண்டு தேவேந்திரன் மனம் புழுங்கினான்.எனது செயல் இவர் களுக்கு நன்மை ஆயிற்றே அன்றி தீமை பயக்கவில்லையே என வருந்தினான்.உடன் அந்தணன் வேடம் தாங்கி அந்த நகரையடைந் தான். மன்னனுக்கு முதலில் பிறந்த குமாரர்களைக் கண்டு, ‘ஒரு தந் தைக்குப் பிறந்த சகோதரர்களிடையேக் கூட ஒற்றுமை இருப்பதில் லை. காஸ்யபரின் புத்திரர்கள் தாம் அசுரர்கலூம், தேவர்களும். அவர்களே நாடு காரணமாகத் தங்களுக்குள் சண்டையிட்டனர். நீங்களோ பங்காஸ்வனனுக்குப் பிறந்தவர்கள்.மற்ற நூற்றுவரோ முனிவருக்குப் பிறந்தார்கள். உங்களுக்கே உரிய உங்கள் தந்தையின் நாட்டை முனிவரின் பிள்ளைகள் அனுபவிக் கிறார்களே! இது மரபில்லவே’ என்று கூறி அம் மக்களிடையே பகையை உண்டாக்கினான். மனம் மாறிய அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மாண்டன ர்.
அது கண்ட ரிஷி பத்தினி கதறி அழுதாள்.அப்போது தேவேந்திரன் அவள் எதிரில் தோன்றி,’ஏன் இப்படி அழுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது’ என வினவினான்.
அவள் அவனை நோக்கி,’நான் முன்னர் மன்னனாக இருந்தேன். அப்போது நூறு பிள்ளைகளைப்பெற்றேன்.ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்றபோது ஒரு குளத்தில் இறங்கிக் குளிக்கும் போது பெண்ணாகி விட்டேன். பெண்ணானப் பின் ஒரு முனிவரின் சேர்க் கையால் நூறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன்.அந்த இருநூறு பிள்ளைக ளும் பகை கொண்டு சண்டையிட்டு மாண்டனர். இதைவி ட எனக்கு துன்பம் வேண்டுமா? என்றாள் (ன்)
இந்திரன் அவளை நோ க்கி, ‘முன்னர் நீ மன்னனாய் இருக்கையில் என்னை மதிக்காது எனக்கு எதிரான யாகம் செய்தாய். இத னால் நான் மிகவும் வருந்தினேன்.அந்தப் பழியைத் தீர்த்து விட்டேன்’ என் றான்.
ரிஷி பத்தினி இந்திரனை வணங்கி’நான் பங்காஸ்வனனாய் இருக்கையில் மகப் பேறு வேண்டிச் செய்யப்பட்ட யாகம் அது .தங்களை அவமதிக்கச் செய்தது அல்ல’ என மன்றாடினாள்.
தேவேந்திரன் அவள் செய்த தவற்றைப் பொறுத்துக் கொண்டு, ‘உனக்கு எந்தப் பிள்ளைகள் பிழைக்க வேண்டும்.ஆணாக இருக்கையில் பிறந்தவைகளா? அல்லது பெண்ணாக இருந்தபோது பிறந்த பிள்ளைகளா ?’ என வினவினான்.
;நான் பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகள் பிழைக்க வேண்டும்.’ என்றாள்.
இந்திரன் வியப்புடன்,’நீ ஆணாக இருந்த போது பிறந்த பிள்ளைக ளை விரும்பாததன் காரணம் என்ன? பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளிடம் விருப்பம் கொண்டதேன்?’ என்றா ன்.
அதற்கு அவள் ‘பெண்களுக்குத் தான் மக்கள் பாசம் அதிகம். ஆண்களுக்கு அப்படி இல்லை. ஆதலால்தான் நான் பெண்ணாக இருந்த போ து பிறந்த பிள்ளைகளை பிழைக்கச்  செய்ய வேண்டுகிறேன்’ என்றாள்.
உடன் இந்திரன், ‘உண்மை உரைப்பவளே! இப்போது நான் அனைவரையும் பிழைக்கச் செய்கிறேன்’ என்றார்.மேலும் அவளை நோக்கி, ‘நீ ஆணாக விரும்புகிறாயா? அல்லது இப்போது இருப்பது போல பெண்ணாகவே இருக்கி றாயா?’ என்றான்.
“நான் மீண்டும் ஆணாக விரும்ப வில்லை.பெண்ணாகவே இருக்க விரும்புகிறேன். ஆண் பெண் புண ர்ச்சியில் பெண் தான் அதிகம் இன்பம் அடைகிறாள். இதனால் தான் நான் பெண்தன்மையை விரும் புகிறேன். நான் இப்படியே பெண்ணா கவே இருந்து விடுகி றேன். இதிலேயே எனக்கு இன்பம் கிடைக்கி றது” என்றாள்.
அவ்வாறே வரம் தந்து இந்திரன் சென்றான்.
இவ்வாறு பெண் தான் அதிக இன்பம் பெறுகிறாள் என பீஷ்மர் தருமருக்கு உரைத்தார்.

Thursday, 21 August 2014

பெண், தனது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க‍ சில எளிய வழிகள்


பெண்கள் தங்களது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க‍சில எளிய வழிகள்
ஆரோக்கியமான பிறப்புறுப்பின் ரகசிய ம் என்ன?
நார்மலாகவே பெண்களுக்கு பிறப்புறுப் பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப் பசையை Doderlin’s Bacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vagina வில் ஏற்படுத்துகிறது. இது ஒரு ஆரோக் கியமான
பிறப்புறுப்பின் ரகசியம்.
மேலும் சைக்காலஜிக்கல் டிஷ்சா ர்ஜ் என்பது Ovelation Period என் கிறோம். சிலருக்கு அந்தகாலத்தி ல் வெள்ளைபடுதல் எட்டாவது நா ளிலேயேகூட ஆரம்பித்துவிடலா ம். சிலருக்குபதினைந்தாவது நாள் கூட இருக்கும். இதை நாம் நார்ம ல் வெள்ளைப்படுதல் என்கிறோம். இந்த நாட்களில் வெள்ளைப்ப டுதல் இருந்தால்தான் ஒருபெண்ணால் கருத்தரிக்க முடியும். கரு முட்டை உருவாகும் நாளையே Ovelation Period என்கி றோம்.
மேலும் உடலுறவின் போது உணர்ச்சி வசப்படும்போது வெள்ளை திரவம் வெ ளிப்படும். இதையும் நார்மல் என்கி றோம். இது பல பெண்களுக்கு தெரிவ தே இல்லை. இதற்காக பயப்படும் பெ ண்களும் உள்ளனர். இதைப் படிப்பவர் கள் இதனால் தெளிவு பெறலாம். இது ஒரு ஆரோக்கியமான வெள் ளைப்படுதலே ஆகும்.
அதே மாதிரி மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு Prementural Congestion ஏற்படுவ தால் இரண்டு, மூன்று நாட்களுக்கு நாட்க ளுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக இரு க்கும். இதையும் நாம் நார்மல் என்று கூறு கிறோம். இதையே பலர் மாதவிலக்கு வரு வதற்கு அறிகுறியாகக் கொள்ளலாம். மே லும் கர்ப்பக் காலத்தில் வெள்ளைப்பட்டாலும் அதையும் நார்மல் என்று கூறுகிறோம்.
சில பெண்களுக்கு பருவம் அடைவதற்கு முன்பே எட்டுவயது, ஒன்பதுவயதில் வெள்ளைப்படுகிறது . இது ஆரோக்கியமான வெள்ளைப்படுதல் இல் லை. சிலருக்கு பூச்சுத்தொல்லை அதிகமாக இரு ந்தாலும் இம்மாதிரி வெள்ளைப்படும். இதை நு ண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் மூலம் குணப்ப டுத்தி விடலாம்.

Thursday, 1 May 2014

உடலுறவு முடிந்த பிறகும் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்ப‍து என்ன‍?

Posted on  by Muthukumar

உடலுறவு முடிந்த பிறகும் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்ப‍துஎன்ன‍?
தம்பதியர் படுக்கை அறையில் உறவு தொடங்கு முன் மணிக்க ணக்கில் முன்விளையாட்டுக்க ளில் ஈடுபடுகின்றனர். சலிக்க ச லிக்க முத்தமழையால் துணை யை  நனைய வைக்கின்றனர் ஆனால் உறவு முடிந்த பின்னர் எதையும் கண்டுகொள்ளாமல் அம்போவென்று விட்டுவிடுகின்ற
னர்.
உறவு முடிந்த பின்னரும் அன் பாய் அரவணைத்து முத்த மிட வேண்டும் என்று பெண் கள் எதிர்பார்க்கின்றனராம். உறவுக்கு பிந்தைய நிலை பற் றி ஆய்வு செய்துள்ள ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’ சுவாரஸ்யமான சில கிளுகிளு சமாச்சாரங் கள் வெளியிட ப்பட்டுள்ளன.
முன் விளையாட்டில் ஆர்வம்
உறவுக்கு முன் துணையை தூண் டுவதற்காக சின்ன சின்ன விளை யாட்டில் ஈடுபடுவது ஆண்களின் வழக்கம். அப்போது வெட்கப்பட்டு ஒதுங்குவது பெண்களின் வழக்க மாம்.
அன்பான அரவணைப்பு அவசியம்
170 பேரிடம் இது குறித் து கேள்வி கேட்கப்பட் டது. அதில் ஆண்க ளை விட பெண்கள் சில விச யங்களுக்கு முக்கியம் கொடுப்பதாக கூறியுள் ளனர். செக்ஸியான பே ச்சு, முத்தம், கட்டி அணைத்தல், போன்றவைகளை விரும்புவ தாக கூறும் பெண்கள் உறவுக்கு பின் அன்பான அரவணைப்பைவிரும்புவதாக கூறியுள்ளனர்.
முன்னும் பின்னும் முத்தம்
உறவுக்கு முந்தைய முன் வி ளையாட்டின் போது முத்தமிடு வது ஆண்களுக்கு பிடிக்கும் என்றால் உறவுக்கு பின் முத்த மிடுவதை பெரும்பாலான பெ ண்கள் விரும்புகின்றனராம்.
மெதுவாய் வருடிக்கொடுக்க ஆசை
உறவு முடிந்து, ஆண்கள் சோ ர்ந்து படுத்து விட்ட நேரத்தில் ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். மெல்லியதாய் காதோரம் பே சவும், வாஞ்சை யாய் தடவிக் கொடுத்து முத்தமிடவும் பெ ண்கள் விரும்புகின்றன ராம்.
ஐ லவ் யூ அவசியம்
பெரும்பாலான தம்பதிகள் உறவிற் குப் பின்னர் ஐ லவ் யூ என்று சொ ல்வதை விரும்புகின்றனர். அதுவு ம் இறுக்கமான அணைப்பில் கா தோரம் கிசுகிசுப்பாய் சொல்ல வே ண்டுமாம். அதன் பின் மேலும் கிக் ஏறி ஒரு ரவுண்ட் போக வாய்ப்புள் ளது.

Saturday, 19 April 2014

செக்ஸ் விசயத்தில் பெண்ணின் அணுகுமுறை எப்படியிருக்கும்?


செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோண த்தில் இருந்தே அணுகப் பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிற து. நிஜமாக பெண்ணின் உணர் ச்சி நிலைகள் என்ன? செக்ஸ் விசயத்தில் பெண்ணின் அணுகு முறை எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக் கட்டுரை.
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்தி கரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு
உண்மையாக வழங்கப்படவேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெ ரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன்மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம் கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மன ரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமை யான அறியாமை யும்கூ ட காரணங்களாக அமைந்தி ருக்கி ன்றன.
திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார் களா? என் றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோ ரும் கண்கூடாகக் காணும் திருமண உறவி ல் விரிசல் – விவாகரத்து போன்றவையாகு ம்.
எனவே திருமணம் செய்து கொண்டவர்க ளும் சரி, திருமண வாழ்வில் இணையப் போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றி யும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றி யும் அறிந்து வைத்திருப்பது இன்றியமையாதது ஆகு ம்.
சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுக ளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத் தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாய த்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேக மாக மாறி வருகிறது.
பெண்களும் முழுமையான இன் பம் அனுப விக்க வேண்டும். அவ் வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிற து. இயற்கையில் பார்த்தால் ஆண்களை விட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பத ற்கான உடலமைப் புடன் காணப்படுகின்றனர்..
இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்ப த்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட் டுமே இவ்வி ன்பத்தை அடைய முடி யும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடைவெளி யில்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழு ச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும் பாலும் அனுபவிப்பதே இ ல்லை இவற்றை போக்கு வது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உண ர்ச்சிகளை தூண்டும் உறு ப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழுமை யாக அறிந்திருத் தல்.
2) பெண்ணிடம் உள்ள செக்ஸ் குறை பாடுகளை செக்ஸ் மருத்துவர் மூலம் சரி செய்ய முடியும் என்பதை அறிதல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப் புக்களும் அதனைத் தூண் டும் முறைகளும்:
1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெ ரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும், கிள ர்ச்சியும் அடைகி றார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போ தே மார்புகளும் பெரிதாகி றது. மார் பகக் காம்புகள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்டலாலேயே முழுமை யான உச்சகட்டத்தை அ டைகின்றனர். ஆனால் மற் றவர்கள் அந்த அளவு உண ர்வுகளைப் பெறுவதில் லை.
கணவன்,  மனைவியின் மார்பு காம்புக ளை நாக்கி னால் வருடுவதாலும், சு வைப் பதினாலும் பெண்ணுடைய உணர்வுகளை மிகவும் தூண்ட லாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுத லினால் எரிச்சல‌டைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடை ய இன்பத்திற் கேற்றவாறு தான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண்கள் இந் நிலையில் மார்பகங்களை எவ்வா று தூண்ட வேண்டும்?
என தங்கள் துணைவருக்கு இனி மையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கிளிட்டோரிஸ் தூண்டுதல்:
பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளா வது கிளிட் டோரிஸ் தூண் டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தை யல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப் படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடை கின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரி ஸை தூண்டுமாறு ம னைவி கூறலாம். இதை விரல்க ளின் மூலமும், நாக்கின் மூலமும் தூ ண்ட முடியும். தொடர்ந் து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்ட த்தை அடைய வைக்கலாம்.
பெண் உறுப்பு:
இதன் வழியாக இன்பம் அடைவ து அனை வரும் அறிந்த ஒன்று. ஆனால் பல் வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடி யும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு மு க்கிய பிரச் சினை. பெண்ணுறுப் பின் நுழைவாயில் சில சமயம் இறுக மூடிக்கொள்ளும். ஆணு றுப்பை மட்டுமின்றி கைவிர லைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந் நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பய மாக இருக்கும்.
இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணு க்கு விரைப்புத் தன்மை கூட ஏற்படாமல் போகக் கூடும். இதுமுழுமையாக குணப்படுத்தக்கூடிய பிர ச்சினை என்பதை பெண் கள் தெரிந்து குணப்படுத் திக்கொள்ள முன்வர வே ண்டும். இதன் மூலம் தம்ப தியினர் ஆரோக்கியமா ன குடும்ப வாழ் க்கை- குழந்தைப் பேறு அடைய முடி யும்.
பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச் ச கட்டம் அ டையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுத ல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல காரண ங்கள் இருக்கலாம்.
1) தனிமை இல்லாமல் குழந் தைகளுடன் தூங்குவது
2) நேரம், இடம் வசதி
3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை
உச்சக்கட்டத்திற்குப் பின்பு:
உச்ச கட்டத்திற்கு பின்பும் பெ ண்கள் தங்கள் உடலை ஆண் கள் வருட வேண் டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண் டுமெ ன நினைக்கின்றனர். ஏனெ னில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளி யானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்க ளிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடு கின்றது.
பெண்மைக் குறைவு:
ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவ துபோல பெண்களுக்கு பெண் மைக்குறைவு அல்லது உடலுறவில் விருப்பமின்மை- ஏற் படலாம். இப்பெண்கள் உட லுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழ ந்தைப்பேறு பெற் றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கடமையாகவே செய்கிறார்கள். இதற்கான காரண ம். 1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கி ரங்கள் 2. வளர்ப்பு முறை 3. கற்பழிக்கப்படு தல் போன்றவையாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது?
ஆண்களுக்கான ஆண்மைக்குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைக ளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களு டைய பிரச்சி னைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினைக் கான காரணங்களை அறி ந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம்.
நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காச நோய், புற்று நோய், இருதய நோய், சிறு நீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின் போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்தி லும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்து விடும்.
பெண் உறுப்பு நோய்கள்:
1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்
2 பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின் போது வலி ஏற்படலாம்.
4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உற வின்போது வலி ஏற்படும்.
இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலிய ல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். இதனை இன்றைய நாளில் எளி தாக குணப்படுத்தி விடலாம்..
மாதவிலக்கு நின்ற பின்னர்:
ஒரு பெண் மணிக்கு மாத விலக் கு நின்ற (மெனோபாஸ்) பின்ன ர் பாலியல் உணர்ச்சி குறைந்து விடும் என்று பலர் எண்ணுகிறா ர்கள். இதுதவறு. இயல்பான பாலியல் உணர்ச்சி இருக்கும். இன்னும் சொல்லப் போனால் செக் ஸ் உணர்ச்சி கூடுதலாககூட இருக்கலாம். உடல் உறவின்போது திருப்தி என்பது அதிகமாகவும், இன்பமாகவும் இருக்கும். குழந் தை பிறந்து விடுமோ என்கிற அச்சமின்றி உடல் உறவில் ஈடுபட லாம். மாதவிலக்கு நின்ற பின் உடல் உறவில் ஈடுபடுவ தால் எந்த பாதிப்பும் வராது. இப்பெண்களுக்கு மாதவில க்கு நின்று போனதால் பெண் உறுப்பில் சுரக்கும் திரவம் சுரக்காது என்பதால் சிலசம யம் உடல் உறவின் போது எரி ச்சல் இருக்கும். இதற்கு இன் று அதி நவீன ஜெல்லிகள் கிடைக்கின்றன. நிரந்தரமா ன இன்பம் பெற இவர்கள் மெ னோபாஸிற்கு பிறகு H.R.T என்கிற ஹார்மோன் ரிபிளேஸ் மென்ட் தெரபி மூலம் சிகிச்சை பெறலாம். மேலை நாடுகளில் இது சகஜமான ஒன்று