Lord Siva

Lord Siva

Saturday, 28 January 2012

தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்றுநோய் தவிர்க்கலாம்

Posted On Jan 28,2012,By Muthukumar
இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல வகையான புற்றுநோயில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 28 முதல் 35 சதவீதமாக உள்ளது என, 2011ம் ஆண்டைய புள்ளி விவரம் ஒன்று சொல்கிறது.
முன்பெல்லாம், 50 முதல் 70 வயது நிறைந்த பெண்களுக்கே, இவ்வகை புற்றுநோய் ஏற்பட்டது. இப்போது, 30 முதல் 50 வயதுள்ள பெண்களைக் கூட, இந்நோய் தாக்குகிறது. கடந்த 2005ம் ஆண்டு வரை, கர்ப்பப் பை வாய் புற்றுநோய் தான், தமிழக பெண்களிடையே அதிகம் காணப்பட்டது. சமீபத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகம் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 30 வயதுள்ள பெண்கள் அனைவரும், ஆண்டுக்கு ஒரு முறை, மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
மார்பகப் புற்றுநோயின் தன்மைகள்
*மார்பகத்தில், வலி இல்லாத கட்டி உருவாகி, நாளடைவில் பெரிதாவது.
*சில நாட்களுக்குப் பின், அக்குளில் வீக்கம் தென்படும்.
*முலைக் காம்பு, உள்வாங்கிக் கொள்ளும்.
* காம்பிலிருந்து ரத்தம் வெளியேறும்.
மார்பில் தோன்றும் அனைத்துக் கட்டிகளும் புற்றுநோய் தானா?
* இல்லை. பெரும்பாலானவை சாதா கட்டிகளாகவே இருக்கும். பயப்படாமலும், தயங்காமலும் டாக்டரிடம் பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும். அது புற்றுநோய் தான் என, நாமாகவே முடிவு செய்து, பயப்படுவது வீண். 15 முதல் 20 சதவீதம் வரையிலான கட்டிகளே, புற்றுக் கட்டிகளாக உருவாகின்றன.
மார்பகப் புற்றுநோய்க்கும், தாய்ப்பால் கொடுப்பதற்கும் தொடர்பு உள்ளதா?
*தாய்ப்பால் கொடுக்கும்போது, பெண்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடு அடைகிறது. இந்த மாறுபாடு, மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கிறது.மார்பகப் புற்றுநோய் கண்டறிவதில், குடும்ப வரலாறு எந்த வகையில் முக்கியத்துவம் பெறும்.
* பரம்பரையாக இந்நோய்க்கான அறிகுறிகள் தென்படுவோர் எண்ணிக்கை, 5 முதல் 10 சதவீதமாக உள்ளது. பரம்பரையாக குடும்பத்தினர் பாதிக்கப்படுவது தெரிந்தால், அவர்களின் சந்ததியினரிடம், பி.ஆர்.சி.ஏ., 1 மற்றும் பி.ஆர்.சி.ஏ., 2 ஆகிய மரபணு பரிசோதனைகளை மேற்கொண்டால், நோயைக் கண்டறியலாம். இந்த மரபணுக்களில் மாற்றம் ஏற்படும்போது, மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு, 70 முதல் 80 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
நோயின் பல நிலைகளில், எந்த வகையான சிகிச்சைகள் உள்ளன?
* அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி, கீமோதெரபி, ஹார்மோன் தெரபி உட்பட பல சிகிச்சைகள் உள்ளன.
இச்சிகிச்சைகளின் பக்க விளைவுகள் என்ன?
* பசியின்மை, வாந்தி ஏற்படுதல், சோர்வு ஏற்படுதல், வாய் உலர்தல், காலத்திற்கு முன்னதாகவே மாதவிடாய் நின்று போதல், நோய் எதிர்ப்புத் திறன் குறைதல். நோய் அறிகுறியோ, மார்பகத்தில் சிறிய மாறுபாடு தென்பட்டாலோ, உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்வது அவசியம். சாதா கட்டிகளைக் கூட, புற்றுநோய்க் கட்டியாக கற்பனை செய்து கொண்டு, கலக்கம் அடையக் கூடா

No comments:

Post a Comment