Lord Siva

Lord Siva

Wednesday, 11 January 2012

தை பிறந்தால் வழி பிறக்கும்.. தங்கமே தங்கம் !

Posted On Jan 11,2012,By Muthukumar



சரி, கீழே வந்த இந்த மின்னஞ்சலை அப்படியே பதிவிடுகிறேன். தமிழாக்கம் பண்ற அளவுக்கு கூட நேரம் இல்லை... முடிந்தவரை , உங்கள் நண்பர்களுக்கு , forward  செய்யுங்கள். யாராவது ஒரு நல்ல உள்ளத்திற்கு மிக மிக தேவையான தகவலாக , உரிய நேரத்தில் அமையும். 

மனிதனுக்கு கல்வி கண்ணைவிட முக்கியம். நல்லா படிக்கிற பிள்ளைங்க , மேல்படிப்பு படிக்க வசதி இல்லாதவங்களுக்கு இந்த தகவல் மிக மிக உபயோகப்படும்..!
============================================================
Hi All,


If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year and scored more than 80%, please ask them to contact the NGO - Prerana (supported by Infosys foundation).

The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies.

Please ask the students to contact the people mentioned below to get the form:
580, Shubhakar, 44th cross, 1st A main road, Jayanagar, 7th block, Bangalore .

Contact numbers:
1. Ms. Saraswati - 99009 06338
2. Mr. Shivkumar - 99866 30301
3. Ms. Bindu - 99645 34667

Even if you don't know anyone, please pass on this info, someone might be in need of this help.

==================================================================

ஜனனி  ஜனனி பாட்டுல ஆரம்பத்துல இளையராஜா பாடி இருப்பாரே ... அந்த ஸ்லோகம் தான் இது. Highly  Powerful .... ! காலையில் தினமும் வாய்விட்டு சொல்லுங்கள்... நிச்சயம் மங்களம் பெருகும்..!மனது வலிமை அடையும்..!

சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது -மபி (ந)
அதஸ் -த்வா (மி) மாராத்யாம் ஹரி (மி) ஹர -விரிஞ்சாதி 
பி (மி) ரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம்: க்ருத (மி) புண்ய:  
ப்ரபவதி
விளக்கம்:
திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால் தேவிநீ அன்புடன் ஒன்றித் தங்கிடிலன்றி இயங்கிடும் திறமும் இறைவனே இழந்திடும் என்னில் கங்கைவார் சடையன் அயன்திரு மாலூம் கைதொழுதேந்தியே போற்றும் பங்கயச் செல்வி, புண்ணிய மிலார் நின் பாதமே தொழுவதும் எளிதோ
பயன்கள்:::
இந்த அம்பாள் ஸ்லோகம் செளந்தர்யலஹரி -  ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள் அருளியது ஆகும். இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.
=============================================================

வீட்டில் ஐஸ்வர்யமும், தனமும் என்றும் பெருக - சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்வோம்.....!
1. அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும்.
2. அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது, தன்முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையாவது முதலில் பார்த்துவிட வேண்டும்.
3. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
4. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
5. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால் பாயாசம், கற்கண்டு கனி வகை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.
6. வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக் கொடுக்கலாம். 
7. ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
8. வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
9. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.
10. வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
11. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.
12. குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க கூடாது. புஷ்பத்தினாலும் அணைக்க கூடாது.
13. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது.
14. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
15. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
16. உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.
========================================================================


வாசகர்கள் அனைவருக்கும் , எங்கள் அனைவரின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...! தை பிறக்கப் போகுது..!  நம்ம எல்லோருக்கும் நல்ல வழி கிடைக்கட்டும்..!


வாழ்க அறமுடன்..! வளர்க அருளுடன்.....!

No comments:

Post a Comment