Posted On Jan 17,2012,By Muthukumar |
www.rome2rio.com
என்ற முகவரியில் இயங்கும் இணைய தளத்தை வடிவமைத்தவர் யாராயினும் மிகவும்
பாராட்டத்தக் கவர்களாவார்கள். இது கூகுள் மேப்ஸ் வசதியை அடிப்படையாகக்
கொண்டு அமைக்கப்பட்டு இயங்குகிறது. உலகின் எந்த ஊரிலிருந்தும் இன்னொரு
ஊருக்குச் செல்வதற்கான வழி காட்டப்படுகிறது. புறப்படும் ஊரில் எந்த ரயில்வே
ஸ்டேஷன் சென்று, எந்த ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, விமானம் அல்லது பஸ்
பிடித்து குறிப்பிட்ட ஊருக்குச் செல்லலாம் என்று காட்டப்படுகிறது. இடது
புறம் எந்த எந்த ஊர்களை இணைக்கையில் பயணத்திற்கு எவ்வளவு நேரம் ஆகிறது
என்றும் காட்டப்படுகிறது. அதோடு மட்டுமின்றி, இந்த பயணத்தின் போது
சுற்றுப்புறச் சூழ்நிலையைக் கெடுக்கும் கரியமல வாயு வாகனங்களினால் எவ்வளவு
வெளியாகும் என்ற கணக்கும் காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக,
சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல வேண்டும் என அமைத்த போது, சென்னை
போர்ட் ஸ்டேஷன் சென்று, நகருக்குள் இயங்கும் ட்ரெயின் பிடித்து, விமான
நிலையம் செல்லவும். அங்கிருந்து விமானம் பிடித்து மதுரை விமான நிலையம்
சென்று, பின்னர் காரில் மதுரை செல்லவும் என்று காட்டப்படுகிறது. இவ்வாறு,
உலகின் எந்த இடத்திற்கும் செல்ல வழிகள் காட்டப் படுகின்றன.
No comments:
Post a Comment