Lord Siva

Lord Siva

Tuesday, 17 January 2012

சிறுநீரக கற்களை நீக்க நவீன சிகிச்சை


சிறுநீரகக் கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப் பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறு நீரகக் குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும் என்கிறார் சென்னை அடையாறு கஸ்தூரிபாய்நகர்கியூர் பவுண்டேசன் மருத்துவமனையைச்  சேர்ந்த டாக்டர் ரமேஷ்.
அவர் மேலும் கூறியதாவது:-
சில பொருட்களினால் சிறுநீர் அடர்கரைசலாகும் போது சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் காணப்படும் இந்த பொருட்கள் சிறிய படிகங்களை உண்டாக்கி, அவை கற்களாக மாறலாம். சிறுநீர் கற்கள் உண்டாகி சிறுநீரகக் குழாய் வழியாக கீழே இறங்கும் வரை எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. சிறுநீரகக் கற்கள் சிறுநீர் குழாய் வழியாக கீழ்நோக்கி நகரும் போது வலியினை ஏற்படுத்தும். இவ்வலியானது, அடிக்கடி பின்புற விளாவின் 2 பக்கங்களிலும் ஆரம்பித்து கீழ் நோக்கி நகரும்.
அறிகுறிகள்:
பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகு வலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி. குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் காணப்படுதல், அடிவயிற்றில் வலி. வலியோடு சிறுநீர் கழித்தல், இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல், ஆணின் முதன்மை இனப் பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி, சிறுநீரின் நிறம் இயற்கைக்கு மாறாக காணப்படுதல்.
எப்பொழுது மருத்துவ நிபுணரை அணுகலாம்?
சிறுநீர்கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளோ, சிறு நீரக கற்கள் திரும்பத்திரும்ப ஏற்படுவதற்கான அறிகுறிகளோ, சிறுநீர் கழிப்பது வலியுடன் கூடியதாக இருந்தாலோ, அனுதினம் வெளியேற்றப்பட்ட சிறுநீரின் அளவு குறைந்தாலோ, அல்லது பிற புதிய அறிகுறிகள் தோன்றினாலோ மருத்துவரை அணுகலாம்.
தடுப்பு முறைகள்:
சிறுநீரக கற்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பின், அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம். பொதுவாக ஒரு நாளைக்கு 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீரகக் கற்களின் தன்மையை பொருத்து மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்தோ அல்லது பிற முறைகளையோ கையாண்டு, கற்கள் திரும்பத் திரும்ப ஏற்படுவதை தடுக்கலாம்.
சிறுநீரகப் பையில் கல்:
இதைத் தவிர சிறுநீரகத் தாரையின் கீழ் பாகங்களில் உள், வெளி சிறுநீர்க்குழாய்கள், சிறு நீர்ப்பை இவற்றில் கல் அடைப்பு கட்டிகள். முக்கியமாக ப்ராஸ்டேட் வீக்கம் ஆகியன உள்ளதாக சந்தேகப்பட்டாலும் அவற்றை எடுக்க அறுவை சிகிச்சைக்கு பதில் இந்த உள்நோக்கி கருவிகள் பயன்படுத்தலாம்.
சிஸ்டோஸ்கோப் என்பது ஒரு பென்சில் போல நீண்ட ஒல்லியான குச்சி போன்று இருக்கும். இதனுள் கண்ணாடி இழைகளால் ஆன ஒன்றும் காலியான ஒன்று அல்லது இரண்டு நுன்னுழாய்களும் இருக்கும். இக்கண்ணாடி குழாய் மூலம் ஒளிக்கற்றையை உள்ளே செலுத்தி சிறுநீரக மருத்துவர் சிறு நீரகங்களின் உட்பகுதிகளான, சிறுநீர்ப்பை, உள், வெளி சிறுநீர்க்குழாய் ஆகியவற்றை நேரில் பார்க்கலாம்.
மற்ற குழாய்கள் மூலம் வேறு நுண் கருவிகளை செலுத்தி சதைத்துணுக்களை பரி சோதனைக்கு எடுக்கலாம். கட்டிகள், கற்கள் இவற்றை வெளியே எடுக்கவும் செய்யலாம். கற்களின் வகைகள்::::: கால்சியம் கற்கள் அதிகமாக ஏற்படக் கூடியவை. அவை 2 அல்லது 3 மடங்கு அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும்.
சாதாரணமாக 20 வயது முதல் 30 வயதுடையவர்களுக்கு ஏற்படும். இது திரும்பத் திரும்பத் ஏற்படும் தன்மையுடையது. கால்சியம் பிற பொருட்களான ஆக்ஸ்லேட் (மிக அதிகளவிலான பொருள்), பாஸ்பேட் அல்லது கார் போனேட் போன்றவையுடன் சேர்ந்து கற்களை உண்டாக்கும். யூரின் அமில கற்களும் அதிக அளவில் ஆண்களுக்கு ஏற்படும்.
ஸ்ட்ருவைட் கற்கலன் (மெக்னீஸியம் அமோனியம்/ பாஸ்பேட் படிகங்களால் ஏற்படும் கல்) என்பது முக்கியமாக பெண்களில் சிறுநீர் குழாய் சம்பந்தமான தொற்று நோய் ஏற்படக்கூடியவை. அவை மிகப் பெரியதாக வளரக் கூடியவை. மேலும் சிறுநீரகங்கள், சிறு நீர்குழாய் அல்லது சிறுநீர் பையில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியவை.
சிகிச்சை:
சில சமயம் சிறுநீர்ப்பைக்கு மேல் உள் சிறுநீர்க் குழாய்க்குள் உள்ள கற்களை எடுக்க யுரிடராஸ்கோப் என்னும் வேறு விதமான உள்நோக்கி கருவிகளை சிஸ்டோஸ்கோப் மூலம் செலுத்தி ஒரு சிறுகூடை போன்ற அமைப்பின் மூலம் எடுக்கலாம்.
ஒருவேளை பெரிய கல்லாக இருந்தால் பிரத்யேக ஒலி அலைகள் லேசர் சக்தி இவற்றை இந்த யுரி டாஸ்கோப் வழியே செலுத்தி உடைத்து தூளாக்கி வெளியே எடுக்கவும் செய்யலாம். உங்களுக்கு சிஸ்டோஸ்கோப் செய்ய வேண்டிய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக மருத்துவரிடம் நோயாளி சிஸ்டோஸ்கோப்பிற்கு தயாராக என்னென்ன செய்ய வேண்டுமென்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு சிறுநீரில் கிருமி வராது இருக்க மருத்துவர் ஓரிரு நாட்களுக்கு கிருமி கொல்லி மருந்துகள் கொடுத்திருப்பார். அதையும் மீறி உங்களுக்கு சிறுநீரில் கிருமிக்கு அடையாளமாக எரிச்சல், வலி, நடுக்கத்துடன் கூடிய குளிர்க்காய்ச்சல் இருந்தால் டாக்டரை அணுகவும் என்கிறார் டாக்டர் ரமேஷ். உடனே தண்ணீர் குடிக்கலாம். முழு மயக்கம் கொடுத்திருந்தால் மருத்துவர் சொல்லும் போது மட்டுமே தண்ணீர் குடிக்கலாம். இவை 24 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கக் கூடாது, அவ்வாறு 2 நாட்களுக்கு மேல் சிறுநீரில் ரத்தம் அல்லது அதிகமான வலி இருந்தால் மருத்துவரை அணுகவும்.
சிறுநீர்க்கழிக்கும் போது சிறிது எரிச்சலாக இருக்கலாம். சிறுநீரில் சிறிது ரத்தம் கலந்து வரலாம். இந்த கஷ்டங்களை குறைக்க நன்கு நீர் குடிக்கவும்,  மருத்துவரை கலந்தாலோசித்து நல்ல சுடுநீரில் குளிக்கலாம். நோயாளிக்கு முதுகுத் தண்டில் மயக்க மருந்து கொடுத்திருந்தால் அவர் சில மணி நேரம் படுத்திருக்க வேண்டும். சிகிச்சை முடிந்த பிறகு எப்படிஇருக்கும்? சில சமயம் சிறுநீர்ப்பையில் அல்லது அதற்கு மேல் உள்சிறுநீர்க்குழாயில் கல் இருந்து அதை எடுக்க வேண்டியிருந்தாலோ அல்லது ப்ராஸ்டேட் சுரப்பி அல்லது வேறு பாகங்களிலிருந்து சிறு சதைத் துணுக்கு எடுக்கவோ அல்லது வீக்கமாக உள்ள ப்ராஸ்டேட் சுரப்பியையே அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டியே இந்த செய்கை என்றாலோ நேரம் சிறிது கூடுதலாக பிடிக்கும்.
பொதுவாக இந்த சிகிச்சைக்கு தயார்ப்படுத்துவதிலிருந்து முடிக்கும் வரை 30 நிமிடம் பிடிக்கும். சிஸ்டோஸ்கோப் கருவியை உள்ளே நுழைப்பதிலிருந்து வெளியே எடுப்பது வரை உள்ள நேரம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். வெறுமனே உள்ளே பார்ப்பது மட்டும் தான் என்றால் குறைந்த நேரம் தான். நோயாளிக்கு வெளிசிறுநீர்க்குழாய் மட்டும் மரத்துப் போக மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தால் இவ்வாறு சிறுநீர்ப்பை நிரம்பி அதன் கொள்ளளவை நெருங்கும் போது உங்களுக்கு சிறிது அசவுகர்யமாகவும் சிறுநீர்க் கழிக்க வேண்டும் போலவும் உணரலாம். இந்த பரிசோதனை முடிந்தவுடன் நோயாளி சிறுநீர் கழித்துக் கொள்ளலாம். சிறுநீரக மருத்துவர் வெளிசிறுநீர்க் குழாய்த் துவாரத்தின் வழியாக சிஸ்டோஸ்கோப் கருவியின் நுனியை மென்மையாக திணித்து மெதுவாக சிறுநீர்ப்பை வரை கொண்டு செல்வார்.  சுத்தமான நீர் அல்லது சலைன் தண்ணீர் சிறுநீர்ப்பை நிரம்பும் வரை செலுத்தப்படும். இதனால் சிறுநீர்ப்பையின் உட்புறத்தை மருத்துவர் நன்கு பார்வையிட முடியும்.
முதுகுத்தண்டில் நரம்புகளை மரத்துப் போக செய்யும் ஸ்பைனல் எனப்படும் மயக்க மருந்தோ அல்லது முழுமையாக சுயநினைவே இல்லாமல் செய்ய வைக்கும் பொது மயக்க மருந்தோ தேவைப்படலாம். அவ்வாறெனில் மருத்துவமனையில் ஓரிரு நாட்கள் தங்க வேண்டி வரலாம். நோயாளியை அதிக அளவு தண்ணீர் குடிக்க சொல்வார்கள். ரத்த அழுத்தம், ரத்த வகை, பரிசோதனைகள் சரி பார்க்கப்படும். வெளி சிறுநீர் குழாய், அதனை சுற்றிய பகுதிகள் மரத்துப் போக மயக்க மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும். இந்த சிகிச்சை சில சமயம் சிறுநீர்ப்பையிலிருந்து மேலே உள்சிறுநீர்க்குழாய் வரை சென்று பார்த்து அதில் உள்ள கற்கள், கட்டிகள் ஆகியவற்றை அகற்ற வேண்டியதற்காக திட்டமிடப்பட்டிருக்கலாம்.
பெரும்பாலும் இந்த பரிசோதனைக்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு உடனே திரும்பி விடலாம். பரிசோதனைக்கு முன்பு நோயாளியின் சிறுநீரில் கிருமிகள் உள்ளனவா என்பது பரிசோதிக்கப்படும். முதல் நாள் மயக்க மருந்து நிபுணர் பரிசோதித்து  உடல் நிலை செய்யப்பட உள்ள சிகிச்சை (வெறுமனே பார்ப்பது மட்டும் தானா அல்லது கல் எடுத்தல், ப்யாப்சி, கட்டி அறுவை சிகிச்சை) ஆகியவற்றை பொறுத்து எந்த வகையான மயக்க மருந்து என்பதை முடிவு செய்வார்.

No comments:

Post a Comment