Lord Siva

Lord Siva

Monday, 23 January 2012

தினமும் முட்டை சாப்பிட்டால்…

Posted on Jan 23,2012,By Muthukumar

நமது உடலுக்கு கொழுப்பு சத்து அவசியம். உடல் உற்பத்தி செய்யும் கொழுப்பையும் சேர்த்து, ஒரு நாள் நம் உடலுக்கு 130 மி.கிராம் கொழுப்பு தேவை. ஆனால் ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டும் கிட்டத்தட்ட 210 மி.கிராம் கொழுப்பு கிடைக்கிறது. அதனால் முட்டை நிறைய சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்துவிடும்.
ஒரு வாரத்தில் எத்தனை முட்டை சாப்பிடலாம்?
உடலில் அதிக அளவு கொழுப்பு இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், வாரத்திற்கு இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிடக்கூடாது. ஆம்லெட் செய்தோ, குழம்பில் பயன்படுத்தியோ, பொரித்தோ அதனை சாப்பிடலாம்.
முட்டையின் மஞ்சள் கருவில்தான் கொலஸ்ட்ரால் குவிந்திருக்கிறது. கொலஸ்ட்ரால் உடலில் அதிக அளவில் சேர்ந்தால் அது இதயத்தின் செயல்பாட்டிற்கே பிரச்சினையாகி விடும்.
முட்டை வெள்ளைக்கருவை நினைத்து டென்ஷன் ஆக வேண்டியதில்லை. தேவைப் படும் அளவிற்கு தின்னலாம். அதில் புரோட்டின் நிறைய இருக்கிறது. கொழுப்பு இல்லை. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் இருந்து கிட்டத்தட்ட 3 கிராம் புரோட்டீன் கிடைக்கிறது. அதனால் ஒருவர் நான்கு முட்டையின் வெள்ளைக்கருவை தினமும் சாப்பிடலாம். அதில் சிறிதளவு மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம்.
குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக் கலாம். அதில் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைய இருப்பதால், அவர்கள் விரும்பும் விதத்தில் அந்த ஒரு முட்டையை சமைத்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு புரோட்டீன் சத்து தேவை. மேலும் மஞ்சள் கருவில் இருக்கும் வைட்டமின் ஏ, டி, இ போன்றவைகளும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியம். இரும்புச்சத்தும் அதில் இருக்கிறது. 17 வயது வரை மஞ்சள் கருவால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
70 வயதைக் கடந்தவர்களும் கொலஸ்ட்ராலைப் பற்றி கவலைப்படாமல் முழு முட்டை சாப்பிடலாம். வயதானவர்களின் உடலுக்கு தேவையான ஒமேகா 3 பேற்றி ஆசிட் முட்டை மூலம் கிடைக்கும்.
உடலில் ஏற்கனவே கொலஸ்ட்ரால் தொந்தரவு இருப்பவர்கள் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடவேண்டும். அவர்கள் சுவையாக சாப்பிட விரும்பினால், வெள்ளைக்கருவிலே குழம்பு தயார் செய்யலாம். கிரேவியாக தயாரித்தால் எண்ணையின் அளவில் மிகுந்த கவனம் அவசியம். வெள்ளைக்கருவை மட்டும் பயன்படுத்தி ஆம்லெட் தயாரித்து சுவைக்கலாம். சிறிதளவு எண்ணையில் வறுத்தும் சாப்பிடலாம்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம். அதிக உடல் எடை கொண்டவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.
கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்கள் வீட்டிலே `ஆரோக்கிய ஆம்லெட்' தயாரிக்கலாம். முட்டை வெள்ளைக்கருவில் காரட், வெங்காயம், தக்காளி, முட்டைக்கோஸ் போன்றவை களை நறுக்கி சேர்த்து ஆம்லெட் தயாரித்து சுவைத்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இதில் பிட்டாகரோட்டின், வைட்டமின், பைபர் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. கோழி முட்டையை விட, வாத்து முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது.
vayal | ஜனவரி 23, 2012 at 8:29 பிற்பகல் | Categories: உடல்நலம் | URL: http://wp.me/pewfk-3Ik
Comment    See all comments

No comments:

Post a Comment