Posted On Jan 17,2012,By Muthukumar |
பெண்கள் தமது மாதாந்த மாதவிடாய்களை நிரந்தரமாக
இழக்கும் காலப்பகுதியை மருத்துவதியில் மெனோபோஸ் என அழைப்போம். இது
சராசரியாக 50 அல்லது 51 வயதில் பெண்களில் நடை பெறுவது வழக்கம். சில
வேளைகளில் இந்த மெனோபோஸ் நிலை சற்று முன் கூட்டியே அதாவது 40 அல்லது 45
வயதில் கூட ஏற்படலாம்.
இவை ஒரு பெண்ணின் தனிப்பட்ட பரம்பரை இயல்புகளைப் பொறுத்து
தீர்மானிக்கப்படுகின்றது. இவற்றை இயற்கையான மெனோபோஸ் என அழைப்போம்.
அத்துடன் சத்திர சிகிச்சையில் சூலகங்கள் அகற்றப்பட்டால் இவ்வாறு
மெனோபோஸ் செயற்கையாக ஏற்படுகின்றது.மெனோபோஸ் பருவம் ஏற்பட்ட பின்னர் பெண்கள் எதிர்நோக்கும் மருத்துவ ரீதியான விடயங்கள் பல உள்ளன. இவை பெண்களின் சூலகங்கள் நிரந்தரமாக தமது செயற்பாடுகளை நிறுத்துவதால் ஏற்படும் ஹோர்மோன் (Hormone ) குறைப்பாட்டாலேயே ஏற்படுகின்றது. இவ்வாறு ஹோர்மோன் குறைபாடு ஏற்படுவதால் பெண்களில் மன ரீதியாக, உடற்றொழில் ரீதியாக மற்றும் உடற்கட்டமைப்பு ரீதியாக முக்கிய சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆனால் எமது பெண்கள் பலர் இந்த மெனோபோஸ் பருவத்தின் பின்னர் ஏற்படும் உடல் ஆரோக்கிய விடயங்கள் குறித்து சரியாக அறிந்தில்லாமையால் தமது வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிப்பது சகஜமாகிவிட்டது. அத்துடன் இந்த விடயங்களை பெண்களோ, குடும்பத்தினரோ வயது போவதால் ஏற்படும் விடயங்கள் என அலட்சியப்படுத்தும் தமது வாழ்க்கையின் மிகுதிக் காலப்பகுதியை பல துன்பங்கள் நிறைந்த பகுதியாக வாழ்வதும் வழமையாகிவிட்டது. இதனைத் தான். மேலை நாட்டுப் பெண்கள் பின்பற்றி தமது வாழ்க்கைக் காலத்தை கூட்டியது மட்டுமன்றி இந்த 50- 51 வயதைத் தமது வாழ்க்கையின் ஒரு இளமைக் கால கட்டமாகவே கருதி வாழ்கின்றனர். ஆனால் நாம் மட்டும் ஏன் இந்த வயதுப் பகுதியை வாழ்க்கையில் எல்லாமே முடிந்து விட்ட காலப்பகுதியாகவும் இது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பணிவிடைகள் மட்டும் செய்யும் காலப்பகுதியாகவும் இதன் பின்னர் ஏற்படும் சிக்கல்கள் யாவும் கடவுள் விட்ட வழியெனவும் வாழ்க்கை முடியும் காலம் நெருங்கி விட்டது எனக்கருதி சரியான மருத்துவப் பராமரிப்புக்களை நாடாமல் புறக்கணித்து வருவதும் நாம் அன்றாடம் கண்டும் கேட்டதுமான விடயங்களாகி விட்டன. இந்நிலையில் எமது பெண்களுக்காக மெனோபோஸ் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அதற்காக நாம் செய்ய வேண்டிய விடயங்கள் குறித்தும் அறியத் தருவது எமது கடமையாகும். மெனோபோஸ் பருவத்தின் பின்னர் ஏற்படும் மன உளவியல் மாற்றங்கள் மெனோபோஸ் பருவத்தின் பின்னர் மனம் படபடத்தால் ஒரு வித பயம் போன்ற உணர்வுகள் நித்திரையின்மை, கோபப்படுதல், ஆத்திரப்படுதல், ஞாபகமறதி ஏற்படுதல் சரியாகக் கிரகிக்க முடியாது அவதிப்படுதல், மற்றும் தாம்பத்திய குடும்ப உறவில் நாட்டமில்லாத தன்மை போன்றன ஏற்படும். இவை ஹோர்மோன் குறைப்பாட்டால் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். மெனோபோஸ் பருவத்தில் பின்னர் ஏற்படும் உடற்றொழிலியல், உடற்கட்டமைப்பு மெனோபோஸ் பருவத்தின் பின்னர் உடலமைப்பில் வெப்ப உணர்வு அதிகரித்தல், அதிகம் வியர்த்தல், இரவில் வியர்த்தல், மற்றும் இதயம் படபடவென அடித்தலை உணர்தல், தோல் சுருங்குதல், மயிர்கள் கொட்டுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எவுபோன்ற உணர்வுகள், கட்டுப்பாடு இல்லாது சிறுநீர் வெளியேறுதல், பெண் உறுப்புப்பகுதியில் ஏற்படும் எரிவுகள் மற்றும் வறட்சித் தன்மைகள், கர்ப்பப்பை இறக்கம், எலும்புத் தொகுதியில் ஏற்படும் தேய்வுகள், முதுகுவலி, மூட்டுவலி மற்றும் எலும்புகள் எளிதில் முறிவடையக்கூடிய தன்மைகள் மற்றும் இருதய நோய்கள் மாரடைப்புகள் கொலஸ்ரோல் அதிகரிப்பு என்பன ஏற்படுகின்றன. மெனோபோஸ் பருவத்தின் பின்னர் ஏற்படக்கூடிய புற்று நோய்கள் பெண்களின் வாழ்க்கைக் காலத்தை நிர்ணயிக்கக்கே சவாலாக அமைய அதனைத் தொடர்ந்து கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் என்பன ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சிலல் சூலகங்ளில் ஏற்படும் சூலகப் புற்றுநோயும் முக்கியமானது. இவற்றைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் வருமுன்னே தடுக்கக்கூடியதாக இருக்கும். அதாவது மார்பகங்களைப் பெண்கள் தாமாகவே இடையிடையே தமது கைகளால் மாறி மாறி அமத்திப் பார்த்து ஏதாவது அசாதாரண கட்டிகள் அல்லது வளர்ச்சிகள் உணரப்பட்டால் மருத்துவ ஆலோசணையை நாட வேண்டும் அத்துடன் 2 வருடங்களுக்கு ஒருமுறை மார்பகங்களுக்கென செய்யப்படும். எக்ஸ்ரே (xray) பரிசோதனையை மமோகிராம் (MAMMO GRAM) ஒழுங்காக செய்யப்பட வேண்டும். இதன் மூலம் மார்பகப் புற்று நோய்களை ஆரம்பத்திலேயே உணரக்கூடியதா இருக்கும். மற்றும் கர்ப்பப்பை வாசல் புற்றுநோயை ஒழுங்கா 3 வருடங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் பப் பரிசோதனை மூலம் ஆரம்ப நிலைகளிலேயே அறிந்து அவற்றைத் தடுக்கக்கூடியதாக இருக்கும். மேலும் மெனோபோஸ் பருவத்தின் பின்னர் மீண்டும் மாதவிடாய் போன்ற குருதிக்கசிவு ஏற்பட்டால் அது குறித்து கூடிய கவனம் எடுத்து மருத்துவ ஆலோசனையை நாடி ஸ்கான் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பையின் உள் இழையங்களை வயிறு கழுவுதல் அல்லது டீ அன் சி (D and C) பரிசோதனை மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்புள்ளதா என அறிவது அவசியம். மெனோபோஸ் பருவத்தின் உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும் சிகிச்சைகள் மெனோபோஸ் பருவத்தின் பின்னர் ஏற்படும் பல பிரச்சினைளைத் தீர்க்க நாம் பல வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவையாவன மனதை அமைதிப் படுத்தும் மூச்சு சுவாச பயிற்சிகளான யோகா போன்ற பயிற்சிகளை ஒழுங்காக மேற்கொள்ள வேண்டும். அத்துடன் வேகமாக நடத்தல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மற்றும் மாச்சத்து, கொழுப்புச்சத்து, இனிப்புச்சத்து, நிறைந்த உணவுகளைத் தவிர்ந்த புரதச்சத்து, நார்ச்சத்து, நிறைந்த சோயா, கடலை, காய்கறிகள், பழங்கள் போன்ற சிறந்த உணவுப் பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த ஹோர்மோன் மாத்திரைகளை உட்கொண்டு பெண்களின் ஆரோக்கியத்தைப் பேண முடியும். தகுந்த வைத்திய ஆலோசனைப்படி தகுந்த ஹோர்மோன் மாத்திரைகளையும் கல்சியம் மாத்திரைகளையும் எடுப்பதன் மூலம் பக்க விளைவுகள் இன்றி நன்மைகள் பல பெற முடியும். எனவே நேயர்களே மெனோபோஸ் பருவம் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புனை. இதனை சரியான விதத்தில் கையாள்வதன் மூலம் வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்படும் இவ்வாறான பல சிக்கல்களிலிருந்து விடுபட முடியும். |
Lord Siva
Tuesday, 17 January 2012
மெனோபோஸ் (மாதவிடாய்) பருவமும் பெண்களின் நலமும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment