Posted on January 12, 2012 by muthukumar
கோழி முட்டை
தன்மை: சூடும் , கொழுமை யும் ஆகும்
நன்மை : விந்து விளையும் , தாது விருத்தி அதிகரிக்கும்.
உடல் தழைக்கும் , இரத்தம் அதிகரிக்கும், சூட்டைப்பற்றி ய பீனிசத்தை மாற்றும், கோழி முட்டையை அரை வரிசை வேகவைக்கும் பொழுது இந்த குணங்களை காட்டும்.
உடல் தழைக்கும் , இரத்தம் அதிகரிக்கும், சூட்டைப்பற்றி ய பீனிசத்தை மாற்றும், கோழி முட்டையை அரை வரிசை வேகவைக்கும் பொழுது இந்த குணங்களை காட்டும்.
நோய் : அதிகமாக வெந்தால் காற்று அதிகரிக்கும் ,மந்தப்படும்
மாற்று : சூட்டு உடலுக்கு நாட்டுக்காடி, குளிர்ச்சி உடலுக்கு குல்கந்து
வாத்து முட்டை
தன்மை : குளிர்ச்சியும் ,சிலிர்ப்புமாகும்
நன்மை : உடல் வலிமை ஏற்படும் , உடல் பருக்கும்
நோய் : மந்திக்கும் , வயிறு வலிக்கும் , காற்று அதிகரிக்கும்
மாற்று : இஞ்சி , சீரகம் , கொத்தமல்லி
புறா முட்டை
தன்மை : சூடும் ,கொழுமையும் ஆகும்
நன்மை : ஜீரணப்படும், நீர் சம்பந்தமாக நோய்களைக் கண்டிக்கும், உடல் தழைக்கும் , தாது அதிகரிக்கும், விந்து விளையும்
நோய் : சூடு , உண்டாகும்
மாற்று : பசுவின் நெய்யில் பொரித்துக் கொள்ளவும்
மயில் முட்டை
தன்மை : சூடும் , வறட்சியும் ஆகும்
நன்மை: பிடிப்புகளை மாற்றும் , கடிகளை நீக்கும் , வலிமை உண்டாக்கும் , ஜீரணப்படும்
நோய் : சூடு , உண்டாக்கும்
மாற்று : கொத்தமல்லிக் கீரை ,வெங்காயச் சாறு
காக்கா முட்டை
தன்மை: சூடும், வறட்சியும் ஆகும்
நன்மை : மண்ணீரலுக்கு வலிமை தரும் , காமாலை , பித்தம்
பாண்டு , சோகை , இவைகளை நீக்கும் , ஜீரணமாகும் ,
கண்ணொளி அதிகப்படும்
பாண்டு , சோகை , இவைகளை நீக்கும் , ஜீரணமாகும் ,
கண்ணொளி அதிகப்படும்
நோய்: சூட்டு உடம்புக்கு பயன் படாது
மாற்று : வெங்காயச்சாறு , கொத்தமல்லி கீரை
ஆமை முட்டை
தன்மை: குளிர்ச்சியும், வறட்சியுமாகும்
நன்மை : வலிமை தரும் , உடல் தணியும்,அதிசார பேதிகளை கட்டி விடும், குடலுக்கு வலிமை உண்டா கும்
நோய் : நெஞ்சு கரிக்கும
மாற்று : ஏலம் , சீரகம்
மீன் முட்டை
தன்மை : சூடும் , குளிர்ச்சியும் ஆகும்
நன்மை: உடல் தழைக்கும், பலம் ஏற்படும்,அதிசார பேதி களை நிறுத்தும் .
நோய் : வயிற்றில் களிம்பு கட்டும்
மாற்று : மிளகு , கடுகு , சீரகம்
No comments:
Post a Comment