Posted On Jan 07,2012,By Muthukumar
தமது மார்பகங்களில் வலி ஏற்படாத பெண்களே இருக்க முடியாது. சிறிதோ பெரிதோ அவர்கள் வாழ்நாளில் எப்பொழுதாவது மார்பகங்களில் வலி வந்தே இருக்கும்.
மாதவிடாய் கால வலி
மாதவிடாய் வருவதை அண்டிய தினங்களில் பல பெண்களுக்கு
- மார்புகள் கனதியாக, பொருமலாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு.
- சாதாரணமான பொறுக்கத்தக்க வலியாக இருக்கலாம்.
- ஒரு சிலருக்கே தாங்க முடியாத வலியாகத் தொல்லை கொடுத்து மருத்துவரை நாட வைக்கும். 'இது எமக்கு விதிச்ச விதி' எனச் சொல்லி தாங்கிக் கொள்ளும் பொறுமைசாலிப் பெண்களே அதிகம்.
- மார்பக வலியானது இவ்வாறு மாதா மாதம் சுழற்ச்சி முறையில் வரும்
இதைத் தவிர வேறு பல காரணங்களாலும் ஏற்படக் கூடும்.
மாதவிடாயுடன் தொடர்புடைய மார்பு வலிகள் பொதுவாக இளம் பெண்களிலேயே தோன்றும்.
ஏனைய மார்பக வலிகள்
ஆனால் ஏனையவை பொதுவாக 40 வயதைத் தாண்டிய பெண்களிலேயே அதிகம் காணப்படுகின்றன.
- பெரும்பாலும் இத்தகையவை ஒரு மார்பில் மட்டும் ஏற்படலாம்.
- அதிலும் குறிப்பான ஓர் இடத்தில் மட்டும் வரலாம்.
- அவை திடீரெனத் தோன்றும்.
- சில வேளைகளில் அவ்வாறே வந்த சுவடின்றி மாறவும் கூடும்.
- சில தருணங்களில் மார்பகத்தில் முழுமையாகவோ அன்றி
- இரு மார்பகங்களிலும் தோன்றவும் கூடும்.
மாரடைப்பு வலி
- மாரடைப்பு வலி முற்றிலும் மாறுபட்டது.
- அது திடீரென வரும்.
- பெரும்பாலும் நடு மார்பில், இறுக்குவது போன்று கடுமையாக வரும்.
- வியர்வை, களைப்பு, தலைச்சுற்று, மரணம் நெருங்குவது போன்ற பயமும் அதில் ஏற்பலாம்.
- மருத்துவர்களுக்கு அதை வேறுபடுத்தியறிவது இலகுவாகும்.
இங்கே கிளிக் பண்ணுங்கள். மேலும் படிக்க முன்னைய பதிவை
பெரும்பாலன மார்பக வலிகளுக்கு அடிப்படையான நோய் என எதுவும் இருப்பதில்லை. கட்டி, சீழ் கட்டி, கிருமித்தொற்று எத்தகைய காரணங்கள் இன்றியே தோன்றலாம்.
- பல மார்பக வலிகளுக்கான அடிப்படைக் காரணம் மார்பகத்தில் அல்லாது அருகில் உள்ள ஏனைய உறுப்புகளான தசைகள், மூட்டுகள், எலும்புக் கூடு போன்றவற்றில் இருக்கலாம். தோள்மூட்டு கழுத்து போன்றவற்றில் தோன்றும் நோய்களாலான வலி மார்பகத்தில் பிரதிபலக்கவும் கூடும். வேறு இடத்தில் உள்ள நோய்க்கு மற்றொரு இடத்தில் வலிப்பதை தொலைவிட வலி (Radiating Pain or Refered Pain) என மருத்துவர்கள் குறிப்படுவார்கள்.
- ஒரு சிலரில் சீழ்கட்டி, தோல்களில் ஏற்டும் கிருமித்தொற்றுகள் காரணமாகலாம்.
- நரம்புக் கொப்பளிப்பான் ஒரு முக்கிய காரணியாகும். உடல் முழவதையும் பாதிக்காது ஒரு நரம்பு செல்லும் பாதையில் மட்டுமே கொப்பளங்கள் தோன்றுவது இந் நோயின் முக்கிய அம்சமாகும். கொப்பளங்கள் தோன்றுவதற்கு ஒரிரு நாட்கள் முன்னதாகவே வலி தோனற்லாம். வலிக்குக் காரணம் தெரியாது மருத்துவர்களையும் ஆரம்ப நிலையில் திகைக்க வைக்கலாம்.
- கட்டிகள், கழலைகள், நீர்க்கட்டிகள் போன்றவையும் மார்பகங்களில் வருவதுண்டு. இவற்றில் சில வலியை ஏற்படுத்தலாம்.
- புற்று நோய்கள் ஆரம்ப நிலையில் வலி அற்றவை எனப் பொதுப்படையாகப் பேசப்படுவதுண்டு. ஆனால் அவ்வாறு இல்லாமலும் ஏற்படலாம்.
நரம்புக் கொப்பளிப்பான் |
மார்பகப் புற்று நோய் வர வாய்ப்புள்ளவர்கள் யார்?
- மார்பக வலியுடன் மார்ப்பகத்தில் அல்லது அப் பக்க அக்குளில் கட்டி ஏதாவது தென்படுதல்.
- முலைக் காம்பிலிருந்து அல்லது அக் கட்டியிலிருந்து ஏதாவது கசிவு இருத்தல்.
- வழமைக்கு மார்பு வீக்கமடைதல் அல்லது சிவந்திருந்தால்.
- பரம்பரையில் மார்பகப் புற்று நோயிருந்தால்
இவை எதுவுமின்றி மாதவிடாய் தாமதமாகுவதுடன் மார்பக வலி சேர்ந்திருந்தால் அது கருத் தங்கியதன் அறிகுறியாக இருக்கலாம் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
No comments:
Post a Comment