Lord Siva

Lord Siva

Saturday, 7 January 2012

வீடுகளில் பூச்சிகளை ஒழிக்கணுமா ????


தொல்லை செய்யும் கொசுக்களை ஒழிக்கணுமா?
பொதுவாக கொசுக்கள் எப் போ துமே மாலை நேரத்திலு ம், அதி காலை நேரத்திலும் தான் படையெடுக்கும். அந்த நேரத்தில் கதவு, ஜன்னல் எல் லாம் சாத்தி வைத்தால் ஓரள வு கொசுத்தொல்லை குறை யும். அதையும் மீறி நம்மைக் கடித்து தொல்லை செய்யும் கொசுக்களை விரட்ட ஈஸியா ன கொசுவிரட்டி கிச்சனிலேயே இருக்கு…
பூண்டை, தண்ணீர் விடாமல் அரைத்து ஜூஸ் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒருபங்கு தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். சது ரமாக வெட்டிய ஒரு துண்டுத் துணியை பூண்டுக் கரைசலில் முக்கி எடுத்து வீட்டுக்கு வெளியே வாசல் பக்கமாக தொங்க விடுங் கள். ஜன்னல் வழியாக கொசு உள் ளே வந்தாலும் வாசல் வழியாக ஓடிப் போய் விடும்!
பயமுறுத்தும் கரப்பான் பூச்சி களை ஒழிக்கணுமா?
போரிக் ஆஸிட் (ஹார்டு வேர் கடைகளில் கிடைக்கு ம்)  50 கிராம் வாங்குங்கள். அதோடு 100 கிராம் மைதா சேர்த்து கொஞ்சம் போல தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையுங்கள். சின்ன சின்னதாக சீடை போல உருட்டி ஒரு பிளாஸ் டிக் பேப்பரில் நன்றாக காய வையுங்கள். கரப்பான் பூச்சிகள் அதிகம் நடமாடும் இடங்களில் காய வைத்த உருண்டைகளைப் போடுங்கள். கரப்பான் பூச்சிகள் காணாமல் போய்விடும். அப்புறம் சுவர், அலமாரிகளில் இடுக்கு இருந்தால் முதலில் அவற்றை அடைத்து விடுங்கள்.
எறும்புப் படை எரிச்சல் ஏற்படுத்துகிறதா?
இதோ அதற்கும் கைவசம் தீர்வு இருக்கிறது… முதலில் எறும்புப் புற்றைக் கண்டுபிடி த்து அங்கே ரெண்டு பல் பூண் டை நசுக்கிப் போட்டால் எறு ம்பு காணாமல் போய்விடும். இதுபோலவே புதினா வாச மும் எறும்பு க்குப் பிடிக்காது. ஒரு சின்ன தொட்டியில் புதி னாவை வளர்த்து, அதை சமையலறை ஜன்னல் ஓரமாக வைத்துவிடுங்கள். சமையலுக்குப் புதினாவும் ஆச்சு. எறும்பும் வராது! இன்னொரு கொசுறு டிப்ஸ்… எறும்பு வருகிற இடங்களில் மஞ்சள் தூளால் கோடு போட்டு வெச் சாலும் எறும்பு வராது. இப்ப தெரியுதா… நம்ம பெரியவங்க ஏன் வீட்டு வாசப்படிக்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைச்சாங்கன்னு.
“ஈ” கூட்டத்தை விரட்டணுமா?
எந்த சீசனாக இருந்தாலும் இப் போதெல்லாம் ஈக்களின் தொல் லை தாங்க முடியவில்லை. சுத் தம்தான் ஈயின் முதல் எதிரி. அதையும், இதையும் கொட்டா மல் & கொட்டினாலும் உடனே ஈரத்துணியால் துடைத்து சுத் தம் செய்தால் ஈ வராது. அப்படி யும் ஈ வருகிறதா? கற்பூரத்தை ப் பொடித்து தண்ணீரில் கலக்கி வீடு துடையுங்கள். ஈ தொல் லை யே இருக்காது! அப்புறம் கறிவேப்பிலையுடன் நாலு கிராம்பு சேர்த்து கொஞ்சம் யூகலிப்டஸ் எண்ணெயில் நசுக்கி அதை சின் னச் சின்ன துணிகளில் முடிந்து ஜன்னல், வாசல் என எல்லா இடங் களிலும் வையுங்கள். ஈக்கள் ஓடியே போய்விடும்.

No comments:

Post a Comment