Lord Siva

Lord Siva

Sunday, 22 January 2012

தொப்பைக்கு… `குட்பை’

Posted On Jan 22,2012,By Muthukumar

இன்றைக்கு தொப்பை இல்லாத மனிதர்களை நகரங்களில் பார்பது அரிது. இது கொஞ்சம்… கொஞ்சமாக நகரத்திலிருந்து கிராமத்திற்கும் நகர்ந்து வருகிறது என்கின்றனர். இதற்கு காரணம் `துரித உணவும், உடல் உழைப்பு இன்மையும்தான்’ என்கின்றனர், உடல்கூறு ஆய்வாளர்கள்.

தமது குண்டான உடலை இளைக்க வைக்கவும், தொப்பையை குறைக்கவும் ஆண்களும், பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு அழகு நிலையங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை குறிவைத்து சில போலிகளும் விளம்பரபடுத்தி அவர்களிடம் `கறந்து’ வருகின்றன. ஆனால் தொப்பையை கரைக்க ஈசியான வழியை பழங்கள் செய்து வருகின்றன. குறிப்பாக அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரடி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும்.
பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி முடி வைக்கவும். மறுநாள் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு, சாறை மட்டும் வெறும் வயிற்றில் அருந்தவும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொப்பை சீக்கிரமாக கரைந்து விடும்!
மேலும் தொப்பை கரைய… யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு என்று தொடர்ந்தால் தொப்பை போயே…போச்! குண்டாக இருப்பவர்கள் தினமும் 100 கிராம் வெங்காயச் சாறை வெறும் வயிற்றில் அருந்த இதயக் கோளாறை கட்டுபடுத்தலாம். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பச்சை வெங்காயத்தை தயிரோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு மெலிவு நோய் தடுக்கபடும்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், கர்ப்பிணிகள், 30 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் போலிக் அமிலம் அவசியம் தேவை. முளையை சுறுசுறுபாக்குவதில் போலிக் அமிலம் அத்தியாவசியமானது. மேலும் மனநிலை பாதிப்பு, முதுமையில் ஞாபக மறதி ஆகியவற்றை தடுக்கும். பருப்பு வகைகள், பீன்ஸ், வெண்டைக்காய், கறிவேப்பிலை, தண்டுக்கீரை, முட்டை, ஆட்டு ஈரல் ஆகிய உணவுகளில் போலிக் அமிலம் உள்ளது.
செம்பருத்தி பூவை சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். இதயமும் வலுவாகும். செம்பருத்தி பூவை நிழலில் காயவைத்து பொடியாக்கி, தேங்காய் எண்ணையுடன் கலந்து தலைக்குத் தேய்த்தால் தலை குளிர்ச்சியடையும். இதனால் பொடுகு நீங்கும். கூந்தலும் நன்கு கறுகறுவென வளரும். பூவையும் இலையைம் சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது.
பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுபடுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு. பூண்டு ஒரு நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு. பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் கார்லிக் பால்ஸ் எனபடும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்புசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.

No comments:

Post a Comment