Posted on Jan 17,2012,By Muthukmar |
இப்போது குளிர் காலம் என்பதால் நாம் உண்ணும் உணவுப் பழக்கங்களில் சில மாற்றங்களை கொண்டு வருவது அவசியம். அப்போதுதான் உடல் ஆரோக்கியத்தை சரியாக பேண முடியும்.
அதற்கு என்ன செய்யலாம்?
மழை
மற்றும் குளிர் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில் இனிப்பு அதிகம்
சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதேநேரம், காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள
உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
பால்
மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம்
சாப்பிடக் கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன்பு
பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது
உடலுக்கு நல்லது. ஜலதோஷம் தொடர்பான பிரச்சினைகள் வராது.
எண்ணெயில்
பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும்
என்று தோன்றினால் பஜ்ஜி, போண்டா என்று சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா
உருண்டை, இட்லி சாம்பார், பிரட் ரோஸ்ட் என சாப்பிடலாம்.
நீர்ச்சத்துக்கள்
நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கன்காய், வெள்ளரி போன்ற
காய்கறிகளை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். இரவு உணவில் பச்சைப்
பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்க வேண்டாம்.
சிலருக்கு
மழைக்காலத்தில் எலுமிச்சம் பழம் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டால் ஒத்துக்
கொள்ளாது. இப்படிப்பட்டவர்கள் அவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்ற
உணவுகளை லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும்,
மழைக் காலங்களில் கீரைகள் அதிகம் சாப்பிட வேண்டாம். அப்படியே
எடுத்துக்கொள்ள நேரிட்டால் தண்ணீரில் நன்றாக கழுவி பயன்படுத்துங்கள்.
அசைவ
உணவுகளான மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றை மழைக்காலங்களில் சாப்பிடலாம்
என்றாலும், அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment