Posted On Jan 22,2012,By Muthukumar
வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்ப்பாலை சேகரித்து "பிரிஜ்'ஜில் வைத்து கொடுக்கின்றனரே, இது ஆரோக்கியமானதா? எவ்வளவு நேரம் "பிரிஜ்'ஜில் வைக்கலாம்?
வெளியெடுக்கப்பட்ட தாய்ப்பாலை, பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பசும்பால், புட்டிப் பாலை விட, இது ஆரோக்கியமானது. பாலை எடுப்பதற்கு முன், உங்கள் கைகளை சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட புட்டியில் மட்டுமே பாலை எடுக்க வேண்டும்.
எடுத்த பின், காற்று புகாத வகையில், இறுக்கமான மூடியால் மூட வேண்டும். புட்டி மீது, அது என்னது, எந்த தேதியில், எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டது என்பதை எழுத வேண்டும். "பிரிஜ்'ஜில், பின்புறம் அல்லது, "ப்ரீசரில்' வைத்து பாதுகாக்க வேண்டும். "பிரிஜ்'ஜில் ஐந்து நாட்களும், "ப்ரீசரில்' இரண்டு வாரங்கள் வரையிலும் வைத்து பாதுகாக்கலாம்.
ஏற்கனவே புட்டியில் அடைக்கப்பட்ட பாலுடன், புதிதாக எடுக்கப்பட்ட பாலை கலந்து வைக்கக் கூடாது. அதேபோல், ஒரு முறை புட்டியை திறந்தால், அதில் பாலை மிச்சம் வைத்து, அடுத்த வேளைக்கு கொடுப்பதும் தவறு.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதைச் சுட வைத்து, அதன் மீது இந்த பாலை வைத்து சூடு செய்யலாம். நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்த கூடாது.
மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதும் தவறு. கொதிக்க வைப்பதும் தவறு. ஒரு முறை, "பிரிஜ்'ஜிலிருந்து எடுத்து விட்டால், மீண்டும், "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. "பிரிஜ்'ஜிலிருந்து வெளியில் எடுத்த ஆறு மணி நேரத்திற்குள், இந்தப் பாலை பயன்படுத்தி விட வேண்டும்.
No comments:
Post a Comment