Lord Siva

Lord Siva

Saturday, 7 January 2012

அழகான தமிழ்பெயர்களை நட்சத்திரப்படி வைக்க உதவும் தளம்


அழகான இனிமையான தமிழ் பெயர்களை நம் குழந்தைகளுக்கு சுட்டுவதற்கு உதவியாக ஆயிரக்கணக்கான தமிழ் பெயர்களை கொண்டு ஒரு தளம்  நட்சத்திரப்படி பெயர் வைக்க உதவுகிறது.
இணைய உலகில் தமிழ் பெயர்களை தேட வேண்டும் என்றால் அதற்காக பல மணி நேரம் செலவு செய்தும் சரியான பெயரை தேர்வு செய்ய முடியாமல் இருக்கும் நமக்கு உதவ ஒரு தளம் www.peyar.in ஆயிரக்கணக்கான அழகான தமிழ்பெயர்களை கொண்டுள்ளது.
பெயர் என்று இருக்கும் இந்ததளத்தில் அழகான தமிழ்பெயர்கள் அகர வரிசைப்படி கொடுத்துள்ளனர், எளிதாக பெயர் வைக்க உதவி யாக எந்த எழுத்தில் நம் குழந்தையின் பெயர் இருக்க வேண்டும் என்று பார்த்து அந்த வரிசையில் சென்று எளிதாக தேடலாம், இத்து டன் நட்சத்திரப்படி நம் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தால் சிறப் பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பக்கத்திலும் 100 பெயர்கள் விதம் காட்டுகின்றனர். இப்படி நாம் பார்க்கும்  பெயர் களை எல்லாம் ” கோப்பு வடிவில் பெறுக “ என்பதை சொடுக்கி கோப்பாக நம் கணினியில் சேமிக்கலாம். கண்டிப்பாக தமிழில் அழ கான இனிமையான பெயர் தேடும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment