Lord Siva

Lord Siva

Tuesday, 17 January 2012

ஆண்களை ஆண்மையற்றவர்களாக மற்றும் இணையமும் செக்ஸ் பொம்மைகளும்

Posted On Jan 17,2012,By Muthukumar
சென்னையில் தூள் பரத்தும் செக்ஸ் பொம்மை வியாபராம் தாமதமாகும் மற்றும் செலவு மிகுந்த திருமணம் மற்றும் திருமணமாகாமல் இருப்போர், திருமணம் ஆகியும் செக்ஸ் சரியாக கிடைக்காமல் அவதியுருவோர் ஆகியோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளதை காட்டும் ஆரோக்கியமற்ற அறிகுறியாக உள்ளது.

எனினும் சில மன உடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்ககும் உதவுவது மறுக்க இயலாது. வேகமான, சுற்றுச்சூழல் கெட்ட, மன இயல்புகளை குறிப்பாக செக்ஸ் உணர்வுகளை தேவைக்ககிதகமாக தவறான வழியில் தூண்டும் தொலைக்காட்சி, சினிமா, சிடி, டிவிடி, குடும்ப பத்திரிக்கைகள், அனைத்திற்கும் மேலாக இணையம் யாவையும் சேர்ந்து ஆண்களை ஆண்மையற்றவர்கலாகவும் பெண்களை செக்ஸ் வேரியர்கலாகவும் மாற்றியதன் விளைவை நாம் பார்க்கிறோம் என தெரிகிறது.



நகர மல்டி ஸ்டோர்களில் முன்பை விட அதிகமாக தற்போது செக்ஸ் டாய்ஸ்கள் விற்பனையாகிறதாம். முன்பெல்லாம் ஆன் லைனிலோ அல்லது ரகசியமாகவோ ஆர்டர் கொடுத்து வாங்கி வந்தவர்கள் இப்போது ஸ்டோர்களுக்கு நேரடியாகவே வந்து வாங்கிச் செல்லும் அளவுக்கு முன்னேறியுள்ளனராம். சென்னையில் நடந்த உலக பாலியல் ஆரோக்கிய தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரபல பாலியல் மருத்துவர் டாக்டர் நாராயண ரெட்டி இதைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், செக்ஸ் தவிர்க்க முடியாதது. அதை ஆரோக்கியமான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. பலருக்கும் படுக்கை அறைகளில் விதம் விதமான முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆர்வம் இப்போது அதிகரித்துள்ளது. தங்களது பெட்ரூமை நிகழ்வுகள் நிரம்பிய அறையாக வைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்புகின்றனர். பலருக்கும் இப்போது செக்ஸ் டாய்ஸ் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. முன்பை விட இது தற்போது பெருமளவில் உள்ளது. பார்ட்னர் இல்லாதவர்களிடம்தான் முன்பு இதுகுறித்த ஆர்வம் இருக்கும். ஆனால் தற்போது பார்ட்னர் உள்ளவர்களும் கூட இதுகுறித்து ஆர்வமாகியுள்ளனர். அப்படி என்னதான் இருக்கிறது அதில் என்ற ஆர்வத்தால் இவர்கள் செக்ஸ் பொம்மைகளை வாங்குகின்றனர்.

செக்ஸ் பிரச்சினை தொடர்பான ஆலோசனை மற்றும் சிகிச்சைக்காக என்னிடம் வரும் ஆண்களும் சரி, பெண்களும் சரி செக்ஸ் டாய்ஸ்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு உடலறுவில் பிரச்சினை இருக்கிறது. பலர் சிங்கிளாக உள்ளவர்கள்

சமீபத்தில் மஸ்க்குலர் டிஸ்ட்ரோபி உடல் நலப் பாதிப்பு உடைய தனது 21 வயது மகனை அழைத்து வந்திருந்தார் ஒரு தாய். தனது மகனின் ஆணுறுப்பின் மீது தனது கை தெரியாமல் பட்டபோது, மகனுக்கு விந்தனு வெளிப்பட்டதாக கூறினார். மேலும், அன்றைய தினத்தில் தனது மகன் மிகவும் கோபமாகவும், ரெஸ்ட்லெஸ்ஸாகவும் இருந்ததாகவும், விந்தனு வெளிப்பட்ட பின்னர் அமைதி அடைந்ததாகவும் அவர் கூறினார். என்ன செய்வது என்று தெரியவில்லை என்று பரிதாபமாக கேட்டார்.

அவரிடம் அவரது மகனின் செக்ஸ் தேவைகளை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. அது நிச்சயம் மிகவும் சிரமமான ஒன்று. இறுதியில், செயற்கை பெண் உறுப்பு ஒன்றை வாங்கிக் கொள்ளும்படி அவருக்கு அறிவுறுத்தினேன். அவரும் வாங்கிச் சென்றார். அதன் பிறகு தற்போது தனது மகனின் நிலையில் மாற்றம் தெரிவதாக அவர் கூறியுள்ளார் என்றார் டாக்டர் ரெட்டி.

அண்ணாநகரைச் சேர்ந்த சதீஷ் குமார் என்ற மருந்துக் கடைக்காரர் கூறுகையில், முன்பு எங்களது கடைக்கு சிலர் வந்து செக்ஸ் டாய்ஸ் வேண்டும் என்று கேட்பார்கள். நாங்கள் அதைக் கேட்டு சிரித்தோம். ஆனால் அப்படிக் கேட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்தே, அதை சீரியஸாக நாங்கள் எடுத்துக் கொண்டோம்.

தங்களது பிரச்சினைகளுக்குரிய நிவாரணமாக செக்ஸ் டாய்ஸ் வந்திருப்பதைப் பலரும் புரிந்து கொண்டு அதை நாடி வருகிறார்கள். இதற்காக அவர்கள் கூச்சப்படுவதில்லை. இது நல்ல விஷயம்தான்.ஆரோக்கியமானதும் கூட என்றார். டாக்டர் ரெட்டி மேலும் பேசுகையில், இந்தியாவுக்கு செக்ஸ் டாய்ஸ் என்பது புதிய விஷயமல்ல. ஹரப்பா நாகரீகத்திலேயே அது இருந்திருக்கிறது. காமசூத்ராவிலும் கூட செக்ஸ் மகிழ்ச்சிக்கான செயற்கை விஷயங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது என்றார்.


No comments:

Post a Comment