Lord Siva

Lord Siva

Sunday, 22 January 2012

ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது ஏன்?

Posted On Jan 22,2012,By Muthukumar


மனித உயிருக்கு உத்திரவாதமில்லை. நேற்று இருந்தவர் இன்றில்லை.“10 நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக் கொண்டிருந்தவர், திடீரெனபோய் விட்டாரே. இன்று காலை கூட என்னிடம் தொலைபேசியில் பேசினார்.இறந்து விட்டதாக செய்தி வருகிறதே. நேற்று நன்றாக நடமாடிக்கொண்டிருந்தவர் இன்று பக்கவாதம் தாக்கி முடமாகி விட்டாரே’ என்றுபலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கெல்லாம்காரணம் என்ன? ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான்காரணம்.இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள்ஏற்படும்போது அது மாரடைப்பாக உயிரை மாய்க்கிறது. மூளைக்குசெல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அதுபக்கவாதமாக பரிமாண மெடுத்து மனிதனை முடக்கி விடுகிறது.துடிக்கும்மனித இதயம், மனிதனுக்கும் வாழ்வை வழங்குகிறது. மனிதன் வாழவேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடித்தே ஆகவேண்டும். இவ்வாறு துடித்து துடித்து மனிதனுக்கு வாழ்வை வழங்கும்இதயம் துடிப்பதற்கு சக்தி தேவை. அந்த சக்தி இதயத்திற்கு செல்லும்ரத்த குழாய்கள் மூலம்தான் இதயத்திற்கு கிடைக்கிறது. இந்த ரத்தநாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் ரத்தம்தடைபடுகிறது. இதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதனைபோல் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்புகள்ஏற்படும்போது அது பக்கவாதமாக, பரிமாணம் எடுத்து மனித வாழ்வைசீர்குலைக்கிறது.இதயத்திற்கும் மூளைக்கும் ரத்தம் மற்றும் தேவையானசத்துக்களை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தை போலவேசுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் ரத்தஓட்டம் நடைபெறுகிறது.ரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய “நைட்ரிக் ஆக்சைடு’ என்றரசாயன பொருள் உதவுகிறது. இது நமது உடலிலேயே உற்பத்தி ஆகும்பொருள். இதுதான் ரத்த குழாய்களுக்குள் சென்று அவற்றை சுருங்கிவிரிய உதவுகிறது.உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும், குருதியில் கொழுப்புசத்து மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது“நைட்ரிக் ஆக்சைடு’ சுரப்பது குறைகிறது. மேலும் மன இறுக்கமும்,மனக்கவலையும் கூட நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை கெடுக்கிறது. புகைபிடிப்பது, மது அருந்துதல், அசைவ உணவுகளை அதிகளவு உட்கொள்வதுபோன்றவை கூட இந்த நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை குறைக்கிறது.நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கிவிரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படியதொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால்மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படவாய்ப்பாகிறது.
ரத்தக்குழாய் அடைப்புகள் வராமல்தடுப்பது எப்படி?

ரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டுஅதை சீராக வையுங்கள். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய்,எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற் றைதவிர்த்திடுங்கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள். மதுபாட்டில்களைகாலி செய்வதை நிறுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளையும்,நெய்யால் செய்த பண்டங்களையும் குறையுங்கள். உப்பு அளவோடுசேர்த்துக் கொள்ளுங் கள். இனிப்பான பழங்கள்,கிழங்குகள்,பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்தல்கூடாது.இவற்றை விட மேலானது உடற்பயிற்சி. நாள்தோறும் காலை, மாலைஅரை மணி நேரம் நடைபயிற்சியை மேற் கொள்ளுங்கள். சைக்கிள்ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உணவுவகைகள் அதிகம் உட்கொள்வதை குறையுங்கள். உங்கள் இதயம் பாதுகாப்பாகஇருக்கும்.
02. தழைய, தழைய கேசம்ஸ இப்போதெல்லாம் போயே போச்ச்ஸகண்டபடி “டய்’ போட்டால்ஸ
தழையத் தழைய தலைமுடி உள்ளபெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தலைமுடியை“பாப்’ செய்யும் பழக்கம் வந்து பத்தாண்டு மேலாகி விட்டது.இப்போதுபேஷன், பிஞ்சுக்குழந்தைகளுக்கு கூட, “கலரிங்’ போடுவது தான்.பள்ளி, கல்லூரி மாணவிகளை கேட்கவே வேண்டாம்; “கலரிங்’ முதல்,கண்டிஷனர் வரை, சந்தையில் எதெல்லாம் புதிது புதிதாக வருகிறதோ,அவற்றை எல்லாம் வாங்கி பயன் படுத்துவது பேஷனாகி விட்டது.இதையெல்லாம் தடுக்க வேண்டிய பெற்றோர்களும், உறவினர், நண்பர்களும்கூட அடிக் கடி அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.1,00,000 தலைமுடி : ஒருவரின் தலையில் சராசரியாகஅதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர்உடல்நிலைக்கு ஏற்ப, 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியைபராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப்வெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு , கலரிங் செய்வது போன்றவற் றில்அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பதுவயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்.மிதமான நீரில் : மிதமான நீரில் தான் குளிக்கவேண்டும்; அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர்விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும்.தலைமுடி என்பது, “எலாஸ்டிக்’ தன் மையுள்ளது; மிகவும்மிருதுவானது. லேசாக இழுத் தால் கூட அறுந் துவிடும். அத னால்வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாளவேண்டும்.ஷாம்புவில் உஷார் : விலை மலிவானது, புதிதாக வந்ததுஎன்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில்ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்யவேண்டும்.நரைமுடி வருவதேன்? : நரை முடி ஏற்படுவதற்கு பலகாரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்குநரை முடி வளர ஆரம்பிக்கும்.நரை முடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது.எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்லமுடியவில்லை. கருகரு முடிக்கு காரணம் : தலைமுடி கருகருவெனவளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரப்பி தான்.மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது.அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது.நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கண்ட ஆராய்ச்சிகள் இதுவரைபலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி “கலரிங்’ செய்வதுதான்.“ஹேர் டய்’ அலர்ஜி : தரமான “ஹேர் டய்’ வாங்கி பயன்படுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்துவிட்டனர். இதனால், தலைமுடிக்கு தான் பாதிப்பு என்பதை அவர்கள் உணரவேண்டும். கண்ட கண்ட “ஹேர் டய்’யில், “பாரா பெனிலின் டயாமின்’என்ற (பி.பி.டி.,) ரசாயனம் உட்பட சில ரசாயனங்கள்கலக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.ஹென்னா பயன்படுத்தினால்ஸ : மருதாணி தான்“ஹென்னா’ என்பது. மருதோன்றிச்செடி இலைகளில் சிவப்பு சாயம்இருக்கிறது. அது தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதைபேஸ்ட்டாக பயன்படுத்துவதுண்டு. முன்பெல் லாம் வீட்டிலேயேதயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பாக்கெட்டாக விற்கப்படுகிறது.பாக்கெட் “ஹென்னா’வில் கலப்படம் காணப்படுகிறது. இயற்கையானமருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி.,தான்பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால்கையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால், பாக்கெட் “ஹென்னா’பயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.அடிக்கடி வாரினால்ஸ : அடிக்கடி தலைவாரிக்கொண்டிருக்க வேண்டாம்; அப்படி செய்தால், தலைமுடி உதிருவதுஅதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒரு முறை தலை வாருவது பரவாயில்லை.ஆனால், அடிக்கடி தலை வாருவது, அழுத்தம் தந்து வாருவது போன்றவைதலைமுடி உதிருவது அதிகரிக்கும்.மொட்டை போட்டால் : மொட்டைபோட் டால் உடனே முடிஅதிகமாக வளரும் என்று பலரும் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தலையில்பரந்து வளரும் போது அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால்,நுனியில் வளருவது தெரியாது. அதனால் மொட்டை போட்டால், அதிக முடிவளரும்; நரை போகும் என்பதெல்லாம் தவறானநம்பிக்கை.


No comments:

Post a Comment