Posted On Jan 22,2012,By Muthukumar
· வெள்ளரிப்பிஞ்சு, சிறிது எலுமிச்சம்பழம், சிறிது உப்பு சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடவும்.
· எலுமிச்சம்பழ ரசத்தில் சிறிது இஞ்சியும், சீரகமும் சேர்த்து தினமும் 2-வேளை சாப்பிடவும்.
· தினமும் 4-பேரிட்சம்பழம் சாப்பிடவும்.
· எலுமிச்சம்பழத் தோலை சாப்பிடவும் அல்லது ஊறுகாய் சாப்பிடவும்.
· ஓம வள்ளி இலையை இடித்துச் சாறெடுத்துச் சாப்பிடவும்.
உடல் எடை குறைய
·1100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.
· இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும்.
· கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.
· 25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.
· நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
தேள் கடிக்கு.
·தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.
· எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.
· நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.
மல சிக்கல் தீர
காய்ந்த திராட்சைப் பழங்களை பசும்பாலில் ஊறவைத்து பின் பிழிந்து சாறெடுத்து அதை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் தீரும்.
வயிற்றுப்போக்கு நிற்க
கோரைக் கிழங்கை தோல் நீக்கி வேகவைத்து அந்நீரை வடித்து குழந்தைக்கு கொடுக்க நாற்பட்ட வயிற்றுப்போக்கு நிற்கும்.
உடல் அரிப்பு குறைய
வேப்பமர பட்டையை நீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும்.
சிறுநீரக கல் கரைய
· கருஞ்சீரகம் தேன் சேர்த்து உண்ணவும்.
· வாழைத்தண்டு சமைத்து தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
· பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல் கரைந்து குணம் கிடைக்கும்.
· மாதுளை விதைகளை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
· வாழைத்தண்டு சாறு 4-5 டம்ளர் கொடுக்க கல் கரைந்து அடைப்பு நீங்கும். தக்காளிச் சாறும் கொடுக்கலாம்.
No comments:
Post a Comment