Posted On Jan 22,2012,By Muthukumar
ஞாபக மறதியை குணப்படுத்தும் -அறிவு வளர்க்கும் டானிக் --ஸாரஸ்வதாரிஷ்டம்
ஞாபக மறதியை குணப்படுத்தும் -அறிவு வளர்க்கும் டானிக் -ஸாரஸ்வதாரிஷ்டம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - ரஸாயனாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. வல்லாரை – ப்ராஹ்மீ - 1.000 கிலோகிராம்
2. தண்ணிர் விட்டான் கிழங்கு – ஸதாவரீ - 0.250 “
3. முதுக்கன் கிழங்கு – விடாரீ - 0.250 “
4. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ - 0.250 “
5. விளாமிச்சவேர் – உஸீர - 0.250 “
6. இஞ்சி – ஆர்த்ரக - 0.250 “
7. சதகுப்பை – ஸதபுஷ்ப - 0.250 “
8. தண்ணீர் – ஜல - 12.800 லிட்டர்
இவைகளை நன்கு கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆக்க் குறுக்கி வடிகட்டி அதில்
1. சர்க்கரை – ஸர்க்கர - 1.250 கிலோகிராம்
2. தேன் – மது - 0.500 “
இவைகளைக் கலந்து மற்றும்
1. அரேணுகம் – அரேணுக - 12.500 கிராம்
2. சிவதை (கருப்பு) – த்ரிவ்ருத் - 12.500 “
3. திப்பிலி – பிப்பலீ - 12.500 “
4. இலவங்கம் – லவங்க - 12.500 “
5. வசம்பு – வாச்சா - 12.500 “
6. கோஷ்டம் – கோஷ்ட - 12.500 “
7. அமுக்கிராக்கிழங்கு – அஸ்வகந்தா - 12.500 “
8. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ - 12.500 “
9. சீந்தில்கொடி – குடூசீ - 12.500 “
10. ஏலக்காய் – ஏலா - 12.500 “
11. வாயுவிடங்கம் – விடங்க - 12.500 “
12. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் - 12.500 “
இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 250 கிராம் சேர்த்துத் தங்க்க் குடத்தில் ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
குறிப்பு: தங்கக்
குடம் இல்லாவிடில் மற்ற கலங்களை உபயோகித்தும் தயாரிக்கலாம். அவ்விதம்
உபயோகிக்கும் போது தங்கத்தின் குணம் கிடைக்க மேற்கூறிய மருந்தில்
தங்கரேகத்தைச் சேர்க்க வேண்டும். 125.00
கிராம் எடையுள்ள தங்கரேக்கை வடிகட்டிய அரிஷ்டம் சிறிது சேர்த்து நன்கு
கல்வத்திலிட்டரை குப்பியிலடைக்கும் தருணத்தில் கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்: 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
மூர்ச்சை (மூர்ச்சா), கால்கைவலி எனும் காக்கை வலிப்பு (அபஸ்மார), பைத்தியம் (உன்மாத), மூளைக்கோளாறுகள் (அ) மனக் கோளாறுகள் (மானஸதோஷ), திக்குவாய் போன்ற உச்சரிப்புக் கோளாறுகள், ஞாபகமறதி (ஸ்மிருதிக்ஷய), குற்றமுள்ள விந்து (சுக்ரதோஷ), தொடர்ந்து உட்கொள்ள ஞாபகசக்தியை அதிகப் படுத்துவதுடன், உடலுக்கு வலுவையும்,
சாந்தியையும் அளித்து மூளை நரம்பு மண்டலத்தை பலமாக்குகிறது. சிறந்த உடல் தேற்றி.
குறிப்பு
சாரஸ்வதா
அரிஷ்டம் -பொதுவாக -தங்க பற்பம் சேர்ந்து தான் தயாரிக்கப்பட்ட வேண்டும்
..ஆனால் மார்கெட்டில் தங்கம் சேர்க்காமலும் சாரஸ்வதா அரிஷ்டம்
கிடைக்கிறது ..
குறிப்பு தங்க
பஸ்பம் தங்க நிறத்திலே இருக்காது ,அடர் சிவப்பு நிறம் தான் நல்ல தங்க
பஸ்பம் ..தங்கம் போல் மினு மினு மினுக்கும் ஒரு பஸ்பம் ஒன்று உள்ளது ..அதை
வைத்து போலி வைத்தியர்கள் தங்க பஸ்பம் என்று ஏமாற்றி வருகிறார்கள்
..அந்த தங்கம் போல் மினு மினுக்கும் பஸ்பதிலே ஒரு இம்மியேனும் தங்கம்
சேராது ஆனால் அதற்க்கு பெயர் ஸ்வர்ண வங்கம்
தங்க பற்பம் சேர்ந்த சாரஸ்வதா அரிஷ்டம் தான் அறிவை வளர்க்கும் -அறிவு திறன் கூட வைக்கும் ..
தங்க பஸ்பம் மிக மிக குறைவான அளவிலே சேருவதாலும் பக்க விளைவுகள் இல்லவே இல்லை ..தாராளமாக மூன்று வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் ,வயது மூத்தவர்களுக்கும் பயமின்றி தொடர்ந்து கொடுக்கலாம் ..
எனக்கு தெரிந்த வகையில் இது சிறந்து அறிவு பெருக்கி ..குழந்தைகளுக்கு தேவை கருதி கொடுக்கலாம் ..பொதுவாக கொடுக்கலாம் ..
கால அளவு குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் -பசி ,தேக பிரகிருதி ,உடல் வன்மை ,மன வலிமை பொறுத்து அளவுகளை கூட்டவோ குறைக்கவோ செய்யவேண்டும்
டாபர் கம்பெனி சாரஸ்வதா அரிஷ்டம் தயாரிப்பில் -தங்கம் சேருவதில்லை என்று அறிகிறோம் ..
சூட்டு கட்டிகளை குணமாக்கும் - ஸாரிபாத்யாஸவம்
சூட்டு கட்டிகளை குணமாக்கும்,சர்க்கரை நோயினால் ஏற்படும் கட்டிகளுக்கும் ,சூட்டை குறைக்கவும் -- ஸாரிபாத்யாஸவம்
(பைஷஜ்யரத்னாவளி - பிரமேஹபிடஹாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் – ஜல - 25.600 லிட்டர்
2. வெல்லம் – குட - 15.000 கிலோகிராம்
இவைகளை நன்கு கலந்து அதில் திராக்ஷை (த்ராக்ஷா) 3.000 கிலோ கிராம் இடித்துச் சேர்த்து அத்துடன்,
1. நன்னாரி – ஸாரிவா - 200 கிராம்
2. கோரைக்கிழங்கு – முஸ்தா - 200 “
3. பச்சோத்திப்பட்டை – லோத்ரா - 200 “
4. ஆலம்பட்டை – நியாகுரோத - 200 “
5. அரசம்பட்டை – அஸ்வத்தா - 200 “
6. கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ - 200 “
7. நன்னாரி (கருப்பு) – அனந்தமூல - 200 “
8. பதிமுகம் – பத்மகம் - 200 “
9. குருவேர் – ஹ்ரிவேர் - 200 “
10. பாடக்கிழங்கு – பாட்டா - 200 “
11. நெல்லுமுள்ளி – ஆமலகீ - 200 “
12. சீந்தில்கொடி – குடுசீ - 200 “
13. விளாமிச்சவேர் – உஸீர - 200 “
14. சந்தனம் – ஸ்வேதசந்தன - 200 “
15. செஞ்சந்தனம் – ரக்தசந்தன - 200 “
16. ஓமம் – அஜமோதா - 200 “
17. கடுகரோஹீணீ – கடுகீ - 200 “
18. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர - 200 “
19. சிற்றேலம் – ஏலா - 200 “
20. பேரேலம் – ப்ருஹத் ஏலா - 200 “
21. கோஷ்டம் – கோஷ்டம் - 200 “
22. சூரத்துநிலாவாரை – ஸ்வர்ணபத்ர - 200 “
23. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ - 200 “
இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 500 கிராம் சேர்த்து ஒரு மாதம்வரை வைத்திருந்து வடிகட்டவும்.
அளவும் அனுபானமும்:
15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
பிரமேகம் (ப்ரமேஹ), பிரமேகக்கட்டிகள் (ப்ரமேஹ பிடக), பரங்கிப்புண் (உபதம்ஷ), தோல் நோய்கள் (குஷ்ட (அ) சர்மரோக) கீல்வாதம் (சந்திவாத), குதிகால் வாதம் (வாதரக்த) போன்ற வாதநோய்கள் (வாதரோக) மற்றும் ஆசனவாய் வெடிப்பு (பகந்தர).
ரத்தத்தை சுத்தி செய்யவல்லது. இது பரங்கிப் புண்ணில் (அ) பரங்கி நோயில் தேவகுஸும ரஸாயனத்துடனோ ஷட்குண ஸிந்தூரத்துடனோ தரப்படுகிறது.
கல்லீரல் மண்ணீரல் வீக்கத்தை போக்கும் -ரோஹீதகாரிஷ்டம்
கல்லீரல் மண்ணீரல் வீக்கத்தை போக்கும் -ரோஹீதகாரிஷ்டம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - ப்லீஹயக்ருதாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
ரோஹித மரத்தின் படம்
ரோஹித மரத்தின் படம்
1. ரோஹிதகப்பட்டை – ரோஹீதக த்வக் - 5.000 கிலோகிராம்
2. தண்ணீர் – ஜல - 51.200 லிட்டர்
இவைகளை நன்கு கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட) 10.000 கிலோ கிராம் சேர்த்து அத்துடன்,
1. திப்பிலி – பிப்பலீ - 50 கிராம்
2. மோடி – பிப்பலீமூல - 50 “
3. செவ்வியம் – சவ்ய - 50 “
4. கொடிவேலி வேர் – சித்ரக - 50 “
5. சுக்கு – சுந்தீ - 50 “
6. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் - 50 “
7. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர - 50 “
8. ஏலக்காய் – ஏலா - 50 “
9. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ - 50 “
10. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ - 50 “
11. நெல்லிமுள்ளி – ஆமலகீ - 50 “
இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம்வரை வைத்திருந்து வடிகட்டவும்.
அளவும் அனுபானமும்:
10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத் ப்லீகவ்ருத்தி), குன்மம் (குல்ம), பெருவயிறு (மஹோதர, உதர), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), மூலம் (அர்ஷ), காமாலை (காமால, காமில), வீக்கம் (அஷ்த்தீலா)
கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத் ப்லீகவ்ருத்தி), குன்மம் (குல்ம), பெருவயிறு (மஹோதர, உதர), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), மூலம் (அர்ஷ), காமாலை (காமால, காமில), வீக்கம் (அஷ்த்தீலா)
கிட்னி பைலியர்,சொரியாசிஸ் நோய்களுக்கான டானிக் - புனர்னவாஸவம்
கிட்னி பைலியர்,சொரியாசிஸ் நோய்களுக்கான டானிக் - புனர்னவாஸவம்
(ref-பைஷஜ்ய ரத்னாவளி - சோபாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. நன்கு கொதித்து ஆறிய தண்ணிர் – ஜல - 25.600 லிட்டர்
2. சர்க்கரை – ஸர்க்கர - 5.000 கிலோகிராம்
3. தேன் – மது - 2.500 “
இவைகளை நன்றாகக் கலந்து திராக்ஷை (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம் இடித்துச் சேர்த்து அத்துடன்
1. சுக்கு – சுந்தீ - 50 கிராம்
2. மிளகு – மரீச்ச - 50 “
3. திப்பிலி – பிப்பலீ - 50 “
4. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ - 50 “
5. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ - 50 “
6. நெல்லிமுள்ளி – ஆமலகீ - 50 “
7. மரமஞ்சள் – தாருஹரித்ரா - 50 “
8. நெருஞ்சில் – கோக்ஷூர - 50 “
9. முள்ளுக்கத்திரி வேர் – ப்ருஹத்தீ - 50 “
10. கண்டங்கத்தரி – கண்டகாரீ - 50 “
11. ஆடாதொடை வேர் – வாஸாமூல - 50 “
12. ஆமணக்கு வேர் – ஏரண்டமூல - 50 “
13. கடுகரோஹிணீ – கடுகீ - 50 “
14. யானைத்திப்பிலி – கஜ பிப்பலீ - 50 “
15. மூக்கரட்டை வேர் – புனர்னவ - 50 “
16. வேப்பம்பட்டை – நிம்பத்வக் - 50 “
17. சீந்தில் கொடி – குடூசீ - 50 “
18. உலர்ந்த முள்ளங்கி – சுஷ்கமூலக - 50 “
19. சிறுகாஞ்சூரி வேர் – துராலபா - 50 “
20. பேய்ப்புடல் – பட்டோல - 50 “
ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீ புஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
குறிப்பு: சர்க்கரை, திராக்ஷை ஆகியவற்றை வகைக்கு 75 சதவிகிதமும், தேன் 87 ½ சதவிகிதமும் அதிகம் சேர்ப்பது சம்பிரதாயம்.
அளவும் அனுபானமும்: 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
வீக்கம் (அ) நீர்க்கோவை (ஸோத) ஷோப), பெருவயிறு (மஹோதர, உதர), சோகை (பாண்டு), (காமால, காமில), நீர்க்கட்டு (மூத்திராசங்க); கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத்ப்லீக வ்ருத்தி).
வீக்கம், பெருவயிறு, சோகை, காமாலை போன்ற நோய்களில் புனர்னவ மண்டூரத்துடன் இது கலந்துதரப்படுகிறது. கோக்ஷூராதி சூர்ணத்துடனும் இது கொடுக்கப்படுகிறது.
இது ஒரு நல்ல சிறுநீர் பெருக்கியாகும்.
தனியாக சாப்பிட கூடாது ..
(கிட்னி பைலியர் நோயாளிகள் பூனை மீசை என்ற மூலிகையை கொடுத்து ஓரளவுக்கு அவர்களின் உப்பு சத்தை டயாலிசிஸ் இல்லாமல் சரிசெய்ய முடிகிறது ..
இந்த மூலிகையின் முழு விவரம் விரைவில் எழுதுகிறேன் ..)
எனது அனுபவத்தில் இந்த புனர்ணவாஸவத்தை அடிக்கடி தோல் நோய் குறைக்க பயன்படும் ஆயுர்வேத மாத்திரையுடன் சாப்பிட்டு வர மிக கொடுமையான சொரியாசிஸ் நோய் குணமாவதை கண் கூடாக பார்த்திருக்கிறேன் ..
கிட்னி பைலியர் நோயாளிகள்-
புனர்ணவாஸவத்தில்
இனிப்பு உள்ளது -பெரும்பான்மையான கிட்னி பைலியர் நோயாளிகளுக்கு
சர்க்கரை நோய் உள்ளதால் -மிக மிக கவனத்துடன் தருவது நல்லது ..கிட்னி
பைலியர் நோயாளிகள் இந்த மருந்தை தக்க படித்த ஆயுர்வேத மருத்துவரின்
ஆலோசனை படி தான் இந்த மருந்தை எடுக்க வேண்டும் ..தனியாக சாப்பிட கூடாது ..
(கிட்னி பைலியர் நோயாளிகள் பூனை மீசை என்ற மூலிகையை கொடுத்து ஓரளவுக்கு அவர்களின் உப்பு சத்தை டயாலிசிஸ் இல்லாமல் சரிசெய்ய முடிகிறது ..
இந்த மூலிகையின் முழு விவரம் விரைவில் எழுதுகிறேன் ..)
எனது அனுபவத்தில் இந்த புனர்ணவாஸவத்தை அடிக்கடி தோல் நோய் குறைக்க பயன்படும் ஆயுர்வேத மாத்திரையுடன் சாப்பிட்டு வர மிக கொடுமையான சொரியாசிஸ் நோய் குணமாவதை கண் கூடாக பார்த்திருக்கிறேன் ..
சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.
சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.
(சஹஸ்ர யோகம் )
சேரும் பொருட்கள் ..
அளவு -15 மிலி முதல் 20 மிலி வரை -சம அளவு தண்ணீர் சேர்த்து
தீரும் நோய்கள் -
விசூசிகா(வாந்தி பேதி ) ,ராஜயக்ஷ்மா (உடல் இளைக்கும் நோய் ),இருதய நோய் ,இருமல் ,விஷம ஜ்வரம்(நாள் பட்ட காய்ச்சல் ).சிரோரோகங்கள் (தலை நோய்கள் ),பலஹீனம் ,பாண்டு (இரத்த சோகை ),வீக்கம் ,ருசியின்மை போன்றவை தீரும் .அக்னி பலம் (பசி தீ ),சுக்ல விருத்தி (விந்து பெருகும் )
குறிப்பு -இந்த மருந்து அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை ..
இந்த மருந்து சில சமயங்களில் போதை தர வாய்ப்புள்ளது ..எனவே இந்த மருந்தை நான் எந்த நோயாளிக்கும் தந்ததில்லை ..
(சஹஸ்ர யோகம் )
சேரும் பொருட்கள் ..
- பேரிச்சம் பழம்
- கோரை கிழங்கு
- நெல்லிக்காய்
- கொன்றை பட்டை
- உலர்ந்த திராக்ஷை
- கடுக்காய் தோல்
- கொட்டப்பாக்கு
- பாட கிழங்கு
- கண்டு பாரங்கி
- பூலான் கிழங்கு
- கொட்டம்
- இருவேலி
- ஓமம்
- காட்டுதிப்பிலி வேர்
- நெருஞ்சில்
- சாரணை வேர்
- காய பலம்
- ஞாழல் பூ
- மஞ்சள்
- கருஞ்சீரகம்
- ஆசாளி விதை
- கொட்டக்கரந்தை
- சிவதை
- கீழா நெல்லி
- தொட்டால் சுருங்கி
- செம்மரபட்டை
- புங்கை வேர் - இவைகள் யாவும் நான்கு பலம் (200 கிராம் வீதம் )
- சடாமஞ்சில்
- ஏலம்
- இலவங்கம்
- பச்சிலை
- சிறுநாகப்பூ
- திப்பிலி
- கிராம்பு
- ஜாதிக்காய்
- சந்தனம்
- அய பஸ்மம் (சுத்தம் செய்தது ) - இவைகள் யாவும் இரண்டு பலம் ( 100 கிராம் வீதம் )
- காட்டத்திபூ - ஏழு பலம் (350 கிராம் )
- வெல்லம் - 21 பலம் (1 .050 கிராம் )
அளவு -15 மிலி முதல் 20 மிலி வரை -சம அளவு தண்ணீர் சேர்த்து
தீரும் நோய்கள் -
விசூசிகா(வாந்தி பேதி ) ,ராஜயக்ஷ்மா (உடல் இளைக்கும் நோய் ),இருதய நோய் ,இருமல் ,விஷம ஜ்வரம்(நாள் பட்ட காய்ச்சல் ).சிரோரோகங்கள் (தலை நோய்கள் ),பலஹீனம் ,பாண்டு (இரத்த சோகை ),வீக்கம் ,ருசியின்மை போன்றவை தீரும் .அக்னி பலம் (பசி தீ ),சுக்ல விருத்தி (விந்து பெருகும் )
குறிப்பு -இந்த மருந்து அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை ..
இந்த மருந்து சில சமயங்களில் போதை தர வாய்ப்புள்ளது ..எனவே இந்த மருந்தை நான் எந்த நோயாளிக்கும் தந்ததில்லை ..
பெருங் கழிச்சலை நிறுத்தும் - அஹிபேனாசவம்
பெருங் கழிச்சலை நிறுத்தும் - அஹிபேனாசவம்
(சஹஸ்ர யோகம் -ஆஸவ அதிகாரம் )
உபயோகபடுத்தும் அளவு
ஐந்து முதல் பத்து மிலி வரை தேவை கருதி -மருத்துவரின் ஆலோசனை படி
குணமாகும் நோய்கள் -
கடுமையான அதிசாரம் (பேதி ),விசூசிகா (வாந்தி +பேதி ) சரியாகும் -
அந்த காலத்தில் நாம் இப்போது காலரா எனப்படும் நோய்க்கு இந்த மருந்தை கொண்டு தான் சரி செய்திருக்கிறார்கள் ..
குளிகை சேர்த்து கொடுக்கும் முறையில் -அச்டக்ஷீறி அல்லது வில்வாதி குளிகை உடன் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்
குறிப்பு
-எல்லா மருத்துவராலும் ,மருந்து கம்பெனியாலும் இதை தயாரிக்க முடியாது ..
அபினை வாங்குவதில் பல சட்ட சிக்கல்களும் ,கொடுக்கும் போது கவனமும் தேவை படுவதால் -இந்த மருந்து செய்வது ,கொடுப்பது ,கிடைப்பது அரிது -எனவே குடஜா அரிஷ்டம் ,மதூகாசவம் போன்ற இதே போல் குணமுள்ள மருந்துகளை தேர்ந்தெடுப்பது நல்லது -எளிது
(சஹஸ்ர யோகம் -ஆஸவ அதிகாரம் )
- இலுப்பை பூ - 100பலம் (ஐந்து கிலோ )
- அபின் -4பலம் (200கிராம் )
- கோரை கிழங்கு -1 பலம் (50 கிராம் )
- ஜாதிக்காய் -1 பலம் (50 கிராம் )
- வெட்பாலை அரிசி -1 பலம் (50 கிராம் )
- ஏலம் -பலம் -1 பலம் (50 கிராம் )
உபயோகபடுத்தும் அளவு
ஐந்து முதல் பத்து மிலி வரை தேவை கருதி -மருத்துவரின் ஆலோசனை படி
குணமாகும் நோய்கள் -
கடுமையான அதிசாரம் (பேதி ),விசூசிகா (வாந்தி +பேதி ) சரியாகும் -
அந்த காலத்தில் நாம் இப்போது காலரா எனப்படும் நோய்க்கு இந்த மருந்தை கொண்டு தான் சரி செய்திருக்கிறார்கள் ..
குளிகை சேர்த்து கொடுக்கும் முறையில் -அச்டக்ஷீறி அல்லது வில்வாதி குளிகை உடன் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்
குறிப்பு
-எல்லா மருத்துவராலும் ,மருந்து கம்பெனியாலும் இதை தயாரிக்க முடியாது ..
அபினை வாங்குவதில் பல சட்ட சிக்கல்களும் ,கொடுக்கும் போது கவனமும் தேவை படுவதால் -இந்த மருந்து செய்வது ,கொடுப்பது ,கிடைப்பது அரிது -எனவே குடஜா அரிஷ்டம் ,மதூகாசவம் போன்ற இதே போல் குணமுள்ள மருந்துகளை தேர்ந்தெடுப்பது நல்லது -எளிது
கல்லீரல் மண்ணீரல் வீக்கத்திற்கு -லவங்காஸவம்
கல்லீரல் மண்ணீரல் வீக்கத்திற்கு -லவங்காஸவம்
(ref-ஆஸவாரிஷ்ட ஸங்கிரஹ)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் – ஜல - 32 லிட்டர்
2. சர்க்கரை – ஸர்க்கர - 30 கி.கிராம்
3. தேன் – மது - 4 கி.கிராம்
4. கோமூத்திர - சிலாஜத்து (சுத்தி செய்தது) - 140 கிராம்
இவைகளை நன்கு கலந்து அத்துடன்
1. இலவங்கம் – லவங்க - 140 கிராம்
2. திப்பிலி – பிப்பலீ - 140 “
3. மிளகு – மரீச்ச - 140 “
4. சிற்றேலம் – ஏலா - 140 “
5. ஞாழல் பூ – ப்ரியாங்கு - 140 “
6. கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ - 140 “
7. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர - 140 “
8. வாலுளுவை அரிசி – ஜ்யோதிஸ்மதி - 140 “
9. கௌலா – கௌலா - 140 “
10. சிறுநாகப்பூ – நாககேஸர - 140 “
11. மருக்கொழுந்து – மரு - 140 “
12. வாயுவிடங்கம் – விடங்க - 140 “
இவைகளை ஒன்றிரண்டாக இடித்துச் சேர்த்து
1. அயபற்பம் – லோஹ பஸ்ம - 30 கிராம்
2. பொன்னிமிளை பற்பம் – ஸ்வர்ணமாக்ஷிக பஸ்ம - 30 “
3. மண்டூர பற்பம் – மண்டூர பஸ்ம - 30 “
ஆகியவற்றையும் இவற்றுடன் சேர்த்து நன்கு கலந்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
அளவும் அனுபானமும்:
10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ரித்ப்லீஹவ்ருத்தி), மஞ்சட்காமாலை (காமால), குன்மம் (குல்ம), ரத்த சோகை (பாண்டு), வீக்கம் (ஸோத), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), மூலம் (அர்ஸஸ்), ரத்தபேதி (ரக்தாதிசார), மற்றும் இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ) மார்புநோய், மார்புவலி, ஈஸினோபீலியா.
No comments:
Post a Comment