Posted On Jan 22,2012,By Muthukumar
இனப்பெருக்கப் பகுதி > விரைவில் விந்து வெளிப்படுதலும்
விரைவில் விந்து வெளிப்படுதலும் ஆண்குறியில் விறைப்புத்தன்மையும் விரைவில் விந்து வெளிப்படுதல்: தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில் விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெளியேறிவிடுகின்றது. விரைவில் விந்து வெளிப்படுதல் நிலையால் ஏற்படக்கூடிய குறுகிய கால, நீண்ட கால பாதிப்புக்கள் என்ன? விரைவில் விந்து வெளிப்படுதலால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடாக காணப்படுகிறது. ஆனால் இது திருப்தியற்ற, நிறைவுபெறாத தாம்பத்திய உறவு, கணவன் மனைவிக்கிடையே உறவில் சுமையை ஏற்றுவுதோடு, கணவனுக்கு ஆண்மையிலுள்ள நம்பிக்கையை மிகவும் பலவீனப்படுத்துகிறது. ஆண்களில் பலர், தாம்பத்திய உறவின் போது ஆரம்பத்திலேயே விந்து வெளிப்பட்டுவிடுமானால் மிகவும் எரிச்சலடைகிறார்கள். இந்நேரத்தில் (ஓரிரு நிமிடங்களிலுள்ளாகவே) இருவருக்குமே திருப்திகிடைப்பதில்லை. விரைவில் விந்து வெளிப்படுதல் நிலை தீவிரமாக இருக்கும் சில ஆண்களுக்கு பெண்ணுடன் உடலுறவு தொடங்க முன்பதாகவே விந்து வெளிப்பட்டுவிடுகின்றது. ஆரோக்கியமான, காமக் கிளர்ச்சியுள்ள தம்பதியினர் ஒருவருக்கொருவர் திருப்தியாக இன்பமளிக்கும் உறவைப் பேணிவாழ்வது முக்கியமானதாகும். இப்படியாக இருக்கவேண்டியதொரு உறவில் விரைவில் விந்து வெளிப்படுதல் நிலையானது உடல், உள நிலைப்பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. ஏறக்குறைய 10 மில்லியன் ஆண்களுக்கு விரைவில் விந்து வெளியேறல் நிலை மிகவும் மோசமாகப் பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன. மேலும் எல்லா ஆண்களுமே தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் இதை அனுபவித்திருப்பார்கள். இன்றைய நாட்களில் விரைவில் விந்து வெளிப்படுதல் நிலையானது ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் பெரியதொன்றாகும். உணவு: உணவில் அதிகமான மரக்கறிகள், எண்ணெய் கொண்ட மீன்கள், கொழுப்பு தவிர்ந்த இறைச்சி, விதைகள்; போன்றவற்றைச் சேர்க்கவேண்டும். ஆண்களின் இனப்பெருக்க தொகுதி அங்கங்களுக்கு, இரத்தச் சுற்றோட்டத்தை அதிகரிக்க, குறைநிரப்பிகளாக வலுக்கூடிய பலவகை உயிர்ச்சத்து கலவைகளும், உடலின் போசாக்கு நிலையைப் பேணுவதற்காக கொடுக்கப்பட்டது. மூலிகைச் சேர்மானத் தயாரிப்பான – கோக்சுறா அன்ட் அஸ்வகந்தா பிளஸ் வலிமை பலம் சேர்க்கவும், ஆண்குறி விறைப்பாக நீடித்து நிற்பதற்காகவும் கொடுக்கப்பட்டது. இன்னும் கொட்டுக்கொல கெம்பிளக்ஸ் என்னும் மூலிகைச் சேர்மானம், மனச்சுமை, அங்கலாப்பு, தவிப்பு போன்றவற்றைத் தணிப்பதற்காக கொடுக்கப்பட்டது. மூலிகைக் கலவை - கோக்சுறா அன்ட் அஸ்வகந்தா பிளஸ்: கோக்சுறா அன்ட் அஸ்வகந்தா பிளஸ் என்பது ஆண்களின் இனப்பெருக்க தொகுதி அங்கங்களை சிறப்பாக செயற்படுவதற்காக செய்யப்பட்ட மூலிகைச் சேர்மானமாகும். இச்சேர்மானத்தை விந்தணுக்களில் காணப்படக்கூடிய, குறைவான விந்தணு உற்பத்தி பலவீனமான விந்தணுக்கள், தரக்குறைவான விந்துப்பாயம் ஆகிய நிலைகளை மாற்றவும் பயன்படுகிறது. இந்த மூலிகைச்சேர்மானமானது உடலில் அகச்சுரக்கும், கான்சுரக்கும் சுரப்பிகளை தேவையான அளவுக்கு செயற்படச் செய்து, விந்தணு, உற்பத்தியையும் ஊக்குவிக்கிறது. மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் திறம்பட செய்யவைக்கிறது. இதனால் உங்களை ஒரு குழந்தைக்கு தந்தையாகும் வாய்ப்பைத்தருகிறது. இச்சேர்மானத்தில், உள்ள மூலிகைகள் அதிக நன்மை தருவதற்காக வேறுபட்ட அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. மூலிகைக் கலவை - கொட்டுக்கொல கெம்பிளக்ஸ்: உடல் உள மன நிலைப்பாதிப்புக்களால் ஏற்படும் மனவழுத்தம், அங்கலாப்பு போன்றவற்றை தணிப்பதற்காக கொட்டுக்கொல கெம்பிளக்ஸ் என்னும் மூலிகைச் சேர்மானத்தைப் பயன்படுத்தலாம். ஆண்களில் விந்து விரைவில் வெளிப்படுதல் நிலை, தம்பதியினரின் உடல் உள ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், துணைவியை திருப்திப்படுத்த முடியவில்லை எனும் அங்கலாப்பையும் ஆதங்கத்தையும் தருவதால், இருவருக்கிடையான உறவுநிலையும் சுமூகமாக இருப்பதில்லை. இந்த மூலிகைக் கலவை அங்கலாப்பு, ஆதங்கம், மனவழுத்தம் போன்ற நிலைகளை குறைக்கும் வண்ணம் செயற்படுகின்றது. இந்த மூலிகைச் சேர்மானத்தில், மூலிகைகள் வௌ;வேறு அளவுகளில் சேர்க்கப்பட்டிருப்பதால் மூலிகைகளின் சேர்மானத்தின்பொழுது கிடைக்கும் அதிகரித்த சக்தியுடன் செயற்படுகின்றது. குறை நிரப்பி - மேல் மல்ரிப்பிள்: ஆண்களுக்குத் தேவையான, முக்கியமான உயிர்ச்சத்துக்களையும், கனியுப்புக்களையும் கொண்ட சேர்மானமாகும். ஆண்களில் பெரும்பான்மையானோர் தமது உணவினூடாக உடலிற்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் உணவுக் குறைநிரப்பிகள் தேவையானதாகும். உடலின் தசையிழையங்களைக் புதுப்பிக்கவும், சீரமைக்கவும் வேண்டிய போசாக்குப் பொருட்களை, பல்வகை உணவுகளிலிருந்து பெற்றுக்கொள்கின்றோம். ஓவ்வொரு போசாக்குப் பொருளும் குறிப்பிட்டதொரு உடற்தொழிலைச் செய்கின்றது. இருந்த பொழுதிலும், பல சந்தர்ப்பங்களில் இவற்றுள் பல ஒன்றுசேர்ந்து தொழிற்படும் போசாக்கு கூறுகளாக உயிர்ச்சத்துக்களையும், தாதுப்பொருட்களையும் குறிப்பிடலாம். போதியளவு போசாக்குப் பொருட்களை தினமும் எடுப்பதற்கு உயிர்ச் சத்துக்களின் கலவை, தாதுப்பொருட்களின் கலவை சேர்மானங்களை எடுப்பது நன்மைபயக்கும். மேலும் மேல் மல்ரிப்பிள் என்பது மேற்குறிக்கப்பட்ட தேவையான போசாக்குப் பொருட்களைக் கொண்ட சேர்மானமாகும். மேலும், ஆண்களின் இனப்பெருக்கத்தொகுதியின் ஆரோக்கியத்தை நன்றேபேண தேவையானவற்றைக் கொண்டிருக்கின்றது.
No comments:
Post a Comment