Lord Siva

Lord Siva

Thursday, 1 December 2011

போதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும்



Posted On Dec 01,2011,By Muthukumar

நோக்கு வர்மம் என்ன என்பது பற்றி தெரியாதவர்கள் இன்றைய திகதியில் இருக்க முடியாது, எனினும் நோக்கு வர்மம் என்பது தனது பார்வையினால் எதிரிகளைத் தாக்கும் ஒரு போர்க்கலையாக அறியப்பட்டுள்ளது. அதில் பல உபபிரிவுகளும் பயன்பாடுகளும் இருக்கின்றது. அதன் இரகசியம் என்ன? எவ்வாறு வேலைசெய்கிறது என்பது பற்றித்தான் இனிவரும் பதிவுகளில் பார்க்கப்போகிறோம்.

நோக்குவர்மத்தின் திறவுகோல் எங்கு உள்ளது? போதிதர்மரின் வரலாற்றுக் குறிப்புகளிலும் சித்தர்களது யோகவித்தையினையும் இணைத்து ஒப்பீட்டு நோக்குவதன் மூலம் அறிய முடியும்.
முதலில் போதிதர்மரது கதையில் அவரது சாதனை பற்றிய குறிப்பு:
போதிதர்மர் தென்னிந்தியாவிலிருந்து முதலாவதாக தென் சீனபகுதியை அடைகிறார். அங்கு அவரது போதனைகள் வரவேற்பு அற்றுப் போகிறது. அதனால் அங்கிருந்து அவர் வட சீனப்பகுதி இரசதானியான "வேயி" இனை அடைந்து அங்குள்ள ஷவலின் ஆசிரமத்தினை அடைகிறார். ஆனால் வேற்று நாட்டவரான இவரை அந்த ஆலயத்தினுள் செல்ல விடாமல் தடுக்கின்றனர். அதனால் அருகில் உள்ள குகையினுள் சென்று அந்த குகையின் சுவரினை கண்ணினால் உற்று நோக்கியவண்ணம் ஒன்பது வருடம் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிறார். இந்த பயிற்சியின் போது கண்மூடுவதனைத் தவிர்ப்பதற்காக தனது கண்ணிமைகளை வெட்டி எறிந்ததாகவும் அதன் அது நிலத்தின் விழுந்தபோது உருவான தாவரம் தான "தேயிலை" எனவும் அவரது வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இதன் உண்மைத்தன்மை தேயிலை மனதை விழிப்புணர்வில் வைத்திருக்கும் என்பதுதான். அதனால் தான் ஜென் புத்த கலாச்சாரத்தில் தேனீர் விருந்து ஒரு முக்கியமான ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதன் பின் அவர் ஷாவலின் ஆலயத்தினரால் வரவேற்கப்பட்டார், அங்கு சென்ற அவர் ஷாவலின் ஆலயத் துறவிகளில் உடல் வலுவற்று இருப்பது கண்டு அவர்களுக்கு உடலிற்கான புறப்பயிற்சிகளும், மனதிற்கான அகப்பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்தார்
சரி நோக்கு வர்மத்திற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்?
நல்ல கேள்வி, போதிதர்மர் எப்படி நோக்கு வர்ம சித்தியடைந்தார் என்பது பற்றிய குறிப்புத்தான் இந்தக்கதை. அதாவது குகை சுவரை உற்று நோக்கியவண்ணம் ஒன்பது ஆண்டுகள் இருந்தார் என்பதுதில் அது குறிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பயிற்சியின் இரகசியம் என்ன வென்பது பற்றி அறிய வேண்டுமானால் நாம் திரும்பவும் இந்திய ரிஷிகளிடம் வரவேண்டும். ஆம் யோகக்கலையின் அடிப்படை தெரியவேண்டும்.
அஷ்டாங்க யோகத்தின் ஆறாவது படியான "தாரணை" தெரியவேண்டும்அட்டாங்க யோகத்தின் இறுதி நிலையான சமாதியினை அடைவதற்கு தாரணைப்பயிற்சி மூலம் சாதனை பயின்று புத்த நிலையினை அடைந்தார் என்பது தான் இந்தக்கதையின் உண்மை விளக்கம். சமாதி எனும் இந்த புத்த நிலை சித்தியினைப் பெறுவதற்காகத்தான் ஒன்பது வருடங்கள் போதிதர்மர் குகைச் சுவரினை உற்றுப்பார்த்த வண்ணம் சாதனையிலிருந்தார் திருமூலரது திருமந்திரம், போகர் 7000, அகஸ்தியர் பாடல்கள், பதஞ்சலி முனிவரது யோக சூத்திரம், ஔவையாரின் ஞானக்குறள் என்பவற்றில் தாரணையைப் பற்றி குறிப்புகள் உள்ள.
தாரணை என்பது பதஞ்சலியாரின் உபதேசப்படி "கட்டுப்படுத்தப்பட்டு அசைவற்று இருக்கும் சித்தம் (மனம் அல்ல) தாரணை" எனப்படும், அதாவது மனதில் ஏற்படும் எண்ண அலைகளுக்கு மூலமான சித்த விருத்திகளை உருவாக்கும் சித்தத்தினை கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சும் செயல் முறைதான் தாரணை எனப்படும்.
நோக்கு வர்மத்தின் அடிப்படை யோகத்தின் ஆறாவது பகுதியான "தாரணை", தாரணா சித்தியின் ஒரு பிரயோகம்தான் நோக்குவர்மமே ஒழிய அது ஒரு தனியாக பயிலவேண்டிய கலை அல்ல, யோகத்தின் படி நிலையில் அடையப்படுகின்ற ஒரு உப அன்பளிப்புதான் (compliment) நோக்குவர்மம். ஆனால் பொதுவாக யோகம் பழகுபவர்கள் இயமம், நியமம், பிரத்தியாகாரம் பழகுவதால் இந்த சித்தியினை மற்றவரை தாக்குவதற்கு உபயோகிப்பதில்லை. ஆனால் சித்தர்கள் ஸத்திரியர்கள், அரசர்கள், போர்வீரர்கள் போன்ற‌ யோகம் பயின்று சமாதியாகிய இறுதி நிலையினை அடைய விரும்பாமல் இந்த கலையினை பயன்படுத்தி மற்றவர்களை காப்பாற்றவேண்டும் என்பவர்கட்கு அதனை ஒரு தனிக்கலையாக உருவாக்கி மருத்துவத்துடனும் போர்க்கலையுடனும் கற்பித்துள்ளார்கள்.
சித்தர்கள் யோகக்கலையினையும் அதனை கற்பவர்கள் பெறும் சித்திகளை மறந்தும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் அழகாக வடிவமைத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே நல்ல சான்று!

No comments:

Post a Comment