Posted on Dec 29,2011,By Muthukumar
டாக்டர். கே.எஸ்.ஜெயராணி அவர்கள் எழுதி ஓர் இணையத்தில் வெளிவந்த கட்டுரை
மனித உறுப்புகளில் மகத்துவம் நிறைந் தது, கருப்பை. பெண் இனத்திடம் மட்டுமே இருக்கும் ஆக்க சக் தியின் அற்புதம் இது !
கிட்டத்தட்ட
முக்கோ ண வடிவத்தில் மேல் பகுதி விரிந்தும், கீழ் பகுதி குறுகியும்
காணப்படுகிறது. 8 முதல் 9 செ.மீ. நீளம் கொண் டது. கருப்பையின் வாய்ப் பகுதி
பெண் உறுப்பில் இருந்து தொட ங்குகிறது. கரு தங்குவதற்கு முன்னால்,
கருப்பையை தொட்டுப் பார்த்தால் நமது மூக்கைத் தொட்டால் எப்படி
இருக்குமோ அது போ ல் சற்று கடினமாகத் தெரி யும். கரு தங்கி வளரத் தொடங்கிய
பின்பு தொட்டுப் பார்த்தால் நமது உதடுக ளைத் தொடுவது போன்று மென்மையாக உணர
முடி யும்.
கருப்பை தசைகளால் ஆன து. அதன் உள்ளே ரத்தக் குழா ய்களால் ஆன மெத்தை போல் எண்டோமெட்ரியம் உள்ளது. சினைப்பையில் இருந்து சினை முட்டை முதிர்ந்து- வெடித்து- வெளியேறி கருக்குழாயில் உயிரணுவை சந்தித்து, அங்கேயே கருவாகி,
அது சில ரசா யனங்களை வெளிப்படுத் தும். அந்த ரசா யன மாற்றங் களால் கரு
நகர்ந்து, 5-வது நாள் கருப்பைக்குள் சென்று, அங்கேயே ஒட்டி வளரத்
தொடங்கிவிடும். கருவை வளர வைப்பது எண்டோமெ ட்ரியத்தின் வேலை. முதலி ல்
சிறிதாக இருக்கும் எண் டோமெட்ரியம், பின்பு வளர் ந்து 9 மி.மீ. அளவை
எட்டும்.
வயதுக்கு வந்த எல்லா பெண்களுக்கும் மாத விலக்குக்கு முந் தைய நாள்வரை எண்டோமெட்ரியம் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.
உடலுறவு நிகழ்ந்து உயிர ணு சென்று- சினை முட்டை யும் வெளியேறி வந்து-
இரண்டும் சந் தித்து கருவாக்கத்திற்கான செயல் கள் நிறைவேறா விட்டால் இந்த
எண்டோமெட்ரியத்திற்கு கருப்பை க்குள் வேலையில்லை. அதனால் அது வெடித்து வெளி
யேறும். இதுதான் மாத விலக்கு உதிரம். (கருவாக்கம் நிகழ்ந்தால் எண்டோ
மெட்ரியம் கருவை வளர்க்கத் தொட ங்கிவிடும்) மாத விலக்கு உதிரம் 200-300
மி.லி. அளவில் 2-3 நாட்களாக வெளி யேறிக் கொண்டிருக்கும்.
‘மாதவிலக்கு காலத்தில் தம்பதிகள் உறவு வைத்துக்கொண்டால் ஜன்னி வந்துவிடும்’ என்ற கருத்து தவறானது. பெரும்பாலான பெண்களுக்கு
மாத விலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோ ன் செயல்பாடுகளா ல் செக்ஸ் உணர்வு
மிகுதியாகும். அப்போது செக்ஸ் வைத்துக் கொள்வது பெண்களுக்கு மகிழ்ச் சியை
தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும் என்டார்பின் ஹார் மோன் வலி நிவாரணியாக
மாறி, மாத விலக்கு கால வலியையும் குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும்
விரும் பினால், சுகாதாரமான முறையில் உடலுறவை மேற்கொள்ள லாம். (மாதவிலக்கு கால உறவால் கர்ப் பம் ஏற்படாது)
மாதவிலக்கு
உதிரப்போக்கு அதிக நாட் கள் தொடர்வதும், ஒரே நாளில் வந்து நின்று விடுவதும்
குறைபாடு தான். சிகி ச்சை மூலம் அதற்கு உடனடியாக தீர்வு கண்டிட வேண்டும்.
கருப்பை
வளரும் தன்மை கொண்ட திசு. உள்ளே தங்கும் கரு வளர வளர கருப் பையும் வளரும்.
இரண்டு, மூன்று குழந் தைகளை தாங்கும் சக்தியும் அதற்கு இருக்கிறது. கரு,
திசுவாகி- குழந்தை யாக வளர்ந்த பின்பு கருப்பைக்குள் ஏற்ப டும் ரசாயன மாற்
றங்கள், அதனை சுருங்கவைத்து குழந்தையை வெளியே தள்ளு கின்றன. இதுவே
பிரசவத்திற்கான தூண்டு தலாகும்.
கருப்பையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
* எண்டோமெட்ரியம் பாதித்து கருப் பையில் காச நோய் தோன் றலாம்.
* தாய்
வயிற்றுக்குள் இருக்கும் போதே பெண் சிசுவுக்கு கருப்பை உருவாகி விடும்.
முதலில் அது மாட்டுக்கொம்பு போல் இரண்டு டியூப் ஆக உருவாகி, வளர்ந்து
இணையும். அதன் உள்ளே பள்ள மான பகுதியும் தோன்றும். ஒரு பக் கம் மட்டும்
மாட்டுக்கொம்பு போல் வளர்ந்திருந்தாலோ, போதுமான வளர்ச்சியின்றி இருந்தா லோ,
அளவில் சுருங்கி பிறவியிலேயே குறைபாட்டுடன் இருந் தாலோ அது
பாதிப்பிற்குரிய அம்சமாகும். இத்தகைய பாதிப்பு கொண்ட பெண்களுக்கு திருமணமாகி, குறைவற்ற முறையில் உடலுறவு நிகழ்ந்தாலும் தாய் மையடைய முடியாத சூழல் ஏற்ப டும்.
*
கருப்பையின் வாய் எப்போதும் மூடி யிருக்க வேண்டும். உயிரணு அதன் உள் ளே
செல்லவும்- திரவம் வெளியே வரவும் மட்டும் வழி யிருக்க வேண்டும். அதற்கு
மாறாக கருப்பை வாய் திறந்திரு ந்தால் கரு உள்ளே தங்காமல், கலைந்து வெளி
யேறி விடும்.
* கருப்பையில் பைப்ராய்ட் போன்ற கட்டிகள் உருவானாலும் கரு ப்பை பாதிக்கப்பட்டு, தாய்மை தள்ளிப்போகும்.
* கருப்பை புற்றுநோய் தோன்றலாம்.
* கருப்பை வாயில் ‘பாலி ப்’ எனப்படும் கட்டிகள் தோன்றலாம்.
பெண்களுக்கு
தாய்மை தள்ளிப்போகும்போது கருப்பையில் பாதிப்பு ஏதாவது இருக்கிறதா என்பதைக்
கண்டறிந்து, அதற்கான நவீன சிகிச்சையை மேற் கொள்ள வேண்டும்.
பின்குறிப்பு: மாதவிலக்கு
காலத்தில் பெண்களை தனிமைப் படுத்தி எந்த பொருளையும் தொடக்கூடாது என்று
ஒதுக்கி வைக் கும் நிலை இப்போதும் சில இடங்களில் இருக்கிறது. மனி தன்
முதலில் காட்டுக்குள்தான் வாழ்ந்தான். அப்போது மனித னைச் சுற்றி
காட்டுமிருகங்கள் நிறைய இருந்தன. சிங்கம், புலி போன்ற வைகள் மனிதனின்
ரத்தவாடையை 2 கி.மீ. தூரத்தில் இருந்துகூட கண்டுபிடித்து, அங்கு மனிதன்
இருப்பதை உணர்ந்து, தேடி வந்து தாக்கி விடும். அதனால் மாதவிலக்கு நாட்களில்
பெண்களை தனி மைப்படுத்தி பாதுகாப்பான குகை மற்றும் உய ரமான மரங்களில்
வைத்தார்கள். இப்போது பாதுகாப்பான உலகில் பெண்கள் வாழ் வதால், மாதவிலக்கு
காலத்தில் அவர்களை தனி மைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
No comments:
Post a Comment