Posted on December30, 2011 by muthukumar
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலியும், கழுத்து
வலியும்
அழையா விருந்தாளிகளா க தானாகவே வந்து விடுகின்றன. ”வாகனத்தின்
நிறத்துக்கும், அழகுக் கும் கொடுக்கும் முக்கியத்துவத்தி ல் சிறிதளவாவது,
வாகனத்தை ஓட்டும் முறைக்கும், நம் உடலுக்கு ம் கொடுத்தால், வலிகள் வராமலே
தடுத்து விடலாம்” என்கிறார் பிசி யோதெரபிஸ்ட் பிரேம்குமார்.
”வாகனம்
ஓட்டும்போது, கழுத்து, இடுப்புப் பகுதிக்கு முன்னும் பின்னு ம் இருக்கிற
தசைப் பகுதிதான் நம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இந்த இரண்டு தசைப் பகுதிகளும் ஒன் றுக்கொன்று உறுதுணையாகச் செயல்பட வேண்டும்.
மேலும்
இடுப்பையும், கழுத்தையும் சுற்றி இருக்கிற தசைப் பகுதி தான், இடு ப்புப்
பகுதியிலுள்ள 5 பெரிய எலும்புக ளுக்கும், கழுத்துப் பகுதியிலுள்ள 7
எலும்புகளுக்கும் பக்க பலமாக இருக்கி றது. இந்த இரண்டு பகுதிகளும் உறுதியாக
இருந்தாலே வாகனம் ஓட்டுவ தால் ஏற்படக்கூடிய 70 சத விகிதப் பிரச்னைகளைத்
தவிர் த்துவிட முடியும்” என்றவர், வலிகளைக் தடுக்கும் வழி முறை களையும்
விளக்கினார்.
நம்
கட்டை விரலைத் தவிர, மற்ற நான்கு விரல்களின் நுனிப் பகு தி தசையை அழுத்திப்
பார்க்கவும். அதில் வலி ஏற்பட்டால் அது தசை வலி. அப்படி இல்லாமல் கைகள்
மரத்துப் போனது போன்று தோன் றினால், கழுத்துப் பகுதியில் உள்ள ஏதோ ஒரு
நரம்பு பாதிக்கப்ப
ட்டுள்ளது
என்று தெரிந்து கொ ள்ளலாம். இதேபோல், இடுப்பு முத ல் பாதம் வரை வலியோ
அல்லது மரத்துப் போனது போன்ற உணர் வோ இருந்தால், இடுப்புப் பகுதியி லுள்ள
நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
தசை
வலியாக இருந்தால், சுடு தண்ணீரால், வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தே
தசை வலி யைச் சரி செய்து விடமுடியும். அதுவே மூட்டுகளில் வலியாக இருந்தால்,
பிசியோதெரபிஸ்டை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்” என்றவர், வாகனம் ஓட் டுகிற
முறையையும் விரிவாகக் கூறினார்.
* வெறும் தரையில் நேராக மல்லாந்து படுத்துக் கொள்ளவும்.
பிற
கு, இரண்டு முழங்காலையும் மடக்கி நெ ஞ்சோடு சில விநாடிகள் சேர்த்து வை
த்துக் கொள்ள வேண்டும். பின்பு, காலை மடக்கியவாறே தரையில் வைக்கவும்.
இப்படி தினமும் பத்து முறை செய்து வந் தால், உடலின் பின் பக்கத்தசைகள் விரி
வடைந்து, ரத்த ஓட்டமும் சீராகும்.
*
குப்புறப் படுத்துக்கொண்டு இரண்டு கை களையும் நெற்றிக்குக் கீழாக வைத்துக்
கொள்ளவும். பின்பு, ஒரு காலை மட்டும் நீட்டிக் கொண்டு, மற்றொரு காலைத்
தூக்க வேண்டும். இதேபோல், அடுத்த காலையும் தூக்கி நீட்டவும். இப்படிச்
செய்வதன் மூலம், இடுப்புப் பகுதியிலு ள்ள தசைகள் வலுவாகும்.
No comments:
Post a Comment