Lord Siva

Lord Siva

Monday, 5 December 2011

மழைக்காலத்தில் பரவும் நோய்கள்


Posted On Dec 05,2011,By Muthukumar

இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது. சாலைகளில், வீடுகளின் வெளிப்புறத்தில், எச்சில் துப்புவதைத் தவிர்க்கவும். வீட்டிற்குள் வந்தவுடன், கை, கால்களைச் சுத்தமாகக் கழுவவும். பழைய, மீதமான உணவை குளிர்பெட்டியில் வைத்து, மீண்டும் சூடுபடுத்தி உண்ணக் கூடாது.
மலேரியா கிருமி
பாரசைட் என்ற கிருமிகள், மலேரியா ஏற்படுத்தும். அவை
  • *பிளாஸ்மோடியம் (P Plasmodium)
  • *பால்ஸிபாரம் (P falciparum)
  • *வைவாக்ஸ் (P.vivax)
  • *ஓவலே(P. ovale)
  • *மலேரியே (P.malariae)
  • *நோலெசி (P.knowlesi)
பரவும் முறை: பெண் கொசுவால் பரவும் (Female Anophels mosquitoes)
அறிகுறிகள்: ரத்த சோகை, மலத்தில் ரத்தம், நடுக்கம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி வருவது போன்ற உணர்வு, வியர்த்தல், கோமா.
உறுதிப்படுத்தும் அறிகுறிகள்: மேற்சொன்னவை சுழற்சி முறையில் உருவாதல், திடீர் சளியும் தொடர்ந்து ஏற்படும் நடுக்கம், காய்ச்சல், வேர்த்தல் இரு நாட்களுக்கு ஒரு முறை, 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும்.
விளைவுகள்: ரத்த சோகை, மூளை தொற்றுநோய், ஈரல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல், நுரையீரலில் நீர்த்தேக்கத்தால் மூச்சிரைப்பு, சுவாசத் தடை, மண்ணீரலீல் சிதைவு ஏற்பட்டு ரத்தக் கசிவு ஏற்படும்.
தடுப்பு முறைகள்: உடல் முழுவதும் மூடும்படியான உடைகளை அணியவும். இந்நோய் பரவிய பகுதியில், நீங்கள் பயணிக்க நேரிட்டால், கொசு துரப்பான் களைப் பயன்படுத்தவும்.
டெங்கு காய்ச்சல்: கிருமி ஏடிஸ் எஜிப்டி (அஞுஞீஞுண் அஞுஞ்தூணீtடி)
பரவும் முறை : கொசுக்களால் மட்டும் பரவும்
அறிகுறிகள்: திடீரென்று அதிக காய்ச்சல் (104 - 105) / கடுமையான காய்ச்சல் நோய் தொற்றிய 4 முதல் 7 நாள் பிறகு தெரியும். 2 முதல் 5 நாளில், காய்ச்சல் கண்டவுடன் சிவப்புப் புள்ளிகள் உடம்பெல்லாம் தெரியும். தோலரிப்பு, மயக்கம், தலைவலி, மூட்டுவலி, தசைவலி, வாந்தி, டூதூட்ணீடணணிஞீஞு வீக்கம்.
விளைவுகள்: வலிப்பு, உடலில் நீர் வற்றிவிடுதல்
தடுப்பு முறைகள்:
*முழுமையாக உடை அணிதல்
* கொசு ஒழிப்பான்களையும், கொசு வலைகளைப் பயன்படுத்தி கொசுக்களை வரவிடாமல் தடுக்கவேண்டும்
மஞ்சள் காய்ச்சல்:
கிருமி ப்ளாவி வைரஸ் (ஊடூச்திடி திடிணூதண்)
பரவும் முறை : தொற்று நோய்க் கொசுக்களால் மட்டும் பரவும். இதில், மூன்று நிலைகள் உள்ளன.
ஆரம்ப நிலை : தலைவலி, உடல்தசை மட்டும் மூட்டுகளில் வலி, காய்ச்சல், முகத்தில் சிவப்புத்தன்மை, பசியின்மை, வாந்தி, மஞ்சள் காமாலை பொதுவானது. இந்த அறிகுறிகள் உடனே மறைந்து விடும் வாய்ப்பு உண்டு.
ஆற்றல் குறையான கால அளவு நிலை : 3 - 4 நாட்களில் காய்ச்சலும் மற்ற அறிகுறிகளும் மறைந்து போகும். இதனால், மக்கள் பலர் சுகமாகிவிடுவர். ஆனால் சிலர், அபாயமான மூன்றாம் நிலையை, 24 மணி நேரத்தில் மயக்க நிலையை அடைவர்.
அதி மயக்க நிலையின் கால நிலை பல உறுப்புகளின் செயலிழப்பு, இதயம், ஈரல், சிறுநீரகம், ரத்தக்கசிவு, மூளையில் ரத்தக்கசிவு, மூளை செயலிழத்தல் ஏற்படலாம்.
அறிகுறிகள்: தாறுமாறான இதய துடிப்பு (அணூணூடதூtடட்டிச்ணூ) ரத்தக் கசிவு, சிறுநீர் கழித்தல் குறைந்து விடும், மனப்பதற்றம், வாந்தி, உடல்தசை வலி, காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை, தசைவலி, கண்கள் சிவத்தல், மற்றும் கோமா நிலையை கூட அடையலாம்.
விளைவுகள்: கோமா, இறப்பு
தடுப்பு முறைகள்:
* மஞ்சள் காய்ச்சல் பரவியுள்ள பகுதியில் நீங்கள் பயணிக்க நேரிட்டால், கொசு துரப்பான்களைப் (Mணிண்ணுதடிtணி ணூஞுணீஞுடூடூச்ணtண்) பயன்படுத்தவும்.
*உடல் முழுவதும் மூடும்படியான உடைகளை அணியவும்.
* தடுப்பு ஊசி - தோலுக்கடியில் (குஇ) ஃடிதிஞு ச்ttஞுணதிச்tஞுஞீ திடிணூதண் (17 ஈ குtணூச்டிண)
சிகிச்சை முறை நோய்க்கேற்ற சிகிச்சையை, உரிய மருத்துவரை ஆலோசித்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளுதல் நலம் பயக்கும்.
குறுகிய கால தடுப்பு முறைகள்
* குளோரின் கலந்த நீர், காய்ச்சிக் குடித்தல்.
* ஹெப்படைடிஸ் அ வைரஸ் (ஏஅங) தடுப்பு ஊசி
* மலேரியா தடுப்பு முறை
* காய்ச்சலின் அறிகுறி கண்டவுடன், உங்கள் மருத்துவர். மூலம்கண்டறிந்து, உடன் சிகிச்சை மேற்கொள்ளுதல்.
முக்கிய குறிப்புகள்
* இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.
* சாலைகளில், வீடுகளின் வெளிப் புறத் தில், எச்சில் துப்புவதைத் தவிர்க்கவும்.
* வீட்டிற்குள் வந்தவுடன், கை, கால்களைச் சுத்தமாகக் கழுவவும்.
* பழைய, மீதமான உணவை குளிர் பெட்டியில் வைத்து, மீண்டும் சூடு படுத்தி உண்ணக் கூடாது.
* வீட்டிற்கு அருகில் உள்ள, நீர்த் தேக்கங் களை அப்புறப்படுத்தவும்.

No comments:

Post a Comment