Lord Siva

Lord Siva

Sunday, 25 December 2011

ஆரைக்கீரை…

Posted On Dec 25,2011,By Muthukumar
தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்
பொன்றாத நீரிழிவைப் புண்ணீரை -யென்றுமிந்த
ஆராரைச் சாராம லோட்டிவிடு நாலிதழால்
நீராரைக் கீரையது நீ
(அகத்தியர் குணவாகடம்)
பொருள் -
இது நன்கு சுவையைத் தரும்.  மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும்.  முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும்.  அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும்.  பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.
ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்.
நான்கு இதழ்களைக் கொண்ட இவை நீர்பகுதிகளில் அதிகம் வளர்வதால் இதனை நீராரை எனவும் அழைக்கின்றனர் .
இக்கீரையை சமைத்து உண்டுவந்தால் மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.
நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும்  அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆரைக்கீரை சூப்
ஆரைக் கீரை        - 1 கைப்பிடி
கறிவேப்பிலை    - சிறிதளவு
கொத்தமல்லி இலை    - சிறிதளவு
சின்ன வெங்காயம்     - 5
பூண்டுப்பல்        - 3
மிளகு        - 5
சீரகம்        - 1 ஸ்பூன்
சோம்பு        - 1 ஸ்பூன்
இஞ்சி        - 1 சிறு துண்டு
உப்பு        - தேவையான அளவு
இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.
சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும்.  அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும்.  மலச்சிக்கல் தீரும்.  அசீரணக் கோளாறுகள் நீங்கும்.
சரும நோய்கள் ஏதும் அணுகாது.  பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும்.
பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும்.
வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.

No comments:

Post a Comment