Posted On Dec 25,2011,By Muthukumar |
பட்டாம்பூச்சிகள்
பறந்து அமரும் துத்திப்பூக்கள் காணும் இடமெங்கும் கண்ணுக்கு இதமாய்
மலர்ந்து சிரிக்கும். குப்பை மேடுகள், சாலையோரங்கள் என பல இடங்களிலும்
வளர்ந்துள்ள துத்திச் செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணமுடையவை.
ரத்தம் தொடர்புடைய நோய்களை போக்கி நெஞ்சுக்கு இதம் தரும்.
ஆண்மை பெருகும்
துத்திப்பூக்களைச்
சேகரித்து துவரம்பருப்புடன் கூட்டாகச் சமைத்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு
வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் ரத்தம், சிறுநீரில் ரத்தம்
எதுவாயினும் குணமாகும். ஆண்மை பெருகும்.
இரைப்பு நோய்
துத்திப்பூக்களைச்
சேகரித்து, காம்பு நீக்கி நிழலில் காயவைத்து சூரணம் தயார் செய்து சமஅளவு
சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டியளவு சூரணத்தை காலை, மாலை பாலில் பருக
இரைப்பு மறையும். காசம் என்ற எலும்புருக்கி நோய் நீங்கும்.
மூலநோய் கட்டுப்படும்
ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பறித்து பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வர மூலநோய் கட்டுப்படும்.
ரத்தவாத்தி நீங்கும்
அரைக்
கைப்பிடியளவு துத்திப் பூக்களை சேகரித்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர்
ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி 4 மணிக்கொரு முறை அரை டம்ளர்
வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.
No comments:
Post a Comment