Lord Siva

Lord Siva

Thursday, 29 December 2011

குழந்தைக்கும், தாய்க்கும் பல்வேறு நன்மைகளுக்கு வழிவகுக்கும் தாய்ப்பால்


தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், நடத்தையில் ஒழு க்க முள்ள குழந்தைகளாக வளர் வார்கள்’
- சமீபத்தில் ஐரோப்பாவில் வெளி யிடப்பட்ட மெகா ஆய்வின் ரிச ல்ட் இது. ஆகஸ்ட் முதல் வாரம் ‘தாய்ப்பால் வாரம்’ கொண்டாட இருக்கும் நிலையில் இப்படியரு செய்தி, அனைவ ரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!
” ‘தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைக்கும் தாய்க்கும் பல்வேறு நன்மைக்கு வழிவகுக்கும் என்பது காலம்காலமாக வலியுறுத்தப்படு ம் விஷயம்தான். ஆனால், இன்றை ய நவநாகரிக உலகில்… நேரமின் மை, அழகுக் கெட்டுவிடும் என்பது போன்ற பல காரணங்களால்… குழந்தைக்குப் பால் கொடுப்பதை யே பாரமாக நினை க்க ஆரம்பித்து விட்டனர் பலர். இத்தகைய சூழலி ல், ஆய்வுபூர்வமாகவும் … தாய்ப் பாலின் மகத்துவம் வலியுறு த்தப் பட்டிருப்பது வரவேற் கத்தக்கது” என்று  சொல்லும் காரைக்குடியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவ ரான வெங்கடேசன்,  அந்த ஆய்வு குறி த்த தகவல்களை முதலில் பகிர்ந்தார்.
”ஐரோப்பாவின் ‘டிபார்ட்மென்ட் ஆஃப் ஹெல்த்’ என்கிற அமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளாக, மொத்தம் 10,037 குழந் தைகளிடமும் அதன் தாய்மார் களிடமும் இந்த மெகா ஆய்வி னை நடத்தியது. இதி ல் 9,525 குழந்தைகள் நிறை மாதத் தில் பிறந்த குழந்தைகள்; 512 குழ ந்தைகள் குறைப்பிரசவத்தில் பிற ந்தவை. அத்தனை குழந் தைகளை யும் தொடர்ந்து கண் காணித்த டாக்டர்கள் குழு, பிற ந்து ஒன்பது மாதங்கள் ஆன நிலையில், ‘தாய் ப்பால் மட்டு மே எத்தனை நாட்கள் கொடுத் தீர்கள்?’ என்று தாய்மார்களி டம் விவரங்களைச் சேகரித்திருக்கிறது. அதன் பிறகும் குறிப் பிட்ட மாத இடைவெளிகளில் குழந்தைகளின் உடல் நிலை குறித்தும், அதன் நடத்தைகள் குறித்தும், எதுவரை தாய்ப்பால் கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் பல்வேறு கட்ட சர்வேக்கள் எடுத்தி ருக்கிறார்கள்.
இறுதியாக, ஐந்து வயது பூர்த் தியானதும் அவர்களி ன் நடத்தை உள்ளிட்டவை பரிசோதித்துப் பார்க்கப்பட் டன. அதில் தான், நிறை மாத பிரசவத்தில் பிறந்து, குறிப்பிட்ட காலம் வரை தாய்ப் பால் மட்டுமே குடித்து வள ர்ந்த குழந்தைகளில் 75% பேர் ஒழுக்கமும், நல்ல பழக்க வழக்கமுள்ளவர்களாகவும் இருப்பது தெரிய வந்திருக் கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்து, தாய்ப்பால் மட்டுமே குடித்து வளர்ந்திருந்த குழந்தைக ளிடமிருந்து தெளி வான முடிவைப் பெற முடிய வில்லை.
குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதி க்கக் கூடிய பிற காரணிகள் குறித்து ம் ஆய்வுகளை நடத்தினார்கள். குழ ந்தைகள் பிறந்த சூழ்நிலை, அவர் களை பாதித்த நோய்கள் உள்ளிட்ட வை இதில் எடுத்துக் கொள்ளப் பட்டன. இதன் முடிவில், ‘குழந்தை களின் சீரான வளர்ச்சிக்கு தேவை யான ‘எஸ்ஸென்ஷியல் லாங்- செயி ன் பாலிஅன்சாச்சுரேட்டட் ஃபே ட்டி ஆசிட்ஸ்’ (Essential Long – Chain Polyunsaturated Fatty Acids) தாய்ப்பாலில் அதி கம் இருக்கிறது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியை யும் அதன் செயல் பாட்டையும் ஊக்குவிப்பதுடன் தாய் – குழந்தை பிணைப் பையும் வலுப்படுத் துகிறது’ என்ற தக வல்களும் கிடைத் திருக்கின்றன” என்ற டாக்டர் வெங் கடேசன், மேலும் சில உபயோக மான தகவல்களையும் சொன் னார்.
”தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து ‘இண்டியன் அகா டமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’   (Indian Academy Of Paediatrics) அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில், மற்ற குழந்தைகளை விட, தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, நீர்க்கடுப்பு உள்ளி ட்ட பிரச்னை களிலிருந்து ஆறு மடங்கு குறைவாகத்தான் பாதிக்கப்படு கிறார்கள்… தாய்ப் பால் கொடுக்கும் தாய்மார் களுக்கு மார் பக புற்று நோய், கருமுட்டை பை புற்று நோய் (Ovarian cancer)160; உள்ளிட்ட நோய்கள் வருவது தடுக்கப் படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
தாய்ப்பால் சுரப்பியானது குடிக்கக் குடிக்கத்தான் ஊறும். புட்டிப் பாலை கொடுத்து பழக்கிவிட்டால் பிறகு, தாயிடம் பாலை சப்பிக் குடிக்காமல் இருந்துவிடும். இதனால் பால் சுரப்பதும் தடைப்படும். முதலி ல் குழந்தைகளைப் பசித்து அழ விடவேண்டும். அழுகிறார்க ளே என்று புட்டிப்பாலை கொடு த்தால், அது பசியைக் குறைத்து விடும். அதன்பிறகு தாய்ப்பாலு க்கு ஏங்கமாட்டார் கள்.
சில தாய்மார்களின் பால் புகட் டும் நிப்பிள் சிறிதாக இருப்ப தால், சிறி ய பம்ப் பயன்படுத்தி தாய்ப்பாலை உறிஞ்சி எடுத்து பிள்ளைகளுக்குக் கொடுக்கி றார்கள். தவிர்க்க முடியாத நிலையில் இதைச் செய்யும் போது, கண்டிப்பாக சங்கு (பாலாடை) மூலமாகத்தான் அந்தப் பாலை குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும்.
பிரசவமானதும் தாய் க்கு முதலில் சுரக்கும் பாலை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது என்கிற தவறான கண் ணோட்டம் இன் றும் நில வுகிறது. அந் தப் பாலில்தான் நோய் எதிர்ப்புச் சக் திக்கான விஷயங் கள் நிறைய இருக்கி ன்றன. இது, குழந்தைகளுக்கு வரும் நோயை எதிர்க்கும் போர் வீரனைப் போன்றது.
சின்னம்மை பாதித்த தாய்மார்கள், தாராளமாக தங்கள் குழந்தை களுக்குப் பால் கொடுக்கலாம். சின்னம் மை, குழந்தைக்கு தொற் றுவதற்கு குறைந்தபட் சம் 20 நாட்களாவது ஆகும். அதற்குள், தாய்க்கு உடம் பில் உண்டாகும் எதிர்ப் புச்சக்தியானது தாய்ப் பால் மூலமாக குழந்தையின் உடம் பில் சேர் ந்து எதிர்ப்புத் தன்மை யை உண் டாக்கி விடுவதால் குழந்தையை அது தாக்காது’’ என்ற டாக்டர்,
”தாய்ப்பால் புகட்டுவதால் அழகுக் குலைந்துவிடும் என்று சொல் லப்படுவதில் துளியும் உண்மையில்லை. தாய்ப்பால் குழந்தைக்கு நன்மை சேர்ப்பதோடு, அம்மாக்களும் உடம் பில் சேரும் தேவை யற்ற கொழுப்புகள் கரைந்து ’50 கே. ஜி தாஜ்மஹால்’ போல ஜொ லிப்பார்கள்” என்று ஃபிட்னெ ஸ் ரகசியத்துக்கும் டிப்ஸ் தந்தார்.

No comments:

Post a Comment