Lord Siva

Lord Siva

Saturday, 10 December 2011

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா


உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப்பதுதான் வேதனை!” என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
ஈ-கோலை பாக்டீரியா பாதிப்பை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக் கைகள். இப்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக… ஈ-கோலை பாக்டீரியா பெண்களிடத்தில் பரவுவதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது. தாம்பத்யம் வாயி லாகப் பரவி, குடும்பத்தின் நிம்மதி யைக் குலைக்கிற அளவுக்கு ஈ-கோலை மாறும் அபாயம் இருக்கிறது என்பதற் காகவே இந்த விழிப்பு உணர்வு கட்டு ரை.
உ.பி. மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியரும், சிறுநீரக சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஷஹஜாத் ஃபக்ருல் ஹக் இதுகுறித்து விரிவான தகவல் களை இங்கே விளக்குகிறார்.
”மனித உடலிலேயே ஈ-கோலை பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவை, உணவு ஜீரணத்துக்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகின்றன. மலம் கழிக்கும்போது சரியாக சுத்தப்படுத்தாவிட்டால், மல த்தின் மூலம் வெளியேறும் இந்த பாக்டீரியாவே நமக்கு தீமை செய்ய க்கூடியதாகவும் மாறிவிடும். இதைத் தவிர சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் வாயிலாக வும்… சுகாதாரமற்ற இடங்களில் மல, ஜலம் கழிக்கும்போது பிறப்புறுப்புகளில் தொற்றுவதன் வாயி லாகவும் உடலில் பரவ வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இத்தகைய தொற்று ஈ-கோலையை விரட் டியடிக்க நவீன மருந்து மாத் திரைகள் நிறைய வந்துவிட் டன. அதனால், அச்சம் கொள் ளவேண்டாம்!” என நம்பிக் கையான வார்த்தைகளை சொன்ன டாக்டர் தொடர்ந்தார்.
”யூ.டி.ஐ. ((UTI-Urinary Tract Infection)யூ.டி.ஐ. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாங்கமுடியாத எரிச்சல், முதுகுவலி, குளிர் காய் ச்சல்… போன்ற தொல்லைகளால் அவதிப்படுவார்கள். இதற்குச் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காத போது… நாளடைவில், சிறுநீரகத்தைப் பாதித்து உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உண்டு. இதில் இருந்து தப்பி க்க சாத்தியமான எளிய வழி இருக்கிறது. சுத்தமான தண்ணீரை அதிகம் குடித் தாலே… பாதிப்பை ஓரளவுக்குக் குறைத் துவிடலாம்!
‘யூ.டி.ஐ.’ என்பது தொற்று நோய் வகையைச் சேர்ந்தது என்பதால், பாதிக்கப்பட்ட நபர்கள் நோய் முற்றிலும் தீரும்வரை உடலுறவைத் தள்ளிப் போடுவது நல்லது. அல்லது ஆணுறையைப் பயன் படுத்தலாம். மனைவிக்கு யூ.டி.ஐ. பாதிப்பு அடிக் கடி இருந்தால், முதலில் கணவருக்குதான் விந்து பரிசோதனை செய்ய வேண்டும். பாதிப்பு இருக் கும்பட்சத்தில், உடலுறவின்போது குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே விந்து வெளியா கிவிடும். ஏனெனில், ஆண்களின் சிறுநீரகத் திலிருக்கும் ‘புராஸ்டேட்’ எனும் சுரப்பி, சிலசமயம் வயதின் கார ணமாக அளவில் பெருத்துவிடும். அப்போது புராஸ்டேட்டில் ஈ-கோ லை தாக்குதலும் அதிகமாக இருக்கும். இதனால், விந்து முந்துதல், மலட்டுத் தன்மை, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பிரச் னைகள் அணிவகுக்கும்.
ஈ-கோலை பாதித்த தன்மை யைப் பொறுத்து ஆன்டிபயா ட்டிக் ஊசி மற்றும் மாத்தி ரைகளைத் தொடர்ந்து எடுத்து க்கொள்ள வேண்டும். அதுதான் பாதிப்புகளைக் குறை க்கவும், அறவே அதன் பிடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும் ஒரே வழி” என்றவர், ஈ-கோலை தொ ற்று நோயைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை யும் சொல்ல ஆரம்பித்தார்.
”மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் அந்தப் பகுதியை சுத்தமாக கழுவி விடவேண்டும். ஆண், பெண் இரு வரில் ஒருவர் மலம் கழித்துவிட்டு, தங்கள் உறுப்பை சுகாதாரமாக வை த்துக் கொள்ளாமலிருந்து, அந்த நேர த்தில் உடலுறவு வைத்துக் கொண் டாலும்… இந்த ஈ-கோலை பரவக் கூடும். அதேபோல… உடலுறவுக்கு ப் பிறகு, பிறப்புறுப்பை சுத்தம் செய் ய வேண்டும். அசதியாலோ அக்க றையற்ற போக்காலோ பலரும் அப் படியே உறங்கிவிடுகிறார்கள். அது தவறு. தாம்பத்தியத்தில் தொற் றுக்கு வாய்ப்பு ஏற்படாதபடி இயற்கையாகவே சில ஏற்பாடு கள் இருந்தாலும், இத்தகைய பாக்டீரியா பாதிப்புகளில் இருந்து தப் பிக்க… உறவுக்குப் பின்னர் சுத் தம் அவசியமாகிறது. வாழ்கைத் து ணை தவிர, மற்றவர்களுடன் உடலுறவு கொள்வதையும் தவிர் க்க வேண்டும். பாதுகாப்பான முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மொத்தத்தில், நம் உட லைச் சுத்தமாக வைத்துக் கொண் டால் யூ.டி.ஐ. தொல்லை நம்மை நெருங்கவே நெருங்காது!” என்றார் உறுதியுடன்.
  எப்படி வருகிறது ஈ-கோலை?
 உடலுக்கு கேடு விளைவிக்கும் ஈ-கோலை பாக்டீரியா எப்படி பரவுகிறது என மைக்ரோபயாலஜி நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம். ”ஈ-கோலை பாக்டீரியாக்களில் பல வகை இருக்கின்றன. ஒவ் வொரு பாக்டீரியாவும் ஒவ் வொரு விதத்தில் பரவும். மலத்தில் உள்ள ஈ-கோ லைகளில் உடலுக்கு பாதி ப்பு ஏற்ப டுத்த க்கூடி யவை அதிகம். குறிப்பாக… ஆடு, மாடுகளின் சாணங்களி லும் இந்த ஈ-கோலை பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். தமிழகம் உள்ளி ட்ட மாநிலங்களில் சாணத்தை சுகாதாரமற்ற முறையில் பயன் படுத்துவது சர்வ சாதாரணமாக நடக்கும். மிகச்சுத்தமாகக் கழுவிய பிறகே இதர வேலைகளில் ஈடுபட வேண்டும். இல்லையேல் அந்தத் தொற்று எளிதாக நடந்துவிடும்.
மேலை நாடுகளில் வேகவைக்காத காய்கறிகள், மாட்டுக்கறி மூலமாக ஈ- கோலை பாக்டீரியா பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. ஈ-கோலை பாதிப்பு ஏற்பட்ட உடன் எந்த அறி குறியும் தெரியாது. 24 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்தில் அதன் பாதிப்புகள் தெரியத் தொடங்கும். திடீர் வயிற்றுப்போக்கு வந்தால்… உட னடியாக மருத்துவர்களிடம் ஆலோ சனை பெறுவது நல்லது!” என்கி றார்கள் உஷார்படுத்தும் விதமாக.
உறவில் உஷார்!
உடல் உறவுக்குப் பிறகு பிறப்பு உறுப்புகளை சுத்தப்படுத்தும் அவசி யம் குறித்து செக்ஸாலஜி நிபுணர் நாராயணரெட்டியிடம் கேட்டோம். ”உறவுக்கு முன்னர் குளித்து சுத்தபத் தமாக இருப்பதுதான் மிக அவசியம். அதேசமயம், உறவுக்குப் பின்னர் பிற ப்பு உறுப்புகளில் இருக்கும் பிசுபி சுப்பால் பெரிதாக எந்தப் பிரச்னையும் உருவாகாது. காரணம், அவை நம் உடலுக்குள்ளேயே சுரக்கும் ஒன்று தான்.
ஆனால், சில மேலை நாடுகளில் மலம் வழியாக ஈ-கோலை பாக்டீரியாக்கள் பரவுவதாக தெரிய வந்திருக் கிறது. அதனால், இயற்கைக்கு முரணான உறவு கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு வனுக்கு ஒருத்தி என்கிற நெறிமுறைகளோடு வாழும் நம்நாட்டு கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் இதுகுறித்து அச்சப் படவே ண்டிய அவசியம் இல்லை!” என்றார் உறுதியாக.

No comments:

Post a Comment