Lord Siva

Lord Siva

Thursday, 8 December 2011

உங்களுக்கு ஏற்ற‌ பொறுத்த‍மான துணையை தேர்ந்தெடுக்க காமசூத்திரம் கூறும் ஆலோசனைகள்


நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையி ன் அடுத்த கட்டத்தைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள் ள வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் ‘லை ப் பார்ட்னர்’ அமைவதைப் பொறுத் தே உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்ப டுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவ ராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்? அவரைத் தேர்ந்தெடுப்பத ற்கு மனதளவில் நீங்கள் எப்படியெல் லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாமா?
இதோ உங்களுக்கான குறிப்புகள்:
* நான் திருமணத்திற்கு மன ரீதியாக வும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண் ணம் முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே உங்களுக்கு வாழ்க்கைத் து ணையைத் தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும்.
* உங்களது வாழ்க்கைத் துணை எப் படி இருக்க வேண்டும், என்ன வே லை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற் றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளி வாக இருக்க வேண்டும்.
* ஒருவருடைய கல்வி மற்றும் சம்பளம் இரண் டும்தான் தம்பதியரிடை யே ஈகோ பிரச்சினை ஏற்படக் காரணமாகிறது. எனவே உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத்து ணை எப்படிப்பட்ட கல்வித்தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
* வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள் உங்கள் ரச னையுடன் ஒத்துப்போகுமா என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம்.
* பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வர ப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படு கிறது. ஆனால் இவை எல்லாவற்றை யும் தாண்டி அவர் எப்படிப்பட்டவர், நமக்கு ஏற்ற துணையாக இரு ப்பாரா என்பதற்கு முக்கியத்துவம் கொடுங் கள். அப்படிப்பட்ட வாழ்க்கை தான் இனிமையாக இருக்கும்.
* உங்களுக்குப் பிடித்த மாதிரி பார்ப் பதற்கு வசீகரமாக இல்லாவிட்டாலு ம், ‘பரவாயில்லை’ என்று சொல்லும் அளவிற்காவது பார்க்க வேண் டும்.
* வாழ்க்கைத் துணை அழகாக இருந்து அவரிடம் நல்ல குணம் இல்லா விட்டால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே அழகை விட குண த்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை முதலில் உங்கள் பெற் றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்குப் பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால்தான் உங்கள் வாழ்க்கை யில் எந்த மன க் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
* நீங்கள் காதலராக இருந்தால் அப்போதே பொருத்தமான தேர்வு விஷ யத்தில் பாதி பிரச்சினை தீர்ந்தாக எண் ணிக் கொள்ளலாம். நல்ல அழகு, படிப்பு, நல்ல குணாதிசயம் போன்ற அனைத்து பொருத்தங்களும் காதலின்போதே தெரிய வருவதால் உங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்சினைக்கு பெரும்பாலும் வாய் ப்பில்லாது போய்விடுகிறது.
* என்னதான் இருந்தாலும் நீங்கள் 100 சத வீதம் எதிர்பார்ப்பது போன்ற வாழ்க்கைத் துணை கிடைப்பது கடினம். ஆதலால் நீங்கள் எதிர்பார்த்த அதிக பொருத்தங்க ளுடன் கூடிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப் பதுடன், அட்ஜஸ்ட் செய்யும் மனப் பக்குவத்தையும் வள ர்த்துக் கொள்ள வேண்டும்.
* நீங்கள் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைத் திருமணத்தி ற்கு முன்பே உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை யிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அதனால் திருமணத்திற்குப் பிறகு எந்தக் குழப்பங்களும் ஏற்படாது. நாம் மனம் விட்டுப் பேசுவதில் முக்கிய மான விஷயம், நம்மைப் பற்றிய எந்த விஷயத்தையும் மறைத்து விடாமல் சொ ல்லிவிடும்போது பிளாஷ்பேக் திருப்பங் களுக்கு வாய்ப் பில்லாது போய்விடுகி றது.
* நீங்கள் காதலராக இருந்தால் எதிர்காலத்தில் உங்களது வாழ்க்கைத் துணையின் இயல்பான குணத்தைக் கண்டுபிடிப்பது கடினம். உங்கள் வாழ்க்கைத் துணையின் நிஜ மான குறைபாடுகள் போகப் போகத்தான் தெரியவரும். வாழ்க்கையில் இணைந்த உடனேயே இவர்களின் இய ல்பானது வெளிப்பட்டு பல் வேறு பிரச்சினைகள் உருவா கும். இதுதான் காதல் திரு மணத்தின் தோல்விக்கு அடிப் படை.
* வாழ்க்கை பந்தத்தில் இவருடன் இணைந்தால் சரி வராது என மனதில் பட்டுவிட்டால் திருமணம் வரை போகாமல் முதலிலேயே பக்குவ மாக உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.
* நிச்சயதார்த்தத்திற்கு முன்பே உங் களது வருங்கால வாழ்க்கைத் துணையுடன் தொலைபேசி மூல மாகப் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற் படுத்திக் கொள்ளுங்கள். அதில் கண்ணியமாக உங்களது விருப்பு வெறு ப்புகளை அவருக்கு தெரியப்படுத்துங்கள். அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளையும் புரிந்துக் கொள்ளுங்கள்.
* உடை விஷயங்கள் சிலருக்குப் பிடி க்கும். சிலருக்குப் பிடிக்காது. உங்க ளது வாழ்க்கைத் துணை எந்த மா திரியான உடை உடுத்த வேண்டும் என்று நினைப்பதைப் பற்றி முதலில் பேசுங்கள். உடை கலாச்சாரத்தை மாற்றுவதற்கு பெரும்பாலும் யாரும் முன்வருவதில்லை. ஆனால் உங்க ளது விருப்பத்தை முதலிலேயே சொ ல்லி விடுங்கள்.
* உங்களுக்கு எந்தத் துறையில் விருப்பம் என்பதைப் பற்றியும், உங் களது லட்சியம் என்ன என்பது பற்றியும் பேசுங்கள். உங்களுக்கு உள் நாட்டு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைகளில் உள்ள விருப்பத் தைப் பற்றியும் பேசுங்கள்.
* ஜாதகம் பற்றிய நம்பிக்கை இருந்தால் அதில் தெளிவாக இருக்க வேண்டும். ஜாதகம் பார்க்காமல் திருமணத்தை முடித்துவிட்டு ஏதாவது பிரச்சினை வந்தால் ஜாதக பொருத்தம் சரியில் லை என முக்கி முன ங்கக் கூடாது. இப் படிப்பட்டவர்கள் ஜாதகத்தை முதலி லேயே பார்ப்பது நல்லது.
* சிலர் முதலில் பார்த்துவிட்டுப் பிடிக்காமல் அல்லது வேறு ஏதாவது காரணங்களினால் வேண்டா ம் என்று சொல்லிவிட்டு போ ய்விடுவார்கள். பின்னர் திரு ம்பவும் தொடர்பு ஏற்படுத்தி பேச்சுக்கு முன் வரலாம். இது பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே வேண்டாம் என்று சொல்லி விட்டால் கடைசி வ ரை அதைக் காப்பாற்ற வேண் டும்.
* பெண் பார்க்கச் செல்லும்போது நிறைய நண்பர்களை அழைத்துச் சென் று, ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி அவர் களுக்குப் பிடித்தால் தனக்கும் பிடித்த மாதிரி என்ற முடிவு எடுப்பதை விட் டு விடுங்கள். வாழப்போவது நீங்கள். எனவே உங்களுக்குப் பிடித்த மாதிரி தேர்ந்தெடுங்கள்.
* பெற்றோர் அல்லது மற்றவர் நிர்ப ந்தத்திற்குப் பணிந்து வாழ்க்கைத் து ணையைத் தேர்ந்தெடுக்க வேண்டா ம்.
* நீங்கள் திருமணத்திற்குத் தயாராகும் பொழுது உங்கள் ‘தொட்டால் சிணுங்கி’ குணத்திற்கு விடை கொ டுத்து விடுங்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க் கைத் துணையை தைரியமாக தே ர்ந்தெடுங்கள்.
* திருமணம் வேண்டாம் என்று சொல்பவர்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். ஏனெனில் அவர் களுக்கு சொல்ல முடியாத பிரச்சி னைகள், சில பலகீனங்கள் அல்லது திருமணத்தின் மீது தவறான நம்பிக்கைகள் இரு க்கும். எனவே அவர்களிடம் மனம் விட்டுப் பேசி அவர்களது கஷ்டங்களை அறிந் துக் கொள்ளுங்கள். உங்களால் தீர் க்க முடியாவிட்டால் கவுன்சலிங் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுங்கள்.
* திருமணத்திற்கு முன்பே உங்கள து வாழ்க்கைத் துணையின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர் களைப் பற்றிய விவரங்களைத் தெரி ந்துக் கொள்ளுங்கள்.
* உங்களது வாழ்க்கைத் துணை வேலைக்கு சென்று கொண்டிருந்தால், திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லலாமா, வேண்டா மா என்பதை முதலிலேயே தெரிவித்து விடு ங்கள். இப்படி செய்வதால் திருமணத் திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க் கலாம்.
* சிலர் அமைதியான சுபாவம் உடையவர்க ளாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்பொழு தும் குறைசொல்லும் அல்லது கோபப்படுகி ன்ற வாழ்க்கைத் துணை அமைந்து விடுவார்கள். இது திருமணத்திற்குப் பிறகு நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்ட சுபாவம் உடைய வர் என்பதை முதலில் தெரிந்துக் கொள் ளுங்கள். அதன் பிறகு உங்கள் திருமணத்துக்கு சந்தோஷமாய் சம் மதம் சொல்லுங்கள்.
இன்னும் என்ன யோசனை? உங்க ளுக்குப் பொருத்தமான துணையை சந்தோஷமாகத் தேர்வு செய்ய வே ண்டியது தானே.

No comments:

Post a Comment