Lord Siva

Lord Siva

Friday, 23 December 2011

ஆண், பெண் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்


பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்

சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒருவரின் அங்க அவயங்களை வை த்தே அவரின் குணநலன்களைப் பற் றிய விபரங்களைக் கண்டறி வது. இது பண்டை காலந்தொட்டு நமது இந்தியா வில் இருந்து வரும் பாரம்பரிய அறி வு… இதில் பெண்கள் பற்றிய சாமுத் ரிகா லட்சண குறிப்புகள் நமது பண் டைய கால இலக்கியங்கள், புராணங் கள், மற்றும் சாமுத்ரிகா லட்சண குறி ப்புகளில் ஏராளம்.
இதில் பிரதானமாக அமைவது மூக்கு ம் கண்களும்தான். கண்களு க்கு மட் டுமே 100 முதல் 120 குறிப்புகள் சாமுத்ரிகா லட்சணத்தில் சொல்ல ப்பட்டுள்ளது.
உருண்டையான கண்கள் உள் வாங்கிய கண்கள் அகண்டு விரிந்த கண்கள் என்பது போன்றவை சொல்லப்பட்டுள்ளது.
இதுபோன்றுதான் மூக்கின் அமைப்பும் சொல்லப்பட்டுள்ளது. மூக்கு கூர்மை யாக இருந்தால் எப்படி தட்டையாக இரு ந்தால் எப்படி என்று பிரதானமாகச் சொ ல்லப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக விரல் அமைப்பு களைப் பற்றி சொல்லப்பட் டுள்ளது.
நீண்ட விரல்கள் அதிர்ஷ்டத்தின் அடை யாளமாக சொல்லப்பட்டுள் ளது. மேலு ம் அறிவாளிகளாகவும் சமயோசித புத்தி உள்ளவர்களா கவும் இருப்பார்கள்.
கைகள் நீண்டு இருந்தாலும் சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. காமராஜர நேருவிற்கு எல்லாம் கை கள் நீண்டு கால் முட்டியை அவர்கள் கை தொடும் என்று சொல் வார்கள். நீண்ட விரல்கள் நீண்ட கைகளும் ராஜ யோகம் நாடாளும் யோகம் கொண்டது என்று சொல்வார்கள்.
காலின் கட்டை விரல் எந்த அளவிற்கு கனமாக இல்லாமல் இருக் கிறதோ அந்த அளவிற்கு நல்லது என்று சொல்வார்கள். கட்டை விரலின் தடுத்து உருண்டு காண ப்படுவதை விட மெல்லிய விரலா க இரு ப்பது நல்லது.
இரண்டாம் விரலை விட சற்று தடிம னாக கட்டை விரல் இருந்தா லே போதும் என்று சொல்கிறார்கள்.
கட்டை விரல் வலது பக்கமாகத் திரும்பி யிருக்கும் அதாவது வலது காலின் கட் டை விரல் வலது பக்கமாகவும் இடது கா லின் கட்டை விரல் நுனி இடது பக்கமா கவும் சற்று திரும்பியபடி இருப்பவர்கள் சூட்சும சக்தி கொண்டவ ர்களாக இருப்பார்கள். ஆவிகளை உணரக் கூடியவர்களாக இருப் பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
பெண் பார்க்கும் படலத்திற்கு இந்த சாமுத்ரிகா லட்சணம் மிகுந்த பலனளிப்பதாக இருக்கும். சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடு ம்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இரு ந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்து விடும் என்று சொல்லப்படுகிறது. இதை அனுபவ ரீதியாக வும் பார் த்துள்ளோம்.
கட்டை விரல் வளைந்து காணப்பட்டால் நன்மை என்று சொல்லி யிருக்கிறோம். ஒரு சில பெண்களுக்கு ஒரு..
காலின் கட்டை விரல் வளை ந்தும் மற்றொன்று வளையா மலும் இருக்கும். அப்படி இரு ந்தால் அந்த பெண்ணுக்கு இர ண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இரு க்கலாம் இல்லாமலு ம் இரு க்கலாம்.
கண் புருவம் மெல்லியதாக இருப்பதைத்தான் சாமுத்ரிகா லட்சண ம் பெருமையாக சொல்கிறது. சிலருக்கு கட்டையாக இருக்கும். அதை விட மெல்லிய புருவ அமைப்பு நல் லது என்று சொல்கிறது.
மேலும் பிரதானமாக கெண்டைக்கால் ப ருத்து இல்லாமல் இருப்ப து நலம் ஆணா க இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் அதிர் ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.
கை விரல்கள் நீண்டு இருந்தால் அவர்க ளிடம் கலை உணர்வு இரு க்கும்.
மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக் கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போ ன்ற யோகம் உண்டு. எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கியபடி இருந்தால் காம உணர் வு அதிகமாக இருக்கும் என்பார்க ள். ஒரு சில ருக்கு மூக்கின் நுனிப் ப குதி உருண்டு காணப்படும். அவர் கள் புத்தி சாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்து தல் துறையில் சிறந்து விளங் குவார்கள்.
சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர் கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொ டை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வு களை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள்.
மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப்பகுதி என மூன்று அமைப் பையும் வைத்து சொல்லப்படு கிறது. ஒரே சீரான மூக்கைக் கொ ண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்கு க் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.
ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மா திரி இருக்கும் நடுப்பகுதி வேறு மா திரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒ ரு மாதிரி இருக்கும். இவர்க ளுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும்.
வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறி க்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களு க்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக் கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இரு ந்தால் பிரணயாமம் வாசியாம் செய் பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ள லாம்.
அந்த மாதிரி மூக்கு அமைப்பு இரு ந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறி வும் திறன் கொண்டவர்களாக இருப் பார்கள் என்று சொல்வார் கள்.
கண்களை எடுத்துக் கொண்டால் உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ் டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திர ண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல…
மான் விழி என்று சொல்வார்க ள் மருளக் கூடிய பார்வை கொ ண்டவர்கள் கணவருக்கு ஏற்ற வராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்ட வராகவும் இருப்பார்கள். மரு ண்ட விழிகளில் சில அமைப்பு கள் உண்டு.
உருண்ட விழி அதிர்ஷ்டம் மரு ண்ட விழி கணவருக்கு நல்லதா க இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப் பார்கள்.
விழிகளை விட விழித்தி ரை ரொம்ப முக்கியம். வி ழித்திரை வெள் ளையாக இருக்கிறதா அல்லது மஞ் சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண் ட விழியின் பின்னணி வெ ள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.
சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாத வர்கள் என்று சொல்வார்க ளே… அதுபோல இருப்பார்கள்.
மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வா ழ்க்கையில் பெரிய ஏற்ற இறக் கங்களை சந் திப்பார்கள்.
விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இரு க்கும்.
வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார் கள். இசையில் ஆர்வம் இருக்கும்.
சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது.
உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சி றப்பாக இருக்கும்.
நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பை விட அதில் உள்ள கோடுக ளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இரு ப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அத ற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.
செவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இரு க்கவேண்டும். செவி குறுக குறு க மனநிலையும் குறுகி இருக் கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.
அடுத்ததாக முடியை எடுத்துக் கொண்டால் கோர முடி குடி யைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல் வார்கள்.
அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவ ர்களாக இருப்பார்கள்.
கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை கஷ்டப்படுத்துபவர்களா கவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பா ர்கள்.
ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மெ ன்மையாக இருக்கிறதோ அந்த அள விற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப கஷ்டப்படா மல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.
கடினமான மொரமொரவென்று இருக் கும் தலை முடி உள்ளவர்க ளுக்கு கஷ்ட ஜீவனம் இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமை யும்.
முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தை யில் யாராவது ஒருவர் இருக்க மாட்டா ர்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.
சேலை கட்டிய பெண்ணை நம்பினால் தெருவில் நின்று தவிப்பாய் என்று ஒரு சித்தர் பாடல் உண்டு.
சித்தர்கள் எப்போதும் சங்கேத பாஷையி ல் பேசக்கூடியவர்கள். எனவே சேலை கட்டிய என்பது சேலையைக் குறிப்பது அல்ல. சே லை என்பது மீனைக் குறிக்கும் சொல். மீனைப் போன்ற கண்கள் கொண்ட பெண்களை (அதாவது பரந்து விரிந்த) நம்பினால் என் பதுதான் அந்த பாடலின் பொருள்.
மேலும் உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப் பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.
சாமுத்ரிகா லட்சணத்தை வைத்து வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யலாமா?
ஒருவரது ஜாதகத்தை அது அவருடையதுதானா என்பதை தோ ற்றத்தை வை த்துப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

 ஆண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண குறிப்புகள்

1. தலை – ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந் தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் பு டைத்து இருப்பின் தரித் திரம்.
2. நெற்றி – அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற் றி அமைந்திருப்பின் ஞா னமும் செல்வமும் உ ண்டு. மிகச் சிறுத்திருப் பின் மூட னாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதி ர்ஷடம் உண் டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.
3. கண் – ஆண்களின் கண்கள் சிவந்து, வி சாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக் கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப் பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக் கும்.
4. மூக்கு-உயரமாய், நீண்டு, கூரிய முனை யோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர் ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்தி ரமாம்.
5. வாய் – அழகான,சிறிய வாய் உடைய வர்கள் புத்தி, சக்தி, கரு ணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்ப வர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..
6. உதடு – உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந் து, தடித்து இருப்பின் கபடம் நிறை ந்திருக்கும்.
7. கழுத்து – ஆண்களின் கழுத்து பரு த்தும், மத்திம உயரம் உடையதாக வும் இருப்பின் அதிர்ஷடமாம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாக வோ, நரம்புகள் தெரியும்படியோ இ ருந்தால் வறுமை யாம்.
8. தோள் – தோள்கள் இரண்டும் உய ர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ் ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண் டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த கா ரியம் முடியாது.
9. நாக்கு – நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நா க்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளி கள் இருப்பின் சொன் ன சொல் பலி க்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷ டமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந் தும் இருப்பின் தரித்திரமாம்.
10. பல் – மெல்லிய ஒடுக்கமான பற்க ளை உடையவர்கள் கல்வி மான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதி கம் வரும். வரி சை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்..
11. காது – காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங் கியிருப்பின் கபட தாரி.
12. கைகள் – நீளமான, சீரான பரு மன் உடைய கைளை உடையவ ர்கள் சிறப்பாக வாழ்வர். முழங் கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட் டையான கைகளை உடையவர் களை நம் புதல் கூடாது. கைப்பி ணைப்புகளில் மூட்டுகளில் ஓ சை எழுப்பி னால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தி யாசமாக இருப்பின் பாவிகளா க இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப் பின் செல்வந்தன் ஆவான்.
13.மணிக்கட்டு – மணிக்கட்டில் சதையிலி ருந்து கெட்டியாக இருப் பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்தி ரமின்றி இருந்தாலும், மடக்கும்போது சப் தம் வந்தாலும் தரித்திரமாம்.
14. விரல்கள் – கைவிரல்கள் நீளமாக இருந் தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திர மாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந் தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்தி ருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கை யின் நான்கு மூலைகளும் சம மான உயர த்தோடு தட்டையாக இருப்பின் அரசனா வான்.
15. மார்பு – ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாக வும், ஒன் றோடொன்று நெருங்கியும் இ ருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங் களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதி கம் இருக்கும்..
16. வயிறு – பானை போன்ற உருண்டையா ன வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண் டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற் றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.
17.முதுகு – சமமான முதுகைப் பெற்றவர் கள் எதிலும் வெற்றி பெறு வர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரமா கும்.
18. கால்கள் – கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.
19. கால்பாதம் – கால் விரல்கள் ஒன்றோ டொன்று நெருங்கி இருப் பின் புகழ் பெறு வான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அள வாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித் தனியே விலகி யிருந்தாலும் வறுமை வாட்டும்..

No comments:

Post a Comment