குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?
Posted on December 25, 2011 by muthukumar
நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு
பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப்
பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை.
பிறந்த
குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண்
களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான
இதய பாதிப்பு, சிறு நீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார ரீதி யாக
பின் தங்கிய நிலையில் இருந்தாலும், உடலில் எடை மற்றும் உயரம் குறைவாக
இருந்தா லும், கர்ப்ப காலங்களில் அதிகமா ன ரத்தப் போக்கு ஏற்பட்டாலும்,
அதிக வேலை மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்க ளாலும் குறைமாதக்
குழந்தைகள் பிறக்கின் றன.
ஒரே
பிரசவத்தில், ஒன்றுக்கு மேற்பட் ட குழந்தைகள் பிறக்கும் போதும் இது போன்ற
குழந்தைகள் பிறக்க வாய்ப்பு ள்ளது. ஆயிரம் கிராமிற்கு குறைவாக பிறக்கும்
குழந்தைகள், 27 முதல் 28 வாரங்களில் பிறக்கும் குழந்தைகளை ப் பாதுகாக்க
இங்குபேட்டர்,
வென்டிலேட்டர்
மற்றும் சர்பக்டென்ட் சிகிச்சைகளைப் பயன்படுத்தி உயிர் பிழைக்க வைக்க
முடியும்.இந்தக் கரு விகள் வெளிநாட்டிலிருந்து இறக்கும தி
செய்யப்படுபவை.குழந்தை பிறந்த வுடனேயே தாய்ப்பால் அருந்த முழுத் தகுதி
அடைகிறது. ஒருவேளை சிசேரியன் செய்த தாய்க்கு, தாய் ப்பால் உடனடியாக
கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் எவ் வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ,
அவ்வளவு சீக்கிரம் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
நாள் ஒன்றுக்கு எட்டு முதல் பத்து
முறை தாய்ப்பாலை கொடுப் பதால் மார்பகப் புற்று நோய் வரு வதற்கான
வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தைகள், பாலை
மட் டும் குடிக்காமல், காற்றையும் சேர்த்துக் குடிப்பதால் வாந்தி
ஏற்படுகிறது. அதிக பாலை அருந்துவதாலு ம், அருந்திய பால் உணவுப் பாதையில்
இரு ந்து மீண்டும் வாய்வழியே திரும்புவ தாலும் வாந்தி ஏற்படுகிறது. இதனால்
பயப்படத் தேவையில்லை, குழந் தைகளின் எடை குறையாது. ஆனால், தொடர்ச்சியாக
வாந்தி எடுத்தால் மரு த்துவரை அணுகி உணவுப் பாதை அடைப்பு மற்றும் மூளைக்
காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்து சிகிச்சை மேற் கொள்ள வே ண்டும்.
பிறந்த குழந்தைகள் தினமும் ஐந்து முறைக்கு மேல் மலம் கழிக் கும்.
சில குழந்தைகள் பால் குடித்தவுடன் மலம் கழிக்கும். ஒரு சில குழந்தைகள்
இரண் டு நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிக்கும். இவை அனைத்தும் இயற்கையான
செயலே. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 72 மணி நேர ம் மலம் கழிக்கவில்லை
என்றால், மருத்துவரின் அறிவுரைப்படி தைராய்டு பிரச்னை மற்றும் மலக்குடலில்
சுருக்கம் போன்ற பிர ச்னைகள் உள்ளதா என்பதை அறி ந்து சிகிச்சை தர
வேண்டும். பன் றிக் காய்ச்சலைத் தடுக்கும் பசு சீம்பால்..
பசுவின்
சீம்பாலைக் கொண்டு பன்றிக் காய்ச் சலை குணப்படுத்த முடியும் என்பது ஆராய்
ச்சி மூலம் தெரியவந்துள் ளது. மெக்ஸி கோவில் தோன்றிய பன்றிக் காய்ச்சல்
நோய் இன்று உலகம் முழு வதும் பரவி மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
இந்தியா வில் மட்டும் இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள் ளனர்.
உலகம் முழுவதும் 2000-க்கும் அதிகமானோர் பலியாகியு ள்ளனர்.
குஜராத்தில் 50 வருடகாலமாக பால் உற்பத்தியில் சிறந்து விளங்
கும் ஆனந்த் நகரில் நடந்த ஆய்வில் பசுவின் சீம்பால் மூலம் பன்றிக்
காய்ச்சலைக் குணப் படுத்த முடியும் என்று தெரிய வந்துள்ளது. ஆனந்த் நகர்
அமுல் நிறுவனமும், மும்பை யைச் சேர்ந்த பையோமிக்ஸ் நெட்ஒர்க் நிறு வனமும்
சீம்பாலை வைத்து ஆய்வு மேற்கொ ண்டது. சீம்பாலில் உள்ள கொழுப்புச் சத்தை
நீக்கிவிட்டு நோய் பாதித்த நபருக்கு அளிப்பதன் மூலம் பன்றிக் காய்ச்சல்
குணமா கிறது என்று இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து பையோமிக்ஸ் நிறுவனத் தலைவர் பவன் சர்மா
கூறுகையில் ‘‘கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பாலில் இருந்து, நானோ முறைப்படி
கொ ழுப்பை ஃபில்டர் செய்து எடுத்து விடுகிறோம். நானோ பெப்டைடு என்ற இந்தக்
கலவைக்கு ‘ராதா – 108’ என பெயரிட்டு இருக்கி றோம். இந் த திரவத்தை நோய்
பாதித்த வரின் வாயில் ஊற்றும்போது அது இதயத்திற்குச் சென்று உடலில் மற்ற
பாகங்களுக்கும் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணுகிறது’’
என்கிறார்.
கர்ப்பிணிகளே! மீன் சாப்பிடுங்கள்!கர்ப்பிணிப் பெண்கள் மீன் வ கை உணவுகளைச் சாப்பிட்டால், பிற க்கும் குழந்தைகளின் மூளை வளர் ச்சி நன்றாக இருக்கும் என மருத்துவ ஆய்வில் தெரிய வந் துள்ளது!
இங்கிலாந்து
நாட்டின் மெட்ரோபாலி ட்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய நல
வாழ்வு மையமும் இணைந்து, கர்ப்பிணிப் பெண்கள் குறித்த ஆய்வை மேற் கொண்டன.
இதற்காக 11 ஆயிரத்து 875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்
முடிவில் கர் ப்ப காலத்தில் மீன் வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டால், பிற
க்கும் குழந்தைகள் அதிக மூளை வளர்ச் சியுடனும், மூளை சம்பந் தமான நோய்கள்
தாக்காமலும் இருக்கும் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இந்த ஆய்வானது
கர்ப்பிணிகளி டமும், அவர்களுக்கு குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து நடத்தப் பட்டது.
அதில்,
கர்ப காலத்தின்போது அதிக மீன் உண வுகளைச் சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தை
கள் அதிக புத்திக்கூர்மையுடனும் அவர்களது கை மற்றும் கண் இணைந்து
செயல்படுத்தும் தகவல் தொடர்பும் மிகச்சிறப்பாக இருப்பதும்
தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குக் காரணமான ‘ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்’ மீன்களில் அதிகமாக இருப் பதுதான்.
கர்ப்பிணிப் பெண்களி ன் 32 வார கர்ப்பகாலத்தில் 340 கிராமிற்கு குறைவாக
மீன் உட் கொண்ட கர்ப்பிணிக் குழந்தைக ளின் புத்திக்கூர்மை சற்று குறை வாகவே
இருந்தது. அதே நேரம் குழந்தைகளின் உடம்பில் ‘ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்’ அள
வுக்கு அதிகமாக இருந்தால் குழ ந்தைகளின் புத்திக் கூர்மை மழு ங்கவும்
வாய்ப்புள்ளது! ஹீரோ டெர்மா பிக்மென்டோஸம் & புற ஊதாக் கதிர் களால்
வரும் தோல் நோய்
காலையில் வெளிப்படும் சூரிய வெளிச்சத்தினால் நமக்கு கால் சியம்,
‘வைட்டமின்-டி’ போன்ற சத்துக்கள் கிடைக்கின் றன. அதே சமயம், சூரிய ஒளியின்
மிகையான வெப்பத்தால், பல்வேறு நோய்க ளும் தோன்றுகின்றன. அப்படி ஏற்படும்
நோய் களில் ஒன்றுதான் ‘ஹீரோடெர்மா பிக்மென் டோஸம்’.
இந்த
நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் அமைப்பு சாதா ரண மனிதர்களின் உடல்
அமைப்பு போல் அல்லாமல் வேறுபட்டு இருக்கும். இது ஒரு அபூர்வ நோய். உடைகளால்
மூடப்படாத இட ங்களில்தான்
இதன் பாதிப்பு அதிகமாக இரு க்கும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்க
ளுக்கு முதலில் படிப்படியாக தோலின் நிறம் மாறும். பின்னர் முகம் மற்றும்
தோலின் கை கால்களில் அருவரு க்கத் தக்க வகையில், திட்டு த் திட்டாக
கரும்புள்ளிகள் தோன்றும். அதைத் தொடர்ந்து கொப்புளங்கள் ஏற்படும். இவை
கடுமையான வலியை ஏற்படுத்தும். சில நாட்களில் அவை மறைந்து, தோல் நலிவடைந்து
விடும். அப் போது, அந்தப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடையும்.
இந்த நிலையில் சூரிய ஒளி பட நேர்ந்தால், பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பகல் நேரத்தில் வெளிச்சத் தைப் பார்க்க முடியாமல் கண்களில் கூச்சம் எடுக்கும். இவர்களு க்கு
சூரிய ஒளி தாக்கத்தினால் கருவிழிப் படல த்தில் அழற்சியும் ஏற்படலாம். இந்த
ஹீரோ டெர்மா பிக்மென்டோஸம்’ நோயினால் பாதி க்கப்பட்டவர்கள் தங்களது தோலை
சூரிய ஒளி படாத வகையில் பாதுகாத்துக் கொள்ள வே ண்டும். மேலும், இரவு
நேரங்களில் மட்டுமே வெளியே வரவேண்டும். தோலில் புடைப்பு மற்றும் பாதிப்பு
உள்ள வர்களுக்கு சூரிய ஒளியில் இருந்து வெளியேறும் புற ஊதாக் கதிர் களால்
தோல் புற்றுநோய்கூட ஏற்படலாம்.
No comments:
Post a Comment