Posted on December 29, 2011 by muthukumar
ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன். டேஸ்டோ ஸ்டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண்,
பெண் இருபாலருக்குமே, இந்த இரண் டு ஹார்மோன்களும் சுரக்கும். ஆனா ல்
ஆண்களுக்கு டேச்டோஸ்டி ரோன் அதிகமாகவும், பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜென் அதிக
மாகவும் சுரக் கும்.
டீன்
ஏஜ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அபரிமிதமாக சுரக்கும், இது மிகவும்
இயல்பான விசயமே. இத னால் தான் டீன் ஏஜ் பருவத்தில், ஆண்களுக்கு மார்புகள்
சற்றே பெரி தாகும், முலைகள் வீங்கி காணப்படும். இது ஆறு மாதத்தில் இருந்து
இரண்டு வருடங்கள் வரை இருக்கும், பின்பு சரியாகி விடும். அதனா ல் டீன் ஏஜ்
பருவத்தில் உங்கள் மார்பகம் பெரிதானால் கவலைப்பட ஒன்று மில்லை.
உங்களுக்கு மார்பகம் பெரிதாகவே இருந்தாலோ, அல்லது இருபது வடக்கு மேல் மார்பகம் பெரிதானாலோ, இதற்கு வேறு காரணங் கள் உண்டு. அவை:
1. டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் நிரந்த ரமாகி விடுவது.
2.
உடல் பருமன். நீங்கள் குண்டா க இருந்தால், கொழுப்பு சத்து மா ர்புக்கு
அருகே தங்கி விடுகிறது. உங்களுக்கு ஹார்மோன் பிரச்ச னை இல்லாவிட்டாலும்,
கொழு ப்பு மட்டுமே சேர்ந்து மார்பகம் போல காட்சியளிக்கும்.3. குடிப்
பழக்கம்.
4. போதை மருந்து-கஞ்சா, ஹெராயின் போன்ற பொருட்களை உட் கொள்வது.
5. வேறு நோய்களுக்காக டாக்டர்கள் கொடுக்கும் மருந்துகள்.
–ரத்தக்கொதிப்பு, மன நோய், அஜீரணம் போன்றவைக்காக கொடுக்கப்படும் மருந் துகள்.
– தலைவலி, உடல்வலி, காய்ச்சலுக்காக நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள்.
– மூலிகை மருந்துகள் பலவற்றில் ஈஸ்ட் ரோஜென் ஹார்மோன் மறைந்துள்ளது.
– உடல் தசை வளர்வதற்காக (பாடி பில் டிங்) நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள், அல்லது ஊசிகள்.
6. ஈரல் நோய் (Cirrhosis)
7. சிறுநீரகக் கோளாறு.
8. தைராய்ட் சுரப்பிக் கோளாறு (இது தொண்டைக்கு முன்னால் இருக்கும் சுரப்பி)
9. விறைப்பை அல்லது பிராஸ்டேட் (Prostate) புற்று நோய்.
10.வயதாவதால் ஆண்மைச் சுரப்பி குறை ந்து போதல்.
ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. அதுவும் மார்பக வளர் ச்சி போலவே இருக்கும்.
ஆண்கள் மார்பகத்தால் வரும் பிரச்சனை கள்:
1.முலையில் வலி, அல்லது திரவம் வெளி யாதல்.
2. மற்றவர்கள் செய்யும் கிண்டல், கேலி போன்றவற்றால் மன உளைச்சல்.
3. இந்தப் பிரச்சனையினால், பெண்களை அணுகுவதில் பயம் ஏற்ப டுதல். மருத்துவரை அணுகுங்கள்:
* எது, எப்படியாக இருந்தாலும், வெட்கப்படாமல் மருத்துவரிடம் காட்டி செக்கப் செய்து கொள் ளுங்கள்.
*
இது டீன் ஏஜ் பருவத்தில் ஏற்பட்டால், மருத்துவர் கள் ஒரு 2-3 வருடங்கள்
பொறுத்து, திரும்ப வரச் சொல்வார்கள். இது அதற் கு மேலும் தொடர்ந்து
இருந்தாலோ, அல்லது வலி மற்றும் சீழ் வெளி யானாலோ உடனே மருத்துவரிடம்
திரும்பச் செல்லுங்கள்.
* நீங்கள் சாப்பிடும் மருந்துகளை ஆராய்ந்து பாருங்கள்.
*
நீங்கள் நடுத்தர வதில் இருந் தால், உங்களுக்கு வேறு ஏதும் நோய் இருக்கிறதா
என்று செக்கப் செய்துகொள்ளுங்கள். மற்ற நோய்களும், உங்கள் மார்பகம் வளரக்
காரணமாக இருக்கலாம். * குடி, மற்றும் போதைப் பழக்கம் இருந்தால், அவற்றைக்
கை விடவும்.
சிகிச்சை முறைகள்:
1. டீன் ஏஜ் பருவத்தில் நடந்தால், எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மன ரீதியாக ஆறுதல் கூறினாலே போதுமானது.
2. ஈஸ்ட்ரோஜென் சுரப்பதை தடுக்க நிறைய மாத்திரைகள் புழக்க த்தில் உள்ளன. உதாரணமாக Tamoxifen, Raloxifen போன்றவை.
3. அறுவை சிகிச்சை மூலம், மார்பகத்தை அகற்றுவது.
4. மன ரீதியான ஆறுதலையும், அரவணைப்பையும் குடும்பத்தின ரும், நண்பர்களும் கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment