Posted on December 04 2011 by muthukumar
‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை மட் டும்
சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை அலர்ஜி ஏற்படாமல் தவிர் த்து
விடுவது நல்லது!’’ என்கிறார் பிரபல ஆஸ் துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர்.
நரசிம்மன்.
‘‘நல்லவேளையாக
ஆண்களோடு ஒப்பிட் டால் பெண்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு
ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’
‘‘ஆஸ்துமா
எந்த வயதினருக்கும் வர லாம். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலே யே முடங்கிக்
கிடந்தார்கள். வெயிலும், தூசுயும் அதிகமில்லாத சூழல்… ஆனால் இப்போது அப்படி
இல்லை யே!… பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும் போகிறார்க ள். ஆண்களின் வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.
அதனால் ‘எக்ஸ்போஷர்’ அதிகமாகிறது. தூசும் மாசும் அதிகமான சூழல், டென்ஷன், வெளியுலக வேலை அழுத்தம், உடல் ரீதியிலா ன பல அசௌகர்யங்கள் என்று பல விஷ யங்கள் இதற்குக் காரணமாக அமைகின்ற ன.
சீயக்காயும் அலர்ஜியாகலாம்!
பெண்களுக்குத்
தலை முடி அதிகம் என்ப தால், அழுக்கும் தூசும் போகத் தலைக்குச் சீயக்காய்
பவுடர் பயன்படுத்தி தேய்த்துக் குளிப்பார்கள். அந்த சீயக்காய் பல பெண்க
ளுக்கு அலர்ஜிக்கு வழிவகுப்பதைப் பார்த்திருக்கிறேன். அதிலும் எளிதில்
அலர்ஜிக்கு ஆளாகிறவர்களாக இருந்தால் வேறு பிரச் னையே வேண்டாம்!…
தூசும் முக்கிய காரணம்
சிலருக்கு
சாதாரணமாக தின மும் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் போது கூட அந்த
தூசு வினால் அலர்ஜி ஏற்படும். தூசு மூக்கினுள் சென்றவுடன் தும்ம ல் வரும்.
சிலருக்கு ஒரு தும்ம லோடு நின்று விடும். சிலர் தொ டர்ந்து தும்மல்
போடுவார்கள். மூக்கிலிருந்து தண்ணீர் வழிய ஆரம்பிக்கும். அந்த அறிகுறிக
ளைத் தொடர்ந்து இருமல், வீஸிங் போன்ற தொல்லைகள் இருந்தால் நீங்கள் கவனமாக
இருக்க வேண்டும்.
சமையல் நெடியும் கூட!
அதேபோல்,
சமையல் செய்யும் போது வாணலியிலிருந்து கிளம்பு ம் நெடி கூட சிலருக்கு
அலர்ஜி ஏற் படக் காரணமாகிறது!… நீண்ட நேரம் அடுப்படியில் நிற்பது, தாளி
க்கும் போது உடனே மேலெழும் பும் வாசனை கலந்த புகை இவை யும் மூக்கில் ஒருவித
எரிச்சலை உண்டாக்கும். இதுவும் கூட அலர் ஜிக்கான காரணம்தான்.
மண்ணெண்ணெய்
அடுப்பு உப யோகிப்பவர்களுக்கும் புகை மூலம் பிசச்னை வரும். வாண
லியிலிருந்து கிளம்பும் நெடியை விட ஆபத்தானது இந்தப் புகை மண்டலம்.
அப்படியே, நுரையீரலில் போய்த் தேங்கிவிடும். இது கூட ஆஸ்துமா ஏற்படக்
காரணம்தான்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள் ளுங்கள்! ஆஸ்துமாவை குணமா க்க முடியாது!.. ஆனால் அந்த நோய் நம்மை பாதிக்காதபடி கட்டு ப்படுத்த முடியும். அதனால் முடிந் தவரை இந்த நோய் வருமுன்பே காப்பதுதான் நல்லது.’’ என்கிறார் டாக்டர் நரசிம்மன்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள் ளுங்கள்! ஆஸ்துமாவை குணமா க்க முடியாது!.. ஆனால் அந்த நோய் நம்மை பாதிக்காதபடி கட்டு ப்படுத்த முடியும். அதனால் முடிந் தவரை இந்த நோய் வருமுன்பே காப்பதுதான் நல்லது.’’ என்கிறார் டாக்டர் நரசிம்மன்.
பெண்களுக்கு ஒரு வித்தியாசமா ன காரணம்….
‘‘பெண்களுக்கு
ஆஸ்துமா ஏற்பட அவர்களின் உடல்சார்ந்த கார ணமும் ஒன்று. அதில் முக்கியமானது
Atopy எனப்படும் ஒவ்வா மை இயல்பு!’’ என்கிறார் அலர்ஜி_ஆஸ்துமா நிபுணர்
டாக்டர் கே.ஏ. மோகனதாஸ்.
‘இந்த
ஒவ்வாமை இயல்புடைய பெண் களுக்கு மகப்பேறு கால த்தில் ஆஸ்துமா ஏற்பட அதிக
வாய்ப்பு உண்டு. இவர்களில்கூட மூன்றில் ஒருÊ சதவீத பெண்களுக்குத்தான்
குழந்தை பிறந்த பின்பு ஆஸ்துமா வின் கடுமை குறையலாம். ஆனால் கர்ப்பம்
தரிக்கும் போது முதல் முறையாக உண்டாகும் ஆஸ்துமா மறுமுறையும் வரத்தான்
வாய்ப்பு கள் அதிகம்!
பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் நவீன கஷ்டங்களான பரபரப்பு, வேலைப்பளு போன்றவற்றாலும், மன அழுத்தம், உணர்ச்சி வசப் படுதல்
போன்ற காரணங்களாலும் பல பெண்கள் மறுபடியும் இந்த அலர்ஜி ஆஸ்துமா
தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்! ’’ என்கிறார் டாக் டர் மோகனதாஸ்.
‘‘ஆஸ்துமா
நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அதை வெளி யில் சொல்வதில்லை. இது தவறு.
சிலர் தங்களுக்கு வந்திருப்பது ஆஸ்துமாவே அல்ல என்று ‘அண் டர் எஸ்டிமேட்’
பண்ணியிரு ப்பார்கள். இதுவும் தவறு. நோய் க்கான அறிகுறிகள் தெரிந்தால்
தாமதிக்காமல், உடனே டாக்டரிடம் போய்விட வேண்டும்.
எப்படி டெஸ்ட் செய்து கொள் வது?
எப்படி டெஸ்ட் செய்து கொள் வது?
உங்களுக்கு
ஆஸ்துமா இருக் கும் அறிகுறிகளை நீங்கள் உணரும் பட்சத்தில் அதை முறைப்படி
டெஸ்ட் செய்து கொள்ள நவீன பரிசோதனை கள் நிறைய வந்துவிட்டன. ‘இன்ஜெக்ஷன்
இம்யூனோதெரபி!’ என்ற டெஸ்ட் எந்த வயதின ருக்கும் செய்யலாம்.
‘பல்மோனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ என்ற பரிசோதனையின் மூலமும் ஆஸ்துமாவைக் கண்டறியலாம்.
என்ன சிகிச்சை எடுத்துக் கொள்வ து?
மருந்துகள்
உபயோகிப்பதை விட கருவிகள் பயன்படுத்தி ‘ஆஸ்து மா’வை சுலபமாக கட்டுக்குள்
கொ ண்டு வரலாம். முடிந்தவரை எந்த விதமான இன்ஃபெக்ஷனும் ஏற்படா மல்
பார்த்துக் கொள்ள வேண்டும். அநாவசிய மனபயம், பரபரப்பு போ ன்றவை
அலர்ஜிக்குக் காரணமாகிவிடும். அதனால் தவிர்க்கலாம்.
ஸ்டீராய்டு இன்ஹேலர்கள் நல்ல பயன் தருபவை. மாத்திரைகள், கேப்ஸ்Êசூல் என்று நேரடியாக உட்கொள்வதை விட, இந்த இன் ஹேலர்கள் நல்லது.
இன்ஹேலர்களில்
பல வகை… ரோட்டோஹேலர், அக்யூஹேலர், டயோஹேலர், நெபுலைஸர் என்று இருக்கின்றன.
இவற்றில் ரோட்டோ ஹேலரில் உலர்ந்த நிலையிலேயே மருந்தை (DRY POWDER)
வைத்துப் பயன்படுத்த முடியும். மாத்திரை கள் உடனடியாக பலனைத் தராது
என்பதால், இந்த இன்ஹேலர் முறை யே சிறந்தது.
கவனியுங்கள்…
அலர்ஜிக்கான பரிசோதனை என்பது ஆஸ்துமா தடு ப்பு முறைகளில் முக்கியமானது!
எந்த வகையான அலர்ஜி என்பதை வைத்தே நோயின் தீவிரத்தை அறியலாம்.
தக்காளி,
எலுமிச்சை, வேர்க்கட லை, பச்சைப் பயிறு உள்ளிட்ட உணவு வகைகளால் கூட அல
ர்ஜி ஏற்படலாம். இதனால் ஆஸ் துமா ஏற்பட்டிருக்கிறதா என்ப தை இந்தச் சோதனை
மூலம் கண்டுபிடித்து விட முடியும்.
ஆஸ்துமாவை
கட்டுக்குள் வை த்திருப்பது முக்கியம். அதற்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்
வதும் நல்ல பலன் தரும். கடுமையான பயிற்சிகள் அவசிய மில்லை. யோகாவுடன்
கூடிய பயிற்சி நல்லது.
முடிந்தவரை தூசிக் காரணிகளிடமிருந்து விலகியே இருங்கள்.
எங்கெங்கே தூசுகள் இருந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்?
எங்கெங்கே தூசுகள் இருந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்?
டி.வி.யிலும்,
அதன் ஸ்டாண்டு களிலும் அடிக்கடி தூசு பரவி நி ற்கும். ஏ.சி. ஃபில்டர்களில்
தூசுப் படலங்கள் படிந்திருக்க லாம். தலை யணைகளில் கூட தூசுப் பூச்சிகள்
(DUST MITES) இருக்கும். இவை கண்களுக்குத் தெரியாது. தூங்கும் போது
மூக்கின் வழியே உள்ளே சென்று அல ர்ஜியை ஏற்படுத்தும். அதனால் அவ்வப்போது
தலையணை உறை யை சுத்தம் செய்வது அவ சியம்.!
முக்கியமாக…
எக்காரணம்
கொண்டும் டா க்டரின் அட்வைஸ் இல்லா மல் நீங்களாகவே மருந்து எடுத்துக்
கொள்ளா தீர்கள். காரணம்… மாத்திரை யின் அளவும், வீரியமும் உங்க ளுக்குத்
தெரியாது என்பதுதான்.
உங்கள்
வீட்டிலுள்ளவர்கள் யாருக்கேனும் ஆஸ்துமா இருந்தால், முதலிலேயே நீங்களும்
‘செக்அப்’ செய்து, உங்களுக்கு அலர்ஜி ஆஸ்துமா இல்லை என்பதை உறுதி செய்து
கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment