Posted on December 25, 2011 by muthukumar
வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்ற லும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. இந்தியாவில் இது இயல்பாக
வளர்ந்து காணப்படு வதுடன் காலங்காலமாக மரு த்துவம் மற்றும் ஆன்மிக முக்
கியத்துவம் பெற்று விளங்கு வதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய
முற்பட்டதன் விளைவா க, ஆச்சரியமூட்டும் உண்மைகள் கண்டறியப்பட்டு ள்ளன.
இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள், தானியக் கிடங்
கில் உள்ள பூச்சிகளை கட்டுப் படுத்த வல்லவை. இப் பட்டையில் உள்ள இரண்டாம்
நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், வீட்டு ஈ மற்றும் கடுகு வண்டு
ஆகியவற்றுக்கு எதிரான தன் மைகளை கொ ண்டுள்ளது. இதேபோல் கொசு விரட்டும் திறனும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
வில்வ
விதைகளில் இருந்து பெட்ரோலியம் ஈதரைப் பயன்படுத்தி எண்ணெய் பிரித்து
எடுக்கப்பட்டது. இதனை ஆய்வகச் சூழலில் வன மர இலை உண்ணிகளுக்கு எதிராக
பயன்படுத்திப் பார்த்ததில், சாதகமான
விளைவு கள் காணப்பட்டன. பின்னர் இதனை ஆய் வகம் மற்றும் நாற்றங்
கால்களிலும் சோதிக் கப்பட்டது. அதற்குப் பி றகு தமிழகம் மற்றும் கேரளா
மாநிலங்களில் தனித்தனியே புறச்சோ தனைகள் செய்யப்பட் டன. இவற்றின் ஆய்வு
முடிவுகள் மூலம் வில்வ விதைகளில் இருந்து பிரித்து எடுக்கப் பட்ட
எண்ணெய்,தேக்கு நாற்றுகளைத் தாக்கி அழிக்கும் இலையு ண்ணிகளுக்கு எதிராக
செயல்படும் திறன்மிகுந்த உயிர்ம பூச்சிக் கொல்லியாக பயன்படுத்த வல்லது என
கண்டறியப்பட்டது. குறி ப்பாக தேக்கு செடிகள் மற்றும் இள மரங்களைத் தாக்கும்
இலை யுண்ணி பெருத்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக் கூடியது.
நாற்றங்கால்களிலும் இளவயதுஉடைய மரங்களிலும் முற்றிலு மாக இலை களைத்
தின்றுவிடும் அபாயம் உள்ளது. இவை மரங் களைக் கொன்றுவிடுவதில்லை. மாறாக,
மரத்தின் வளர்ச்சி விகித த்தைக் கடுமையாக பாதிக்கிறது. அனைத்து தேக்கு
தோப்புகளை யும் தாக்கும் வல்லமை கொண்டவை இவை. ஒரு ஆண்டில் எப்போது தாக்
கும் என ஊகித்து அறிய இயலாதவை. சராசரியாக இலையுண்ணி களால் ஏற்படும் சேதாரம்
ஒரு மரத்திற்கு 5.23 கன அடி என கண் டறியப்பட்டு உள்ளது. மொத்த வெட்டு மர
அளவில் 30-40” இழப்பு ஏற்படுத்தக் கூடியது. எனவே இந்த இலையுண்ணி களை
கட்டுப்படுத்துவது மர சாகுபடியாளர்களுக்கு இருந்துவரும் மிகப்பெரிய சவா
லாகும். இந்நிலையில் இந்நிறுவனத்தில் வில்வ உயிர்ம பூச்சிக்கொல்லி
கண்டறியப்பட்டது இதற்கு ஒரு வரமாக வாய்க்கப் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment