Lord Siva

Lord Siva

Monday, 12 December 2011

இராமு சீத்தாப்பழம்

Posted On Dec 12,2011,By Muthukumar
கழுத்து, தலை, மேல் முதுகு போன்ற பகுதிகளில், பழுப்பு கொழுப்பு காணப்படுகிறது. பிற இடங்களில், வெள்ளை கொழுப்பு அதிகம் காணப்படுகிறது. பழுப்பு கொழுப்பானது, உடலுக்கு நன்மை செய்யக்கூடிய தசையுடன் இணைந்து செயல்படுகிறது. ஆனால், வெள்ளை கொழுப்பு, அவ்வாறு இல்லாததால் உடலில் சேகரிக்கப்பட்டு, பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இராமு சீத்தாப்பழம்
கற்கால மனிதர்கள், விலங்குகளை கொன்று, தீயில் வாட்டி உண்டு, தங்கள் பசியை நீக்கிக் கொண்டனர். நாகரிகம் வளர வளர, உயிர்க் கொல்லாமை, சைவ உணவுகளின் நன்மை ஆகியவற்றை புரிந்து கொண்ட மனித இனத்திற்கு, சைவ உணவுகளின் மேல் நாட்டம் ஏற்படத் தொடங்கியது. நாம் உண்ணும் கொழுப்பு சார்ந்த உணவுகள், நமது ஆற்றலை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளன. நமது உடலில் வெள்ளை கொழுப்பு மற்றும் பழுப்பு கொழுப்பு காணப்படுகிறது. நமது மொத்த எடையில், ஏறத்தாழ, 25 சதவீதத்தை, தேவையற்ற வெள்ளை கொழுப்பு ஆக்கிரமித்துள்ளது.
நமது உடல் வளர்ச்சிக்கும், இன்சுலினை பயன்படுத்துவதற்கும், உடலுக்கு தேவையான ஆற்றலை சேமித்து வைத்து, நமது உடலின் வெப்பம் வெளியேறாமல் பாதுகாப்பது, வெள்ளை கொழுப்பின் வேலையாகும். ஆனால், நமது உடலில், ஆற்றலை உற்பத்தி செய்யவும், இரு ம்புச் சத்து மற்றும் ஆக்சிஜனை சேகரித்து வைத்து, வெப்பத்தை வெளியேற்றவும், பழுப்பு கொழுப்பு உதவுகிறது. குழந்தை பிராயத்தில், நமக்கு பழுப்பு கொழுப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால் தான், சிறிய குழந்தைகளின் உடல், சற்று உஷ்ணமாக உள்ளது. வயது அதிகரிக்கும் பொழுது, பழுப்பு கொழுப்பின் அளவு குறைந்து, வெள்ளை கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.
கழுத்து, தலை, மேல் முதுகு போன்ற பகுதிகளில், பழுப்பு கொழுப்பு காணப்படுகிறது. பிற இடங்களில், வெள்ளை கொழுப்பு அதிகம் காணப்படுகிறது. பழுப்பு கொழுப்பானது, உடலுக்கு நன் மை செய்யக்கூடிய தசையுடன் இணை ந்து செயல்படுகிறது.
ஆனால் வெள் ளை கொழு ப்பு, அவ்வாறு இல்லாததால் உடலில் சேகரிக்கப்பட்டு, பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
அசைவ உணவுகள், வறுக்கப்பட்ட உணவுகள், வெள் ளை கொழுப்பை அதிகரிக்கின்றன. ஆகையால், கொழுப்பை கட்டுப்படுத்த, சைவ உணவுகளை பயன்படுத்துவது நல்லது.
பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள், சத்துவ குணத்தையும், பயறு மற்றும் தானியங்கள் ராஜ குணத்தையும், அசைவ உணவுகள், எண்ணெய் பொருட்கள், தமோ குணம் என்னும் மிருக குணத்தையும் கொண்டுள்ளன. ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் அமைதியான வாழ்க்கை வேண்டுமெனில், சைவ உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது.
வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி மூலகங்கள் தாவர உணவுகளிலும் உள் ளன. பல்வேறு வகையான வைட்டமின்களையும், கொழுப்பை கரைக்கும் ஆற்றலையும் உடைய பழங்களில், குறிப்பிடத்தக்கது இராமு சீத்தாப்பழம். அனோனா ரெட்டிகுலேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனோனேசியே குடும்பத்தைச் சார்ந்த, சிறிய மரங்களின் பழங்களே, இராமு சீத்தாப்பழங்கள் என அழைக்கப்படுகின்றன.
இதன் விதைகளுக்கு நச்சுத்தன்மை இருந்தாலும், பழங்களிலுள்ள பிளேவனாய்டுகள் மற்றும் அசிட்டோஜெனின்கள், உடலில் தேவையற்று வளரும் வெள்ளை கொழுப்பை நீக்கி, துர்மாமிச வளர்ச்சியை கட்டுப்படுத்தி, கொழுப்பு செல்களின் பரிணாம மாற்றத்தால் ஏற்படும் புற்றுநோயையும் கட்டுப் படுத்துகின்றன.
இராமு சீத்தாப்பழங்களின் மேற்தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் சதையை, தயிருடன் கலந்து சாப்பிட்டுவர, உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். கொழுப்புச் சத்தினால் தோன்றிய உடற்பருமன் குறையும். இராமு சீத்தாப்பழத்தை, நாட்டுச்சர்க்கரை மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சர்பத் போல் செய்து, வாரம் இரண்டு முறை குடித்துவர, கொழுப்பு நன்கு கரையும். இராமு சீத்தாப்பழம் மற்றும் நேந்திரப்பழத்தை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஒன்றாகக் கலந்து, தயிர் சேர்த்து சாப்பிட்டு வர தேவையற்ற கெட்ட கொழுப்பான வெள்ளை கொழுப்பு நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும். உடல்பலம் அதிகரிக்கும். அசைவ உணவுகளை தவிர் க்க, அவ்வப்போது சீத்தாப் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

No comments:

Post a Comment