Posted On Dec 03,2011,By Muthukumar
இன்று
உலகெங்கும் வயாக்ராமயம். சர்வம்சக்திமயம் என்பது பொய். சர்வம் வயாக்ராமயம்
என்பது மெய் என்றாகி விட்டது. இன்று வயோதிகர்கள் வயாகரா சாப்பிட்டு
வாலிபனாகி வருகிறார்கள். இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக அதிக விலைக்கு
விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன் படுத்துகிறார்கள். அறிவாளிகள்.
வயாகராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும் அற்புத மருந்துகள் நம் இந்திய
மருத்துவத்தில் உண்டு. அதே நேரத்தில் வயாக்ரா உடலை மோசமாக்கி உயிரையும்
போக்கிவிடுகிறது. ஆனால் இந்திய மருந்துகளோ எவ்வித பக்க விளைவையும்
ஏற்படுத்தாது. ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து வைக்கிறது.
இதுவே இந்திய மருத்துவ முறையின் அற்புதம். இந்தியாவில் விளைந்த பாசுமதி,
மஞ்சள் இன்னும் பல மூலிகைகளுக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடிவருவதுபோல்
நமது ஆயுர்வேத மருந்தான அமுக்கரா கிழங்கையும் அமெரிக்கா திருடி விட்டது.
அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள்
அனைவருக்கும் தெரியும். அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து
அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து
அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும். அமுக்ரா சூரணம், மாத்திரை மற்றும் அமுக்ராவை முதன்மையாக வைத்து மற்ற கடைசரக்குகளுடன் சேர்த்து லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். அதனை பயன்படுத்தி எப்பேர் பட்ட ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல்லற வாழ்வில் வெற்றியடைய வைக்கும். செலவும் மிகவும் குறைந்தது.
மனிதன் நீடித்த ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வைத்திருக்க காரணமான மருந்துகள் உண்டு. இந்திய மருத்துவத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அமுக்ரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும் தேவையில்லை என்பது தேரையர் வாக்கு.
……காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே என்கிறார் தேரையர்.
அதுமட்டுமல்ல திரிபலாசூரணம் என்று ஓர் அற்புத சூரணம் உண்டு. அதனை இரவில் மட்டும் பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டு பின் பசும்பால் உண்டு வர 21 நாட்களில் அபாரமான சக்தி பெற லாம்.
கருவேலம்பிசினை சுத்தமாக்கி பொடித்து நெய்யில் பொரித்து எடுத்து சாப்பிட்டுவர விந்து இறுகும். அதைப் போலவே ஆலம்பிசின், முள்இலவம் பிசின், முருங்கை பிசின் போன்றவை களும் அற்புத சுகத்தை அளிக்கும். ஆனால் இம்மூன்றையும் குறிப்பிட்ட அளவு தண்ணீரில் 12 மணிநேரம் ஊற வைத்து பின் வடித்து அந்நீரை அருந்தி வர வேண்டும்.
நமது இந்திய மருத்துவத்தில் அமுக்ராவுடன் உடலுக்கு வலிமையூட்டும் மற்ற கடைச்சரக்குகள் சேர்க்கப் படுவதால் நம் ஆயுளை வளர்க்கிறது. ஆனால் அமெரிக்க வயாக்ராவில் எதை எதையோ எப்படியோச் சேர்த்து நம் உயிரை எடுத்துவிடுகிறது.
No comments:
Post a Comment