Posted On Dec 26,2011,By Muthukumar
செக்ஸ் ஒரு அடிப்படைத் தேவை. ஆனால், நாம் மிருகங்கள் அல்ல; நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கண்ணில்பட்ட நபருடன் உடல்உறவு கொள்ள. புத்துணர்ச்சி கிட்டுமா என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது. சிலருக்கு சுய இன்பம் தவறு என்ற சமுதாய கண்ணோட்டத்தால் மனச்சோர்வு ஏற்படலாம். தவறு அல்ல என்று உறுதியாக நம்பும் பட்சத்தில் மனச்சோர்வு வெளியேற்றப்படுமா என்பதுவும் நமது கண்ணோட்டத்தை பொறுத்ததே. உணவு உட்கொண்டு பசியாறிய நிலை ஏற்படலாம். எத்தனை நாட்களுக்கு
ஒருமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது.
பிரிட்டன் பெண்களிடம் அதிகரிக்கும் பழக்கம்
பிரிட்டனைச் சேர்ந்த 10 பெண்களில் 9 பேர் தாங்களாகவே பாலுறவு இன்பம் (சுய இன்பம்) அனுபவித்துக் கொள்வதற்கு நேரம் ஒதுக்கிக் கொள்வதாக தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
18 முதல் 30 வயதுடைய சுமார் ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் பாலுறவு செய்கைகள், பழக்க வழக்கங்கள், விருப்பம் உள்ளிட்டவை கேட்டறியப்பட்டது.
இதில், கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவு பெண்கள் தாங்களாகவே இன்பம் அனுபவிப்பது தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் மூன்றில் 2 பங்கு பெண்கள் வாரத்திற்கு 3 முறையும், லண்டனில் வாரத்திற்கு 4 முறையில் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவதும் தெரிய வந்திருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இப்படிச் செய்வதால் பெண்கள் தங்கள் துணையுடன் பாலுறவு கொள்ளும் போது தன்னம்பிக்கை ஏற்படுவதாக அவர்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment