Lord Siva

Lord Siva

Friday, 23 December 2011

முகப்பருவா..?

Posted On Dec 23,2011,By Muthukumar
அழகு என்பது உள்ளத்தின் வெளிப்பாடு என்கின்றனர் முன்னோர்கள்.  ஒரு மனிதனின் செயல்பாடுகள் அதாவது மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், சோம்பல், சலிப்பு இவை அனைத்தும் முகத்திலே தெரியவரும்.  அதுபோல் அகம் என்னும் உடலின் உட்பகுதியில் பாதிப்பு ஏதேனும் உண்டானால் அது முகத்தில் பிரதிபலிக்கும்.
உதாரணமாக ஒருவருக்கு மலச்சிக்கல் இருந்தால் அதன் வெளிப்பாடு முகத்தில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு வெளிப்படும்.  அதுபோல் புறச் சூழ்நிலை மாறுபாட்டினாலும் உடல் மற்றும் சருமம் பாதிப்படையும்.
ஆகையால் முகம் மற்றும் சரும பாதுகாப்பு அனைவருக்கும் அவசியமாகிறது.  இதனால்தான் அழகு நிலையங்கள் நோக்கி ஆண்களும், பெண்களும் படையெடுக்கின்றனர்.
சிலர் ரசாயனக் கலவைகளை முகப்பூச்சுகளாகப் பயன்படுத்துகின்றனர்.  இது தற்காலிய நிவாரணமே யொழிய நிரந்தரத் தீர்வல்ல.  காலப்போக்கில் இவை எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கிவிடும்.
முகப்பரு
வளரும் இளம் ஆண், பெண் இருபாலரையும் மிகுந்த உளைச்சலுக்கு ஆட்படுத்துவது இந்த முகப்பருதான்.  உடலில் சேரும் கொழுப்புச் சத்துக்களின் அலர்ஜியால் இந்நிலை ஏற்படுகிறது.  இதன் முக்கியக் காரணங்களில் மலச்சிக்கலும் ஒன்று.
முகப்பரு உள்ளவர்களுக்கு
முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும்.  பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது.  மெல்லிய பருத்தித்துணியைப் பயன்படுத்த வேண்டும்.
சோற்றுக்கற்றாழை    - 1 துண்டு
செஞ்சந்தனம்    - 5 கிராம்
வெள்ளரிக்காய்    - 2 துண்டு
சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து காய்ந்த பிறகு இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறி முகம் பளிச்சிடும்.
காரட்        - 2 துண்டு
பாதாம் பருப்பு    - 2
தயிர்            - 1/2 கப்
இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் பூசி காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறுவதுடன் முகச் சுருக்கம் நீங்கும்.
ஆலிவ் எண்ணெயுடன் சந்தனம் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.
பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.  பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.
அவரை இலையைப் பறித்து நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து அதனைக் கசக்கி முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் நாளடைவில் மாறும்.
புதினா இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெறுவதுடன் முகப்பரு தழும்புகள் மாறும்.

No comments:

Post a Comment