Posted on December26, 2011 by muthukumar
வயதானவர்களைத் தாக்கும் நோய்களு ள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக் கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லா மை, உடலில் தோன் றும் ரசாயன மாற் றங்கள், இள வயதில் உடற்பயிற்சி செ ய்யாமை போன் றவையும் மூட்டு வலி க்குக் காரணமாக அமைகின்றன.
நன்கு நேராக நிமிர்ந்து உட்கார, நிற்கப் பழக வேண்டும். நிற்கும் பொழுது பாதங் களை
சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்க ளை சரியான
நிலையில் வைப்பதாலு ம் முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட் காருவதிலும்
நல்ல பலன் கிடைக்கும்.
‘‘ஹை ஹீல்ஸ்’’ காலணிகளைத் தவிர் க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
நடக்கும்போதும் உடற்பயிற்சி செய்யும் போதும் அதற்கென உள்ள காலணிகளை ப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒரு முறை காலணிகளை மாற்ற வேண்டும்.
எந்த
வேலையையும் ஒரேயடியாகச் செய் யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்ய லாம்.
அலுப்புத் தோன்றாமலிருக்க தங்க ளுக்குப் பிடித்த பாடல்களை இசையைக்
கேட்டுக் கொண்டே வேலை செய்யலாம்.
வலியின்
தன்மை, வலி கூடும் குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக்
கொள்ளும் மாத்திரைகள் போன்ற வற்றை மருத்துவ ரிடம் செல்லும் போது தெரிவிக்க
வேண்டும்.
நிம்மதியான தூக்கம், உடலை அமைதியாகவும் தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும்போது மூட்டு களும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேரம் வரை தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உண வுக்குப் பின் 10,20 நிமி டங்கள் ஓய்வெடுப்பது மூட்டுவலியை நன்கு குறைக்கும்.
நிம்மதியான தூக்கம், உடலை அமைதியாகவும் தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும்போது மூட்டு களும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேரம் வரை தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உண வுக்குப் பின் 10,20 நிமி டங்கள் ஓய்வெடுப்பது மூட்டுவலியை நன்கு குறைக்கும்.
அசைவ
உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழ ங்களைச் சேர்த்துக் கொ ள்ள வேண்டும்.
கால் சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவை க்கு ஏற்ப எடுத்துக்
கொள்ளலாம்.
உடற்பயிற்சி தசைகளை வலிமைப் படுத்துகி றது. எளிமையான உடற் பயிற்சிகளை மேற்கொ ண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.
No comments:
Post a Comment