Lord Siva

Lord Siva

Friday, 23 December 2011

சூர்ய நமஸ்காரத்தில் உள்ள‍ பல்வேறு விதமான ஆசன வகைகள்

சூர்ய நமஸ்காரத்தில் உள்ள‍ பல்வேறு விதமான ஆசன வகைகள்

யோகம் என்பது ஐந்து வகைப்படும். அவை கர்மயோகம், பக்தியோகம், ஞாநயோகம், ராஜயோகம், மந்திர யோகம் எனப்படும். இவ ற்றுக்கும் இங்கே நாம் பார்க்கப் போகும் யோ காசனப் பயிற்சிக்கும் வேறுபாடு உண்டு. மேற்சொன்ன யோகங்களை நாம் பயில இந்த யோகாசனப் பயிற்சியே அடிப்படையாகச் செயல்படுகிறது. யோகாசனப் பயிற்சிகளால் நம் மனம் ஒருமுகப்படும். மன அமைதியும், மனக்கட்டுப்பாடும் ஏற்படும்.
சூர்ய நமஸ்காரத்திலேயே பல்வேறு விதமான ஆசன வகைகள் வந்து விடும். எனினும் இப்போது நாம் பார்க்கப் போவது அவற்றின் பத்து நிலைகளே.
முதல் நிலை: எப்போது யோ காசனப் பயிற்சி செய்தாலும் கீ ழே ஒரு பாயைப் போட்டுக் கொள்வது நல்லது. பூமியில் எதுவும் போடாமல் நேரே நின் று கொண்டு செய்வதால் நம் உடலுக்குத் தேவையான சக்தி கள் சேகரிக்கப் பட்டு பூமிக்கே சென்றுவிடும் என் பது யோகா சனத்தின் முக்கிய விதியாகும். ஆகவே வீட்டினுள் ஒரு அறையிலோ, மொட்டை மாடியிலோ, அல் லது உங்களுக்குச் செள கரியமான ஒரு திறந்த வெளியிலோ கீழே பாயைப் போட்டுக்கொண்டு கிழக்கே பார்த்த வண்ணம் நின்று கொ ண்டு இரு கைகளையும் கூப்பிக் கொள்ள வும். வணக்கம் செலுத்தும் பாவனையில் நிற்க வேண்டும். கண்கள் நேர் பார்வை யாகச் சூரியனை மட்டுமே பார்க்க வேண் டும். வயிற்றை உள்ளிழுத்துக் கொண்டு மார்பை நேராக நிமிர்த்திக் கைகளை ஒன்றாய்ச் சேர்த்துக்கொண்டு கும்பிடும் நிலையில் நின் று கொண்டு சூரியனைக் குறித்த தோத்திரப் பாடல்கள், அல்லது ஸ்லோகங்களை மனதுக்குள் சொல்லிக் கொண்டு துதிக்கவும். கைகளின் கட்டை விரல்கள் மார்பைத் தொடவேண்டும். முது கைப் பின்னால் கொஞ்சம் சாய்த்துக் கொ ண்டு மூச்சை நன்றாக உள்ளே இழு த்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாம் நிலை: அப்படியே உடலைக் கீழ் நோக்கி வளைக்க வே ண்டும். உள்ளங்கைகளைக் கால்களுக்கு எதிரே தரையில் படும்படி கீழே வைக்க வேண்டும். முது கை வளைத்துக்கொண்டு கைகளைத் தரையில் வைக்கும் போது முழங்கால்கள் வளையாமல் நே ரே இருக்க வேண்டும். நம் முகம் இரு முழங்கால் களுக்கும் இடையில் வர வேண்டும். இப்போது உள்ளிழுத்த மூச்சை வெளியே விட வேண்டும்.
மூன்றாம் நிலை: இப்போ நாம் ஏற்கெனவே குனிந்த நிலையில் இருப்போம் அல்லவா? அப்படியே கைகளைத்தரையில் ஊன்றிய நிலையிலேயே வைத்துக்கொ ண்டு வலது முழங்காலை மட க்க வேண்டும். வலக்காலை மட் டும் குத்துக் காலிட்டுக் கொண்ட வண்ணம் வைத்தவாறே இடக் காலைப் பின்னே நீட்ட வேண் டும். முதலில் கொஞ்சம் சிரமம் தான். பழகப் பழக சுலபமாய் வந் துவிடும் நீட்டும் போது இடது முழங்காலும் பாதத்தின் விரல் களும் தரையைத் தொட்ட வண் ணம் இருக்க வேண்டும்.
இப்போது மெல்ல மெல்ல மார்பை மேலே உயர்த்தி நேரே பார்த்த வண் ணம் கழுத்தைப் பின்னால் கொண்டு போய் வளைத்துக் கொண்டு பார்க்க வேண்டும். பார்வை நேரேயே இருத்தல் வே ண்டும். மூச்சை நன்றாய் ஆழ மாய் உள்ளுக்கு இழுத்துக்கொ ள்ளவும்.
நான்காம் நிலை: ஆழமாய் இழுத்த மூச்சை மெதுவாய் வெளியே விட்டுக்கொண்டே மடக்கிய வலக்காலையும் பின்னுக்கு நீட்ட வேண்டும். இப்போது இரண்டு கால்களையும் சம மாக வைத்த வண்ணம் கைக ள் மட்டும் ஊன்றிய நிலையி லே வைத்த வண்ணம் இருக் க வேண்டும். முழங்காலும், முழங்காலுக்கு மேல் உடலு ம் தரையில் படக் கூடாது. உட லின் பாரம் முழுதும் கைகளில் வந்து தாங்கிக்கொள்ள வேண்டும். இந்நிலையில் மூச்சை வெளிவிடாமல் உள்ளேயே வைத்திருக்க வும்.
ஐந்தாம் நிலை: இந்த ஐந்தாம் நிலை கொஞ்சம் சுலபமானது. மேலே இருக்கும் உடலையும், முழ ங்காலையும் கொஞ்சம் கொ ஞ்சம் கீழே இறக்கவும். லே சாகத் தரையைத் தொட்ட வண்ணம் கால்கள், முழங் கால்கள், உள்ளங்கைகள், மார்பு, நெற்றி ஆகியன இரு க்க வேண்டும். உதாரணம் சொல்லப் போனால் தரையி ல் விழுந்து சாஷ்டாங்க நம ஸ்காரம் செய்யும் கோலத்தில் இருக்க வேண்டும். ஆனால் கைகள் மட்டும் பக்கவாட்டில் உள்ளங்கைகள் ஊன்றிய நிலையில் இருத்தல் வேண்டும்.
ஆறாம் நிலை: இப்போது முழங்கைகளையும், மார்பையும் உயர்த்திக்கொண்டே உடலை முன்னோக்கித் தள்ள வேண்டும். கைகளி ன் உடல் பாரம் வருமாறு பார்த்துக் கொண்டு கைகளைக் கீழே ஊன்றி, பாதங்களையும் கை களுக்கு நேரே வருமாறு தரை யில் ஊன்றிக்கொள்ள வேண்டும். ஆங்கில எழுத்து “U” மாதிரி வளைந்து காட்சி அளிப்போம். மூச்சை நன்றாய் உள்ளே இழுக்க வேண்டும்.
முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய ஒன்று ஒவ்வொரு நிலையிலும் சுமார் ஒரு நிமிடமாவது ஸ்திர மாக இருக்க வேண்டும் என்ப தோடு அந்நிலையில் இருக்கை யில் மூச்சை உள்ளேயே இழுத் துக் கொள்ள வேண்டும். அடுத் த நிலைகளுக்கு மாறும்போது மட்டுமே மூச்சை வெளிவிட வேண்டும். அதுவும் வேகமாய் விடாமல் மெதுவாகவே விட வேண்டும்.
ஏழாவது நிலை: சூரிய நமஸ்காரத்தின் ஆறாவது நிலையில் இரு ந்தவாறே உடலை மேலே உயர்த்தி நேராக நின்று கொ ண்டு கால்களை மட்டும் கொ ஞ்சம் இடைவெளி விட்டு நிற் க வேண்டும். பின்னர் குனிந்து கைகளைத் தரையில் தொடு ம்படி வைக்கவும். முடிந்தவ ரை உங்கள் பின்பக்கம் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். குதிகால்களைத் தூக்காமல் அவை தரையிலேயே இருக் கும் வண்ணம் பதித்து வைத் துக்கொ ண்டு அழுத்தி நின்ற வண்ணம் பின் பக்கத்தை மட் டும் உயர்த்த வேண்டும். முழங்கால்கள் விறைப்பாய் இருக்கட்டும். தலை இரு முழங்கால்களுக்கும் நடுவில் வருமாறு வைத்துக் கொ ள்ள வேண்டும். மூச்சை உள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். வெளியே விடக் கூடாது. இந்நிலையில் ஒரு நிமிஷம் இருக்க வே ண்டும். பின்னர் மெல்ல மெல்ல மூச்சை வெளியே வி ட்ட வண்ணம் நன்றாக நிற்க வேண்டும். இந்த ஒரு நிமிஷம் என்பது சொல்வத ற்குச் சீக்கிரம் எனத் தோன்றினாலும் நிமிடங்கள் காட்டும் கடி கா ரத்தை வைத்துப் பழகினால் ஒரு நிமிஷம் என்பது எத்தனை நேரம் ஆகிறது என்பது புரியும்.
எட்டாம் நிலை: எட்டாம் நிலைக்குச் செல்லும்போது இரு கால் களையும் நன்கு நீட்டிக் கொண்டு கைகள் மட்டும் தரையில் பதிக் க வேண்டும். பின்னர் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே இடக் காலை மட்டும் முன்பக்கமாய்க் கொண்டு வந்து இரு கைகளுக் கும் நடுவே வைக்க வேண்டும். ஏற்கெனவே மூன்றாம் நிலையி ல் வலக்காலை இவ்வாறு முன் னிறுத்தினோம். இப்போது எட் டாம் நிலையில் இடக்கால் அவ் வாறு இருக்க வேண்டும். வலக்கால் நீட்டிய வண்ணம் இருக்க வேண்டும். மூச்சை இப்போதும் உள்ளிழுத்துக்கொண்டு, பின்னர் மெல்ல மெல்ல வெளியே விட்டுக்கொண்டே சாதாரண நிலைக்கு வரவும்.
ஒன்பதாம் நிலை: ஒன்பதாம் நிலைக்கு வலக்காலையும் இடக் காலையும் ஒன்றாய் வைத் துக்கொண்டு நன்றாய்க் குனிந்து கொ ண்டு கைகள் தரையைத் தொட்டு க்கொண்டு நிற்க வேண்டும். இது இரண்டாம் நிலைக்கு வருவது போன்றதே. ஏனெனில் இப்போ து நாம் நம் உடலையும் மனதையும் பழைய நிலைக்குத் திருப்புவதால் கொ ஞ்சம் கொஞ்சமாய்ப் பழைய நிலைக்குத் திருப்பிக் கொண்டு வருகிறோம்.
பத்தாம் நிலை ஆகையால் பத்தாம் நிலையும் முதல் நிலை போல் நேராக சூரியனைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டு, இரு கைகளையும் கூப் பிய வண்ணம் கும்பிடும் நிலையில் இ ருத்தல் ஆகும். பின்னர் மூச்சை நன்கு உள்ளிழுத்துக்கொண்டு உட லை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவும். இப்போது மெதுவாக மூச்சை வெளியே விட வே ண்டும். இது போன்று பத்து நிலைகளை யும் தினமும் வரிசையாகச் செய்து வந் தாலே நல்ல பலன் கிடைக்கும். சூரிய நமஸ்காரம் முழுமையாகச் செய்ய வே ண்டுமென்றாலும் இப்படிப் பத்து நிலை களையும் வரிசைக்கிரம்மாகச் செய்வ தே.
சூரிய நமஸ்காரத்தின் பலன்கள்:
சுவாச முறைகளைப் பின்பற்றி மூச்சை உள்ளிழுத்தலும், வெளியிடு வ தும் நடை பெறுவதால் ஆஸ்த்மா நோயாளிகளுக்கும், நுரையீரல் சம்ப ந்தமான நோய்களுக்கும் நல்ல பலன் கிட்டும். சுவாச உறு ப்புகள் மட்டு மின்றி ரத்த ஓட்டமும் சீராக இருக்கும் என்பதால் மற்ற உறுப்புகளும் பயனடையும்.
நரம்பு மண்டலம் நன்கு இயக்கப் படும், நரம்புகள் வலிமை பெறும். தசைநார்கள் உறுதியாகும். உடல் கட்டமைப்பு அழகாய் இருக்கும். உடலில் வேண்டாத இடங்களில் சேரும் தசைகள் நாளாவட்ட்த்தில் மறைந்து கொண்டு வரும். பிராணவாயு அதிகம் கிடைக்கும்.

Our sincere thanks to mazhalaigal.com

No comments:

Post a Comment