Lord Siva

Lord Siva

Saturday, 31 December 2011

ரத்தத்தில் இருந்து நோய் அகற்றும் நுண்ணிய காந்தங்கள்!

Posted On Dec 31,2011,By Muthukumar
நமது உடலின் ரத்தத்தில் இருந்து தீங்கு செய்யும் மூலக்கூறுகளை ஈர்த்து அகற்றக்கூடிய காந்தப்புலம் வாய்ந்த நுண்ணிய துகள்களை (நானோ பார்ட்டிக்கிள்கள்) விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர்.
இவற்றின் பிரம்மாக்களான சுவிட்சர்லாந்து ஜூரிச் நகர ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தைச் சுத்தப்படுத்த இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என்கிறார்கள். நச்சுப் பாதிப்பு, ரத்த ஓட்டத் தொற்று மற்றும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் கைகொடுக்கும் என்பது இவர்களது கருத்து.
இந்த `நானோ பார்ட்டிக்கிள்கள்', கார்பன் பூச்சு செய்யப்பட்டு, ரத்தத்தில் இருந்து அகற்றவேண்டிய பொருட்களுக்கு ஏற்ற `ஆன்டிபாடிகள்' சேர்க்கப்பட்டதாக இருக்கின்றன. இந்த நுண்ணிய காந்தங்களை ரத்த ஓட்டத்தில் செலுத்தி, பின்னர் டயாலிசிஸ் செய்வதன் மூலம் இன்டர்லியூகின்ஸ் போன்ற தீங்கு தரும் புரதங்கள், காரீயம் போன்ற அபாயகரமான உலோகங்களை அகற்றலாம் என்கிறார்கள்.
``ரத்தத்தில் குறிவைக்கப்பட்ட பொருட்களை இந்த நானோ மேக்னட் ஈர்க்கும், பின்னர் அவை மறுபடி ரத்த ஓட்டத்தில் சுழலாமல் ஒரு செப்பரேட்டர் தடுக்கும்'' என்று இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஜூரிச் பல்கலைக்கழக வேதிப் பொறியாளர் இங்கே ஹெர்மான் கூறுகிறார்.
இதய நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து, `டிகோக்ஸின்'. இதன் அளவு அதிகமானால் மரணத்தை ஏற்படுத்தும். இந்த மருந்தை, மேற்கண்ட நானோ பார்ட்டிக்கிள்கள் ஒரே சுற்றில் 75 சதவீதம் அகற்றியுள்ளன. சுமார் ஒன்றரை மணி நேரம் பயன்படுத்தியபிறகு 90 சதவீதம் அகற்றியிருக்கின்றன.
இந்த நுண்ணிய துணுக்குகள் உடம்புக்கு வேறு தீமை பயக்காது, ரத்தத்தின் பிற பணிகளிலும் குறுக் கிடாது என்று விஞ்ஞானிகள் உறுதியளிக்கின்றனர்.

வாசம்’ பிடித்தால் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்!

Posted On Dec 31,2011,By Muthukumar

ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அறிய வேண்டுமா? அவரது வாசத்தைக் கொஞ்சம் மோப்பம் பிடித்தாலே போதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதுதொடர்பான ஆய்வை போலந்து நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் ஆய்வுக்கு உதவிய தன்னார்வலர்களிடம், சிலரின் ஆடை மணத்தை மோப்பம் பிடிக்கச் செய்து, அதன் மூலம் அவர்களைப் பற்றிக் கணிக்கச் செய்தனர்.
அப்போது அவர்களின் கணிப்பு முழுக்க முழுக்கச் சரியாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் பொருந்துவதாக இருந்தது. நமக்கு ஒருவரைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில், காணும், கேட்கும் விஷயங்களுடன், அவரது `வாசமும்' முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறார்கள் போலந்து ஆய்வாளர்கள்.
``நாம் ஒவ்வொருவரும் நமது தோற்றத்தின் மூலம் மட்டுமின்றி, வாசத்தின் மூலமாகவும் நம்மை வெளிப்படுத்துகிறோம்'' என்று இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான, வுரோகிளாவ் பல்கலைக்கழகத்தின் அக்னீஷ்கா சொரோகோவ்ஸ்கா கூறுகிறார்.
இந்த ஆய்வுக்காக ஆய்வாளர்கள் 30 ஆண்களையும், 30 பெண்களையும் தொடர்ந்து 3 நாள் இரவு வெள்ளை காட்டன் டீ-ஷர்ட்களை அணியும்படி கேட்டுக்கொண்டனர். அவர்கள் எந்த வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்தக் கூடாது, சோப் கூட உபயோகிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த `வாசனை தானக்காரர்களிடம்' இருந்து பெறப்பட்ட டீ-ஷர்ட்களை 100 ஆண்களும், 100 பெண்களும் மோப்பம் பிடித்துக் கருத்துக் கூறுமாறு கேட்கப்பட்டது. பின்னர் அந்தக் கருத்துகளை, டீ-ஷர்ட்களை அணிந்தவர்களிடம் தெரிவித்து, எதெல்லாம் சரி என்று கேட்கப்பட்டது. அப்போது, சில கணிப்புகள் பொருந்தவில்லை என்றபோதும், சில கணிப்புகள் மிகப் பொருத்தமாக இருந்தன. வாசத்தைக் கொண்டே ஒருவரின் ஆளுமையைக் குறிப்பிடத்தக்க அளவு கண்டுபிடித்துவிடலாம் என்பது புதுமையான விஷயமாகக் கருதப்படுகிறது.

Friday, 30 December 2011

ஆண்கள் மட்டுமே ‘ஆரம்பிப்பது’ ஏன்?

Posted On Dec 30,2011,By Muthukumar
பெரும்பாலான ஆண்களுக்கு இந்தக் கவலை இருக்கும். 'எல்லாத்தையும்' நாமதான் ஆரம்பிக்கனும், நம்மாளு எதையுமே செய்வதில்லை என்ற கவலைதான் அது.
செக்ஸ் உறவின்போது பெரும்பாலான ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்புதான் இது. நான்தான் தொடங்க வேண்டும். அவங்க பாட்டுக்கு கம்முன்னு இருப்பாங்க, என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு வச்சுருக்காங்களா என்ற சலிப்பும் பல ஆண்களிடம் உள்ளது.
ஏன் பெண்கள் செக்ஸ் விஷயத்தில் 'லீட்' பண்ண மாட்டார்கள், அவரே ஆரம்பிக்கட்டும், முன்னேறட்டும் என்று காத்திருக்கிறார்கள்?. இதற்கு நிபுணர்கள் தரும் பதில் இது...
பெரும்பாலான ஆண்கள் என்றில்லை, கிட்டத்தட்ட அத்தனை ஆண்களுக்குமே இந்தக் கேள்வி மனதில் எழுவதற்கு வாய்ப்புள்ளது. காரணம், பெரும்பாலும் ஆண்கள்தான் செக்ஸ் உறவின்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள் டேக் ஓவர் செய்து கொள்கிறார்கள்.
சில சமயங்களில், நமது மனைவிக்கு செக்ஸ் பிடிக்கவில்லையா, இப்படி அமைதியாக இருக்கிறாரே என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழலாம். பலருக்கு ஒரு வேளை நமது 'மூவ்'கள் சரியாக இல்லையோ என்ற சந்தேகம் கூட எழலாம்.
முன் விளையாட்டுக்களில் மனைவிக்கு ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்பது கூட பலருக்குப் புரிபடுவதில்லை. இப்படிப்பட்ட சிந்தனைகளால் பல ஆண்கள் குழம்பிப் போவது நிஜம்தான்.
ஆனால் இதெல்லாம் இந்த அளவுக்கு குழம்பிப் போக வேண்டிய பெரிய விஷயமில்லை. சாதாரணமானவைதான்.
பெண்கள் எதையும் ஆரம்பிப்பதில் தயக்கம் காட்ட சில காரணங்கள் உள்ளன. நாமே தொடங்கினால் நம்மவருக்கு ஏதாவது ஈகோ பிரச்சினை வந்து விடுமோ என்று பல பெண்கள் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.
நாமே முந்திக் கொண்டு போனால் நம்மைப் பற்றித் தவறாக நினைத்து விடுவாரா என்ற சந்தேகமும் பல பெண்களுக்கு எழுகிறதாம். நாம்தான் சரியான 'சிக்னல்' கொடுத்தாச்சே, புரிந்து கொண்டு களம் இறங்க வேண்டியதுதானே என்று பலர் நினைக்கிறார்களாம்.
நான் சரியான முறையில்தான், உறவுக்கு ரெடி என்பதை மறைமுகமாக உணர்த்துகிறேன். அவர்தான் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று பல பெண்கள் புகார் பட்டியலுடன் உட்கார்ந்திருக்கிறார்கள்.
பட்டவர்த்தனமாக எப்படி பளிச்சென சொல்வது என்ற தயக்கம் ஏற்படுவதாக பல பெண்கள் சொல்கிறார்கள்.
ஆரம்பிப்பதில் அவர் தான் கில்லாடி, எக்ஸ்பர்ட், அதனால்தான் நான் மெளனம் காக்கிறேன் என்பதும் பல பெண்கள் சொல்லும் வாதமாக இருக்கிறது.
எனவே காதல் மற்றும் உறவில் ஈகோ என்பது பார்க்கப்படக்கூடாத ஒன்று. யார் ஆரம்பித்தால் என்ன, முடியும்போது அது சிறப்பாக, சந்தோஷமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
அந்த நான்கு சுவருக்குள் தனிமையில் இருக்கும்போது இருவருக்கும் இடையே எந்தவிதமான தயக்கமோ, வெட்கமோ, கெளரவம் பார்ப்பதோ இருக்கக் கூடாது. ஆடைகளுடன் சேர்த்து அவற்றையும் தூரப் போட்டு விட வேண்டும். அப்போதுதான் உறவு இனிக்கும், சிறக்கும்.
மேலும், பார்ட்னரிடமிருந்து வரும் 'சிக்னலை' சரியாக புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கடமையுமாகும். சிக்னல் வந்து விட்டால், அடுத்தவர் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு, இல்லை, இல்லை வாயைத் திறந்து கேட்டால்தான் ஆச்சு என்று வறட்டுப் பிடிவாதமாக இருக்கக் கூடாது.
ஒரு வேளை கணவர் பிசியாக இருந்து கொண்டிருப்பார். அப்போது பார்த்து மனைவி அருகே வந்து கன்னத்தில் முத்தமிடலாம், கொஞ்சலாம். அதெல்லாம்தான் உறவுக்கு அழைப்பதற்கான 'சிக்னல்'கள். எனவே பிசியாக இருந்தாலும் கூட அந்த சமிக்ஞைகளை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்சினை இல்லை.
மனைவி ஆரம்பிக்கட்டும், அவரே எல்லாவற்றையும் தொடங்கட்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை தாராளமாக அவரிடம் வெளிப்படையாக சொல்லி விடலாம். அடுத்த முறை உங்களை அசத்த அவரும் தயாராக இருப்பார்.
மொத்தத்தில் அன்பைக் காட்டவும், அருகாமையை இனிமையாக்கவும் வெளிப்படையான மனதும், செயல்பாடுகளும் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டால், 'ஸ்டார்ட்டிங் டிரபுள்' இருக்கவே இருக்காது.



மனிதனின் ஞாபக சக்தி!


Posted On Dec 30,2011,By Muthukumar
மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன்.
ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான். உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது.
அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது. அதேபோல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50- 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர்.
பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம். பார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன.
சாதாரணமாக, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது. பெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன.
இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிற புலன்களையும் நன்கு தூண்டிவிடுவது அவசியமாகும். பல்வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்
களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது. ஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்துகொண்ட பின், அதை உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன்மூலம் கேள்விப் புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும்.
கிடைத்த விவரங்களை நினைவில் கொண்டிருப்பதை `பிம்ப நினைவு' என்று கூறலாம். அந்த விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து, பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது `தர்க்க நினைவு' ஆகும்.
அதனால்தான் நாம் சரிவர அறிந்திராதவற்றை விட, நன்கு அறிந்துள்ளவற்றை நினைவில் வைத்திருப்பது எளிதாக உள்ளது. பொருள் புரியும் வார்த்தைகளை நினைவில் கொள்வது, பொருளற்ற சொற்குவியலை நினைவில் வைத்திருப்பதை விட எளிதல்லவா?
உணர்ச்சி நினைவும் மக்களுக்கு உண்டு. அறிவு அல்லது தர்க்க நினைவைக் காட்டிலும் உணர்ச்சி நினைவு வலுவானது. அதனால்தான் சுவையான புத்தகங்களை வாசிப்பது, திரைப்படங்களையும், நாடகங் களையும் காண்பது போன்றவை நம் நினைவை விட்டு அகலாதிருக்கின்றன. ஆகவே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் சில சுவையான அம்சங்களைக் கண்டுபிடித்தால் அவற்றை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.

இதய தசை நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்



எந்த வகை இதய நோயும் பயமுறுத்தக் கூடியதுதான். அது என்ன வென்று தெரியாவிட்டால் இன்னும் மோசம். (கார்டியோ மயோப தி)இதய தசை நோயின் காரணங் கள், அறிகுறிகள், அறிவிப்புகளை அறிந்து கொள்வதால், உங்கள் இதய நோயைப் புரிந்து கொள்ள வும் சமாளிக்கவும்முடியும்.
இதய தசை நோய்:
கார்டியோமயோபதி என்றால் என்ன?
கார்டியோ என்றால் இதயம், மயோ என்றால் தசை, பதி என்றால் நோய். இந்த நோயினால் இதய தசை பாதிக்கப்பட்டு வலுவிழக்கிறது. வலுவி ழந்த இதய தசை மெலிந்து பெரிதாகலாம். முழு இதய தசையும் வலு விழந்து இரத்தத்தைக் குறைந்த செயல்திறனுடன் பம்ப் செய்கிறது. இத யம் மெதுவாக பம்ப் செய்ய முடியாத நிலையை அடைகிறது. உடலுக்குப் போ திய இரத்தத்தை அதனால் அனுப்ப முடி யாது.
கார்டியோமயோபதி இருபாலினரையும் எல்லா வயதினரையும் தாக்கு கிறது. பொதுவாக இது நீண்ட நாள் (கிரோனிக்) நோய். நீங்கள் உங்கள் வாழ்க்கை முறை யை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சை யினால் இந்நோய் அரிதாகக் குணமாகிறது. ஆனால் அறிகுறிகளைக் குறை க்கலாம்.
இதய தசை நோயின் வகைகள்:
இதய தசை நோயில் மூன்று வகை உண்டு.
  • விரிந்த இதய தசை நோய்
  • ஹைபர் டிராபிக் கார்டியோமயோபதி
  • ரெஸ்டிரிக்டிவ் கார்டியோமயோபதி
விரிந்த இதய தசை நோய்: (Diated Cardiomyopathy)
விரிந்த இதய தசை நோய் மிக அதிக மாகக் காணப்படும் இதய தசை நோ யாகும். இதனால் இதய தசை முழு வதும் வலுவிழந்து குறைவாக இரத்தம் அனுப்பப்படுகிறது. பெண்க ளை விட ஆண்களுக்கு அதிகம் ஏற் படுகிறது. எல்லா வயதினருக்கும் ஏற்ப டலாம் என்றாலும் 30-50 வய தின ருக்கு அதிமாக ஏற்படுகிறது. ஒன்றிலிருந்து ஒன்றரை சதவி கித த்தினருக்கு விரிந்த இதய தசை நோய் இருக்கிறது.
இதய தசை நோயுள்ள பெரும் பா லானவருக்கு இதய தமனி நோய் (இஸ் கிமிக் கார்டியோம யோபதி) இருக்கிறது. சமீபத்திய வைரஸ் தொற்றால் விரிந்த இதய தசை நோய் ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஜல தோஷம் அல்லது ஃபுளூவைப் போல் அது ஆரம்பிக்கலாம். ஆனால் இதய நோயாக பிறகு உருவெடுக்கிறது. இந்த இதய நோயுள் ளவர்களில் ஐவரில் ஒருவரின் முன்னோருக்கு இந்நோய் இருந்தது தெரிய வரு கிறது. எனவே, இது பரம்பரை யாகவும் வரலாம். இதய தசை நோ யுள்ள வர்களில் பாதிப் பேருக்குக் காரணம் கண்டறிய முடியாது. குடிப் பழக்கம், கருவுறுதல், விஷங்கள், குறைந்த போஷாக்கு, ஹார் மோன் கோளாறு, உயர் இரத்த அழுத்த த்தினால் இதய தசை நோய் உரு வாகலாம்.
உயர் இரத்த அழுத்த இதய தசை நோய்: (Hyper Traffic Cardiomyopathy)
Hyper Traffic Cardiomyopathy
ரிதாக ஏற்படும் இதய தசை நோயின் இவ்வகையில் இதய த்தால் ஓய்வெடுக்க, இரத்தத் தை நிரப்ப முடியாது. இது உயர் இரத்த அழுத்த த்துடன் தொடர்பு கொண்டிருக்கலாம். பொதுவாக பரம்பரையாக ஏற்படு கிறது. இதய தசையின் அளவு அதி கரித்து இதயத்தை விட்டு இரத்தம் வெளியேறுவது தடை படுகிறது. இதய வலி, மூச்சுவிட சிரமம், மயக்கம், தலைசுற்றல் போன்றவை முக்கியமாக வே லை செய்தால் ஏற்படும்.
கட்டுப்படுத்தப்பட்ட இதய தசை நோய்: (Restrictive Cardiomyopathy)
Restrictive Cardiomyopathy
இவ்வகை இதய தசை நோ யும் அரிதாக ஏற்படு கிறது. இதய தசையால் இரத் தத்தை அனுப்ப முடியும். ஆனால் ஓய்வெடுத்து இரத் தத்தை நிரப்ப முடியாது. இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. நீர்கோ ர்த்தல், வீக்கம் (எடிமா) மயக்கம் போன்றவை ஏற்படலாம்.
இதய தசை நோயின் முக் கிய அறிகுறிகள்:
சிலசமயம் இதய தசை நோயின் காரணம் ஒன்றல்ல பல. உதாரணமாக, குடிப்பழக்கமும் அதிக இரத்த அழுத் தமும் இணைந்து இந்நோயை உரு வாக்கலாம். காரணங்கள் எதுவானா லும் இதய தசை நோயின் அறிகுறி கள் ஒன்றுதான். இந்த அறிகுறிகள் வெவ்வேறு அளவில் தென் படலாம். இவை இதயம் சாதாரணமாக இரத் தத்தை அனுப்ப முடியாததால் ஏற்ப டுகின்றன.
இதயதசை நோய் மோசமானால் ஹார்ட்ஃபெயிலியராகலாம். இதற்கா ன அறிகுறிகள் வேறுபடுகின்றன. சிலருக்கு அறிகுறிகள் தென்படாது. ஆனா ல் அசாதாரணமான (ECG) எலக்டிரோ கார்டியோகிராம் இருக்கும். மார்பு எக்ஸ்ரேயில் வீங்கிய இதயம் தென்படும். அறிகுறிகள் மோச மாவதற்கு, பல வருடங்கள் முன் னரே சோர்வடைவது ஏற்படுகிறது. செயல்புரியும்போது, பிறகு மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை முக்கிய அறிகுறியாகும். கணுக் கால்களில் வீக்கம், எடை அதிகரிப்பு போன்ற வற்றால் மருத்துவரின் உதவியை நாட வேண்டிய அவசி யம் ஏற்படும்.
இதய தசை நோயின் மேலும் சில அறிகுறிகள்:
  • மூச்சு விட சிரமம்
  • சோர்வு (ஃபெடிக்)
  • மார்பு வலி
  • எடை அதிகரிப்பு
  • வீக்கம் (எடிமா)
  • மயக்கம், தலை சுற்றல்
  • விட்டு விட்டு இதயம் துடித்தல்
இந்த அறிகுறிகளின் காரணங்களைப் புரிந்து கொண்டால் சிகிச்சைத் திட் டத்தை உங் களால் புரிந்துகொள்ள முடியும். உங்கள் உடல் தனக்கே உரிய வழியில் நோயினால் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மருத்து வரிடம் அறிகுறிகள் பற்றி விவாதிப்பதால் கட்டுப்படுத்தலாம். அறிகுறி களில் மாற்றம் ஏற்படுவது நோய் குணமா வதை அல்லது மோசமாவ தைக் காட்டும். எந்த மாற்றத்தையும் மருத் துவரிடம் கூறுங்கள். சிகிச் சையில் மாற்றம் செய்ய அது உதவும்.
இதய தசை நோய்க்கு சிகிச் சை:
இதய தசை நோய்க்கான பல வகையான சிகிச்சைகளை இந் தப் பகுதியில் காணலாம். இதய தசை நோய்க்கான கார ணம் கண்டறியப்பட்டால், அதை இலக்காக வைத்து சிகிச்சை தரப்படும். சிகிச்சை ஒவ்வொருவரு க்கும் பிரத்தியோகமானது. எனவே இவற்றில் சில உங்களுக்குப் பொருந் தாது. சிகிச்சையினால் இதயம் மறுபடி சாதா ரணமாக இயங்க ஆரம்பித்து விடாது. சிகிச்சையின் முக்கியக் குறிக் கோள், இதயத்தை மேலும் திறனுடன் இய ங்க வைப்பதுதான்.
சிகிச்சைத் திட்டத்தின் சுருக்கம்:
மேலான வாழ்க்கைத் தரத்தை அடையவும், குறைவாக மருத்துவமனை யை அணுகவும் உங்களுடைய மருத்துவருடன் இணைந்து செயல் புரிவது அவசியமாகும். உங்களை நீங்களே எப்படி பார்த்துக் கொள்வது என்று தெரிந்து கொண்டு சிகிச்சைத் திட்டத்தில் முழுமையாக ஈடுபடுங்கள். எப்போது மாற்றம் ஏற்படுகிறது என்று உங்கள் மருத்துவ ரிடம் சொல்லுங்கள். சரியான சமயத்தில் மருத்துவரைச் சந்தியுங்கள். சிகிச் சைத் திட்டத்தை ஒழுங்காகக் கடைபிடியுங்கள்.
செயல்கள்:
முதலில் உங்கள் செயல்கள் குறைக்கப் படும். இதயத்தில் வைரஸ் தொற் று இருக்கும் வாய்ப்பு இருந்தால், சிறிது காலம் படுக்கையில் ஓய் வெடுக்க நேரி டலாம். படுக்கையின் தலைப்பாகம் உயர் த்தப்பட்டால் சுவாசிப்பது எளிது.
உங்கள் கால்களை அவ்வப்போது நகர்த்தி அவற்றிற்கு பயிற்சி தர வேண் டும். இதனால் இரத்தம் கால்களில் தங்காமல் தடுக்கப்படுகிறது. உங்கள் கால் விரல்களை கீழே வளைத்து பிறகு முழங்காலை நோக்கி பின்னால் வளைத்து பயிற்சி செய்யுங்கள். இது பெடலை அழுத்தி பிறகு மேல் வர விடுவது போன்றது.
தலை சுற்றல் ஏற்படாமல் இருக்க உடல்நிலை மாற்றத்திற்கு உட லை தயாராக விடுங்கள். படுக்கை யை விட்டு எழுந்திருக்கும்போது படுக்கையின் ஓரமாக அமர்ந்து, எழுந்து நிற்கும் முன்பு சில நிமிட ங்கள் ஓய்வெ டுங்கள். அதிகமாக உட்கார்வது பிறகு நிற்பது போன்ற செயல்களைத் தவிர்த்துவிடுங்கள்.
மருத்துவமனையை விட்டுச் செல்வதற்கு முன் என்ன செயல்களைச் செய்யலாம் என்று மருத்துவரிடம் கேளுங்கள். நடக்கும் தூரத்தை மெது வாக அதிகரிக்கும் எளிய தினசரி உடற்பயிற்சிகள் அடங்கிய திட் டம் உங்களுக்குத் தரப்படும். உங் கள் இதயத்தையும், தசைகளை யும் வலுவாக்க சுறுசுறுப்பாக இரு ங்கள். உங்கள் செயல்களை மெதுவாக அதிகரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எந்தச் செயல்க ளைத் தவிர்ப்பது என்று தீர்மானி க்க மிகச் சிறந்த நபர் நீங்கள்தான்.
உங்கள் தொழில் மிகவும் கடினமாக இருந்தால் அதை விட வேண்டி இருக்கலாம் அல்லது மாற்ற வேண்டியிருக்கலாம். நீங்கள் குணமாகும் வரை தற்காலிகமாக ஓய்வு பெற வேண்டியது அவசியம். நீங்கள் மெது வாக செயல்பட ஆரம்பித்த பிறகு, உங்கள் தொழிலுக்கு முழு நேரமாக வோ, பகுதி நேரமாகவோ செல்லலாம். நீங்கள் எப் போது வேலைக்குத் திரும்பலாம் என்பதை உங்கள் இதயம் குணமடையும் விதமும், நீங்கள் எப்படி சிகிச்சைத் திட்டத்திற்கு ஒத் துழைக்கிறீர்கள் என்பதும் தீர்மா னிக்கும்.
களைப்பு அறிகுறிகள்:
உணர்வு சிக்கலும் உடல் சிரமமும் உங்கள் இதயத்திற்கு அதிக சிரமம் தருகின்றன. உங்கள் இதயம் அதிக வேலை செய்யத் தூண்டுபவை அதிக உணவு உண் பது, ஆல்கஹால் அருந்துவது, புகை பிடிப் பது, மன வருத் தம், குளிர்ந்த, வெப்பமான, ஈரப்பதமான தட்ப வெப்ப நிலை, தூக்குவது, தள்ளுவது, இழுப்பது. உங்கள் உடலுக்குத் தேவையான இரத்தத்தையும், பிராண வாயு வையும் உங்கள் இதயத்தால் தரமுடியா விட்டால் களைப்பின் அறிகுறிகள் ஏற்படும். இவை, மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, மார்பு வலி, தலைசுற்றல், அதிக களைப்பு, சோர்வு, அதிக வேர்வை.
களைப்பின் அறிகுறிகள் தென்பட்டால், உட னடியாக நிறுத்தி ஓய் வெடுங்கள். செயல் புரியும் போது மார்புவலி, (ஆன்ஜய்னா) ஏற்பட்டால், நைட்ரோ கிளிசரின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தால், ஒரு மாத்திரையை நாக்கின் அடியில் வைக்கவும். ஐந்து நிமிடங்களில் வலி அடங்காவிட்டால், இன் னொரு மாத்திரையை உபயோகிக்கவும். ஐந்து நிமிடங்கள் பொறுத்த பிறகு மூன்றாவது மாத்திரையை உட்கொள் ளலாம். இதனால் உங்கள் மார்புவலி நிற்காவிட்டால் அல்லது வலி அதிகரி த்தால் மருத்துவரை அழையுங்கள். இதய தசையின் வேலை யைக் குறை த்து, இதய தசைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து நைட்ரோ கிளிசரின் மார்பு வலி நிற்க உதவுகிறது.
மற்ற அறிகுறிகளைச் சமாளிப்பது:
அதிகம் உண்ட பிறகு குமட்டல், அழுத்தம் ஏற்பட்டால் குறைந்த அளவு உணவை அடிக்கடி உண்ணுங்கள். உங்கள் வயிற்றில் நீர் சேர்ந்தது கார ணமாக இருக்கலாம். குமட்டல், அழுத்தம் பற்றி மருத்துவரிடம் தெரிவியுங்கள். ஏனெனில் அது வே றாகவும் இருக்கலாம்.
குறைந்த வேலை, மற்றும் வயி ற்றில் நீர் சேர்ந்ததால் மலச்சிக்கல் ஏற் படலாம். மலத்தை வெளியே ற்ற சிரமப்படுவதால் இதயம் சிர மப்பட நேரிடுகிறது. மலமிளக்கிகள் தரப்படலாம். கால், பாதங்களில் வீக் கம் ஏற்பட்டால் எவ்வளவு முடியு மோ அவ்வளவு கால்களை உயர்த்துங்கள். வீங்கிய தசையினால் புண் கள் எளிதில் ஏற்படுகின்றன. இப்பகுதியில் லோஷனைத் தடவி வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காயம் ஏற்படாமல் முடிந்தவரை பார்த்துக் கொள் ளுங்கள். காயம் ஏற்பட்டால் குறைந்த இரத்த ஓட் டத்தினால் மெதுவாக த்தான் குண மாகும்.
இதய தசை நோயை, ஹார்ட் ஃபெயிலியர் அறிகுறிகளைக் குண ப்படுத்த மற்ற மருந்துகள் உள்ள ன. இங்குக் குறிப்பிட ப்பட்ட எல்லா மருந்துகளும் உங்களுக்குத் தர மாட்டார்கள். நீங்கள் உட்கொள் ளும் மருந்து பற்றிய விவரக் குறிப்புகள் உங்களுக்குத் தரப்படும். கீழ்க் கண்டவற்றைத் தெரி ந்து கொள்ளுங்கள்.
பெயர் அளவு கால அளவு குறிக்கோள்:
மருந்துகளின் பக்க விளைவுகள்:
நர்ஸ் அல்லது மருந்து நிபுணர் உங்கள் கால அட்டவணையைத் தருவார். ஒவ் வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் மருந்துகளை உட்கொள்ளு ங்கள். சில வாசோடைலேடர், ஆன்டி அரித்மிக் மருந்துகளுக்கு ஒவ்வொ ரு 6, 8 மணி நேரமும் ஒருமுறை தரப்படும். அலா ரம் கடிகாரத்தை உபயோகித்து விழித் தெழுந்து இந்த மருந்துகளை உண்ண நேரிடும். உங்கள் நேர அட்டவணை தயார் செய்வதற்குள் உங்கள் நர்ஸ் அல்லது மருந்து நிபுணரிடம் நீங்கள் தூங்கும் நேரங்களைக் கூறினால் அது கண க்கில் கொள்ளப்படும்.
சில மருந்துகள் மற்ற மருந்துகளுடன் உட்கொள்ளும்போது அதிக செயல் திறனுடன் செயல்படும். மற்றவை உணவுடன் உட்கொண்டால் குறைந்த பக்கவிளைவுகளை உண் டாக்கும். ஒருமுறை உட்கொள்ள மறந்தால், அடுத்த முறை மருத்துவர் கூறினால் தவிர இரண்டு மடங் காக உட்கொள்ள வேண்டாம். உங்கள் அறிகுறிகள் மோசமானால், மருத்துவர் கூறாமல் அதிக மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம்.
உங்கள் கைப்பையில், ஒரு அட்டையில் நீங்கள் உட்கொள்ளும் மருந் துகள், அளவுகள், கால அட்டவணை போன்றவற்றைக் குறிப்பிட்டு வை த்திருங்கள். பக்க விளை வுகள் ஏற்பட்டால், அறிகுறிகள் அதிக ரித்தால் மருத்துவரை அழையுங்கள். மருந்தின் வீரியம் மிக அதி கமாக அல்லது குறைவாக இருக்கலாம். அல் லது மருந்து மாற்றப்படலாம்.
மருத்துவமனையில் இருக்கும்போது சிரை களின் (Veins) வழியே மருந்துகள் தரப்பட லாம். (I.V. இன்ட் ராவீனஸ்) I.V. மருந்துகள் விரை வாக செயல்பட்டு உங்கள் அறிகுறிகளைக் குறைத்து உங்கள் இதயத்தின் பம்ப் செய்யும் திறனை அதிகரிக்கின்றன. உங்கள் உடல்நிலை மேம்பட்டால், மருந்து களை வாயினால் உட்கொள்ளலாம். அதனால் உடலில் நீண்ட நேரம் அவை செயல்படும்.
சிலருக்கு சில மருந்துகள் செயல்படாமல் போகின்றன. இப்படி நடந்தால், மருத்துவர் வேறு மருந்து தரலாம். உங்கள் உடல்நலத்தை மேம்படு த்தும் மருந்துகளின் சரியான அளவு, பிரயோக த்தைத் தீர்மானிக்கச் சிறிது காலமாகும்.
இதயத் தசை சுருக்கத்தை வலுவாக்கும் மருந்துகள்:
டிஜாக்ஸின் போன்ற மருந்துகள் உங்கள் இதய தசை சுருக்கத்தை அதிக வலுவாக்குகின்றன. அவை உங்கள் இதயம் கடினமாக பம்ப் செய்து அதிக இரத்தம் ஒவ்வொரு சுருக்கத்திலும் செலுத்த உதவுகின்றன. டோபு டமைன் கூட சுருக்கத்தை வலுவாக்குகிறது, சிரையின் வழியே தரப் படுகிறது.
அதிக நீர்த் தேக்கத்தை வெளியேற்றும் மருந்துகள்:
டையூரடிக்ஸ் “நீர் மாத்திரைகள்” என்று சிலசமயம் கூற ப்படுகின்றன. சிறுநீரகத்திலிருந்து சோடியத்தையும், நீரை யும் வெளியேற்ற அவை உதவுகின்றன. உங்கள் இரத்த மண்டலம், நுரை யீரல், திசுக்களிலுள்ள நீரையும் அவை வெளியேற்றும். இதனால் இதயத் தின் வேலை குறை யும். ஏனெனில் பம்ப் செய்யக் குறைந்த இரத்தமே இருக்கும். இந்த மருந்துகள் உங்கள் சிறு நீரிலுள்ள சோடிய த்துடன் பொட்டாஷியத் தை யும் வெளியேற்றலாம். இந்த முக்கிய தாதுப் பொருள் வெ ளியேற் றப்பட்டால், பொட்டா ஷியம் போஷாக்கு களினால் சரி க்கட்டப்படு கிறது.
பொட்டாஷியத்தை (K+) அளிக்கும் மருந்துகள்:
பொட்டாஷியம் ஒரு அத்தியாவசியமான தாதுப்பொருள். அது உங்கள் இதயத் துடிப்பை சரி செய்ய உதவுகி றது. பொட்டா ஷியம் அளவு உங்கள் இதயத்தைப் பாதிக்கிறது. உங்கள் இரத்தத்தில் பொட்டாஷியத்தின் அள வு மிக அதிகம் அல்லது மிகக் குறைவு என்றால், விட்டுவிட்டு இத யம் துடிப்பது அல்லது இதய வேலை கெடு வது நிகழ்கிறது. பல நீர் மாத்தி ரைகளினால் அதிக அளவு பொட்டா ஷியம் சிறுநீரகத்திலி ருந்து வெளி யேறு கிறது. இந்த இழப்பை ஈடுகட்ட பொட்டாஷியம் அதிகம் உள் ள உணவை நீங்கள் உண்ண வேண்டும். அல்லது வாய் வழியே பொட் டாஷியம் நிறைந்த உணவை உட்கொள்வதால் குறைந்த பொட்டா ஷியம் அளவு சீராக்கப்படும். பொட்டாஷியத்தின் அளவு குறைந்தால், தசை இழுப்பு, சோர்வு, பலவீனம் போன் றவை ஏற்படும்.
பொட்டாஷியம் போஷாக்குகள் சுவை யாக இருக்காது. எனவே உணவு உண்ட பிறகு அவற்றை உண்பதால் வயிறு பாதிக்கப்படா து. குளிர்ந்த சாறுகளை உப யோகித்து சுவை தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். சிலர் ஆரஞ்சு அல்லது திராட்சை சாற்றில் பொட்டாஷியத்தைக் கலந்து குடிப்பார்கள்.
இரத்தக் குழாய்களை விரிக்கும் மருந்துகள்:
வேஸோடைலேட்டர்கள் என்பவை உங்க ள் இரத்தக் குழாய்களைத் திறக் கும் அல் லது விரிவடையச் செய்யும் மருந்துக ளாகும். தமனிகள் விரிவடை யும்போது அதிக எதிர்ப்பின்றி இதயத் தால் இரத்த த்தை பம்ப் செய்ய முடி யும். எனவே இதய தசையின் வேலை குறைகிறது. சிரைகள் விரிவடைந்து, இரத்தம் குறைவாக இதயத்தை அடை ந்து, சிக்கல் குறை க்கப்படும். இந்தச் செயல்களால் இதய அறை களில் அழு த்தம் குறையும். சில வேஸோடைலேட்டர்கள் தமனிகள், சிரைகள் இரண் டையும் விரிவ டையச் செய்யும். உங்கள் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந் துகள் தரப்படும். உங்கள் மருத்துவர் பல வேஸோ டைலேட்டர் மருந்துக் கல வைகளை உபயோகித்துப் பரிசோதி ப்பார். ஏனெனில் ஒவ்வொரு உடலும் வெவ்வேறு விதத்தில் செயல்படு கிறது. ஹைட்ர லைசின், ஐசோ சார்பைட், டைநைட்ரேட், ACE இன் ஹிபிட்டர்ஸ் போன்றவை வோ ஸோடைலேட்டருக்கான உதாரணங்கள்.
இரத்தம் கட்டியாவதைத் தள்ளி ப்போடும் மருந்துகள்:
குறைந்த செயல்கள், இரத்த ஓட்ட த்தினால் இதயத்திலும், இரத் தக் குழாய்களிலும் இரத்தக் கட்டிகள் ஏற்படலாம். சாதாரணமாக இரத்தம் கட்டியாகாமல் தடுக்க ஆன்டிகோவாகுலண்ட் மருந்துகள் தரப்படு கின் றன. உங்கள் கால்கள், இதயம், நுரை யீரலில் உள்ள இரத்தக் குழாய் களில் இரத்தக் கட்டிகள் அபாயகரமாக ஏற்ப ட்டு விடாமல் அவை தடுக் கின்றன. பரிசோதனை களினால் உங்கள் இரத்தம் கட்டி யாகும் நேரத் தைப் பரிசோதிப்பது அவ சியம்.
இந்த மருந்ததை நீங்கள் உபயோ கிக்கும் போது நீங்கள் எளிதில் வெட் டுப்படும், காயப்படும் சூழல்களைத் தவிர்த்திடு ங்கள். உதாரணமாக மின் சார ரேசர் உபயோகியுங்கள். ஷூ அணியுங்கள். காயப்படாதீர்கள். உங்களைக் காயப்படுத்திக் கொண்டால் இரத்தம் நிற்கும் வரை அங்கு அழுத்துங்கள். மருத்துவரிடம் கேட்காமல் ஓவர் தி கவுண்டர் (OTC) மருந் துகளை உட்கொள்ள வேண்டாம். பல மருந்துகள், ஆஸ்பிரின் உட்பட, ஆன்டிகோ வாகுலண்டோடு வினை புரிகி ன்றன. உங்கள் பல் மருத்துவர், மருந்து நிபுணர், மற்ற மருத் துவர்களிடம் இம்மருந்து உட் கொள்வது பற்றிக் கூறுங்கள். நீங்கள் ஆன்டி கோவாகுலன்ட் மருந்தை உட்கொள் கிறீர்கள் என் று தெரிவிக்கும் மெடல் அல் லது அட்டையை அணிந்திடுங்கள்.
செயல்புரியும் கூட்டாளி:
உங்களைப் பராமரிப்பதில் செயல்புரியும் கூட்டாளியாக இருந்து உங்கள் இதய நோயைச் சமா ளிக்க உதவ லாம். உங்கள் இதய நோய் மெதுவாகப் பல மாதங்கள், வருடங்களில் உருவாகியிரு க்கும். சில நாள் அல்லது வார ங்களில் மறைந்துவி டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நல்ல, கெட்ட நாட்கள் இரண்டுமே இருக்கும். சந்தோஷமாக இருந்தால் மிதமிஞ்சி அதில் திளைக்க வே ண் டாம். விரைவில் நீங்கள் சோர்ந்து போய் வரும் நாட்களில் மோசமாக உணரலாம்.
இக்கையேட்டில் குறிப்பிட்டுள்ளவை இதய தசை நோயைக் குணப் படுத் திவிடாது. ஆனால் அந்நோயுடன் வாழ உங்களுக்கு உதவும். இந்நோய்க் கான மேலான முறைகள் கண்டறியப்பட்டு வருகி ன்றன. முதல் சிகிச்சை ஆரம்பிப்பது மிக முக்கியமானது. முதலி லேயே கண் டறியப்பட்டு சிகிச்சை தரப்பட்டால், இதய தசை நோயுள்ள சிலர் குணம் கண்டிரு க்கின்றனர்.
இதய தசை நோயின் சிக்கல்கள்:
எல்லா இதய நோயிலும் சிக்கல்கள் ஏற்பட லாம். உங்கள் இதய நோயால் ஏற்பட க்கூடிய பிரச்சினைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இர ண்டு முக்கிய சிக்கல்களை உங்கள் நினை வில் வைத்திருங்கள். இரத்தம் கட்டியாவதும் கல்லீரல் நீர் கோர்ப்பதும்தான் அவை. அதிகம் தெரிந்து கொள்வதால் ஒரு பிரச் சினையை விரைவில் கண்டறிந்து மருத் துவரிடம் உதவி கேட் கலாம். அபாயமான சிக்கல்களை, மாற்றங்களை உடனுக்குடன் கூறுவதால் தவிர்க்கலாம். முதலிலேயே கண்டறியப் பட்டால் சிகிச்சை தருவது எளிதானது.
இரத்தக் கட்டிகள்:
இதயத்தசை நோயினால் சாதார ணமானதைவிட மெது வாக இரத் தம் உடலில் செலு த்தப்படுகிறது. சாதாரணமாக உங்கள் இதயம் பம்ப் செய் யாததால், இரத்தக் கட்டி (த்ராம்பஸ்) உருவாகும் வாய்ப்புகள் உண்டு. இதயம் அல்லது காலில் உண்டாகும் இரத்தக் கட்டி உடலின் எந்தப் பாக த்திற்கும் சென்றுவிடும். மூளை க்குச் செல்லும் இரத்தக் கட்டி ஸ்ட் ரோக்கை உருவாக்கலாம். நுரையீர லுக்குச் செல்லும் இரத்தக் கட்டியால் மார்பில் வலி, மூச்சுத் திணறல் ஏற்படலாம். இதயத்துடிப்பு அதிகரிப்பது, இருமும் போது சளியில் இரத்தம் தென் படுவது போன்றவை ஏற்ப டலாம். காலில் உள்ள இரத்தக் கட்டியால் வலி, வீக்கம், சிவப்பு, அந்த இடத்தில் சூடு போன்றவை உண் டாகலாம். இம்மாதிரியான அறிகுறி களை உடனடியாக மருத்துவரிடம் தெரிவியுங் கள்.
இரத்தக் கட்டிகளைத் தவிர்த்திட, இரத்தம் கட்டியாவதைத் தள்ளிப் போ டும் (ஆன்டி கோ வாகுலண்ட்) மருந்துகளை உங்கள் மருத் துவர் தருவார். நீண்டகாலம் படுக்கையில் இருப்பதால் இரத்தக்கட்டி உண்டாகாமல் தடுக்க உடற்பயிற்சி செய்வது அல்லது நடப்பது உதவும்.

தொப்பையை கரைத்து இளமையை மீட்க உதவும் யோக முத்திரா : யோகப் பயிற்சி 11


ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு


யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன.  நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது.

குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது தமிழ்வாக்கு. அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச்சிக்கலையும் நீக்குவதால் யோக முத்திரா ஆசனங்களில் முத்திரை பதிக்கிறது. இந்த ஆசனம் எளிமையானது.
 
செய்முறை: பத்மாசனத்தில் அமரவும். இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதிங்கால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக் கொள்ளவும். நிமிர்ந்து நேரே உட்காரவும். நுரைஈரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும். இப்போது மூச்சை விட்டுக் கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும். இப்படி இருக்கும் போது மூச்சை சௌகரியப்படி விடவும் வாங்கவும் செய்யவும். மூச்சை அடக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவர்க்கு வேண்டியபடி மூன்று முதல் 7 தடவைகள் வரை செய்யலாம்.
இந்த ஆசனம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும் செய்வதற்கு அவ்வளவு எளிதாக வந்து விடாது. சிலருக்கு என்ன செய்தாலும் மிகவும் அடிப்படையான ஆசனமான பத்மாசனம் போடவே வராது. அவர்கள் பத்மாசனம் நன்றாக செய்ய வரும் வரை, சாதாரணமாக அமரும் முறையில் சுகாசனத்தில் உட்கார்ந்து, இரண்டு முழங்கால்களுக்கு மேல் இரண்டு உள்ளங்கைகளை வைத்து அழுத்திக் கொண்டு, முன்னுக்கு குனிந்து மூக்கு தரையை தொட முயற்சிக்க வேண்டும். இரண்டு கைகளையும் பின்னுக்கு கட்டிக் கொண்டு தொடவும் முயற்சி செய்யலாம்.

அல்லது சுகாசனத்தில் இரண்டு பெருவிரல்களை கைகளால் பிடித்துக் கொண்டு முன்னுக்கு குனியவும் செய்யலாம். இவைகள் எல்லாம் பத்மாசனம் வராதவர்களுக்கு தான். ஆனால் இடையிடையில் பத்மாசனமும் போட்டு பழக வேண்டும். பிறகு முன் சொன்னது போல் பத்மாசனத்திலிருந்தே குனிய முயற்சி செய்ய வேண்டும். கைகளை குதிகாலின் மீது வைத்துக் கொண்டும் குனியலாம். கைகளை குதிகாலின் மேல் வைத்துக் கொண்டு குனிவது கடினமாக இருந்தால், பின்னுக்கு கைகளை கட்டிக் கொண்டு குனியலாம். சில நாட்களுக்கு பின் கைகளை குதிக்கால்களின் மேல் வைத்துக் குனியலாம். பத்மாசனம் போட்ட படி குனிவதால், கால்கள் ஒன்றை ஒன்று அழுத்தி முதலில் வலிக்கும். நாளடைவில் பழக்கமானால் வலி இருக்காது. சிலருக்கு முன்னுக்கு குனிந்து மூக்கைத் தரையைத் தொட முயற்சி செய்யும் போது பிருஷ்ட பாகம் தூக்கிக் கொள்ளும். அப்படி நேராமல் அழுத்தமாய் தரையில் உட்கார்ந்து பழக வேண்டும்.
சிலருக்கு தொடை பகுதி அதிக சதைகளுடன் மிகவும் பெரிதாக இருக்கும் போது அவர்கள் முன்குனிந்து தரையைத் தொட கடினமாக இருக்கும். சிலருக்கு வயிறு கொழுப்பு சேர்ந்து தொப்பை விழுந்து இருப்பதாலும் முன்குனிய முடியாது. அவர்கள் எல்லாரும் மற்ற ஆசனங்களுடன் யோக முத்திரவையும் முயற்சி செய்து வந்தால், நாளடைவில் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் உள்ள சதை, நரம்புகள் இளக்கம் பெற்று யோக முத்திரா செய்வதற்கு எளிதாகும். இந்த ஆசனம் செய்ய செய்ய தொப்பை பெருமளவு கரைந்து விடும். வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பு தான் சர்க்கரை நோய்க்கான அடிப்படை காரணம் என்று தற்போது சொல்கிறார்கள்.
இந்த வயிற்றை சுற்றிய கொழுப்பை யோக முத்திராவில் எளிதில் கரைத்து, தொப்பையை போக்கி மிகவும் இளமையுடன் காட்சியளிக்க முடியும். தொப்பை கரைவதால் மிகவும் சுறுசுறுப்பு வந்து சேரும். சிலர் ஒல்லியாய் இருப்பார்கள். இவர்களுக்கு தொப்பையும் இருக்காது. ஆனால் இவர்களுக்கும் யோக முத்திரா செய்ய சுலபமாக வராது. காரணம், இவர்களது முதுகுஎலும்பு கட்டை பாய்ந்து இருக்கும். அதாவது, குனிந்து நிமிரும் உடற்பயிற்சிகளே இல்லாத காரணத்தால் முதுகுஎலும்பு வளைய முடியாமல் கட்டை போன்று திடமாக காணப்படும். இவர்களும் தொடர்ந்து யோக முத்திராவை பயிற்சி செய்யும் போது நன்றாக வளைந்து தரையை தொட முடியும்.
யோக முத்திராவால் முதலில் மூக்கை வைத்து தரையை தொடுவதும்,பின்னர் வாயால் தரையை தொடுவதும் என்று நன்றாக பழக்கமான பிறகு அதே நிலையில் 20 எண்ணும் வரை இருக்க வேண்டும். யோக முத்திரா முழுமையான நிலையில் சாதாரணமாக மூச்சை இழுக்கவும், விடவும் செய்யலாம்.
குறிப்பு;
யோக முத்திராவை வழக்கமாய் செய்யும் பெண்கள் கர்ப்பனமானால் இரண்டு மாதங்கள் வரை தான் செய்ய முடியும். அதன்பின் கைகளை வயிற்றின் குறுக்கே வைக்காமல் 1 மாத கால அளவிற்கு செய்யலாம். இந்த காலத்திற்கு மேல் கர்ப்பமான பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. மிகவும் முக்கியமாக கர்ப்ப காலத்தில் இந்த ஆசனத்தை பழகவே கூடாது. பத்மாசனத்தில் மட்டும் உட்காரலாம்.

வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது . . .


இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலியும், கழுத்து வலியும் அழையா விருந்தாளிகளா க தானாகவே வந்து விடுகின்றன. ”வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக் கும் கொடுக்கும் முக்கியத்துவத்தி ல் சிறிதளவாவது, வாகனத்தை ஓட்டும் முறைக்கும், நம் உடலுக்கு ம் கொடுத்தால், வலிகள் வராமலே தடுத்து விடலாம்” என்கிறார் பிசி யோதெரபிஸ்ட் பிரேம்குமார். 
”வாகனம் ஓட்டும்போது, கழுத்து, இடுப்புப் பகுதிக்கு முன்னும் பின்னு ம் இருக்கிற தசைப் பகுதிதான் நம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இந்த இரண்டு தசைப் பகுதிகளும் ஒன் றுக்கொன்று உறுதுணையாகச் செயல்பட வேண்டும்.
பொதுவாகவே, உடல் தசைகளி ன் அமைப்பு முறைப்படி வேலை செய்யச் செய்யத்தான் அதன் உறுதித்தன்மை அதிகரிக்கும். நாம் வாகனம் ஓட்டும்போது, எதிர்காற்றைக் கிழித்துக் கொண் டு செல்ல வேண்டியுள்ளது. இந் தச்சமயத்தில் காற்று நம்மைப் பின்னோக்கித் தள்ளும். அப்போ து நமது உடலின் பேலன்ஸ் மா றும். இதைச் சரி செய்வதற்கு, நாம் உடலை முன்னோக்கித் த ள்ளுவோம். இதனால், நம் முன் பக்க தசை அதிக அளவில் முன் னோக்கி வேலை செய்யும். அந்தச்சமயத்தில், பின் பக்க தசைக ளுக்கான வேலைப் பளு குறை வாகவே இருக்கும். இப்படி, பின் பக்க தசைப் பகுதி ஓய்வு நிலையி லேயே இருப்பதால், அதன் உறுதித் தன்மையை இழந்து, முதுகெ லும்புகளுக்கு மத்தியில் இருக்கக் கூடி ய இணைப்புகள் சரிவர செயல்பட முடி யாத நிலை உருவாகிவிடும். இதன் கா ரணமாக, முதுகெலும்புகளுக்கு இடை யில் உள்ள சிறு துவாரத்திலிரு ந்து வெளிவரும் நரம்புகள் பாதிப்புக்கு உள் ளாகும்.  
மேலும் இடுப்பையும், கழுத்தையும் சுற்றி இருக்கிற தசைப் பகுதி தான், இடு ப்புப் பகுதியிலுள்ள 5 பெரிய எலும்புக ளுக்கும், கழுத்துப் பகுதியிலுள்ள 7 எலும்புகளுக்கும் பக்க பலமாக இருக்கி றது. இந்த இரண்டு பகுதிகளும் உறுதியாக இருந்தாலே வாகனம் ஓட்டுவ தால் ஏற்படக்கூடிய 70 சத விகிதப் பிரச்னைகளைத் தவிர் த்துவிட முடியும்” என்றவர், வலிகளைக் தடுக்கும் வழி முறை களையும் விளக்கினார்.
”இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவர் களுக்கு இருவிதமான வலிகள் வர லாம். ஒன்று, தசை வலி; மன் றொன்று, முதுகு எலும்புகளிலு ள்ள இணைப்புகள் தொடர்பானது. வலி ஏற்படும் போது, அது தசை வலியா அல்லது எலும்பு இணைப்புகள் தொடர்பான வலியா என்பதை நா மே எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.
நம் கட்டை விரலைத் தவிர, மற்ற நான்கு விரல்களின் நுனிப் பகு தி தசையை அழுத்திப் பார்க்கவும். அதில் வலி ஏற்பட்டால் அது தசை வலி. அப்படி இல்லாமல் கைகள் மரத்துப் போனது போன்று தோன் றினால், கழுத்துப் பகுதியில் உள்ள ஏதோ ஒரு நரம்பு பாதிக்கப்ப ட்டுள்ளது என்று தெரிந்து கொ ள்ளலாம். இதேபோல், இடுப்பு முத ல் பாதம் வரை வலியோ அல்லது மரத்துப் போனது போன்ற உணர் வோ இருந்தால், இடுப்புப் பகுதியி லுள்ள நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
தசை வலியாக இருந்தால், சுடு தண்ணீரால், வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தே தசை வலி யைச் சரி செய்து விடமுடியும். அதுவே மூட்டுகளில் வலியாக இருந்தால், பிசியோதெரபிஸ்டை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்” என்றவர், வாகனம் ஓட் டுகிற முறையையும் விரிவாகக் கூறினார்.
”இன்றைய கல்லூரி மாணவர்கள் பைக் டேங்க் நோக்கி சாய்ந்த வண்ண ம் ஓட்டுவது மாதிரியான பைக்குக ளைத்தான் அதிகம் விரும்புகின்ற னர். பைக்குகளும் ஸ்போர்ட்ஸ் மாட லிலேயே தயாரிக்கப்பட்டு வருகின் றன. பைக்கினுடைய பவரையும், சிசி அளவையும் கவனிப்பவர்கள், வாக னத்தின் இருக்கையின் அமைப்பு தங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்பதைப் பார்க்க மறந்து விடுகின் றனர். குறிப்பாக, வயது அதிகமுள்ள வர்கள் முதுகை வளைத்து, சாய்ந்த வாக்கில் ஓட்டுவது என்பது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயம். அதே போல், பைக் இருக் கையின் மிக முன்பாகவோ அல்லது மிகவும் பின்னாலோ அமர்ந்து ஓட்டுவதைத் தவிர் க்க வேண்டும். தினமும் கழு த்து மற்றும் இடு ப்புப் பகுதி க்கான பிரத்யேக உடற் பயிற்சி களைச் செய்வதன் மூலம் உட ல் வலிப் பிரச்னைகளிலி ருந்து விடுபடலாம்” என்றவர், அதற் கான உடற்பயிற்சிகளையும் கூறினார்.
* வெறும் தரையில் நேராக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பிற கு, இரண்டு முழங்காலையும் மடக்கி நெ ஞ்சோடு சில விநாடிகள் சேர்த்து வை த்துக் கொள்ள வேண்டும். பின்பு, காலை மடக்கியவாறே தரையில் வைக்கவும். இப்படி தினமும் பத்து முறை செய்து வந் தால், உடலின் பின் பக்கத்தசைகள் விரி வடைந்து, ரத்த ஓட்டமும் சீராகும்.
* குப்புறப் படுத்துக்கொண்டு இரண்டு கை களையும் நெற்றிக்குக் கீழாக வைத்துக் கொள்ளவும். பின்பு, ஒரு காலை மட்டும் நீட்டிக் கொண்டு, மற்றொரு காலைத் தூக்க வேண்டும். இதேபோல், அடுத்த காலையும் தூக்கி நீட்டவும். இப்படிச் செய்வதன் மூலம், இடுப்புப் பகுதியிலு ள்ள தசைகள் வலுவாகும்.
*  சேரில் அமர்ந்தபடியே, இரண்டு தோள் பட்டைக ளையும், மேலே உயர்த்தி, சில விநாடிகள் கழி த்துக் கீழே இறக்கவும். தினமும் இந் தப் பயிற்சி யை பத்து முறை செய்து வந்தால், கழுத்து தொடர் பான வலிகளை எளிதில் தவிர்க்க முடியும்” என் றார் பிசியோதெர பிஸ்ட் பிரேம்குமார்.