Lord Siva

Lord Siva

Tuesday, 31 January 2012

தம்பதிகள் ஒருநாளைக்கு எத்த‍னை முறை தாம்பத்திய(ம்)த்தில் ஈடுபடலாம்


ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளு க்கு இடையே உள்ளது.
இத்தனை முறைதான் என்று திட்டவட்டமாக கூற முடியாது. தாம்பத்யம் இனிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் செக் ஸ் வைத்துக் கொள்ளலாம். திரு மணமான புதிதில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை உடல் உற வில் ஈடுபடுபவர்கள் கூட நாளடைவில் குறைத்துக் கொள்ளக் கூடும்.
வீட்டுச் சூழல், லைஃப் ஸ்டைல், தனிமையின்மை, நேரம் கிடைக் காமை போன்ற காரணங்களால் செக்ஸில் ஈடுபடுவது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரலா ம். புதிதாக திருமணமானவர்களு க்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேகமும் அதிகமாக இருக்கும்.
ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை கூட உறவு வைத் துக் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கி றார்கள் மருத்துவர்கள். அதிக அளவிலான உறவால் உண்மை யில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப் பட உதவுகிறது.
எனவே அதிகளவில் உறவு வை த்துக் கொள்வதிலும் தவறில்லை என்பது மருத்துவர்கள் தரும் ஆலோசனை. நியூராட்டிசம் பிரச் சினை இருப்பவர்கள் எதற்கெடுத் தாலும் கோபப்படுவார்கள், எரிச்ச ல் படுவார்கள். யாராவது ஏதாவது சொன்னால் சட்டென்று மூக்கு நுனியில் கோபம் வந்து விடும்.
இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவ ர்களுக்கு திருமணமும், தாம்பத்ய உறவும் மிகப்பெரிய நிவாரண மாக அமைகிறது என்கிறது ஒரு ஆய்வு. அதுதான் அவர்களது மண வாழ்க்கை பெரும் மகிழ்ச்சிக்குரி யதாக மாற நல்ல அடித்தளமாக அமையும் என்கின்றனர் மருத்து வர்கள்.
இனிய மண வாழ்க்கை
இதுகுறித்து நடத்தப்பட்ட ஒருஆய்வில், புதிதாக மணமான ஜோடி யை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களிடம் ஆறு மாதங்களுக் கு ஒரு முறை முதல் நான்கு ஆண்டு களுக்கு சோதனை நடத்தப்பட்ட து. இதில் ஆரம்பத்தில் அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அவர்களுக்கு (ஆண் மற்றும் பெண்களுக்கு) எந்தவிதமான டென்ஷனும் வரவே இல்லையா ம்.
பதட்டம் குறைந்து, மிகுந்த மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருந்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம், இந்த கால கட்டத்தில் அவர்கள் அதிக அள வில் தாம்பத்ய உறவில் ஈடுபட்டதே இதற்கு காரணம். ஒரு ஆண்டு கழித்து தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும் அளவு குறையத் தொடங்கியுள்ளது.
இதனால் அவ்வப்போது எரிச்சல் வந்து எட்டிப் பார்த்துள்ளது அவர்களிடம். அதேசமயம், பெரிய அளவி்ல் டென்ஷனுக்குள்ளாக வில்லை. காரணம், வாரத்திற் கு குறைந்தது 3 முறையாவது அவர்கள் உறவில் ஈடுபட்டனர்.
நரம்பியல் கோளாறுகள் தீரும்
4வது ஆண்டுவாக்கில் அவர்க ளுக்குள் உறவுகள் குறைந்து வந்திருப்பதை ஆய்வின் மூல ம் மருத்துவர்கள் கண்டறிந்த னர். அதாவது மாதத்திற்கு 3 அல்லது 4 முறை மட்டுமே உறவு கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஜோடிகள். இதனால் நியூராட்டிசம் அவர்களிடையே எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.இதன் மூலம் தாம்பத்ய உறவு நரம்பியல் கோ ளாறுகளுக்கு நல்ல மருந்து என் பது டாக்டர்கள் பரிந்துரைக்கின்ற னர்.
பக்குவமடையும் மனம்
எனவே புதிதாக திருமணமானவர் கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உறவு கொள்வதில் ஆர் வம் காட்டலாம். உடல் நலம் பாதிக்காத அளவுக்கு பார்த்துக்கொ ண்டு, தாம்பத்ய உறவில் அதிக அளவில் ஈடுபடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியா கவும் பக்குவப்படுத்த உதவும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட மருத்து வர்கள்.
எனவே எதற்கெடுத்தாலும் வெக்ஸ் ஆகும் பழக்கம் உடை யவர்கள், டென்சன் ஆகும் குண முடையவர்கள், காலாகாலத் தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆக விடலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு

Posted On Jan 31,2012,By Muthukumar
குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.
பச்சைத்தண்டு
கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும்.
செங்கீரைத்தண்டு
பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும். உடல் சூட்டினை கட்டுப்படுத்தும்.
பெண்கள் நோய் குணமாகும்
பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத்தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம் வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு,செங்கீரைத்தண்டினை சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய் காலத்தில் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல் வலி வேதனைகளைப் போக்கும்.
வெண்கீரைத் தண்டு
வெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும் குணமடையும்.
யார் சாப்பிடக்கூடாது
கீரைத்தண்டில் பெருமளவு இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன. இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே சீதள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாள் அன்று இதனை சாப்பிட சளி பிடிக்கும்.

Ajwain Lehiyam --Indigestion and Acidity


  Posted On Jan 31,2012,By Muthukumar,
Ajwain lehiyam is a herbal treatment or medicine for indigestion and acidity. The ajwain lehiyam or balls are removed from fire and put on the tongue after cooling.

Add your private note
  Preparation Time: 1/2 Hour
Cooking Time: 1 Hour



Ingredients

 

Method

  1. Shallow fry all the ingredients except jaggery and ghee without oil.
  2. Finely powder them in a mixer.
  3. Mix with ¾ cup of water and make a pulp.
  4. Boil the pulp in a thick-bottomed vessel.
  5. Keep stirring continuously till it becomes thick.
  6. Add jaggery and stir again.
  7. Add ghee and boil for another 10 to 15 minutes.
  8. Remove from fire.
  9. Eat a small ball of lehiyam
  10. This is a very good medicine for indigestion and acidity.


தோல்நோய்களை குணமாக்கும் சல்மூக்ரா எண்ணெய்!

Posted On Jan 31,2012,By Muthukumar
மரங்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. டையேஷியஸ் மரம் அல்லது சல்மூக்ரா எனப்படும் பசுமை மாறா மரம் மேற்கு மலைத் தொடர்களின் காடுகளிலும் கொங்கனில் தெற்குப் பகுதிகளிலும் பொதுவாக காணப்படுகிறது இந்த மரத்தின் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. இந்த விதைகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
விதைகளில் ஹிட்னோகார்ப்பிக் மற்றும் சால்மூக்ரிக் அமிலங்கள், கோர்லிக், ஒலியிக் மற்றும் பால்மிட்டிக் அமிலங்கள் இவற்றோடு க்ரைசோக்ரைசால், ஐசோஹிட்னோ கார்ப்பின் அகிய வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
சல்மூக்ரா எண்ணெய்
விதைகளில் உள்ள டேனின்கள் காய்ச்சலை குணமாக்கும். அலோபதி மருத்துவத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த எண்ணெயாக சல்மூக்ரா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. விதையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் லேப்ரஸிக்கு பயன்படுத்தப்படுகிறது.
தோல்நோய்களுக்கு மருந்தாகும்
தோல்நோய்களுக்கு மருந்தாக இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆழமான வெட்டுக்காயம், தோல் நோயினால் ஏற்பட்ட தழும்புகளையும் நீக்கி மேற்புறத்தோலினை பழைய நிலைக்கு கொண்டுவரும். என்சைமா, அரிப்பு, படை உள்ளிட்ட தோல்நோய்களுக்கும் இந்த சல்மூக்ரா எண்ணெய் சிறந்த மருந்தாகும். குழந்தை பிறப்பிற்கு பின்னர் வயிற்றுப்பகுதி சுருங்கி தழும்பு ஏற்படும் போது அவற்றை நீக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது.
குஷ்டநோய்க்கு மருந்து
சால்மூக்ரா களிம்பு ஒரு பகுதி எண்ணெய் 4 பகுதி வாஸலினுடன் கலந்து தயாரிக்கப்படும். இது பல தோல்நோய்களுக்கு நல்ல மருந்தாகப் பயன்படும். எலுமிச்சை சாற்றோடு கலந்து வாத நோயில் ஏற்படும் சுளுக்குகளை குணப்படுத்தும். விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் குஷ்ட நோய்க்கு மருந்தாகும். 5துளிகள் அளவு எடுத்து படிப்படியாக 30 துளிகள் வரை அதிகரித்து தசைக்குள் ஊசி மூலம் செலுத்தப்படும். இதற்கு எத்தில் எஸ்டர்கள் மற்றும் ஹிட்னா கார்ப்பிக் அமில உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
அரைத்த விதைகள் பிற பொருட்களான சல்ஃபர்,கற்பூரம்,எலுமிச்சை சாறு ஆகியவற்றோடு கலந்து மற்றும் ஜட்ரோஃபா சர்க்காஸ் விதை எண்ணெயோடு கலந்து காயங்கள் மற்றும் புண்கள் குணப்படுத்தப் புறப்பூச்சாகப் பயன்படும்.

எளிய வைத்திய முறைகள்… உடல் மெலிந்தவர்களுக்கு…

Posted On Jan 31,2012,By Muthukumar

பொதுவாக உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.
· வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும். வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம்.
· நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலம் குறைந்தவர்கள் அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும்.
· பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.
· பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.
· சோற்றுக் கற்றாழை மடலை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.
· தூதுவளை பொடியை தேனில் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
· கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.
· தேவயான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.
· முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.
· உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி. இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.
· முதல் வாரத்தில் தூதுவளைக்கீரை, அடுத்த வாரத்தில் பசலைக்கீரை..
அதேபோல் அடுத்த வாரத்தில் தூதுவளைக் கீரை என மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கி தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

Saturday, 28 January 2012

தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்றுநோய் தவிர்க்கலாம்

Posted On Jan 28,2012,By Muthukumar
இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல வகையான புற்றுநோயில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 28 முதல் 35 சதவீதமாக உள்ளது என, 2011ம் ஆண்டைய புள்ளி விவரம் ஒன்று சொல்கிறது.
முன்பெல்லாம், 50 முதல் 70 வயது நிறைந்த பெண்களுக்கே, இவ்வகை புற்றுநோய் ஏற்பட்டது. இப்போது, 30 முதல் 50 வயதுள்ள பெண்களைக் கூட, இந்நோய் தாக்குகிறது. கடந்த 2005ம் ஆண்டு வரை, கர்ப்பப் பை வாய் புற்றுநோய் தான், தமிழக பெண்களிடையே அதிகம் காணப்பட்டது. சமீபத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகம் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 30 வயதுள்ள பெண்கள் அனைவரும், ஆண்டுக்கு ஒரு முறை, மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
மார்பகப் புற்றுநோயின் தன்மைகள்
*மார்பகத்தில், வலி இல்லாத கட்டி உருவாகி, நாளடைவில் பெரிதாவது.
*சில நாட்களுக்குப் பின், அக்குளில் வீக்கம் தென்படும்.
*முலைக் காம்பு, உள்வாங்கிக் கொள்ளும்.
* காம்பிலிருந்து ரத்தம் வெளியேறும்.
மார்பில் தோன்றும் அனைத்துக் கட்டிகளும் புற்றுநோய் தானா?
* இல்லை. பெரும்பாலானவை சாதா கட்டிகளாகவே இருக்கும். பயப்படாமலும், தயங்காமலும் டாக்டரிடம் பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும். அது புற்றுநோய் தான் என, நாமாகவே முடிவு செய்து, பயப்படுவது வீண். 15 முதல் 20 சதவீதம் வரையிலான கட்டிகளே, புற்றுக் கட்டிகளாக உருவாகின்றன.
மார்பகப் புற்றுநோய்க்கும், தாய்ப்பால் கொடுப்பதற்கும் தொடர்பு உள்ளதா?
*தாய்ப்பால் கொடுக்கும்போது, பெண்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடு அடைகிறது. இந்த மாறுபாடு, மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கிறது.மார்பகப் புற்றுநோய் கண்டறிவதில், குடும்ப வரலாறு எந்த வகையில் முக்கியத்துவம் பெறும்.
* பரம்பரையாக இந்நோய்க்கான அறிகுறிகள் தென்படுவோர் எண்ணிக்கை, 5 முதல் 10 சதவீதமாக உள்ளது. பரம்பரையாக குடும்பத்தினர் பாதிக்கப்படுவது தெரிந்தால், அவர்களின் சந்ததியினரிடம், பி.ஆர்.சி.ஏ., 1 மற்றும் பி.ஆர்.சி.ஏ., 2 ஆகிய மரபணு பரிசோதனைகளை மேற்கொண்டால், நோயைக் கண்டறியலாம். இந்த மரபணுக்களில் மாற்றம் ஏற்படும்போது, மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு, 70 முதல் 80 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
நோயின் பல நிலைகளில், எந்த வகையான சிகிச்சைகள் உள்ளன?
* அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி, கீமோதெரபி, ஹார்மோன் தெரபி உட்பட பல சிகிச்சைகள் உள்ளன.
இச்சிகிச்சைகளின் பக்க விளைவுகள் என்ன?
* பசியின்மை, வாந்தி ஏற்படுதல், சோர்வு ஏற்படுதல், வாய் உலர்தல், காலத்திற்கு முன்னதாகவே மாதவிடாய் நின்று போதல், நோய் எதிர்ப்புத் திறன் குறைதல். நோய் அறிகுறியோ, மார்பகத்தில் சிறிய மாறுபாடு தென்பட்டாலோ, உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்வது அவசியம். சாதா கட்டிகளைக் கூட, புற்றுநோய்க் கட்டியாக கற்பனை செய்து கொண்டு, கலக்கம் அடையக் கூடா

யோகா செய்வது எப்படி?


Posted On Jan 28,2012,By Muthukumar


வரலாறு

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிர்ஷி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம் என்பது அந்த காலத்தில்  வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் இருந்தாலும் . இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பஞ்சலி முனிவர் தான். இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமாகவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளார்கள்.
முக்கியமான யோகாசனங்கள் சில: 

  • உட்காசனம்
  • பத்மாசனம்
  • வீராசனம்
  • யோகமுத்ரா
  • உத்தீதபத்மாசனம்
  • சானுசீரானம்
  • பஸ்திமோத்தாசனம்
  • உத்தானபாத ஆசனம்
  • நவாசனம்
  • விபரீதகரணி
  • சர்வாங்காசனம்
  • ஹலாசனம்
  • மச்சாசனம்
  • சப்தவசீராசனம்
  • புசங்காசனம்
  • சலபாசனம்
  • தணுராசனம்
  • வச்சிராசனம்
  • மயூராசனம்
  • உசர்ட்டாசனம்
  • மகாமுத்ரா
  • அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
  • சிரசாசனம்
  • சவாசனம்
  • மயுராசனம்
  • உசர்ட்டாசனம்
  • அர்த்த மத்ச்யோந்திராசனம்
  • அர்த்த சிரசானம்
  • சிரசாசனம்
  • நின்ற பாத ஆசனம்
  • பிறையாசனம்
  • பாதாசுத்தானம்
  • திருகோணசனம்
  • கோணாசனம்
  • உட்டியானா
  • நெளலி
  • சக்கராசனம்
  • சவாசனம்/சாந்தியாசனம்
  • பவனமுத்தாசனம்
  • கந்தபீடாசனம்
  • கோரசா ஆசனம்
  • மிருகாசனம்
  • நடராசா ஆசனம்
  • ஊர்த்துவ பதமாசனம்
  • பிரானாசனம்
  • சம்பூரண சபீடாசனம்
  • சதுரகோனோசனம்
  • ஆகர்சன தனூராசனம்
  • ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
  • உருக்காசனம்
  • ஏக அத்த புசங்காசனம்
  • யோகா நித்திரை
  • சாக்கோராசனம்
  • கலா பைரப ஆசனம்
  • அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
  • கவையாசனம்
  • பூர்ண நவாசனம்
  • முக்த அகத்த சிரசாசனம்
  • ஏகபாத சிரசாசனம்
ஏன் யோகாசனம் செய்யவேண்டும் : 
  •  இன்றைய  கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்" என்பது போல்  நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
  • மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட   இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு  காணப்படும்.  
  • ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள்   இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
  • ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை   அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
  • நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.
  • உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை  செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
இங்கு கீழே சில நம் அன்றாட வாழ்விற்கு தேவையான சில முக்கியமான யோகாசனங்களை பற்றி செய்யும் முறை செய்வதால் உள்ள நன்மை ஆகியவைகளை விளக்கி உள்ளேன். அனைவரும் இதை கடைபிடித்து பயன் பெறவும்.

பத்மாசனம் 

நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து  உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் :  இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும். 

தணுராசனம்

குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும். இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற்சியை செய்யலாம்.
 பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல்,தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.


சிரசாசனம்  

தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது.
பயன்கள்:  தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப்பாகும்.
வஜ்ராசனம் : 

இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே  நிலையில் 15 நிமிடம் இருக்கவும். 
பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமாகுதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும். 

விபரீதகரணி 

நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.  
பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு,வயிறு,பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.   

புஜங்காசனம் 


தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது. 
பயன்கள்:  இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.     

பச்சிமோத்தாசனம்

இரு கால்களை  நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும். 

டுடே லொள்ளு  
Photobucket
 ஓடு ஓடு இந்த நாசமா போன உலகத்துல நாம இருக்கா வேணாம் நம்ம கிரகதுக்கே போயிடலாம்.




சருமத்தைக் காக்கும் குப்பைமேனி

Posted On Jan 28,2012,By Muthukumar


மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.
மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று.
குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும்.
குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்படவில்லை.
மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு.
Tamil - Kuppaimeni
English - Indian acalypha
Telugu - Kuppi-Chettu
Malayalam - Kuppa-meni
Sanskrit - Arittamajarie
Botanical name - Acalypha indica
இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.

தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்

தேரையர் குணபாடம்
பொருள் - குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்க
குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

சொறி, சிரங்கு நீங்க
குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய்
யிலயட்டியிலை மேனியை யா

அகத்தியர் குணவாகடம்
பொருள் - குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.
குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.
குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.
மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.
குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.
குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.

ஆண் குழந்தையை பெற விரும்பும் பெண்கள் உட்கொள்ள‍ வேண்டிய‌ உணவுகள்


ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத் தில் அவசியம் காலை உணவை உட் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று!
கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்ற வை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் குழந்தை – அதுவும் ஆண் குழந்தையாக – பெற்றுக் கொள் ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாசம் வரை இருக்கும். பொது வாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்து கின் றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட் கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவா குமா அல்லது பெண்ணாக உருவா குமா என்பதையும், அந்த குழந்தை யின் ஆரோக்கியத்தையும் தீர்மானி க்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ் ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத் தின் தொடக்கத்தில் காலை உண வை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகா ரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப் பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவே ளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்க ளுக்கு பெண் குழந்தை பிறக் க வாய்ப்புள்ளதாகவும் கூறு கிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
சரி ஆண்குழந்தைக்காக இத் தனை தூரம் ஆராய்ச்சியெல் லாம் மேற்கொண்டவர்கள், பெண் குழந்தைதான் வேண்டும் என்று அடமாக ஆசை கொள்ளும் பெண் களுக்காக இதுபோன்ற ஆராய் ச்சியெல்லாம் மேற்கொள்ளவில் லையா என்று கேட்டால், அதற் கும் “உள்ளேன் ஐயா!” என்று ஆஜ ராகிறார்கள் ஹாலந்தின் மாஸ் ட்ரிக்ட் பல்கலைக் கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!
இவர்கள் மேற்கொண்ட ஆய்வி ல், கர்ப்ப காலத்தில் பெண்கள் வாழைப்பழம் உண்பதை நிறுத்தி, உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொ ண்டால் பெண் குழந்தை பிறக்க பிரகாசமான வாய்ப்பு உள்ள தாக தெரியவந்துள்ளது. குறிப்பாக சோடியம், பொட்டாசியம் அதிக ம் உள்ள இறால், அரிசி உணவு கள், உருளைக் கிழங்கு, பிரட் போ ன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.அவற்றுக்குப் பதிலாக கால் சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவு களை உட்கொள்ளலாம் என பரிந்துரைக்க்கிறார்கள் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்.
இவர்கள் கூறுவதை, கொலம்பிய பல்கலைக் கழக ஆராய்ச்சியா ளர்கள் கூறியவற்றுடன் – அதா வது கொழுப்பு சத்து குறைந்த உணவை உட்கொள்ளும் கர்ப் பிணி பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப் புள்ளது என்று தெரிவித்ததோ டு – ஒப்பிட்டு பார்க்கையில் நம்பகத்தன்மை மேலும் அதி கரிப்பதாகவே தோன்று கிறது.
ஆனால் இந்த ஆராய்ச்சி, ஆய்வு எல்லாம் இன்ன குழந்தைதான் வேண்டும் என்று அடம் பிடிப் பவர்களுக்குத்தான்…! ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ, ஒரு தாய்க்கு எந்த குழந்தையுமே அவள் குழந் தைதானே?!

பற்களை பாதுகாக்கும் நாகலிங்கம்!

Posted On Jan 28,2012,By Muthukumar   
நாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் அதிசயமான மருத்துவ குணத்தை கொண்டுள்ளன. ஆன்மீகத்துடன் அதிசயம் நிறைந்துள்ள இந்தப் பூக்கள் செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றன. இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன.
வெடிக்கும் கனிகள்
உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூக்கள் வணங்கப்படுகின்றன. மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக இருந்தாலும், இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர். பூவின் தோற்றம் சிவாலயத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும். நடுவில் சிவலிங்கமும், அதைச்சுற்றி முனிவர்கள் இருப்பதைப்போல தெய்வாம்சம் நிறைந்த அழகிய வடிவில் காணப்படும்.
இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இதில் டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் போன்றவை காணப்படுகின்றன.
விஷ ஜூரத்திற்கு மருந்து
இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. வைரத்தை வைரத்தால் அறுப்பதைப் போல விஷ சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது. இலைகள் தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகி நிவாரணமளிக்கிறது
இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.
பற்களை பாதுகாக்கும்
இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

ஆண்கள் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம்


ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டி னாலும், என்றும் மார்க்கண்டேய னாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரி ய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல….! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறை ந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.
நமது வயதை முதலில் வெளிப்படு த்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட்காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையு டன் இருக்க இதோ சில டிப்ஸ். . . ! .
நாம் அதிகமாக சூரிய வெளிச் சத்தில் பயணிப்பதாலும், எண் ணெய் அதிகமுள்ள உணவுக ளை உட்கொள்வதாலும், மாசுள் ள காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில் முதுமை தோற் றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்) தயாரிப்புகளை பயன்படு த்தவது நல்லது. மேலும் அதிக மான தண்ணீர் பருகுதல் சரும த்தை பாதுகாக்கும்.
பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 விழுக் காடு கூடுதல் கடினத்தன் மையுடன் இருக்கும். ஆயி னும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்க ளை காட்டி லும் ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல் பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.
தொடர்ந்து ஷேவிங் செய்வதன் கார ணமாக முகத்தில் முதிர்ச்சி தோன் றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன் படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும் போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெது ப்பான தண் ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முக ம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோ ன்றும்.
ஆண்கள் என்றும் இளமையுடன் இரு க்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகை கள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட் கொள்ள வேண்டும். உடல் திசுக்க ளை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட உணவு களை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாக வும் காணப்படும்.
மேலும் பசலை கீரை, அவுரி நெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றை யும் சேர்த்துகொள்வது மிக வும் நல்லது.
சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப் பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட் டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவை யான சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால் சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரி தும் பாதிக்கப்படும் என்பதை அநேகமா னோர் அறிவதில்லை. இரவில் குறைந் தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடை பிடித்து வந்தால் மனதில் புத்து ணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கி யத்திலும் குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.
இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங் கிய தொடர்பு இருப்பதால், அதுகுறித்த விழிப்புணர் வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண் கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சி யுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமை யும் கூடிக்கொண்டே போகும். . . !

எளிய இய‌ற்கை மருத்துவக் குறிப்புகள்


பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குண மாகும்.
தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத் துக் கட்ட நஞ்சு நீங்கும்.
வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய் ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்று வலி போகும்.
காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பி லாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.
மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சி க் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.
மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக் காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலை யில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.
அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச் சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பி டவும் 3 நாளில் தீரும்.
குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லி வற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப் பிட, மலசலம் வெளியேறும்.
பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படி காரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடி த்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்த கடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
வண்டு கடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைல பதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மை போலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண் ணெயில் மத்தித்து கொடு க்க கிருமிகள் வந்துவிடும்.
மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.
மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத் தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலை மாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால் மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண் டைக்குழியில் தடவ தீரும்.
தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலை வலி தீரும்.
சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையி ல் பருக வேண்டும்.
அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளை க்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடு த்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணி ந்து ஆறும்.
நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வர வும்.
பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காய வைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண் டும்.
உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகு போலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண் ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணிமீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக் கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற் படி புண் மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட் கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத் தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண் ணோய் தீரும்.
கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட் கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரை த்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்கு த்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக் கவும் வெற்றிலை யைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத் துக் கட்டலாம்.
தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலி லுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலை யைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண் வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடி நீரி ட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடி த்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சி கரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.
வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.