Posted on March 16,2012,By Muthukumar
மனிதகுலத்தைப் பயமுறுத்தும் பயங்கர நோயான எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதது ஒரு பெரும் சோகமாகத் தொடர்கிறது. இந்நிலையில், எய்ட்ஸுக்கு காரணமான வைரசான எச்.ஐ.வி.யை வெளியேற்றக்கூடிய புரதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
என்.ஒய்.யு. லாங்கோன் மருத்துவ மையத்தின் தலைமையில் ஒரு சர்வதேச ஆய்வாளர்கள் குழு இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டது.
இந்த ஆய்வுக்குழு, மனித உடம்பின் நோய் எதிர்ப்பு அமைப்பு, எச்.ஐ.வி. பரவலைத் தடுப்பதற்கு முயலும் முறையைக் கண்டுபிடித்தது. அந்த முறையை மேலும் கூர்மைப்படுத்துவதன் மூலம் எச்.ஐ.வி. வளர்ச்சி வேகத்தைக் குறைத்து எய்ட்ஸை முடக்கிவிடலாம் என்கிறார்கள்.
``வைரஸ்கள், குறிப்பாக எச்.ஐ.வி. குறித்துப் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. உடம்பானது குறிப்பிட்ட வைரஸுக்கு எதிராக எந்த எதிர்ப்புச் செயல்முறையை மேற்கொள்கிறது, அப்போது அந்த எதிர்ப்புச் செயல்முறைகளுக்கு குறிப்பிட்ட வைரஸ் எப்படி பதில்வினையை மேற்கொள்கிறது என்று அறியும் நோக்கில் மேற்கண்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன'' என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் குறித்துக் கூறுகிறார், ஆய்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான நதேனியல் ஆர். லாண்டா.
இவர் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் கவனம் செலுத்திய புரதத்தின் பெயர் ஷிகிவிபிஞி1. `டென்ட்ரிக் செல்கள்' எனப்படும் மனித உடம்பின் நோய் எதிர்ப்புச் செல்களில் உள்ள இந்தப் புரதம்தான் எச்.ஐ.வி.க்கு எதிராகச் செயல்படுகிறது. ஆனால் இது எப்படிச் செயல்படுகிறது என்று இதுவரை சரியாகத் தெரியவில்லை.
தற்போது அதற்கான பதிலை லண்டாவும் அவரது குழுவினரும் கண்டுபிடித்துவிட்டார்கள்.
எச்.ஐ.வி. போன்ற வைரஸ் ஒரு செல்லை தாக்கும்போது அது பெருகுவதற்கு செல்லின் மூலக்கூறுப் பொருளைக் கடத்தி `காப்பி'யடிக்கிறது. `டிஆக்சிநியூக்ளியோடைட் டிரைபாஸ்பேட்' வடிவில் உள்ள அந்த மூலக்கூறுப் பொருள்தான் டி.என்.ஏ.வின் அடிப்படைக் கட்டுமான அமைப்பாகும்.
செல்லில் வைரஸ் தனது வேலையைக் காட்டியதும், உருவாகும் டி.என்.ஏ. மூலக்கூறினுள் வைரசின் அனைத்து ஜீன்களும் போய்விடுகின்றன. அந்த செல்லை மேலும் பல வைரஸ்களை உருவாக்குமாறும் உத்தரவிடுகின்றன.
மாறாக, ஒரு குழு டிஆக்சிநியூக்ளியோடைட் டிரைபாஸ்பேட்களை சிதைப்பதன் மூலம் ஷிகிவிபிஞி1 புரதம், செல்லை வைரசிடம் இருந்து காக்கிறது. அவ்வாறு சிதைப்பதன் மூலம், வைரஸுக்கு அதன் மரபணுத் தகவலை உருவாக்கக் கட்டுமானப் பொருள் இல்லாமல் ஆக்கிவிடுவதுதான் காரணம்.
எய்ட்ஸுக்கான சிகிச்சை முயற்சியில் இது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
No comments:
Post a Comment