Posted on March 29, 2012 by muthukumar
காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வே கூடாது; எட்டு அல்லது பத்து மணிநேரம் இடைவெளி க்கு பின், நம் வண்டியை ஓட்ட “பெட்ரோலாக” தேவை ப்படும் உணவு அது.
காலை உணவு முறையை ‘பிரேக் பாஸ்ட்’ என்றுகூறுவர். ‘பாஸ்ட்’ டை (உண்ணாதிருத் தலை) “பிரேக்” (துண்டிப்ப து)
பண்ணுவது
என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும்
போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு,
சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம்
என்று எண் ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடு வது,
உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரண மாகி விடும்.
என்ன சாப்பிடணும்:
கலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு,
உணவு அல்லது சிற்று ண்டி சாப்பிடுவோர் பலர் உள்ள னர். சிலர், காலையில்,
முழு உணவு சாப்பிட்டுவிட்டு, மதிய ம் சாதாரண அளவில் சாப்பி ட்டு, இரவு
டிபன் சாப்படுகின் றனர்.
ஆனால்,
காலை உணவை தவி ர்ப்போரும் உண்டு. இவர்களுக் கு தான் பாதிப்பு வரும்.
குறிப் பாக, வீட்டு, ஆபிஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உண வு மிக
முக்கியம். அதை தவிர்த்தால், அவர்களுக்கு பல கோளாறு கள் வர வாய்ப்பு
அதிகம்.
உணவு என்றால்……
உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவது தான் உணவு. கார் போன்றது
உடல். கார் ஓட பெட் ரோல் தேவைப்படுவதுபோல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி
தேவை. அந்த எரிசக்தியை தருவ து சத்துக்கள் தான். அந்த சத்து க்களை நாம்
உணவில் இருந்து தான் பெற வேண்டும். காலை உணவு சாப்பிட்டால், அது சிற்று
ண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரி பொருளை
தருகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக் கம், சோர்வு, தலைவலி,
மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும், காலை உணவு மிக முக்கியம்.
இரும்புச் சத்து:
பெண்களுக்கு இரும்புச்சத்து மிக முக்கியம், நாம் சாப்பிடும் உண
வு மூலம் அது கிடைத்தால், மனது மற்றும் உடல் ரீதி யாக திடத்தன்மை
ஏற்படுகிறது. கா லை உணவில், மக்காச் சோள உணவை சேர்த்துக்கொள்ளலா ம்.
“கார்ன்பிளேக்ஸ்” போன்ற பாக் கெட் உணவுகளை பின்பற்றி னால், இரும்புச் சத்து
கிடைக்கு ம். இந்தியாவில், 90 சதவீத பெண்கள், இரும்புச் சத்து குறைபாடுடன்
உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு கை கொடுக்கும் மக்காச்சோளம் உட்பட தானிய
வகை உணவுகள் மிக நல்லது. உடலுக்கும், மூளைக்கும் வலுவை தரும்.
No comments:
Post a Comment