Lord Siva

Lord Siva

Sunday, 18 March 2012

அடிக்கடி கருச்சிதைவு உண்டாவதற்கான காரணங்களும், தீர்வுகளும்


Posted on  by muthukumar

அடிக்கடி கருச்சிதைவு உண்டாவதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் பற்றி விளக்கமாகப் பேசு கிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய் களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.கருச்சிதைவு என்பது இயற்கையான கருக்கலைப்பு. அதாவது 28 வாரங்களுக்கு முன்பே கர்ப்பமானது முடிவடைந்து விடுகிற நிலை. 28 வாரங்களுக்குப் பிறகு குழந்தை பிறக்க நேர்ந்தால் பிழைத் துக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டு.
அடுத்த மாதவிலக்கை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் தொடக்க கால கருச்சிதைவு நிகழ்கிறது. இது மாதவிலக்கைப் போன்று ரத்தப் போக்குடனும், வலியுடனும் இருக்கும். இதையடுத்த கருச் சிதைவு 3 மாதங்களுக்குப் பிறகு நிகழ்கிறது. கருவான து இப்போது உருவத்தைப் பெற்றிருப்பதால், இது பிரச வத்தைப் போல மிகவும் வலியும், வேதனையும் அளி க்கக் கூடியதாக இருக்கும்.
முதல் முறை கருக்கலைப்பு செய்திருந்தால், அடுத்து அந் தப் பெண் கருத்தரிக்கும் போது கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அடுத்த முறையும் அப்படியே நேரலாம். இதற்கான காரண த்தை ஹிஸ்டரோசல்பிங்கோகிராம் என்கிற கருவியின் மூலம் கண் டறிய மகப்பேறு நிபுணரை அணுக வேண்டும்.
ஒருவருடைய நாளமில்லா சுரப்பிகள் சரியாக செயல்படுகின்றன வா ரத்தப் பொருத்தம் உள்ளதா சுயதடுப்பாற்றல் திறன் போதுமா னதாக உள்ளதா ரத்த வெள்ளை அணுக்கள் ஒழுங்கற்ற முறையில் வேலை செய்கின்றனவா கருப்பை வாயானது கரு தங்குவதற்கு ஏற்றதாக இல்லையா புறகர்ப்பம் ஏற் படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன வா.. என்கிற விஷயங்களைப் பரிசோதித்துக் குறைபாடுகளைக் கண்டறிந்து, கரு சிதையாமல் காப்பாற்றலாம்.
12 வாரங்களுக்கு முன் கருச்சிதைவு ஏற்படுவது சகஜம். கர்ப்பத்தி ன் மிக ஆரம்பக் கட்டத்தில் சினை முட்டையில் ஏற்படும் ஏதோ ஒரு தவறின் காரணமாகவும், மரபியல் குறைபாடு காரணமாகவும் சிதை வில் முடிகிறது. சினைமுட்டை சரி யாகப் பதியமாகாவிட்டாலும், சி தையும். சில வேளைகளில் நஞ்சுக் கொடி சரியாக செய ல்படாததால் கருப்பைக் கழுத்து பலவீனமாகவு ம், ஆரம்பத்திலேயே திறந்து கொ ள்வதாலும், அடிளவுக்கதிக ரத்த அழுத்தம் காரண மாகவும் இப்படி நடக்கலாம்.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு வேலைச்சுமை மற்றும் அதன் பாதிப்பு காரணமாக கருக்கலைவது பெருகி வருகிறது. குறப்பிட்டஅளவு உடற்பயிற்சி கர்ப்பிணிகளுக்கு நல்ல து. தீவிர உடற்பயிற்சி வேண்டாம். கருச் சிதைவுக்குப் பிறகு டி அண்ட் சி  மூலமாக கருப்பையை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். கருப்பைக் கழுத்து நேர்த்தியாகத் திறக்கப்ப ட்டு, கருப்பைச் சுவர் சுரண்டப்படவோ, அல் லது உறிஞ்சப் படவோ செய்கின்றன.
அதே வேளையில் கருப்பை சுருங்குவதற்கா கவும் மருந்துகள் தரப்படுவதால் ரத்தப்போ க்கு நிற்கிறது. எனவே அடிக்கடி கருச்சிதை வை சந்தித்தவர்கள், அவர்கள் விஷயத்தில் உள்ள அபாய காரணிகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை யை மேற்கொள்ள வேண்டியது அவசியம்… என்கிறார்.

No comments:

Post a Comment