Posted On March 16,2012,By Muthukumar
பெரும்பாலான ஆண்களுக்கு பரம்பரைத் தன்மை காரணமாக தலையில் வழுக்கை ஏற்படுகிறது. வழுக்கை விழுந்தால் அந்த இடத்தில் திரும்பவும் முடி வளராது என்பதுதான் உண்மையே தவிர, முடியே முளைக்காது என்று சொல்ல முடியாது. அதனால், தகுதியான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் வழுக்கை உள்ள இடத்திலும் முடியை வளரச் செய்ய முடியும். என்றாலும், அதில் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும்.
அதற்கு என்ன செய்யலாம்?
* எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் சேர்த்து அரைத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்து வாருங்கள். இப்படிச் செய்வதால் சம்பந்தப்பட்ட இடத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளருவதை ஊக்கப்படுத்தும்.
* அதிமதுரத்தைப் பொடித்து, குங்குமப்பூவுடன் சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைத்து விடும். இது, முடி உதிர்வதையும் தடுக்கும். பொடுகையும் போக்கும்.
* ஆலமர விழுது, தாமரை வேர் - இந்த இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த இரண்டு பொடியையும் தலா சுமார் 200 கிராம் எடுத்து, அதை 400 கிராம் தேங்காய் எண்ணெயில் சேர்த்து, பொடி கருமை நிறம் அடையும் வரை காய்ச்சி எடுத்து பத்திரப்படுத்தவும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி வளர ஆரம்பித்து விடும்.
No comments:
Post a Comment