Posted On March 31,2012,By Muthukumar
பெண்களுக்கு
என்று இறைவன் ஸ்பெஷலாக கொடுத்த வரம்தான்... தாய்ப்பால். குழந்தை பிறந்த
அக்கணமே ஒரு பெண்ணின் மார்பகத்தில் சுரக்கக்கூடியது இது.
சில
பெண்களுக்கு மார்பகம் பெரியதாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் சுரப்பு
குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும்.
அதேநேரம், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
இன்னும் சில நேரங்களில், சில தாய்மார்களுக்கு குழந்தை பெற்றெடுத்த சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பு வெகுவாக குறைந்து விடும்.
ஏன் அப்படியெல்லாம் நிகழ்கிறது?
பொதுவாக
குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் சுமார் 850
மில்லி லிட்டர் தாய்ப்பால் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்புக்காக அந்தப்
பெண் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.
சத்தான
கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள்,
நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாய் எடுத்து வந்தால்தான், அவளது
தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.
அதை
தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது
உடல் திறனும் பாதிக்கப்படும். தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.
மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை.
மார்பகத்தில்
உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும்
பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை
தெரிந்துகொள்ள முடியும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடும்.
No comments:
Post a Comment