Posted on March 16,2012 by muthukumar
சிவப்பு நிறத்தில் மொறுமொ று என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. கட ந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட் டில் பிரபலமடைந்து வரும் இந்த உணவு கோழிக் கறியை வறுத்து செய்யப்படுகிறது. சிக் கன் 65 கண்ணைக் கவரும் வித த்தில் கலராக தெரிய வேண்டு ம் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித உடலுக்கும், குடலுக்கும் ஆபத் தை ஏற்படுத்தக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
சிக்கன் 65 அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள்,மரபணு பாதிப்புகளும் ஏற்படு ம் என்று எச்சரிக்கின்றனர் மரு த்துவர்கள். அதேபோல் ரசாய னம் கலந்த மாமிச உணவுக ளை அதிக வெப்பத்தில் சமை த்து உண்பதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள் ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நிறங்கள்
உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவி ல் 8 வகையான செயற்கை நிற ங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அணுமதிக்கப்பட்டுள்ளது. அது வும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண் டும். எட்டு வகையான நிறங்க ளை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகை கள், டின்களில் அடைத்து வர க்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையா ன உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு. ஆனால் இதை யாரும் கடை பிடிப்பதில்லை.
அனுமதிக்கப்பட்ட உணவு வ கைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உட லுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள் ளனர். சிக்கன்65ல் சேர்க்கப்ப டும் நிறத்தால் உடனடி பாதிப் பாக நெஞ்சு எரிச்சல், அமிலத் தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும் என்று பிர பல குடல்நோய் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.
கழுத்துக் கழலை நோய்
சிக்கன் 65ல் துணிகளுக்கு சாய ம் ஏற்றப் பயன்படும் சூடான் டை, மெட்டானில் எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதுவே குடல் புற்றுநோய், சிறுநீராகக் கோளாறு, மரபணு கோளாறுகளை ஏற்படுத் துகின்றனவாம். அதேபோல் உண வில் சிவப்பு நிறத்தை கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த செயற்கை நிறங்களை இனிப்புகளில் மட்டுமே சேர்க்க வே ண்டும். காரவகைகளில் சேர்க்க அனுமதி கிடையாது.
மக்களின் மனதில் உணவைவிட உணவின் நிறம்தான் பளிச்சென் று பதிந்து உள்ளது. சிக்கன் 65 என்றால் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இரு ந்தால் மட்டுமே சிக்கன் 65 என்றும் நினைக்கின் றனர். இதனை கருத்தில் கொண்டே வியாபாரிக ளம் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியா பாரம் செய்கின்றனர்.
சிறுவர்களுக்கு ஆபத்து
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலு ம், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத் தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உண வை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உரு வாகியதாம். எனவே இதுபோ ன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.
இதேபோல் ரசாயனம் கலந்து பதப் படுத்தப்பட்டுள்ள பன்றி இறைச்சி, கோழிக்கறி போன்றவைகளை அதி க வெப்பத்தில் சமைத்து உண்பதா லும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்று உணவியல் நிபுணர்கள் எச் சரித்துள்ளனர். கிரில்டு சிக்கன் சாப் பிடுவதும் ஆபத்து என்று கூறி சிக் கன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ் த்தியுள்ளனர் உணவியல் நிபுணர்க ள்.
No comments:
Post a Comment