Lord Siva

Lord Siva

Saturday, 31 March 2012

'முன் கூட்டியே' செக்ஸ் பிரச்சினையா?

Posted On March 31,2012,By Muthukumar


உடலுறவின்போது ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் தலையாயது இந்த முன்கூட்டியே விந்து வெளியாகும் பிரச்சினை. பெரும்பாலான ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பது சகஜமாகி வருகிறது.

விந்தனுவின் இந்த முந்திரிக்கொட்டைத்தனத்தால் செக்ஸ் உறவில் திருப்தியின்மை, மனைவியரிடையே எழும் அதிருப்தி, சோர்வு, சோகம் என பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

இருப்பினும் இது சரி செய்யப்படக் கூடியதே என்பது டாக்டர்களின் கருத்தாகு்ம். இளைஞர்கள் மத்தியில்தான் இந்தப் பிரச்சினை அதிகம் இருக்கிறது. அதீத ஆர்வமும், அதீத செக்ஸ் உணர்வுமே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் டாக்டர்கள்.

அதேபோல நெடு நாட்களாக உறவு கொள்ளாமல் இருந்து, உறவு கொள்ள முயல்வோருக்கும் இந்த முன்கூட்டியே விந்தனு வெளியாகும் பிரச்சினை ஏற்படுகிறது.

முன்கூட்டியே விந்தனு வெளிப்படுவதற்கு என்ன காரணம்?

பெர்பார்மன்ஸ் ஆன்ஸிட்டி இதற்கு ஒரு முக்கியக் காரணம். அதாவது உறவு கொள்ளும் சமயத்தில் ஏற்படும் பதட்டம். இதைத் தீர்க்க, உறவு கொள்ளும் சமயத்திற்கு முன்பாக, உங்களது பார்ட்னருடன் இயல்பாக பேசி சகஜமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது நலம். இதனால் கடைசி நேரத்துப் பதட்டத்தைத் தவிர்க்கலாம். அவசரப்படாமல் நிதானமாக இருப்பதும் முக்கியம்.

முன்கூட்டியே விந்தனு வெளிப்படுவதை தவிர்க்க சில உபாயங்களைக் கையாளலாம். அவை இதோ...

சுய கட்டுப்பாடு. உங்களுக்குள் உணர்வுகள் அதீதமாக அதிகரித்து, உச்சத்தை எட்டப் போகிறோம் என்ற நிலை வரும்போது சற்றே நிதானித்து, சிந்தனையை திசை திருப்புங்கள். இதனால் ஆணுறுப்பில் ஏற்படும் உச்ச நிலை சற்று தணிந்து நிதானப்படும். முடிந்தால் செக்ஸ் தொடர்பான நினைப்பையே கூட மாற்றி வேறு எதையாவது உப்புச் சப்பில்லாத ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள். அப்படி செய்யும்போது உணர்வுகள் வேகமாக குறையும். இதன் மூலம் உங்களது ஆணுறுப்பின் வேகம், உச்சநிலை மடமடவென குறையும். பின்னர் மீண்டும் தொடங்குங்கள்.

கிளைமேக்ஸை நெருங்கி விட்டோம் என்று நினைத்தால் உடனே உங்களது ஆணுறுப்பை, பார்ட்னரிடமிருந்து விலக்குங்கள். இதன் மூலம் விந்தனு வெளிப்பாட்டை நிறுத்தி வைக்கலாம். சற்று உணர்ச்சி குறைந்தவுடன் மீண்டும் தொடங்குங்கள். இதன் மூலம் உங்களது விந்தனு வெளிப்பாட்டை நிறுத்துவதோடு, நீண்டநேர உறவுக்கும் வழி வகுக்க முடியும்.

வி்ந்தனு வருவதை தடுத்து நிறுத்துவதற்கு சில க்ரீம்களும் இப்போது வந்து விட்டது. அவற்றை உங்களது ஆணுறுப்பின் முடிவுப் பகுதியில் தடவிக் கொள்ளலாம். இது கிட்டத்தட்ட அனஸ்தீஸியா மாதிரிதான். அதேபோல நன்கு தடிமனான ஆணுறைகளையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உணர்வுகள் குறைந்து, செக்ஸ் உறவை நீட்டிக்க முடியும், வேகமாக கிளைமேக்ஸை நெருங்குவதையும் தள்ளிப் போட முடியும்.

இவற்றை விட உறவுக்கு முந்தைய முன் விளையாட்டுகளில் அதிக நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. இருவரது உறுப்புகளும் ஒன்று சேருவதற்கு முன்பு அவற்றைத் தவிர பிற உறுப்புகளின் உராய்வு விளையாட்டு செக்ஸ் உணர்வை அதிகம் தூண்டும். அதேசமயம், ஆணுறுப்பு வேகமாக நீட்சி அடைவதைத் தடுத்து விந்தனு வெளிப்பாட்டை நிதானப்படுத்தவும் முடியும்.

நீண்ட நாட்கள் கழித்து உறவுக்குப் போகும் நிலை ஏற்பட்டால், முதலில் சுய இன்பத்தின் மூலம் வி்ந்தனுவை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் போதிய இடைவெளி விட்டு பார்ட்னருடன் உறவுக்கு தயாராகலாம். அப்படிச் செய்வதன் மூலம் வேகமாக விந்தனு வெளியேறுவதை தடுக்க முடியும்.

பதறாத காரியம் சிதறாது என்பது பெரியவர்கள் வாக்கு. அது இதற்கும் பயன்படும்.

செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன?

Posted On March 31,2012,By Muthukumar


உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.


பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும். கிளர்ச்சி அடைவது என்பது என்ன? அதாவது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை.

ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

40 வயதில் ஆண் பெண் கவா்ச்சி எப்படியிருக்கும்...!!

Posted On March 31,2012,By Muthukumar


பதின் பருவத்தில் தான் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பது கவிஞர்களின் சொல்லாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் முப்பது வயதைக் கடந்த நடுத்தர வயதில்தான் பெண்கள் அழகாக இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

மனிதர்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என அநேகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘ஆண்டிகள்தான்’ அழகு!

மனிதர்களின் அழகு பற்றி 1000 ம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆண்களிடம் கேட்ட கேள்விகளுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக ஏராளமான இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் ( ஏன் எல்லோரும் இப்படி ‘ஆன்டி ஹீரோ’வாக மாறினாங்களோ தெரியலை)

ஆண்கள் 40 வயதில் அழகு

இதேபோல் பெண்களிடம் கேட்கப்பட்டதில் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்தான் மிக அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிவதாக கூறியுள்ளனர் (அப்படியா! ) ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது.

அழகிற்கு காரணம் என்ன?

இளம் வயதில் குடும்ப சூழ்நிலையால் தன்னைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் பல பெண்கள் திருமணம் முடிந்து குழந்தை பெற்றுக்கொண்டு ஒரளவு லைஃபில் செட்டில் ஆன திருப்தியில் தங்களை அழகு படுத்திக்கொள்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர். அதனாலேயே பிறரது கண்களுக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிகின்றனர்.

ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் இதனாலேயே அவர்களின் உடல் அமைப்பு கவர்ச்சிகரமானதாக மாறிவிடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

எப்படி இருந்தா என்ன, ஆண்களும் அழகுதான், பெண்களும் அழகுதான் – எந்த வயதாக இருந்தாலும் என்பதை உணர்ந்தால் எப்போதும் எல்லோரும் அழகுதான்..

ஆஸ்துமாவை நினைத்து அலற வேண்டாம்..!

Posted On March 31,2012,By Muthukumar
பெண்கள் தயங்கி, தடுமாறி, மறைக்கும் நோய்களில் ஆஸ்துமா முக்கியமானது. திருமணமாகாத இளம்பெண்கள், ஆஸ்துமா இருப்பதை ஒத்துக்கொண்டால் தனக்கு திருமணமே ஆகாது என்று நினைக்கிறார்கள்.
ஏற்றுமதி தொழிலகம் ஒன்றில் வேலைபார்த்து வந்த 32 வயது பெண் ஒருவர், சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நிலையில் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். தனக்கு ஆஸ்துமா இருப்பது மற்றவர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.
சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். நோயின் தாக்கம் இல்லாமல் போனதால் அவர் உடலும் பொலிவு பெற்றது. திருமணத்திற்கும் சம்மதித்துவிட்டார்.
திடீரென்று ஒருநாள் குடும்பத்தோடு வந்து என்னை சந்தித்தார். திருமணம் நடக்க இருப்பதைக்கூறி, அழைப்பிதழை கொடுத்தார். கட்டாயம் வந்து, வாழ்த்தவேண்டும் என்றார். நானும் சரி என்றேன்.
மறுநாள் அதே பெண் செல்போனில் என்னிடம் தொடர்பு கொண்டார். `திருமணத்திற்கு நிச்சயம் நீங்கள் வருவீர்களா?' என்றார். `நான் வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்தானே?' என்றேன். `ஆமாம் டாக்டர்.. ஆனால் நீங்கள் பலருக்கும் தெரிந்தவர். ஒருவேளை உங்களை பார்த்துவிட்டு என் கணவர், `ஆஸ்துமாவிற்கு சிகிச்சை அளிக்கும் இவரை உனக்கு எப்படி தெரியும்?' என்று கேட்டால், எனக்கு ஆஸ்துமா இருந்ததை நான் ஒத்துக்கொள்ள வேண்டியதாகிவிடும் அல்லவா..' என்றார். நான் அந்தப் பெண்ணின் மனநிலையை புரிந்துகொண்டு போனிலே என் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டேன்.
இந்திய பெண்களில் பெரும்பாலானவர்கள் இப்படி ஆஸ்துமா நோய் இருப்பதையும், சிகிச்சை பெறுவதையும் அல்லது சிகிச்சை பெற்றதையும் மறைக்கும் மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள். அதற்கு யாரையும் குறை சொல்லமுடியாது. காரணம் நாம் வாழும் சமூக நிலை அப்படி!
நான் ஒரு புள்ளிவிபரத்தை சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்தியாவில் 30 சதவீதம் பேருக்குத்தான் ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் 40 சதவீதம் பேருக்கும், நியூசிலாந்தில் 75 சதவீதம் பேருக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. ஆனால் அவர்கள் அதை ஒத்துக்கொண்டு, சிகிச்சை பெற்று, நீண்ட காலம் நிம்மதியாக வாழ்கிறார்கள். நாம்தான் மறைக்கிறோம். நம்மில் சிலர் ஆஸ்துமா என்பதை ஒத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடம் தனக்கு சிறுநீரக நோய், புற்றுநோய் என்றெல்லாம் கூறுகிறார்கள். அப்படி சொல்வதை தவிர்க்கவேண்டும்.
"எனக்கு மூச்சு இழுப்பு ஏற்படுகிறது. அது ஆஸ்துமாவா?" - என்று பலர் சந்தேகம் கேட்கிறார்கள். மூச்சு இழுப்பெல்லாம் ஆஸ்துமா இல்லை. மூச்சு இழுப்பு, மார்பை இறுக்கிப்பிடித்தல் போன்ற தன்மை, இருமல், மூக்கு சளி, தும்மல்.. இவைகள் தொடர்ந்தால் அது ஆஸ்துமா!
மூக்கு சளி, தும்மலோடு ஒருவர் தொடர்ந்து பத்து வருடங்களாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தால், அவரை பரிசோதித்தால், அவர் 50 சதவீதம் ஆஸ்துமா நோயாளியாக இருப்பதற்கு வாய்ப்
பிருக்கிறது.
ஒருவருக்கு ஆஸ்துமா உருவாகி, மூக்கு சளி- இருமல் மூலம் அது வெளிப்பட்டு, மூச்சு இளைப்பு தோன்றி, அப்போது இருமலோடு மூச்சுவிடும்போது பூனை சத்தம்போல் வெளிவந்தால் அதற்கு முழுமையான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அது குணப்படுத்த முடியாத `சி.ஓ.பி.டி' என்ற நிலையை எட்டிவிடும்.
நுரையீரலில் உருவாகும் இருமல், சளி போன்றவை தொடர்ந்தால், நாளடைவில் அது நுரையீரல் ரத்த குழாய்களை இறுக்கமாக்கிவிடும். அதனால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு ரத்தம் செல்வது குறையும். அப்போது இதயம் தேவைக்கு அதிகமாக வேலை செய்யும். அதனால் களைப்பாகி, இதயம் தன் செயல்திறனை இழந்துவிடும்.
மேற்கண்ட பாதிப்பிற்கு உள்ளாகிறவர்களுக்கு கால்கள் வீங்கும். வயிற்றில் நீர்கோர்க்கும். முகமும் வீங்கி காணப்படும். குனிய முடியாமல், நிமிர முடியாமல் அவதிப்படுவார்கள். இவர் அசையவேண்டும் என்றால் துணைக்கு ஒருவர் வரவேண்டும். நெபுலைசர் போன்ற கருவியையும், மருந்துகளையும் எப்போதும் உடன் கொண்டு செல்லவேண்டியதிருக்கும். எப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும், எப்போது அவருக்கு இதய நெருக்கடி ஏற்படும் என்றும் சொல்ல முடியாது.
இந்த அளவுக்கு ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட என்ன காரணம்? தும்மல், சளி, இருமல், மூச்சு இளைப்பு போன்றவைகளை அவர் அலட்சியப்படுத்தியதுதான் காரணம்.
உணவில் சுகாதாரம் மிக அவசியம். தரையில் விழுந்த உணவை எடுத்து சாப்பிட்டால் `அஸ்கரியஸ்' என்ற கிருமி, அந்த உணவு வழியாக உடலுக்குள் சென்றுவிடும். அது உடலுக்குள்ளே முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும். அவை மூச்சுக்குழாய் சென்று, அங்குள்ள திசுக்களை சேதமாக்கும். நச்சு பொருட்களையும் அங்கே உருவாக்கி மூச்சு குழாயை, மூச்சுவிட முடியாத அளவிற்கு சுருக்கிவிடும். அப்போது ஏற்படும் ஆஸ்துமாவை `லாப்ளர் சிண்ட்ரோம்' என்று கூறுகிறோம். இதை எளிதாக குணப்படுத்திவிடலாம்.
வேறு நோய்களுக்கு சாப்பிடும் ஒரு சில மாத்திரைகளின் ஒவ்வாமையாலும் மூச்சுகுழாய் திடீரென சுருங்கி, அதிக நீர் சுரந்து இருமல், மூச்சு இழுப்பை உருவாக்கும். இதனை, `டிரக் இன்டியூஸ் ஆஸ்துமா' என்கிறோம்.
தீவிரமான மன அழுத்தமும் ஆஸ்துமாவை உருவாக்கும். அதனை `சைக்கோஜெனிக்' ஆஸ்துமா என்கிறோம். கணவருடனான உறவு சீர்கேட்டால் மனைவிக்கு மன அழுத்தம் வரலாம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்பின் குறைபாடுகளாலோ, ஆசிரியர், சக மாணவ மாணவிகள் கேலி, கிண்டல், அவமானம் போன்றவைகளாலோ இத்தகைய மன அழுத்தம் ஏற்படும். அதனால் மூச்சுவிட திணறுவார்கள். அதனை நினைத்து பயந்து, தேவையற்ற மருத்துவம் செய்துவிடாத அளவிற்கு பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இதற்கு கவுன்சலிங் தேவைப்படும்.
சிலர் எல்லைமீறி அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வார்கள். அப்போது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் உடைந்து சிதறி, மெல்லிய நச்சு பொருள் உருவாகும். அது மூச்சு குழாய், நுரையீரலை பாதிக்கும். இதனை `உடற்பயிற்சியால் உருவாகும் ஆஸ்துமா'
என்கிறோம்.`ஆஸ்பர்சில்லோசிஸ்' என்ற காளான் பூச்சிகளால் ரத்தத்தில் ஈஸ்னோபில் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் ஏற்படும் நச்சுப்பொருள் நுரையீரலை பாதித்து ஆஸ்துமாவை ஏற்படுத்தும். அடிக்கடி ஜூரம், மூச்சு இழுப்பு, இருமல், மார்புவலி, எடை குறைவு, நிமோனியா போன்றவை எல்லாம் தோன்றும். இதனை `அக்யூட் ஈஸ்னோபீலிக் சிண்ட்ரோம்' என்கிறோம். இவர்களுக்கு சளியில் ரத்தம் இருக்கும். அதனால் காசநோய் என்று நினைத்துவிடக்கூடாது.
இந்த வகை ஆஸ்துமாவை ஸ்டீராய்ட் மருந்து கொடுத்து கட்டுப்படுத்தவேண்டும். நாளடைவில் நோய் கட்டுப்படும் போது ஸ்டீராய்ட் அளவை குறைக்கவேண்டும். `ஸ்டீராய்ட் பக்க விளைவை ஏற்படுத்துமே' என்பார்கள். உண்மைதான். சிலருக்குதான் பக்கவிளைவு ஏற்படும். பக்கவிளைவைவிட உயிர் முக்கியம். அதனால் நோயின்தன்மைக்கு தக்கபடி ஸ்டீராய்ட் கொடுத்துதான் ஆகவேண்டும். ஸ்டீராய்டின் பக்கவிளைவுகளை குறைக்கவும் மருந்து கொடுத்து ஆஸ்துமாவை கட்டுப்படுத்த வேண்டும்.
மக்கள் ஆஸ்துமாவை பற்றி நன்றாக புரிந்துகொண்டு, விழிப்புடன் இருந்து நோய் தாக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை நோய் தாக்கிவிட்டால் உடனே அறிகுறிகளை உணர்ந்து, பரிசோதித்து சரியான சிகிச்சை கொடுத்தால் ஆஸ்துமாவை வந்த சுவடே தெரியாமல் போக்கிவிடலாம். விழிப்போடு இருப்போம்.. ஆஸ்துமாவை வெல்வோம்!

முதல் இரவில் பால் ஏன்?

Posted On March 31,2012,By Muthukumar


உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் பல வகைகள் உண்டு.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.

தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. ஆனால் எளிதில் ஜீரணமாகாது.எருமைப்பால் அதிகப் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச்சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.


ஆட்டுப்பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால் பேதி அதிகமாகப் போகும். ஆனால் ஆட்டுப்பால் அதை கட்டுப்படுத்தும்!

சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக் கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்தாக உள்ளது.
தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து.




ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. இதனால் தான் நம் பெரியவர்கள் முதல் இரவில் பால் கொடுத்து அனுப்புகிறார்கள் போலும்.   வெள்ளை மனதுடன்  வெள்ளை நிறப் பாலை பகிர்ந்து கொள்ளும் போது அன்னோன்யத்தின் ஆரம்பம்!  
பால் குடித்ததும் புத்துணர்வு தரக்கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். முதல் இரவிற்கான பலத்தையும் பெறலாம். தூக்கம் வராமல் தவிப்பர்களுக்குத் தான் பால் நல்ல தூக்க மருந்து.ஆகையால் தூக்கம் வரும் என பயப்படவேண்டியதில்லை! மேலும் சூடான பாலின் மேல் படரும் ஆடையை குடிக்கும் முன் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவேண்டுமாம்! பின்னால் இதற்கு தேவையிருந்தாலும் இருக்கலாமாம். ஒன்லி ஃபார் லூப்ரிக்கேஷன் பயன்பாட்டிற்குமட்டும்! புரிந்துகொள்ளுங்கள் இதற்கு மேல் விளக்கமுடியாது!!
பின்குறிப்பு: பாலில் அஷ்வகந்தா என்ற ஒரு சித்த மருந்தை கலந்து குடித்தால் குதிரையின் அதீத கனைப்பு இசை முதல் இரவின் அறைக்கு பிண்ணனி இசையாக இருக்குமாம்!!

பெண்கள் மூக்கு குத்திக்கொள்வது ஏன் ?

Posted On March 31,2012,By Muthukumar


மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது.
மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.
மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.
அந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால்தான் ம்ம்ம்…… இந்தக்காலத்திலும் ஆண்கள் காது குத்தும் வழங்கம் வந்துவிட்டது ஆனால் கவரிங் எந்த பிரயோசனமும் இல்லை வெறும் அழகுக்கு மட்டுமே தவிர ஆரோக்கியத்துக்கு சரிவராது.

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல..!!

Posted On March 31,2012,By Muthukumar


தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உத வும் ஆயுதம். உடல் தேவை யை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்க மாக இருந்தால் அது முழுமையான காதலாகாது. உறவின் போது உணர்ச்சிப்பூர் வமான, அன்பான பந்தம் கண வனுக்கும் மனைவிக்கும் இருந் தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களான தொடுதல், முத்தமிடுதல் உள்ளிட்டவை தாம்பத்யத்தில் முக்கிய அம்சமாகும். ஸ்பரிசம் மூலமே உணர்வு தூண்டப்படுகிறது. மனித உடல் நரம்புகளால் மூடப்பட் டது. உடலின் சில பகுதிகளி ல் நரம்புகள் அதிகமாக இருக் கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மட ங்கு அதிகமாகும். எண்ணற்ற பெண்கள் உறவுக்கு முந்தை ய முன்தொடுதலை விரும்பு வதாக ஆஸ்தி ரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு ள்ளது.

முன் விளையாட்டுக்குத் தேவையானவை:

நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சில ருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைக ள் தீரும். அக்கறை உள்ள அன்பு, கவ னிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்கு விக்க முடியும். இதனால் மனரீதியாகவும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.




தொடுதல் – ஒரு முக்கிய காரணி


முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உட லெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போ லவே, பாலியல் குறிக்கோ ளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவை யும் பெண்களுக்கு பிடித்தமா ன செயல்களாகும். மிருது வான ஸ்பரிசம், மிருதுவா ன, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களி ல் உணர்ச்சியை தூண்டபோதுமானவை. பின் முது கை தடவுதல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும். கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனைவி க்கு ஏற்றவாறு கையாளலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவி த்து ள்ளனர்.

முத்தம் உணர்த்தும் அன்பு

முத்தமிடுவதுதான் உறவின் திறவுகோல். இது அனைவரும் பிடித்தமானதும் கூட. முத்த மிடுதல் மூலம் பெண்ணின் ஆசையை ஆதிகரிக்கச் செய்ய லாம். முன் தொடுதல் விளையாட்டினால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் மகிழ்ச்சியடைவது கண்டறியப் பட்டுள்ளது. ஆண்களு ம் முன்தொடுதலை ஆரம்பிக்கும்முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும். எப்பொ ழுதும் ஒரே மாதிரியாக இல்லாம ல் கற்பனையை புகுத்தி மாற்ற ங்களை கையாண்டால் தாம்பத்ய த்தில் இனிமை கூடும்.

தாய்ப்பால்… சில ரகசியங்கள்!

Posted On March 31,2012,By Muthukumar
பெண்களுக்கு என்று இறைவன் ஸ்பெஷலாக கொடுத்த வரம்தான்... தாய்ப்பால். குழந்தை பிறந்த அக்கணமே ஒரு பெண்ணின் மார்பகத்தில் சுரக்கக்கூடியது இது.
சில பெண்களுக்கு மார்பகம் பெரியதாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும். அதேநேரம், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
இன்னும் சில நேரங்களில், சில தாய்மார்களுக்கு குழந்தை பெற்றெடுத்த சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பு வெகுவாக குறைந்து விடும்.
ஏன் அப்படியெல்லாம் நிகழ்கிறது?
பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்புக்காக அந்தப் பெண் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.
சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாய் எடுத்து வந்தால்தான், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.
அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும். தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.
மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை.
மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடும்.

Friday, 30 March 2012

கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை

Posted On March 30,2012,By Muthukumar

1..ராகி (கேழ்வரகு ) பானம் அதில் பாதம் மற்றும் வால்நட் பொடித்து சிறிது சேர்த்து காய்ச்சி குடிக்கவும். இது மிகச்சிறந்த பானம், ராகி பானம் .புட்டு ,சேமியா


இதே ரொட்டி, கொழுக்கட்டை, புட்டு , சேமியா, ஸ்னாக்ஸ் என்றால்

   ராகி தட்டை முருக்கு போலும் செய்து சாப்பிடலாம்.


2.. அனைத்து காய்கறிகளையும் சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்து சூப் போல செய்து குடிக்கவும்.இல்லை கீரை சூப்   பச்சை வெஜ் குருமா போன்றவை குடிக்கலாம் நல்ல எனர்ஜியாக இருக்கும்.



3. சிக்கன் சின்ன கோழியை வாங்கி சூப்பாக சமைத்து சாப்பிடவும்.

4. முட்டை வெள்ளை கரு காலை முன்று , மாலை முன்று. ( சாப்பிட முடியாது தான்) மருந்து மாத்திரைகள் போல நினைத்து கொண்டு சாப்பிடலாமே.



5.கொத்துமல்லி எலுமிச்சை சேர்த்து துவையல் இது ரத்தத்தை சுத்த படுத்தி கொண்டே இருக்கும்.நாக்கு மறத்து போய் இருப்பதற்கு ருசி தரும்.

6.ஆப்பிள் பழம் சாப்பிடால் ரொம்ப நல்லது நல்ல எவ்வளவு வேண்டுமானலும் சாப்பிடலாம்.  ஜூஸாக தினம் காலை மாலை குடிப்பது நல்லது.

7.கீரை வகைகள் முருங்க்கீரை பொரியல், மேத்தி சப்பாத்தி, மேத்தி ரொட்டி அதிகமாக சேர்த்து கொள்ளவும்.


8. இட்லி, இடியாப்பம், ஆப்பம் , கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகள் உட்கொள்ளலாம்.


9. சுண்டல் வகைகள் , சாலட் வகைகள் போன்றவை.

10. உள்ளே உள்ள புண்கள் ஆற ஜவ்வரிசி சேர்த்து காய்ச்சிய பால், கடல் பாசி, இளநீர் கடல் பாசி , ஜவ்வரிசி ரூ ஆப்ஷா ஜிகர்தண்டா போன்றவை சாப்பிடலாம்.


11 காய்கறிகளில் புரோக்கோலி பாஸ்தா ,பொரியல், புரோக்கோலி மட்டன். 

முட்டைகோஸ் பொரியல் ,கூட்டு, கொஃப்தா , ஃப்ரைட் ரைஸ் 

பீட்ரூட் ,பொரியல்,  கூட்டு, ஜூஸ், கட்லெட் 

கேரட் ஜூஸ், பொரியல், சாலட் போன்றவை மிகவும் நல்லது.



12. கருப்பு திராட்சை இது ரொம்ப நல்லது. இத்துடன் வால்நட் சேர்த்து சாப்பிடலாம்.

13.நெல்லிக்காய் இனிப்பு மற்றும் உப்பில் ஊறியது, நெல்லிக்காய் சாதம் போன்றவை நல்லது.



கவனிக்க:  புற்று ஆப்ரேஷன் செய்து கொண்டவர்கள் மேற்கொண்ட உணவு வ்கைகள் எடுத்துகொண்டால் கண்டிப்பாக மீண்டும் பழைய நிலைக்கு வரலாம். மருத்துவரையும் கலந்தாலோசித்து கொள்ளுங்கள். இதெல்லாம் எந்த பக்கவிளைவும் தராதா இயற்கையான உணவு முறை தான் கேன்சர் என்றில்லை அனைவருக்குமே பொருந்தும்.








Olive Oil Recipes For Lustrous Hair

Posted On March 30,2012,By Muthukumar
Olive Oil Recipes


Tips for Beautiful Skin  Kayaclinic.com
Get the right beauty tips for your skin from the Experts. Apply Now!
If we talk about oils that are healthy for everything across the board, then olive oil will be at the top of the list. Just like your skin, body and heart, olive oil benefits your hair tremendously. Olive oil recipes for food are supposedly low calorie and heart healthy. Similarly, when it is used as a hair oil, it is very nourishing for your hair. Olive oil is rich in vitamin E that nourishes your hair and makes it lustrous.

Here, are some beauty recipes that use olive oil for your hair. Each olive oil recipe takes care of a particular deficiency in your hair.

Olive Oil For Hair: The Best Recipes

1. Honey & Olive Oil Mask: Whip up equal amounts of olive oil and honey in a bowl. Now use it to coat your hair in layers. Layer your hair strands with this gel-like liquid from root to tip. You need to roll up your hair and cover it. You can use a shower cap or cloth to do this. The olive oil will repair hair that is damaged by wear and tear. Wash it off with a mild shampoo after 10 minutes.

2. Olive Oil & Eggs: Is your hair is flat and dead looking? You need beaten eggs whipped in olive oil. This hair mask will fluff up your hair. Break 2 eggs into a cup full of olive oil. Whip it for at least 2 minutes till the mixture becomes smooth. Coat your hair from root to tip with this mixture. Leave it for about 10 minutes and wash off. Your hair will gain volume and shine.

3. Flower Extracts & Olive Oil: Even plain olive oil nourishes hair that is damaged. You can make your own olive oil recipe at home by adding flower petals to olive oil and storing it in a jar over night. You could use crushed rose petals or jasmine extracts for this home remedy for damaged hair. Mix it up with virgin olive oil and keep in a covered jar for at least 24 hours. Dab your hair with hot water to open up the scalp pores. Once you have done this, you can massage the hair oil you have prepared into your scalp.

4. Lemon Seeds, Pepper & Olive Oil: If you want your hair to grow long, you will have to increase the rate of its growth. The seeds of lemon that you discard and black pepper corns, together can help increase hair growth. And when olive oil is the base of this hair pack, shine and gloss will follow. Grind lemon seeds and pepper corns in a blender. Dilute the paste with 2 tablespoons of olive oil. The resulting paste has to be applied on your scalp. Leave it for 20 minutes and wash with a mild shampoo.

These hair care tips, that advise you to use olive oil on your hair can be followed easily at home.

மலரும் மருத்துவமும்- தாமரை…

Posted On March 30,2012,By Muthukumar
புல் பூண்டு, செடி, கொடி, மரம் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இவை பருவ காலத்திற்கும் வளரும் பகுதிக்கேற்பவும் அவற்றின் குணங்கள் சிறிது மாறியிருக்கும்.
இவ்வாறு மனிதர்களுக்கு பயன்படுபவையில் மலர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மலர்களும் மருத்துவப்பயன் கொண்டவை. இன்று உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப் பெற்று வருகிறது. இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட மலர்களில் தாமரையும் ஒன்று தாமரை மலர் நம் இந்தியாவின் தேசிய மலராகும். தாமரையில் கல்விக்கு உரிய சரஸ்வதியும், செல்வத்துக்கு உரிய மஹாலட்சுமியும் அமர்ந்திருப்பதாக இந்து மதத்தினர் நம்புகின்றனர். தாமரைப் பூவை இறைவனுக்கு பூஜைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.
தாமரையில் வெண்மை, சிவப்பு, நீலம், மஞ்சள் என பல வகைகள் உண்டு.
தாமரைப் பூவை அரவிந்தம், பொன்மனை, கமலம், சரோகம், கோகனம், சலசம், வாரிசம், பங்கசம், நளினம், சரோருகம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
Tamil - Thamarai
Sanskrit - Padma
English - Lotus
Telugu - Tamara
Malayalam - Thamara
Botanical Name - Lelumbo nucifera
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்
ஈரலைப் பற்றிமிக ஏறுகின்ற வெப்பமும்போங்
கோர மருந்தின் கொடுமையறும்-பாருலகில்
தண்டா மணத்தையுள்ள தாழ்குழலே! காந்தல்விடும்
வெண்டா மரைப்பூவால் விள்
-அகத்தியர் குணவாகடம்
பொருள் - வெண்தாமரைப்பூவால் ஈரல் பாதிப்பு, குடல்புண், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். தேக எரிச்சல் நீங்கும்.
தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.
நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும்.
சுரக் காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.
ஞாபக சக்தியைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.
வயிற்றுப் புண்ணை ஆற்றும். சரும எரிச்சலைப் போக்கும்.
இதயத்தைப் பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.
தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.
வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.
தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும். காது கேளாமை நீங்கும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.
மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும். அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை அவுன்ஸ் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான பாதிப்பு குறையும்.
தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.
தாமரைப் பூவின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து அதன் முழுப் பயனையும் பெற்று நீண்ட ஆரோக்கியம்பெறும்வோம்.

அன்பா இருங்க, மன அழுத்தம் போகும்!

Posted On March 30,2012,By Muthukumar
மன அழுத்தம், டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்கா மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கைப் பற்றிய பயமும் இள வயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்களும், கவலை, பயம் போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்று உளவியல் வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
அதிக சந்தோசம் அதிக கவலை
பெரும்பாலான குழந்தைகள் அதிக சந்தோசம், அதிக கவலையினால் பீடிக்கப்படுகின்றனர். இதற்கு மேனிக் டிப்ரசன் என்று மருத்துவ உலகினர் பெயரிட்டுள்ளனர். இதனால் குழந்தைகளின் மூட் எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று கண்டுபிடிக்க முடியாததாகிவிடுகிறது. நார்மல் போல தெரிந்தாலும், ஒருசில சமயங்களில் அதீத மகிழ்ச்சியுடன் உற்சாகமாக திரிகின்றனர். சில சமயங்களில் அதீத கவலையுடன் சோகத்தில் மூழ்கி
விடுகின்றனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நண்பர்களுடன் உரையாடுவதை கூட விரும்புவதில்லை.தனிமையில் அமர்ந்து எதையாவது சிந்தித்த ண்ணம் இருக்கின்றனர். இதனால் பள்ளிகளில் கவனிக்கும் திறன் குறைகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த மன அழுத்தத்தை களைவது அவசியம் என்று தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
எளிமையான எதிர்பார்ப்பு
கவுன்சிலிங், உளவியல் ரீதியான சிகிச்சை போன்றவற்றையும் அளிக்கலாம். அதேசமயம் இள வயதினருக்கு குரூப் சைக்கோ தெரபி என்னும் சிகிச்சை முறையினை கையாண்டு அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த பழக்க வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சத்தான உணவு அவசியம்
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு கொடுக்கப்படுகிறதா என்பதை உணவியல் வல்லுநர்களிடம் ஆலோசகரிடம் உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தவறான உணவு பழக்கம் வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும். இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், போன்றவற்றை தடுக்கலாம்.
நட்பான சூழல் அவசியம்
வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும். டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. எனவே இளம் வயதிலே வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.
நோய்கள் தரும் மன அழுத்தம்
குழந்தைகளின் உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம். அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவே மன அழுத்தமாக மாறிவிடும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும்.
நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். இந்த பழக்கங்களை சிறு வயது முதலே பழக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள் இதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதில் இருந்து குழந்தைகளை காக்க முடியும் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும்.

குழந்தைகளுக்கு வார்த்தைகள் புரியும்!

Posted On March 30,2012,By Muthukumar

உங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா? அப்படியானால் கவனமாகப் பேசுங்கள். நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை குழந்தை புரிந்துகொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், ஆறு மாதம் ஆகும் குழந்தைகள் கூட உணவுகள், உடல் பாகங்களுக்கான வார்த்தைகளைப் புரிந்துகொள்கின்றன என்று கூறுகிறார்கள். குறிப்பிட்ட விஷயங்களுக்கான வார்த்தைகளைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே குழந்தைகளுக்கு இந்தப் புரிதல் வந்துவிடுகிறது.
குழந்தைக்கு இந்த வார்த்தை புரியுமா என்று யோசிக்காமல் அவர்கள் முன் இயல்பாகப் பேசிவந்தால், பின்னாளில் அவர்களின் மொழித்திறன் சிறப்பாக அமையும் என்பது ஆய்வாளர்கள் கூறும் தகவல்.
பொதுவாக, குழந்தைகள் ஒரு வயதாகும்போதுதான் வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன என்று கருதப்பட்டு வருகிறது. அப்போதும்கூட, குழந்தைகள் தங்கள் தாய்மொழியின் ஒலி மூலங்களைத்தான் புரிந்துகொள்கின்றனவே தவிர, அர்த்தங்களை அல்ல என்றும் எண்ணப்பட்டு வருகிறது.
ஆனால் புதிய ஆய்வுக்குத் தலைமை வகித்த மனோவியல் நிபுணர்கள் எலிகா பெர்கெல்சன் மற்றும் டேனியல் ஸ்விங்லி கூறுகையில், `குழந்தையைக் கவனித்துக்கொள் பவர், `ஆப்பிள் எங்கே இருக்கிறது?' என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது அதை நோக்கிக் குழந்தையின் பார்வை திரும்புகிறது' என்கிறார்கள்.
இதுதொடர்பான ஆய்வுக்கு, 6 முதல் 9 மாத வயதுள்ள 33 குழந்தைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு முன்பு கணினித் திரையில் பல்வேறு பொருட்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கூறியதும் அதை நோக்கிக் குழந்தைகள் பார்வையைத் திருப்பின.
ஆறு முதல் ஒன்பது மாத வயதுக் குழந்தைகள், மற்ற படங்களை விட, சத்தமாகக் கூறப்பட்ட பொருட்களின் படங்களின் மீதே தங்கள் பார்வையை நிலைத்திருந்தன. இது, குறிப்பிட்ட வார்த்தைகள், குறிப்பிட்ட பொருட்களுடன் தொடர்புடையவை என்று குழந்தைகள் புரிந்துகொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
``இந்த வயதுக் குழந்தைகளும் இதைப் போல வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. `மம்மி', `டாடி' போன்ற வார்த்தைகளைக் குழந்தைகள் சீக்கிரமாகவே புரிந்துகொள்கின்றன என்று ஏற்கனவே சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் பல்வேறு வகையான வார்த்தைகளையும் குழந்தைகள் புரிந்துகொள்கின்றன என்று எங்கள் ஆய்வின் மூலம்தான் முதன்முதலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது'' என்கிறார் ஆய்வாளர் ஸ்விங்லி.

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க…

Posted On March 30,2012,By Muthukumar
இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘கருச்சிதைவு அபாயம்’  ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ‘கருச்சிதைவு’ என்கிறோம்.
பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காமல் இருத்தல்
2. கரு, சரியான வளர்ச்சி பெறாமல் இருத்தல்
3. கருப்பையின் வாய் திறந்திருத்தல்
இத்தகைய பிரச்சனைகளை சரிசெய்ய தகுந்த மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.
ஆனால் சில பெண்களுக்கு சில காரணங்களால் மருத்துவர்களே கருச்சிதைவை பரிந்துரைக்கின்றனர்.
ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் கருச்சிதைவு செய்வதை  M.T.P. (Medical Termination of Pregnancy) என்கிறோம். சில பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், தாய் சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும்,  M.கூ.க.  சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் கருச்சிதைவு செய்யப்படுகிறது.
கருச்சிதைவை பரிந்துரைக்கக் காரணங்கள்
·  மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது...
· பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...

· பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...
· ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது...
· வைரல் தொற்றுகளால் தாய் தாக்கப்படும் போது...
· மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது...
· மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும் போது...
கருச்சிதைவு ஏற்பட பொதுவான காரணங்கள்
· கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டு விடும்.
· கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் கருச்சிதைவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
· இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் கருச்சிதைவு  ஏற்பட்டு விடுகிறது.
· கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது.
· தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது.
· சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட கருச்சிதைவை அதிகப்படுத்துகின்றன.
· மனநலக் கோளாறுகள் கருச்சிதைவில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
· நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவை வலிந்து அழைக்கும் காரணிகள்.
· பாதுகாப்பற்ற, சீரற்ற உணவு முறைகளால் கருச்சிதைவு உண்டாக நேரிடுகிறது.
கருச்சிதைவு அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
· அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
· கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் செய்யக் கூடாது.
· குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.
· நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
· உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
· முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி இருக்கவேண்டும்.
இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், கருச்சிதைவை முடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது.

Thursday, 29 March 2012

புற்று நோயை கண்டுபிடிக்க நவீன ரத்தப் பரிசோதனை

Posted On March 29,2012,By Muthukumar
மனிதர்களின் இயல்பு வாழ்க்கையில் இடியைத் தூக்கி போட்டு நிலைகுலையச் செய்துவிடும் புற்றுநோயை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இல்லையென்றால் அது வேர்விட்டு, கிளைவிட்டு பெரிய ஆல மரமாக விஸ்வரூபம் எடுத்துவிடும். அதன்பிறகு அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவதும், மீண்டு வருவதும் குதிரைக் கொம்புதான் என்கிறது அறிவியல்.
`புற்றுநோய் என்ன மரமா? அதெப்படி வேர்விட்டு, கிளைவிட்டு விஸ்வரூபம் எடுக்க முடியும்' என்று யோசிக்கிறீர்களா?
உண்மைதான், மண்ணில் விழும் ஒரு விதை போதிய நீரும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்போது வேர்விட்டு வளர்ந்து கிளைக்கத் தொடங்கும். அதுபோலவே உடலின் ஓர் உயிரணு அல்லது திசுவில் உருவாகும் புற்றுநோய் மெல்ல மெல்ல வளர்ந்து புற்று நோய் கட்டியாகி விடும். அதன்
பிறகு அந்தக் கட்டி உடைந்து அதிலிருந்து வெளியாகும் புற்றணுக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இவற்றை சுழலும் புற்றணுக்கள் (Circulating Tumor Cells) என்கிறார்கள்.
புற்றுநோய் ஓர் உயிர்கொல்லி நோயாவதே இந்த சுழலும் புற்றணுக்களால்தான். அதாவது, ஒரு குறிப்பிட்ட உடல் பகுதியை பாதிக்கும் புற்றுநோய் சுழலும் புற்றணுக்கள் மூலமாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் பல்வேறு பகுதிகளையும் பாதிக்கிறது. இதனால் உடல் முழுவதும் நலிவுற்று மரணம் ஏற்படுகிறது. இந்த பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே புற்றுநோய் மருத்துவத்தின் தலையாய நோக்கமாக இருக்கிறது.
இதற்கு சுலபமான வழி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்காவின் ஸ்கிரிப்ஸ் ஆய்வு மைய ஆய்வாளர்கள்.
ரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் சுழலும் புற்றணுக்களை கண்டறிந்து, அவற்றை மேலும் விரிவாக ஆய்வு செய்ய உதவும் அதி நவீன ரத்த பரிசோதனைதான் அந்த சுலபமான வழி.
HDCTC அல்லது ஹை டெபனிஷன் சிடிசி என்றழைக்கப்படும் இந்த ரத்த பரிசோதனையின் மூலம் புற்றுநோயை கண்காணிப்பது, அதன் வளர்ச்சி மற்றும் பரவுதலை புரிந்துகொள்வது போன்ற பல நன்மைகள் உண்டு என்கிறார் மூத்த ஆய்வாளர் பீட்டர் குன்.
முக்கியமாக, இதுவரை அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அறிந்துகொள்ளக்கூடிய புற்றுநோயின் பல இயல்புகளை, சுலபமான இந்த ரத்தப்பரிசோதனை அம்பலப் படுத்தி விடுகிறது. ஆமாம், அப்படி என்னதான் செய்கிறது இந்த பிஞிசிஜிசி ரத்த பரிசோதனை?
HDCTC, ஒரு புற்றுநோயாளியின் ரத்தத்தில் கலந்திருக்கும் சுழலும் புற்றணுக்கள் ரத்தத்தின் சிவப்பு மற்றும் வெள்ளை உயிரணுக்களிலிருந்து வேறுபட்டு தெரியும் வண்ணம் முதலில் அடையாளம் செய்யப்படுகின்றன. பின்னர், அடையாளம் கண்டறியப்பட்ட சுழலும் புற்றணுக்கள் ஒரு டிஜிட்டல் மைக்ராஸ்கோப் மூலம் பிரித்தெடுக்கப்படுகின்றன. சுழலும் புற்றணுக்கள் ஆரோக்கியமான உயிரணுக்களைப் போல் அல்லாமல் வடிவம் மற்றும் அளவில் மாறுபட்டிருக்கும். இதன் அடிப்படையிலேயே சுழலும் புற்றணுக்களை டிஜிட்டல் மைக்ராஸ்கோப் பிரித்தெடுக்கிறது.
இந்த புதிய பரிசோதனை முறை சரியானதுதானா என்பதை தீர்மானிக்க ஆய்வாளர் பீட்டர் குன்னுடைய ஆய்வுக்குழு, அமெரிக்காவின் வேறு நான்கு ஆய்வுக்குழு மற்றும் ஒரு நெதர்லாந்து நாட்டு ஆய்வுக்குழு என மொத்தம் ஐந்து ஆய்வுக்
குழுக்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில்,HDCTC மிகவும் துல்லியமானது மற்றும் பல வகையான புற்றுநோய்களை கண்டறியும் திறனுள்ள ஒரு பரிசோதனை என்பது ஊர்ஜிதமானது.
சுழலும் புற்றணுக்களை கண்டறிய உதவும் இதுவரையிலான பல பரிசோதனை முறைகள் சில வகையான சுழலும் புற்றணுக்களை ஒதுக்கி விடுகின்றன. ஆனால், HDCTCயானது ஒரு சுழலும் புற்றணுவைக்கூட தவற
விடாமல் அனைத்தையும் துல்லியமாக கண்டறிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரித்தெடுக்கப்பட்ட சுழலும் புற்றணுக்களை ஹை டெபனிஷன் இமேஜ்களாக பார்க்க முடியும் என்பது இந்த பரிசோதனையின் குறிப்பிடத்தக்க விசேஷம்.
இந்த பரிசோதனையின் மூலம் புராஸ்டேட், நுரையீரல், கணையம் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் உள்ள பல நோயாளிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், பிஞிசிஜிசி பரிசோதனையைக் கொண்டு ஏற்கனவே கண்டறியப்பட்ட புற்றுநோயைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிவதோடு மட்டுமல்லாமல், ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்றறியும் தொடக்கநிலை பரிசோதனையையும் செய்துகொள்ளலாம் என்கிறார் ஆய்வாளர் பீட்டர் குன்.

ப‌யம் ஒரு மன நோய்தான்!

எதற்கெடுத்தாலும் சிலர் பயப் படுவார்க ள். தண்ணீரைக் கண்டால் பயம், உயரமா ன இடத்தில் ஏற பயம், யாராவது கத்தி னால் கூட பயந்து நடுங்குவார்கள். இத ற்கு போபியா என்று பெயர். இதனை இயற்கைக்கு மாறான பேரச்சம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். போபியா என்பது வேறு. பயம் என்பது வேறு. பயம் என்பது இயல்பானது. போபி யா என்பது அசாதாரணமான பயம். அள வுக்கு மீறிய பயம்..
பயம் அவசியம். ஆனால் போபியா அநா வசியம். வாழ்க்கையில் நேரிடும் சில அசாதாரண சம்பவங்களினால் சிலர் இந் த போபியாக்களை தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு மனநோய்தா ன். வேறு பயப்படும்படி ஒன்றுமில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
எதனால் இந்த போபியா ?
நூற்றுக்கணக்கான போபியா வகைகள் இருக்கின்றன. சிலர் திறந்த வெளியிலோ பொது மக்கள் மத்தியிலோ போவதற்கும் பேசு வதற்கும் பயப்படும் போபியாவினா ல் பாதிக்கப் பட்டிருக்கலாம். மாறாக சிலர் தனிமையிலே இருப்பதற்கு பயப்படும் போபியாவினால் பாதிக்கப் பட்டிருக்கலாம். சிலருக்கு இருட்டைக் கண்டால் பயம். பகலில் கூட வீட்டிலே தனியாக இருக்க பயப்படுவார் கள். சிலருக்கு இரத்தத்தைக் கண்டதும் மயக்கமே வந்துவிடும். சிலருக்கு பாம்பு, பல்லி, கரப்பான் பூச்சி, தேள் போன்றவற் றைக் கண்டவுடனே மயக்கம் போட்டு விழு ந்து விடுவார்கள். சிலர் உயரமான கட்டிட ங்கள், மலை போன்றவற்றைக் கண்டதும் அலறுவார்கள். சிலர் கிருமிகள் கிருமிகள் என்று அளவுக்கு மீறி பயந்து நடுங்குவார் கள். ஒரு நாளைக்கு நூறு முறை கைகளைக் கழுவுவார்கள். ஒன்றும் வேண்டாம். ஹெல் மட்டைக் கண்டாலே அலறும் போபியாவி னால் பாதி க்கப்பட்டவர்களும் உண்டு.
போபியாக்கள் ஆபத்தானவை.
எல்லா நாடுகளிலுமே 7 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை மக்கள் ஏதோ ஒரு போ பியாவினால் பாதிக்கப்பட்டிருக்கி றார் கள் என்று புள்ளிவிபரம் கூறுகிறது. அமெ ரிக்காவில் மட்டும் 6 மில்லியன் மக்கள் ஏதேனும் ஒரு போபியாவினால் பாதிக்க ப்பட்டிருக்கிறார்கள் என்று மற்றொரு  புள்ளிவிபரம் கூறுகிறது.
அளவுக்கு மீறிய பயம்தான் போபியாவாகும். இது நமக்கு மட்டும ல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பிரச்சினையை உண் டாக்குகிறது.
சிலருக்கு இந்த போபியாவினால் அளவுக்கு மீறி பிரச்சினை ஏற்பட்டு இதய வியாதி வ ரை கொண்டு போய்விடும். ஒரு தடவை நாய் பயத்தினால் நீங்கள் பாதிக்கப்படும்போது நல் ல நாயைக் கண்டாலும் அலறி ஓடுவீர்கள்.
போபியாவின் அறிகுறிகள்
போபியா ஏற்பட்டிருக்கிறது என்றால் சில அறிகுறிகள் உண்டாகு ம். அளவுக்கு மீறிய அச்ச உண ர்வினால் உடல் நடுங்குவது, வியர்ப்பது, மூளைச்சோர்வு, மூக்கு ஒழுகல், இதய த்துடிப்பு அளவுக்கு மீறுவது, சுவாசிக் கவே திணறுவது போன்ற உண ர்வுகள்தான் போபியாவினால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகளாகும் .
எப்படி குணமாக்குவது?
உங்களுக்குத் தெரிந்தவர்கள் இவ் வித போபியாக்களினால் பாதிக்கப் பட்டிருப்பார்களானால் தகுந்த மனோ தத்துவ நிபுணரிடம் காண்பி த்து சிகிச்சை அளியுங்கள். பாதிப்பி ன் விதத்தைப் பொறுத்து சிகிச்சை அளிப்பார்கள் மனோதத்துவ நிபுண ர்கள்.

ஆணின் விதைப்பையிலிருந்து விந்து உருவாவது எப்ப‍டி?

ஆண்களின் இனப்பெருக்கத்தொகுதியின் முக்கிய பணியாக விந்த னுக்களை உற்பத்தி செய்வது உள்ளது.  இது பெண்களின் கரு முட்டையுடன் இணைந் து ஒரு சிசுவை உருவாக்கும்.
இந்த விந்தனுக்கள் விதைக ளில் (testicles) இருந்து உற்ப த்தியாகும். இவ்விரு விதைக ள் விதைப்பை(scrotum)யி னுள் அமைந்திருக்கும். விதை ப்பைகள் விதையை பாதிப்பதுடன் உடலிற்கு வெளியே இருக் கும்.
ஒரு நாளிற்கு 3மில்லியன்ஸ் விந்தனுக்களை இவ் விதைகள் உற்பத்தியாக்கும்.

93.2° ஃப்ரனைட்டில் விதைகளைப் பேணுவதற்காக விதைப்பை சுரு ங்கி விரியும் தன்மையைக் கொ ண்டிருக்கும்.
lobule, seminiferous tubles எனு ம் இரு பிரிவுகள் ஒவ்வொரு விதையினுள்ளும் இருக்கும். tubles விந்தனு உற்பத்திக்கு அடிப் படையாக உள்ளது. இங்கு உற்பத் தியான விந்துகள் vas deferens எனும் வால் வினூடாக சென்று விந்தணுப்பையை அடையும்.
ஆண்களைப்பொறுத்தவரை சிறுநீர்கு ழாயும், விந்தனு பாய்ச்சும் குழாயும் ஒன் றாக இருக்கும்.
எனினும் சிறு நீரும், விந்தும் ஒன்றாக வெளியேறாமல் தடுப்பதற்காக bulbou- rethral gland எனும் பகுதி இருக்கும்.
அது ஆணுறுப்பு குழாயினுள் சிறுநீரையு ம், விந்தணுவையும் ஒன்றாக விடாமல் தடுக்கிறது.
ஆண்களின் உறவு முடிவுத்தருவாயில் வெளியேறும் இவ்விந்தணுக்கள் பெண் களின் கருமுட்டையை அடைவதற்கு ஏற்றவாறு ஆணுறுப்பு சாதார ண நிலையில் இருந்து உறவின் போது பெருத்துக் காணப்படும்.

அழகான கண்களுக்கு.

Posted On March 29,2012,By Muthukumar
..  அழகான குழந்தையின் ரகசியம் இருப்பதாக கருதப்படும் குங்குமப்பூவை பயன்படுத்தி அழகான மேனியழகையும் பெறலாம். அதற்கு சில டிப்ஸ்...
>குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம். இந்த முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தொடர்ந்து சில நாட்களுக்கு பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் மறைந்து விடும்.
மேலும், நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத் தருகிறது.
ஒருவரது முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகுந்த கண்கள்தான். அப்படிப்பட்ட கவர்ச்சியான கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள். உங்களுக்கு பட்டாம்பூச்சி போல படபடக்கும் அழகான இமைகள் அமைய இந்த குங்குமப்பூ கலவையை அடிக்கடி பூசி வரலாம்.

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்!!

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வே கூடாது; எட்டு அல்லது பத்து மணிநேரம் இடைவெளி க்கு பின், நம் வண்டியை ஓட்ட “பெட்ரோலாக” தேவை ப்படும் உணவு அது.
காலை உணவு முறையை ‘பிரேக் பாஸ்ட்’ என்றுகூறுவர். ‘பாஸ்ட்’ டை (உண்ணாதிருத் தலை) “பிரேக்” (துண்டிப்ப து)
பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண் ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடு வது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரண மாகி விடும்.
என்ன சாப்பிடணும்:
கலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்று ண்டி சாப்பிடுவோர் பலர் உள்ள னர். சிலர், காலையில், முழு உணவு சாப்பிட்டுவிட்டு, மதிய ம் சாதாரண அளவில் சாப்பி ட்டு, இரவு டிபன் சாப்படுகின் றனர்.
ஆனால், காலை உணவை தவி ர்ப்போரும் உண்டு. இவர்களுக் கு தான் பாதிப்பு வரும். குறிப்  பாக, வீட்டு, ஆபிஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உண வு மிக முக்கியம். அதை தவிர்த்தால், அவர்களுக்கு பல கோளாறு கள் வர வாய்ப்பு அதிகம்.
உணவு என்றால்……
உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவது தான் உணவு. கார் போன்றது உடல். கார் ஓட பெட் ரோல் தேவைப்படுவதுபோல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை. அந்த எரிசக்தியை தருவ து சத்துக்கள் தான். அந்த சத்து க்களை நாம் உணவில் இருந்து தான் பெற வேண்டும். காலை உணவு சாப்பிட்டால், அது சிற்று ண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரி பொருளை தருகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக் கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும், காலை உணவு மிக முக்கியம்.
இரும்புச் சத்து:
பெண்களுக்கு இரும்புச்சத்து மிக முக்கியம், நாம் சாப்பிடும் உண வு மூலம் அது கிடைத்தால், மனது மற்றும் உடல் ரீதி யாக திடத்தன்மை ஏற்படுகிறது. கா லை உணவில், மக்காச் சோள உணவை சேர்த்துக்கொள்ளலா ம்.
“கார்ன்பிளேக்ஸ்” போன்ற பாக் கெட் உணவுகளை பின்பற்றி னால், இரும்புச் சத்து கிடைக்கு ம். இந்தியாவில், 90 சதவீத பெண்கள், இரும்புச் சத்து குறைபாடுடன் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு கை கொடுக்கும் மக்காச்சோளம் உட்பட தானிய வகை உணவுகள் மிக நல்லது. உடலுக்கும், மூளைக்கும் வலுவை தரும்.

Thursday, 22 March 2012

நோய் வரும்முன் தடுக்க நெறிமுறைகள்.

Posted On March 22,2012,By Muthukumar
மனிதனுக்கு உண்டாகும் கொடிய நோய் என்பது அவரவரர் தலைவிதியோ அல்லது ஜீன்களில் ஏற்படும் மரபணு மாற்றமோதான் காரணம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், சில வாழ்வியல் காரணிகள் தான் இத்தகைய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணங்கள் என லண்டன் பல்கலைக் கழக பேராசிரியர் மேக்ஸ் பார்கின் தலைமையிலான விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவை,
புகையிலை போடுவது, புகைப்பழக்கம், மதுபானப் பழக்கம், உடலின் கூடுதலான எடை, போதிய அளவு பழங்கள், காய்கறிகள் சாப்பிடாமல் இருப்பது, போதுமான அளவு சூரிய ஒளி படாமல் இருப்பது, போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, தாய்ப்பால் புகட்டாமல் இருப்பது, ஹார்மோன் மருந்துகளை அதிகம் உட்கொள்வது, வேகாத மாமிசம் உண்பது, போதிய நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணாமல் இருப்பது, அதிக உப்பு சேர்த்து சாப்பிடுவது..
இவைதான் மனிதனை தாக்கும் கொடிய நோய்களின் ஆரம்பக் காரணியாகும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சில வாழ்வியல் முறைகளை கடைப்பிடிப்பதுதான்.
இந்த வாழ்வியல் முறைகளால் நாம் கொடிய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
இதற்கு சில வாழ்வியல் மாற்றங்கள் இதோ..
· அதிகாலையில் சூரியயோதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும்.
· எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்துவிட வேண்டும்.
· காலை, மாலை தினமும் 20 நிமிடங்களாவது அவசியம் எளிய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
அவற்றில் சில..
நடத்தல், 20 முறை குனிந்து நிமிர்தல், 20 முறை நன்றாக உட்கார்ந்து எழுதல், நின்ற இடத்தில் மூன்று நிமிடங்கள் ஓடுவது, 2 நிமிடங்கள் நின்ற இடத்தில் குதித்தல், 50 முறை கயிற்றாட்டம் (ஸ்கிப்பிங்) போடுதல், கை, கால் விரல்களை நீட்டி மடக்குதல், இது தவிர, மூச்சுப் பயிற்சி 5 நிமிடம் கண்களுக்கு பயிற்சி 3 நிமிடம்..
· தகுந்த யோகாசனங்களை முறைப்படி கற்று செய்ய வேண்டும்.
· நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் உள்ள வீடுகளில் வசிக்க வேண்டும்.
· உறங்குவதும், நல்ல காற்றோட்டமுள்ள அறையாக இருக்க வேண்டும்.
· பெரும் தீனியை ஒழிக்க வேண்டும். உணவருந்தும்போது பேசக் கூடாது. மௌனமாக நன்றாக மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும். மாமிசத்தையும், அதிக உப்பு, காரத்தையும் குறைக்க வேண்டும்.
· தினசரி ஏதேனும் ஒருவேளை பச்சையாக உட்கொள்ளும் பழங்கள் காய்கள், பழச்சாறுகள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மற்ற இரு வேளைகளில் வழக்கமான சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம். இடைப்பட்ட வேளையில் நொறுக்குத்தீனி தவிர்க்கப்பட வேண்டும்.
· நிற்கும்போதும் நடக்கும்போதும், உட்காரும் போதும் நன்கு நிமிர்ந்து இருக்க வேண்டும்.
· பகல் உணவை விட இரவு உணவு அளவு குறைவாகவும், இரவு 8 மணிக்குள்ளும் முடித்துக்கொள்ள வேண்டும். காலம் கடந்து சாப்பிடக் கூடாது.
· இரவில் சாப்பிட்டதும் சற்று உலாவிவிட்டு தூங்கச் செல்ல வேண்டும்.
· உணவருந்திய உடனே வேலைகள் செய்வதோ, குளிப்பதோ கூடாது.
· ஏழு மணி நேரத்திற்கு குறையாமல் தூங்க வேண்டும்.
· உப்பு, சர்க்கரை, காரம், புளிப்பு, முதலியவைகளை இயன்ற அளவு குறைத்து சாப்பிட வேண்டும்.
· மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
· தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
· தலைவலி, காய்ச்சல், முதுகுவலி, மூட்டுவலி, வயிற்றுவலி இவைகளுக்கு கடையில் கிடைக்கும் மருந்துகளை சாப்பிடக் கூடாது. தேவையற்ற ஹார்மோன் மாத்திரைகள் உட்கொள்ளக்கூடாது. மருத்துவர் ஆலோசனையின் பேரில் மட்டுமே மாத்திரைகளை உபயோகிக்க வேண்டும்.
· ஆறு மாதத்திற்கு ஒருமுறை மலைப் பிரதேசங்களுக்குச் சென்று தூய காற்றை நுரையீரல் முழுக்க நிரப்பிக் கொண்டு வாருங்கள்.
இத்தகைய வாழ்வியல் முறைகளை கடைபிடித்தால், நோய் என்னும் அரக்கனை அண்ட விடாமல் தடுக்கலாம்.