Lord Siva

Lord Siva

Sunday, 4 September 2011

சிறுநீரகம் செயலிழந்தால். . . ., ஆண்மை / பெண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்

சிறுநீரகம் செயலிழந்தால். . . ., ஆண்மை / பெண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்

டாக்டர் சௌந்தரராஜன் அவர்களால் ஓர் இணையத்தில் எழுதி வெளி வந்த‌து
ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப் பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்ற வற்றைப் பார்ப்பதை விட அந்த வீட்டின் கழிப்பறை யைப் பார்த்தால் தெரிந்து விடும். அது போலத்தான் நம் உடலும்… நாம் முழுமையான ஆரோக் கியத்தோடு இருக்கி றோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத் துச் சொல்லிவிடலாம்…” என்று எளிமையான உதாரணத் தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறு நீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இரு ந்தபோது அவரை மரு த்துக் கண்காணிப்பு செ ய்து வந்தவர். சிங்கப் பூர் வரைக்கும் ரஜினி யோடு போய்வந்த மரு த்துவரும் இவர் தான். சிறுநீரகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு அவரு டைய பதில்கள் இதோ:-
யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்தி ரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்  களுக்கு சிறு நீரகம் நிரந்தர மாக செயலிழக்க வாய்ப்பு ள்ளது.
பாதிப்பு உண்டாக்கும் கார ணங்கள் வேறென்ன?
வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற் றிப் போவ தாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ் வாமையாலும் சிறுநீரகம் தற் காலிகச் செயலிழப்பு ஏற்படும்.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?
முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒரு வருக்கு நிரந்தரச் செய லிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அத னால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செய லிழப்பிலிருந்து தப்ப முடியு ம்.
அதை எப்படி கண்டுபிடிப்பது..?
வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும்போது சிறு நீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்சினை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்தி லேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக் காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்து கொள்வது நல்லது.
அறிகுறிகள் இருக்குமா..?
இருக்கும். கை கால் களில் வீக்கம் ஏற்ப டும். சிறுநீரக பாதிப் பால் தான் வீக்கம் ஏற்படுகிற து என்பதை கண் டு அறிந்து விட்டா ல் அளவுக்கு அதிகமா க தண்ணீ­ர் அருந் துவது, உப்பு சேர்த்துக் கொள் வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்­ணீரையும் உப் பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.
எதனால் கை, கால் வீக்கம் ஏற்படுகிறது..?
தண்­ணீரை வெளியேற்ற முடியா மல் சிறுநீரகம் தவிக்கிறது என்ப தற்கான அறிகுறிதான் கை கால் வீக் கம்.
தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?
அசைவ உணவுகளைத் தவிர்த்து விட்டு சைவத்துக்கு மாற வேண் டும். போதுமான அளவு நீர் அரு ந்த வேண்டும், சிறுநீரை அடக் கிக் கொள் வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவா ரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்ப டாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொரு ட்கள் உப யோகிப்பதை தவிர் ப்பதாலும் சிறு நீரகச் செய லிழப்பு ஏற்ப டுவதைத் தடுக்க முடியும்.
உணவு முறைகள் என்ன?
எதையும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழு ப்புச் சத்து நிறைந்த உண வுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்ப ட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாசியம் நிறைந்த உணவுக ளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறு நீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாசியம் சேர்த்துக்கொள்ளலாம்.
எந்தெந்த உணவுகளில் பொட்டாசியம் அதிகமாக இருக் கிறது..?
வாழைப்பழம், இன்ஸ்ட் டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றி லெல் லாம் பொட்டாசியம் அதிகமாக இரு க்கிறது.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட் டவர்கள் எல்லாருமே பொட் டாசியம் சாப்பிடக்கூடாதா..?
அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலை வரைக்கும் போனவர்கள் பொட்டாசியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.
வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச்சாறு சிறுநீரகக் கற்க ளைக் கரைக்கும் என்கிறார்களே…?
வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக் கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற் பட்டு சிறு நீரகத் தில் அடை த்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா?
முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசை வ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்ட மின் ‘டி’ உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள் வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற் றைத்தவிர்ப்பதால் சிறு நீரக த்தில் கற்கள் உண்டா வதை தடுக்க முடியும்.
சிகிச்சை முறைகள் பற் றி சொல்லுங்கள்…
நிரந்தர சிறுநீரகச் செய லிழப்பை ஆரம்பத்தி லேயே கண்டறிந்து வி ட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.
இல்லாவிட்டால்…
நிரந்தர சிறுநீரகச் செயலி ழப்பு ஏற்பட்டுவிட்டது என் ப து உறுதியாகி விட்டால், வாரத்துக்கு இரண்டு அல் லது மூன்று முறை டயா லிஸிஸ் செய்து கொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செ ய்து கொள்வதென்றால், தினமும் மூன்று முறை யாவது டயாலிஸிஸ் செ ய்வது நல்லது.
அப்புறம்…
இளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்து கொ ண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள் வதுதான் நல்லது. அத ற்கு ஆகும் செலவையு ம் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.
இளைஞர்கள் மட்டும் தான் செய்துகொள்ள முடியுமா..?
இளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர் களுக்கு வாய்ப் புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அத னால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்து கொள் வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மா  ற்று சிகிச்சைக்கு பல லட்சம் செல வாகும்.
கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய் வதால் என்ன பயன்..?
என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய் தவர்களின் ஆயுள் கூடியிருக் கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய் யாதவர்களை விட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டு களுக்குக் கூடுத லாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறு நீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?
முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேரு க்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக் கிறது. அதிலும் நெருங்கிய உறவி னர்கள் தானம் செய்வதன் மூல மாகத்தான் கிடைக்கிறது. காரண ம், பொருத்தமான சிறுநீரகம் பல ருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய் வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல் லை. அப்படியே இருந்தாலும் பெரு நகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறை யில் நிபுண ர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர் களுக்கு அளிக்கலாம். இது அவ ருடைய நெருங்கிய உறவின ரின் சம்மதத்தோடு மட்டுமே செ ய்யமுடியும். அதுவும் சிறு நீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொ ள்ள முடியுமா..?
முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக் குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டு த்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தி யம் இல்லை. ஆனா ல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச் சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற் றுக் கொள்ள லாம்.
நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்து போகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறு நீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அத னால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தை யும், இதய நோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழு மையான பரிசோதனை செய்து கொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.

No comments:

Post a Comment